Thursday, June 23, 2011

குரோமோசோம்களின் எண்ணிக்கை பரிணாமத்தை மெய்பிக்குமா?

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக...

பரிணாமத்தை மெய்பிப்பதன் மூலம் தங்களின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு உயிர் கொடுத்து விடலாம் என்ற நினைப்பில் பல கதைகளை கூறி பரிணாமம் சரியென காட்ட விரும்பும் நண்பர்கள் கையில் எடுக்கும் தலைப்பில் ஒன்று குரோமோசோம்களின் எண்ணிக்கை, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவர், அந்த முகத்தின் அழகு எங்கு தெரியும்? அதுதான் உயிரினத்தின் மரபில். ஆம் முகம் மட்டும் அல்ல ஆதி முதல் அந்தம் வரை உள்ள அனைத்து உறுப்புகளின் அழகும் செயலும் மரபில் கோடிங் வடிவில் பதிய பட்டுள்ளன. அந்த மரபுகளின் (genes) கூட்டமைப்பே குரோமோசோம்கள் (Chromosome) ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்று X போன்ற தோற்றத்தில் இருக்கும்.

குரோமோசோம் என்பது கடவுள் உயிர்களை உருவாக்க எடுத்து கொண்ட வரைமுறையின் அளவீடுகளில் ஒன்றாக கூட இருக்கலாம். ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு எண்ணிக்கையிலான குரோமோசோம்களை கொண்டுள்ளது, மனித குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி) அதே போன்று குரங்கு வகை (சிம்பன்சி, ஒரங்குட்டான். கொரில்லா) குரோமோசோம்களின் எண்ணிக்கை 48 (24 ஜோடி) மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் இடையே உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கையை பரிணாமத்தை மெய்பிப்பதர்கான ஆதாரமாக நாத்திகர்கள் தங்கள் பொய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். சிம்பன்சியின் 48 குரோமோசோம்களில் இரண்டு தானாக (பழைய கதை) சேர்ந்து 46 குரோமோசோம்களாக மாறின என்பதுதான் டார்வினின் சீடர்கள் எழுதிய கதை. இவர்களின் இப்பிரச்சாரம் சரியா என்பதை குரோமோசோம் என்றால் என்ன அவை எந்த செய்தியை தன்னகத்தே கொண்டுள்ளன என்பதை தெளிவாக அறியும் பட்சத்தில் பொய் என்று நிருபிக்க முடியும்.

குரோமோசோம்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன, ஒன்று Autosome மற்றொன்று Sexual chromosome. இதில் Sexual chromosome என்பது பாலினத்தை குறிப்பதாக உள்ளது, Sexual chromosome அல்லாத மற்ற அனைத்தும் Autosome என்று கூறுவர். இதில் பாலினத்தை தவிர உடலில் உள்ள அனைத்து பாகங்களின் செய்திகளும் அடங்கி இருக்கும்.

உதாரணமாக ஒரு பெண்ணின் உடலில் உள்ள 23 குரோமோசோம்களில் 22 ஜோடி Autosome களும் 1 ஜோடி Sex chromosome மும் இருக்கும். அவை X மற்றும் X  வகை. இதே ஒரு ஆணின் உடலில் உள்ள செல்களில் பெண்ணின் உடலில் உள்ளது போன்று 22 ஜோடி Autosome களும் 1 ஜோடி Sex chromosomeமும் இருக்கும், அவை X மற்றும் Y வகை. இதில் பெண்ணின்  X ம் ஆணின் X ம் சேரும் பொழுது பெண் குழந்தை பிறக்கும், அதே பெண்ணின் X ம் ஆணின் Y ம் சேரும் பொழுது ஆண் குழந்தை பிறக்கும், குழந்தை ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது ஆணின் குரோமோசோம் சேர்க்கையை பொறுத்தே. (ஏண்டி பெண் குழந்தை பெத்து கொடுத்த என்று வசை பாடும் மாமியார்களே, திட்ட வேண்டியது பெண்ணை அல்ல மாப்பிள்ளையை)

ஓர் மரபு அதன் நிலையிலிருந்து அதன் மேம்பட்ட நிலைக்கு (Higher form of life) மாறும் என்பதே அறிவியலுக்கு முரணானது எனபதை நாம் பல முறை நம்முடைய கட்டுரை மூலமே விளக்கியுள்ளோம், அதற்கு எந்த ஒரு மறுப்பும் பதிலும் வந்தது இல்லை, அதுவே சரியானதும் கூட. அப்படி மரபில் மாற்றம் ஏற்பட்டு ஒரு தனி உயிரி உருவானது என்று ஒரு வாதத்திற்கு எடுத்து கொள்வோமானால் அதில் மரபு மட்டுமே மாற்றம் அடைய வேண்டும். அவ்வாறில்லாமல் பல மரபுகளை தன்னகத்தே கொண்டுள்ள குரோமோசோம்கள் பிரிந்தன என்பது ஒரு லாஜிக் இல்லாத (Baseless) வாதம்.

ஒரு விலங்கிற்கும் மற்றொரு விலங்கிற்கும் இடையே உள்ள குரோமோசோம் மற்றும் மரபு வித்தியாசம் என்பது அவ்விலங்குகளுக்கு இடையே உள்ள உள், வெளிப்புற வித்தியாசத்தை காண்பிக்குமே தவிர இதிலிருந்து அது வந்தது என்பதற்கு எந்த வகையிலும் ஆதாரமாகாது. மனிதனின் தோலும் விலங்கின் தோலும் ஒன்று போல இருக்கின்றன என்பதற்காக மனித தொலிலுருந்து தான் விலங்கின் தொல் உருவானது என்று யாராவது ஆதாரம் கூறுவார்களா? அதேபோல தான் இந்த மரபு ஒற்றுமையும் குரோமோசோம் ஒற்றுமையும்.

மரபு பிரிந்து விடாமல் குரோமோசோம்கள் அதை ஒரு கட்டுகோப்புடன் வைத்துள்ளன, அந்த குரோமோசோமே பிரிந்து வேறு உயிரினம் உருவானது என்பது வேடிக்கையான ஒன்று.

ஒரு உயிரினம் தன்னுடைய குரோசோமோமை தானாக மாற்றி கொள்ளும் என்பதற்கு இதுவரையில் எந்த ஒரு அறிவியல் நிரூபணமும் இல்லை, அதற்கான வழிமுறையும் இல்லை, ஒரு உயிரினத்தின் குரோமோசோம் என்பது மாற்ற முடியாதது (Fixed), ஒரு உயிரினத்தின் ஆண் மற்றொரு விலங்கின் பெண்ணிடம் வெற்றிகரமாக இணையமுடியாது என்பதற்கு இதுவே காரணம்.

மனிதனும் சிம்பன்ஜியும் ஒரு வழிதோன்றங்கள் என்பதற்கு குரோமோசோம்களை ஆதாரமாக கொள்வார்களானால் மனிதனுக்கு 46  குரோமோசோம்கள் அதேபோல Reevees’s Muntjac  மற்றும் Sable Antelope போன்ற விலங்கினத்திற்கும் 46 குரோமோசோம்கள் தான். ஆக மனிதனும்  அவ்விலங்குகளும் ஒன்று தான் என்று ஆகுமா? ஒரு விலங்கின் குரோமோசோம் எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியமானது. ஒரு விலங்கு மற்றொரு விலங்காக மாறிக்கொண்டே இருக்கும் பொது அது தன்னகத்தே ஒரு தடையை ஏற்படுத்தி கொள்ள வேண்டிய அவசியமில்லை, அப்படி தடை இருக்கும் பட்சத்தில் அது வேறொரு உயிரினமாக மாற வாய்ப்பே இல்லை, தெளிவாக கூறுகிறேன் கேளுங்கள், 46 குரோமோசோம்கள் கொண்ட ஒரு உயிரினம் 44 குரோமோசோம்கள் கொண்ட ஒரு உயிரினத்திடம் புணருமானால் அந்த விந்து கருமுட்டையுடன் சேராது,  46 குரோமோசோம்கள் கொண்ட மனிதன் 46 குரோமோசோம் கொண்ட துணையுடன் சேர்ந்தால் மட்டுமே இன அபிவிருத்தி நடைபெறும். இந்த தடையை உருவாக்கியது யார்? பரிணாமம் தேவை எனில் பரிணாமத்தினாலேயே(?!) எதற்காக இந்த தடை உருவாக்கபடவேண்டும்.

இப்படி இருக்க 48 குரோமோசோம் உள்ள ஒரு விலங்கு 46 குரோமோசோம் உள்ள மனிதனாக மாறி இருப்பனானால் அது எதனுடன் சேர்ந்து இன விருத்தி செய்தது, 46 குரோமோசோம் கொண்ட மாற்ற பட்ட விலங்கு இனப்பெருக்கம் செய்ய அதே 46  குரோமோசோம் கொண்ட அதன் துணை எங்கிருந்து வந்தது, ஆணின் குரோமோசோமும் பெண்ணின் குரோமோசோமும் முழுமையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே சந்ததி பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில விலங்கினங்கள் மட்டும் இதற்கு விதி விலக்காக உள்ளன, உதாரணமாக ஆண் குதிரை (Horse) பெண் கழுதையுடன் (Donkey) இணைந்து கோவேறு கழுதையை (Mule) தருகிறது, இதில் கோவேறு கழுதை என்பது தன்னுடைய சந்ததியை பெருக்க முடியாதது, அதுபோல சிங்கமும் புலியும் இணைவதால் Liger மற்றும் Tigon போன்றவை பிறக்கும், இவைகளும் பிழையினால் உருவானவை, சந்ததி அற்றவை. இந்த பிழை உள்ளவைகளின் பிறப்பில் உள்ள கோளாறுகளை வைத்து, இயற்கைக்கு முரணான செயல்களில் இடுபடுபவைகளின் நிலைமையையும், மேலும் சிங்கமும் புலியும் சரியான முறையில் வடிவமைக்க பட்டவை என்பதையும் அறியலாம்.

குரோமோசோம்களின் இந்த மாற திறன் பரிணாம வாதிகளின் வாதத்திற்கு தக்க பதிலடியாக இருக்கும் என்பதை அனைவரும் நன்கு அறிவர், இரு குரோமோசோம்களை இணைப்பது என்பது தற்போது உள்ள அறிவியலில் கூட அதி நவீன ஆய்வகங்களை வைத்து கூட சாத்தியமில்லாத ஒன்று அப்படி ஒரு அதிசயத்தை தானாக ஒட்டி கொண்டது என்பது Gluestick வைத்து இரு குச்சிகளை ஓட்டுவது போல ஒட்டிக்கொள்ளும் என்று நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் சுலபமாக தெரியலாம் அதை நன்கு ஆராய்ந்து அதன் விளைவை அறிந்தவர்கள் அதை ஒரு பொழுதும் ஒப்பு கொள்ள மாட்டார்கள்.

ஒரு மின்னல் வெட்டி அதன் மூலம் ஒரு நுண்ணுயிரி (Micro organism) உருவாகி, பிறகு பல செல்களாக மாறி அது தன்னுடைய மேன்மை அடைந்த வாழ்க்கை நிலையை பெரும் என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அறிவியலாளர்கள் கூட நம்பினர், ஆனால் தற்போது நவீன ஆய்வகங்களில் கூட நுண்ணுயிரிகளை உருவாக்க முடியாத நிலை அவர்களை Intelligent Design என்ற மறுக்க முடியாத கொள்கைக்கு அழைத்து சென்றுள்ளது. அதிகமான அறிவியலாளர்கள் தற்போது Intelligent Design ஐ நம்புகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. இன்னும் இந்த பழைய கதைகளை பள்ளி பாடங்களில் வைத்துள்ளனர் என்பது வேதனையான விஷயம்.

தொடர்ந்து பரிணாம பொய்களை விளக்குவோம். உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக..

Reference: 1) http://ghr.nlm.nih.gov/handbook/basics/chromosome
                     2) http://en.wikipedia.org/wiki/Chromosome
                     3) http://biology.about.com/od/basicgenetics/p/chromosgender.htm
                     4) http://www.answers.com/topic/chromosome

 
குறிப்பு: பரிணாமம் என்பது ஒரு கட்டுக்கதை என்பதை நம்முடைய கட்டுரையின் வாயிலாக சொல்லி வருகிறோம், நாம் ஆதாரம் இல்லாத கருத்துக்களையோ மனதில் பட்டவைகளையோ பதியாமல் உறுதி செய்த பிறகே பதிகிறோம். நம்முடைய கருத்து தவறு என்று தகுந்த ஆதாரத்துடன் நிருபிப்பார்கலானால் அதை ஏற்று கொள்ளவும் தயாராக இருக்கிறோம். மாறாக, பரிணாமம் என்பது சரி தான் என்ற எண்ணம் கொண்டவர்களும், அதை பற்றி முழுமையாக அறியாத பட்சத்தில் தங்களுக்குள்ளே ஒரு வரைமுறையை ஏற்படுத்தி கொண்டவர்களும், அதை பற்றி எதுவும் தெரியாதவர்களும் தங்களின் பரிணாமம் குறித்த சந்தேகங்களை இங்கு பதியலாம், இறைவன் நாடினால் தகுந்த ஆதாரத்துடன் பதிலளிப்போம்.

Post Comment

14 Comments:

ஷர்புதீன் said...

for follow ups

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

தங்கள் மீதும் இறைவனின் அமைதியும் பேரருளும் நிலவட்டுமாக...

///இன்னும் இந்த பழைய கதைகளை பள்ளி பாடங்களில் வைத்துள்ளனர் என்பது வேதனையான விஷயம்.///

காரணங்கள்

இன மற்றும் நிறவெறியர்களுக்கு :-
*********************************
தங்கள் வெறியை நிலைநாட்ட பரிணாமம் என்ற கட்டுக்கதை உயிர்நாடி.

(அதாவது, "தங்கள் வெள்ளை இனம்தான் முதலில் பரிணமித்த மூத்தகுரங்கினம். தாழ்ந்த கருப்பு இனம் என்பது 'மிக சமீபத்தில்' பரிணமித்தது... இன்னும் முழுதாய் பரிணமிக்கவில்லை.. அதான் கருப்பு நிறம், நீண்ட அகல தாடை, தடித்த உதடு, சுருட்டை முடி..." !?? -நன்றி:டார்வின்)


கடவுள் மறுப்பாளர்களுக்கு :-
***************************
கடவுளை மறுக்க பரிணாமம் என்ற கட்டுக்கதை உயிர்நாடி.

(அதாவது, "நாங்கள் பரிணமித்தோம். படைக்கப்படவில்லையாக்கும்...!??"--இவர்களிடம் 'அப்படியெனில், முதல் உயிரினம் எதிலிருந்து பரிணமித்தது?' என்றால்... இடி,மின்னல் என்ற கப்சா கதை எல்லாம் முளைக்கும்...)


வர்ணாசிரமத்தை மட்டும் எதிர்ப்போருக்கு :-
****************************************
'நான்கு வர்ணங்களை' (?) மறுக்க, இவர்களுக்கு பரிணாமம் உயிர்நாடி.

("நீங்கள் மட்டும் கடவுளின் தலையில் இருந்து பிறந்ததாக பந்தாவிட வேண்டியது இல்லை. நீங்களும் ஒரு குரங்கினம்தானாம், என்னைப்போலவே... ஹி..ஹி.. நாமெல்லாம் ஒரே வர்க்கம்..!??")


இஸ்லாமோஃபோபியா காரர்களுக்கு :-
***********************************
இஸ்லாம் மட்டுமே மிகத்தெளிவாக படைப்புக்கொள்கையை அறிவியல் பூர்வமாய் வைத்துவிட்டதால், பரிணாமத்தை தங்கள் வேதங்கள் அடிப்படையில் எதிர்க்க வேண்டியவர்கள் கூட, பரிணாமத்தை ஆதரிக்கும் அந்தோ பரிதாப நிலை..!

("பரிணாமம் அறிவியல்டா... அப்டீன்னா... உன்னுது கதைடா..!?? அதை அந்த அளவுக்கு தெளிவாக எதிர்க்காத என்னுடையதுதான் வேதம்டா.."--என்பதில் அல்ப சந்தோஷம்)

ஆக,

'பரிணாமம் பொய்க்கதை' என்பது மற்றவர்களை விட, 'பரிணாமவாதி'களுக்கு நன்றாக தெரியும். இருந்தும் அவை பாடப்புத்தகத்தில் இருப்பதற்கு காரணம், தங்கள் 'கொள்கைக்கு'(?) மூளைச்சலவை செய்து ஆள்பிடிப்பவர்களால் எழுதப்படுவதே பள்ளிப்பாட புத்தகங்கள் என்பதால்..!

ஹைதர் அலி said...

நண்பரே அருமையான பதிவு

வாழ்த்துக்கள்

கார்பன் கூட்டாளி said...

நண்பர் ஆசிக்,

தங்களின் மீதும் இறைவனின் அருள் நிலவட்டுமாக.

பரிணாம கதைகளை புத்தகங்களில் இடுவதன் மூலம் மதங்கள் என்பவை அறிவியலுக்கு அப்பாற்பட்டவை என்பதை காண்பிக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். ஆனால் அதற்கான ஆதாரங்களை இடாமல் வெறும் கதைகளை வைத்து என்ன பயன்.

டார்வினின் பல சிந்தனைகள் பொய் என்று தற்போது நிருபிக்க பட்டுள்ளது, முழுமையாக அவை பொய் என்று ஒதுக்கி தள்ளும் காலம் மிக விரைவில் வரும்.

கார்பன் கூட்டாளி said...

நண்பர் ஷர்புதின், ஹைதர் அலி.

நன்றி. தொடர்ந்து படியுங்கள்.

கார்பன் கூட்டாளி said...

தற்செயலாக தளத்தின் traffic source ஐ செக் செய்யும் பொது எழில் என்ற ப்ளாக் கை காண நேர்ந்தது, அதில் நம்மை பற்றி விமர்சிக்க கண்டேன். பொதுவாக மனிதன் ஒரு விசயத்தை ஆராயும் பொது தனக்கு தேவையான அந்த பகுதியை மட்டும் எடுத்து கொண்டு, மற்ற பகுதியை விடுவது என்பது ஒரு சகஜமான என்று தான்.

இதில் அரை குறைகள் தங்கள் விஷம தனத்தை ஆரம்பிக்கும் பொது தான் பிரச்னை ஆரம்பிக்கும். அது போல தான் இந்த எழில் என்பவரின் ப்ளாக்கும்.
அந்த ப்ளாக் கை பார்த்ததும் அதிர்ந்தேன், பட்டியலிடும் அளவு கேவலம்:

அனைத்தும் மத துவேச கருத்துக்கள். மதங்களை காய படுத்த தேடி பிடித்து மிகவும் கேவலமாக எழுதுவது என அனைத்து சாக்கடைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளார்.

பொய்கள் இட்டுகட்டுதல், மிகை படுத்துதல் என அனைத்து அசிங்கங்களும் அந்த ப்ளாக் கில் உள்ளன.

இவரின் பதில் உண்மையை அறிவதற்காக இல்லை மாறாக பிறரை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக, இருப்பினும் அவருக்கும் பதிலளிக்க வேண்டும் என்பதால் பதிலளிக்கும் கட்டாயத்தில் உள்ளேன்.

// இது உண்மையல்ல. குரோமசோம் வித்தியாசமாக இருந்தால் சில வேளைகளில் இனப்பெருக்க சக்தி குறையும். சில வேளைகளில் அதிகரிக்கவும் செய்யலாம். //

அவர் கொடுத்த reference இல் உள்ள ஆங்கில வார்த்தையை பார்த்தல் மேலே கொடுக்க பட்டுள்ள அர்த்தத்தை தரக்கூடிய வார்த்தை எதுவும் இல்லை. இவர் எங்கிருந்து இதை எடுத்தார்? ஒருவர் விமர்சனம் செய்வதானால் ஓர் அளவுக்காவது விசயங்களை அறிந்திருக்க வேண்டும்.
நம்முடைய குரோமோசோம் பதிவை அறிவியல் அறிவு கொண்டு கூட யோசிக்க வேண்டாம், சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தாலே புரியும்.

23 ம் 23 ம் நேருக்கு நேர் இணையும் பொது ஒவ்வொன்றும் அதனுடைய பாதியுடன் இணைந்து 46 வரும், 23 ம் 24 ம் அதே போன்று இணைந்தால் என்ன நடக்கும் எதோ ஒன்று மிச்சமிருக்கும், ஒன்று விடு படும், இது சாதாரண 2 ம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு கூட தெரியும், இந்த சாதாரண சிந்தனை கூட இல்லாமல் அவசர அவசரமாக கேட்கப்படும் இந்த கேள்விகள் அறியாமையின் வெளிப்பாடு. ஒரு குரோமோசோம் என்பது பல பகுதிகளை உருவாக்க கூடியது என்பதை ஏனோ அறியவில்லை அவர்.

< Interspecific hybrids are bred by mating two species, normally from within the same genus. The offspring display traits and characteristics of both parents. The offspring of an interspecific cross are very often sterile; thus, hybrid sterility prevents the movement of genes from one species to the other, keeping both species distinct.[9] Sterility is often attributed to the different number of chromosomes the two species have, for example donkeys have 62 chromosomes, whilehorses have 64 chromosomes, and mules and hinnies have 63 chromosomes. Mules, hinnies, and other normally sterile interspecific hybrids cannot produce viable gametes because the extra chromosome cannot make a homologous pair atmeiosis, meiosis is disrupted, and viable sperm and eggs are not formed. >

மேலே கொடுக்க பட்டுள்ள (http://en.wikipedia.org/wiki/Hybrid_(biology)) விலிருந்து எடுக்க பட்ட பகுதியை காணலாம், “hybrids cannot produce viable gametes “ என்பதை காணலாம், அதற்கு அர்த்தம் கலப்பினங்களால் சரியான அல்லது முழுமையான கருமுட்டையை உருவாக்க முடியாது என்பது தான்.
மேலும் என்னுடைய பதிவுகள் ஹாருன் யஹ்யா தளத்திலிருந்து எடுக்க படுகிறது என்பதும் முழுக்க முழுக்க பொய். பிற தளங்களிலிருந்து ஏதேனும் எடுக்க நேரிட்டால் அது reference இடப்படும் என்பது குறிப்பிட தக்கது.

அதில் ஒருவர் (அவரே) இட்ட பின்னோட்டத்தில் கீழ் உள்ளது போன்று கூறி இருந்தார்.

// அருணன்said...
நீங்கள் இந்த பதிவை போட்டதும், அவரது பதிவில் இந்த பதிவில் லிங்க் வந்தது. பிளாக்கராக செய்வது அது.

வெகுவிரைவில் அந்த பதிவரால் நீக்கப்பட்டது.

இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இவர்களுடையை விவாதத்திறனையும் நேர்மையையும்.//

இவர் இட்ட பின்னூட்டம் 23 ம் தேதி. நான் இந்த எழில் தளத்தை பார்க்க நேரிட்டதே 25 ம் தேதிதான். இதுவும் தவறான குற்றசாட்டு.

முழுக்க முழுக்க பொய்யை (குப்பை மேடு) மட்டுமே அடித்தளமாக கொண்டு இயங்கும் இது போன்ற மனிதர்களால் இந்தியாவின் ஒற்றுமைக்கே களங்கம் என்பதை இவர்களும் இவர்களை வைத்து அரசியல் நடத்தும் கலுசடைகளும் என்று உணர்வார்கள் என்பதே நம்முடைய கவலை.

G u l a m said...

உங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தி நிலவட்டும் .,
தமிழில் பரிணாம கதைகளை விவரிக்கும் வலைதளங்கள் மிக மிக குறைவு., இறை நாட்டத்தால் இனியும் இதைப்போன்ற ஆக்கங்கள் வளரட்டும் உங்கள் வாயிலாகவும்... அதற்கு ஏகன் அருள் புரியட்டும்
இறை நாடினால் இனியும் சந்திப்போம்

கார்பன் கூட்டாளி said...

உங்களின் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக.

நன்றி நண்பர் குலாம், தொடர்ந்து படியுங்கள்.

சுவனப்பிரியன் said...

நண்பரே அருமையான பதிவு

வாழ்த்துக்கள்

கார்பன் கூட்டாளி said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுவனப்ரியன் தொடர்ந்து படியுங்கள்.

nidurali said...

அல்ஹம்துலில்லாஹ்!
Assalamuallikum.
I have seen very good articles in this site.
I appreciate you for your sincere efforts and your service must be encouraged and appreciated.

I have given Link to your site in http://seasonsali.com/ as கார்பன் கூட்டாளி in LINK 5(Tamil)
Please visit my sites and my brother`s grand son Aashiq Ahamed site எதிர்க்குரல்
Wassalam

The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
Jazak Allahu khayr جزاك اللهُ خيراً

கார்பன் கூட்டாளி said...

wa alaikkum assalam,

I am happy to receive your comment, i will check the websites, and i am already having the friendship with aashiq ahamed and it is to mention எதிர்க்குரல் is the famous blog in the tamil bloggers. nice to hear aashiq is your brother's grand son.i pray allah to give all the health and wealth to your family members.

once again thank you very much for your valuable comment.

இப்னு ஷாகிர் said...

அன்புள்ள கார்பன் கூட்டாளி,

குரோமசோம்களை நம்புவதா அல்லது இஸ்லாமை நம்புவதா என்று முடிவு செய்யுங்கள்.

இந்த நாத்திகர்கள் குழந்தை உருவான பொழுதே ஆண் பெண் என்று நிச்சயம் செய்யப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ 42 ஆம் நாளில் வானவர்கள் அல்லாஹ்வை கேட்டு அதன் பின்னரே ஆணா பெண்ணா என்று முடிவு செய்கிறார்கள் என்று கூறுகிறார்.

உங்கள் தாயின் கருவறையில் நாற்பத்தி இரண்டு நாட்கள் கடந்த பின், இறைவன் ஒரு வானவரை அனுப்பி வைத்து, அவர் (அக் கருவின்) செவி மற்றும் பார்வைப் புலன்களையும், தோல், சதை மற்றும் எலும்புகளையும் ஒருங்கமைக்கின்றார். பின்பு இறைவனிடம் அவர் இது ஆணா அல்லது பெண்ணா? என வினவ, இறைவன் தான் விரும்பியதைப் படைக்கின்றான். (முஸ்லிம். எண்.2645).

நாத்திகர்களுக்கு பதிலளிக்கிறேன் என்று வழிதவறி விழுந்துவிடாதீர்கள்.

Dr.Dolittle said...

குரோமோசோம்களின் இந்த மாற திறன் பரிணாம வாதிகளின் வாதத்திற்கு தக்க பதிலடியாக இருக்கும் என்பதை அனைவரும் நன்கு அறிவர், இரு குரோமோசோம்களை இணைப்பது என்பது தற்போது உள்ள அறிவியலில் கூட அதி நவீன ஆய்வகங்களை வைத்து கூட சாத்தியமில்லாத ஒன்று அப்படி ஒரு அதிசயத்தை தானாக ஒட்டி கொண்டது என்பது Gluestick வைத்து இரு குச்சிகளை ஓட்டுவது போல ஒட்டிக்கொள்ளும் என்று நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் சுலபமாக தெரியலாம் அதை நன்கு ஆராய்ந்து அதன் விளைவை அறிந்தவர்கள் அதை ஒரு பொழுதும் ஒப்பு கொள்ள மாட்டார்கள்.

//தானாக ஒட்டி கொண்டது என்பது Gluestick வைத்து இரு குச்சிகளை ஓட்டுவது போல ஒட்டிக்கொள்ளும் என்று நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் சுலபமாக தெரியலாம்..''.

சகோ அப்ப mitosis , மியாசிஸ் அப்போ குரோமோசோம்கள் ஒட்டிக்கொள்கின்றனவே அது எல்லாம் பொய்யா ?
அய்யய்யோ எனக்கு என்னோட வாத்தியாருங்க தப்பா சொல்லி குடுத்துட்டாங்களா ?

any way i ll write regarding this issue in my blog , which will answer ur ques.

Post a Comment