Thursday, July 29, 2010

பரிணாமம் – படிமம் (பகுதி-3)

பரிணாம கொள்கை பொய் என்பதற்கு நாம் எடுத்து வைக்கும் முதற்சான்றான ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறாது அதற்கு அறிவியலில் எந்த இடத்திலும் ஆதாரம் இல்லை, அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை இது வரை நடந்ததும் இல்லை, நடப்பதும் இல்லை, நடக்க போவதும் இல்லை என்பதை நம்முடைய முதற்பதிவிலேயே நாம் தெள்ள தெளிவாக அறிவியல் பூர்வமாக வாதங்களை எடுத்து வைத்தோம்.

எந்த ஒரு உயிரும் அதன் தேவைகேற்ப மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி கொள்ள முடியாது என்பதையும், மாறுந்தன்மை (Mutation) அடிப்படையிலும் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக மாறாது, ஒரே உயிரினத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தும் என்பதையும் அறிவியல் பூர்வமாக விளக்கினோம்.

அடிப்படை ஆதாரத்தை பொய் என்று நிருபிக்க முடியாத பரிணாமவாதிகள் இதுவரையில் எந்த ஒரு சரியான ஆதாரமும் எடுத்து வைக்க முடியவில்லை, ஆனால் ஒட்டகம் ஒட்டகசிவிங்கியாக மாறியது கரடி கார் ஓட்டுகிறது என்று கூறுவது வேடிக்கையான ஒன்று, இருப்பினும் அவர்களுடைய கருத்துக்களும் கதைகளாகும் என்பதை அவர்கள் அறிவார்கள்.


பிரெஞ்சு புவியியல் மேதையான லூசிஸ் லார்தட் (Louis Lartet) என்பவர் 1868 ம் ஆண்டு பிரான்சில் உள்ள குரோ மொக்னான் என்ற பகுதியில் பழமையான 2 மனித படிமத்தை (Fossils) கண்டறிந்தார் (Paglicci 52 and 12) அவற்றிற்கு குரோ மெக்னான் (Cro-Magnon) என்றும் பெயர் வைத்தார். அதே போன்ற படிமங்கள் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவை அனைத்தும் குரோ மெக்னான் காலத்தை சேர்ந்தவையாக அறியப்பட்டன.

கார்பன் வயது கணிப்பு படி அதன் வயதை கணக்கிட்டு 28,000 ம் வருடங்கள் பழமையான மனிதன் என்றும் ஐரோப்பாவில் வாழ்ந்தவர்கள் என்பதும் கண்டறிந்தனர். அவர்கள் மக்னீசியம் மற்றும் அயன் ஆக்சைடு பயன்படுத்தி குகை ஓவியங்கள் தீட்டுவதிலும், வேட்டையாடுவதில் சிறந்தவர்களாகவும், இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருந்தனர். இவர்கள் தாம் முதன் முதலில் காலண்டர் உபயோக படுத்தியதாக அறியப்படுகிறது.


கடந்த 2003 ம் ஆண்டு அந்த மனித படிமத்தின் எலும்பு செல்களிருந்து எடுக்கப்பட்ட mtDNA (Mitochondrial DNA என்பது nDNA போன்று மரபு செய்திகளை கொண்டது) மரபுகள் தொகுக்கும் பனி துவங்கி அனைத்து மரபுகளும் தொகுக்கப்பட்டன.

பிறகு தற்போது உள்ள மனிதனின் DNA வும் 26,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த குரோ மெக்னான் மனிதனின் DNA வும் ஒத்து பார்க்கப்பட்டன. சில மரபு கோடான்கள் (Base pairs) மட்டுமே மாறுவது கண்டறியப்பட்டது.

அந்த சில மரபுகோடான் மாறுவதற்கான காரணம் மாறுந்தன்மை (mutation) என்பது தான். தெளிவாக சொல்ல போனால், தற்போது உள்ள மனிதர்களுக்கும் இடையே சில மரபு வித்தியாசங்கள் இருக்கும். ஆப்பிரிக்க மனித மரபையும் ஐரோப்பா மனித மரபையும் ஒப்பிட்டு பார்த்தல் 0.1% (~) என்ற வித்தியாசத்திருக்கு தான் இருக்கும்.

தற்போது உள்ள மனிதர்களுக்கு இடையே மரபுகளில் உள்ள மாற்றமே (99.9%) அந்த மனிதர்களின் மரபுகளிலும் இருந்தது தெரிய வந்தது.

26,000 வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு மாறுதலுக்கும் இல்லாமல் மனிதன் இருந்திருக்கிறான். உடை மாற்றம், உணவு மாற்றம், இருப்பிட மாற்றம் பழக்க வழக்க மாற்றம் அனைத்தும் நிகழ்ந்தது ஆனால் மரபு மாற்றத்தை தவிர.

ஆக ஆதிமனிதனின் மரபுகளும் தற்போது உள்ள மனிதனின் மரபுகளும் ஒத்து போவதிலிருந்து நாம் அறிவது மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை என்பதையும் ஒரு முழு அறிவுடன் ஒரு சக்தி உருவாக்கியது என்பதையும் தெள்ள தெளிவாக விளங்க முடியும். மேலும் இதுவரையில் எந்த வித மாறுபட்ட படுமமும் கிடைக்க வில்லை என்பது கூடுதலான செய்தி.

ஆதாரங்கள் இல்லாமல் எழுதப்பட்ட டார்வினின் கதையான பரிணாம கொள்கை மண்ணை கவ்வும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Post Comment

8 Comments:

வால்பையன் said...

//மாறுந்தன்மை (Mutation) அடிப்படையிலும் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக மாறாது, ஒரே உயிரினத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தும் என்பதையும் அறிவியல் பூர்வமாக விளக்கினோம்.//

ஒரே உயிரினத்தில் ஏற்படும் வேறுபாடு தான் சில ஆயிரம்/லட்சம் ஆண்டுகளில் வேறு உயிரினமாக மாற ஆரம்பகட்டம்!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

மாறுந்தன்மை (Mutation) என்பதை தாங்கள் சரியாக விளங்கிகொள்ளவேண்டும், அவைகள் ஒரு குறைபாடு ஒரு உயிரினத்தின் வளர்ச்சி இல்லை.

தற்போது மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் உள்ள மரபுகள் அர்த்தம உள்ளவை, இந்த மாறுந்தன்மை மரபை அர்த்தம் இல்லாததாக (Non sense codon) மாற்றி மரபணு கோளாறை (Genetic Disorder) உண்டாக்கும், அவைகள் புரதத்தை உருவாகும் போது அவைகளும் அர்த்தம் இல்லாமல் போகும். இவைகள் புதுமையான நோய்களுக்கு வழியாக அமையும். புற்றுநோய், காசநோய் போன்றவை மரபணு கோளாறால் வருபவை தான்.

உதாரணமாக ஒருவருக்கு கைகளில் உள்ள மரபில் மாறுந்தன்மை நடந்தால் அந்த கைகள் பாதியாகவோ இல்லை கைகள் இல்லாமலோ அல்லது ஏதேனும் ஒரு ஊனமாகவோ ஆகிவிடும், இது நடப்பது சாதாரண நிகழ்வு, அது பரம்பரையாக வராமல் தடுப்பதற்காக உடம்பில் உள்ள அமைப்புதான் மரபு சரிசெய்தல் (DNA Repair) இவைகள் சரிசெய்து அது நிரந்தரமாக மாறுவதை தவிர்க்கிறது.

அதிகமாக மாறுந்தன்மை நிகழ்வு மனிதனுக்கு கேடுதியையே உண்டாக்கும், சில வகை நல்ல மாருந்தன்மையும் (Beneficial mutations) உண்டு, அவைகள் சிலவகை நோய்களுக்கு எதிர்ப்பாக இருக்கும் அவ்வளவுதான்.

உயிரினங்களுக்கு நோய் எதிர்ப்பு (Antibody) சக்தியை உருவாக்கியது யார்? உயிரினங்களுக்கு மரபு சரிசெய்தல் (DNA Repair) என்ற அமைப்பை உருவாக்கியது யார்??

வால்பையன் said...

வேர்டு வெரிபிகேஷனை எடுங்க!


மரபணு மாற்றம் கெடுதல் மட்டுமே செய்யும் என்பது சரியல்ல! சிலநேரங்களில் நல்லவைகளும் நடக்கும், நோயெதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக உடலில் வளர்ந்தது, அதை உருவாக்கியது யார்ன்னு கேட்டா, அந்த யாரை உருவாக்கியது யார்ன்னு ஒரு கேள்வி வரும்!

Unknown said...

//மரபணு மாற்றம் கெடுதல் மட்டுமே செய்யும் என்பது சரியல்ல!சிலநேரங்களில் நல்லவைகளும் நடக்கும், //

சரியானது எது என்பதை அறிந்துள்ளீர்களா? அதை அறிவீர்களானால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

//நோயெதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக உடலில் வளர்ந்தது,//

எப்படி, நோய் வருவதற்கு முன்பே உருவாவது தான் நோய் எதிர்ப்பு சக்தி, வராத நோய் பற்றி முன்கூட்டியே உடலுக்கு எப்படி தெரியும்.நம்முடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு நாம் காரணமில்லை, அப்படியானால் யார்?

//அதை உருவாக்கியது யார்ன்னு கேட்டா, அந்த யாரை உருவாக்கியது யார்ன்னு ஒரு கேள்வி வரும்! //

நிச்சயமாக அந்த கேள்வி வரும், ஏதாவது ஒரு இடத்தில் நாமாக நிறுத்தியாக வேண்டும். அப்படி நிறுத்தக்கூடிய ஒரு சக்தியே கடவுள்.

உங்களுடைய பார்வை சற்று குறுகியதாக உள்ளது என்பதே என்னுடைய வாதம்.

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Siraj said...

ஓர் உயிரினத்தில் ஏற்படும் மாற்றம் பற்றி இஸ்லாமும் கூருகின்றது. அதாவது ஆதி மனிதன் 60 முழம்,நாம் 4 அல்லது 5 முழம் தான். ஆனால் ஓர் உயிரினத்தில் இருந்து பிரிதொரு உயிரினத்திற்கு வாய்ப்பே இல்லை.

Post a Comment