Tuesday, February 07, 2012

மாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக..

முதலில் நம்முடைய பூமியே நடுநிலைப்பாட்டுடனே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்முடைய முந்தைய கட்டுரை மூலம் விளக்கி உள்ளோம். பூமியை தவிர மற்ற கோள்களில் உயிர் வாழ காற்று இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறி விடாமல் அனைத்து வகைகளிலும் மனித இனம் வாழ இயலாத அளவிற்கும் அதிகப்படியாக நடைபெறும் இயற்கை சீற்றங்களினாலும் மற்ற கிரகங்களில் அசாதாரண சூழ்நிலையே நிலவுகிறது, அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவாமல் அனைத்து நன்மைகளையும் பெற்று நாம் சுக போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த பூமியில்.


தாவரங்கள், விலங்குகள் என மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் ஒரு குழுவாக இயங்குகின்றது இந்த பூமியில். இதைத்தான் இயற்கையின் சமநிலை (Nature Balance) என்று கூறுவர். நாம் இதை பற்றி சில சமயங்களில் கேள்வி பட்டிருப்போம், இதை இயற்கையின் சமநிலை என்ற போதிலும் இயற்கை எப்படி இப்படியான சமநிலையை கடைபிடிக்கும், எப்படி இந்த சமநிலையை தீர்மானிக்கிறது அரைகுறை இல்லாத ஏற்பாடுகள் எப்படி ஏற்பட்டன போன்ற கேள்விகள் தான் இறைவன் என்ற ஒரு ஒற்றை நிலையை எடுத்து வைக்கின்றது இந்த சமநிலையை தீர்மானிப்பதில் குறிப்பிட்ட உயிரினங்கள் மட்டுமல்லாமல் அதற்கு காரணமாக உயிரற்ற பொருள்கள் கூட அதாவது சூழ்நிலைகள் கூட முக்கியமான காரணிகளாக அமைந்து விடுகின்றன. ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு உயிரினங்கள் வெவ்வேறு அமைப்பை கொண்டுள்ளதால் தான் அனைத்து உயிரினங்களும் வாழ்க்கை நடத்துகின்றன. 

இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீற்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலி(Food Chain). இதைப்பற்றி நாம் பள்ளி பாடங்களில் படித்திருப்போம், இந்த உணவு சங்கிலி அமைப்பை பார்க்கும் பொழுது அது ஒரு அதிசயமிக்க மனித அறிவை மிஞ்சிய செயலாகவே காணப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள் முதல் பெரிய உயிரினம் வரை ஒரு ஏற்பாட்டுடன் நடைபெறுகின்றது. சிறு பூச்சிகளை தவளை இனம் உண்கிறது, தவளைகளை உண்ணும் பாம்பை கழுகு உட்கொள்கின்றது என அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து சுழற்சிகளை மேற்கொள்கின்றன. இது குறிப்பிட்ட வகையான விலங்குகளின் உணவு சங்கிலி முறை. இதேபோன்ற பல உணவு சங்கிலி அமைப்பு முறைகள் எந்த வித சலனமும் இல்லாமல் தத்தமது வேலையை செய்கின்றன.


இதேபோன்று கடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகளை உட்கொண்டு சிறுஉயிரிகள் வாழ்கின்றன, அந்த சிறுஉயிரிகளை உட்கொண்டு பெரிய மீன்கள் வாழ அவைகளை உட்கொண்டு திமின்கலம் போன்ற மிக பெரிய உயிரினங்கள் வாழ்கையை நடத்துகின்றன, இந்த உணவு சங்கிலிகள் மூலம் இயற்கை அதன் தன்மையை தக்க வைத்து கொள்வதுடன் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரினத்தை சார்ந்தே வாழ்க்கை நடத்த முடியும் என்பதை எடுத்துரைக்கிறது. உணவு சங்கிலி மட்டுமல்லாமல் வேறு சில நிர்ணயிக்கப்பட்ட செயல்பாடுகளை வைத்து கொண்டு இந்த பூமியை அழிவிலிருந்தும் காத்து சமநிலையையும் உண்டாக்குகின்றன.

இந்த சமநிலையை வேட்டை ஆடுதல், நோய், தட்ப வெப்ப நிலை போன்ற சில முக்கிய காரணிகளை கொண்டு பிரித்து அறியலாம், இந்த காரணிகளே உயிரினங்களின் உணவு சுழற்சிக்கு முக்கிய காரணம். உணவின் தேவையே ஒரு விலங்கை வேட்டையாட வைக்கிறது இதனால் ஒரு குறிப்பிட்ட உயிரினங்கள் மட்டும் இந்த பூமியில் வாழாமல் அனைத்து அதை சார்ந்து வாழும் உயிரினங்களும் வாழ்கின்றன. இதுமட்டுமல்லாமல் தட்ப வெப்ப நிலை மற்றும் நோய் போன்ற காரணங்களாலும் குறிப்பிட்ட உயிரினங்களின் இறப்பு ஏற்படுகிறது அதை அடிப்படையாக வைத்து மற்ற வகை உயிரினங்கள் தங்களது வாழ்கையை தொடர்கின்றன. 

இதேபோன்று பாதுகாப்பு யுக்திகளையும் எதிர்க்கும் சக்திகளையும் உயிரினங்கள் பெறாமல் இல்லை, வெவ்வேறு உருவங்களும் வடிவங்களும் கொண்ட உயிரினங்கள் தன்னை பாதுகாத்து கொள்ள ஒரே மாதிரியான எதிர்க்கும் சக்தியையும் கொண்டிருக்கவில்லை, வெவ்வேறு திறமைகளை கொண்டுள்ளன இது போன்ற மாற்று சக்தியை கொண்ட உயிரினங்களும் தன் இனத்திர்கேற்ப பாதுகாப்பு யுக்தியை பெற்ற உயிரினங்களும் இயற்கையை நிலைபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மாற்று சக்தி அமைப்பு வைத்து கொண்டு மற்ற விலங்குகளிமிருந்து தன்னையும் தன் இனத்தையும் பாதுகாத்து கொள்கின்றன, இல்லையேல் மற்ற சக்தி மிகுந்த உயிரினம் அதன் இனத்தையே வேட்டை ஆடி விட கூடும். அது அவ்வினம் முழுமையாக அழிந்துவிடும் நிலைமைக்கு கூடதள்ளப்படும். 

ஒரே ஒரு நாள் மட்டுமே வாழும் உயிரினங்கள் கூட ஒரு வகை தற்காப்பு ஆற்றலை பெற்றுள்ளது, அதன் தற்காப்பு ஆற்றல் அதற்கே தெரியாத அனிச்சை செயலாக இருக்கும் பொழுது அதற்கு அதன் செயல்பாடுகளே (தத்தமது பரிணாம வளர்ச்சியே) காரணம் என்று கூறுவது சரியானது அல்ல. இந்த நடுநிலை தன்மையை அனைத்து உயிரிங்களினாலும் பின்பற்றப்பட்டாலும் அது அவைகளுக்கு தெரிவதில்லை, உயிரினங்கள் பாதுகாப்பு யுக்தியை பெற்றிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இனம் பல்கி பெருகி ஆபத்தை விளைவிக்காத அளவிற்கு கட்டுப்படுத்த படுகிறது. உதாரணமாக ஒரு பெண் கொசு ஒரு இனப்பெருக்க காலத்தில் முன்னூறு (~) முட்டைகளை போடும், அதன் வாழ் நாளில் அதாவது இரண்டே வாரத்தில் முன்னூறு முட்டைகளை இட அதன் மூலம் 360000 (~) கொசுக்கலாக மாறுகிறது. இதே போன்று பிறக்க கூடிய அனைத்து கொசுக்களும் உற்பத்தியை செய்து கொண்டிருந்தால் ஆறே மாதத்தில் அந்த கொசுக்களால் பூமியே மூடப்படும். ஆனால் இதை செய்ய விடாமல் தடுப்பதற்கும் மற்ற வகை உயிரினங்களுக்கும் பாதுகாவலராக வருபவர்தான் சிலந்திகள்.

கொசுக்களை போன்று உள்ள லட்சகணக்கான பூச்சிகளை கொன்று தின்பவர் தான் இந்த சிலந்தி வகையை சேர்ந்தவர்கள், குறிப்பாக ஒரு பெண் சிலந்தி தன்னுடைய வாழ் நாளில் 250 கொசுக்களையும் 33 பழ பூச்சிகளையும் கொன்று தின்கின்றதாம், இங்கு சரியான சமநிலையை பின்பற்ற உதவுவது தான் இந்த சிலந்திகளும் அதை சார்ந்த குழுக்களும்.  மேலும் சிறு பூச்சு வகைகளை பார்ப்போமானால் அவை அதன் இனத்தையே உண்டு வாழ்கின்றன, இந்த பூச்சுக்கள் அதன் இனத்தை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் ஒரு வருடத்தில் இயற்கையே நடுநிலை தடுமாறி விடுமாம்.அவைகள் தாவரங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதன் ஒரு இனப்பெருக்க காலத்திலேயே தாவர வர்க்கத்தையே இந்த பூமியிலிருந்து அழித்துவிடுமாம். அங்கும் மிக அருமையான முறையில் இயற்கை சமநிலை படுத்த படுகின்றது. இது போன்று ஆயிரம் ஆயிரம் பூச்சிகள் மற்ற பூச்சி இனங்களை தின்று அதை பெருக விடாமல் இயற்கை சமநிலையை சரிசெய்கின்றன, இருப்பினும் அந்த இனம் முழுமையாக அழிந்து விடாமல் அந்த இனங்களே தற்காத்து கொள்கின்றன, அல்லது அதை சாப்பிடும் இனங்கள் அந்த இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க அதை வளர விட்டு விடுகின்றன. இதுபோன்ற நிகழ்வு அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

பறவை போன்ற மேல்மட்ட விலங்குகளே பூச்சி போன்ற இனத்தை சாப்பிடுகின்றன, ஆனால் பரிணாமத்தின் படி பூச்சி வகைகள் வந்த பிறகு தான் பறவை இனம் வந்தது, பூச்சிகளை சாப்பிட பறவைகள் இல்லாத நேரத்தில், பூச்சிகள் உலகில் உள்ள அனைத்து வகையான தாவரங்களை உண்டு மொத்த இனத்தையும் அழித்திருக்கும், அப்படியெனில் பரிணாமத்தின் படி தாவரத்தை உண்டு வாழும் மேல்மட்ட உயிரினங்கள் வருவதற்கு வாய்ப்புக்களே இருந்திருக்காது. ஆக அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றி இருந்தால் மட்டுமே இப்படி ஒரு உலக அமைப்பு இருப்பதற்கு சாத்தியம்.

கடலில் வாழக்கூடிய முட்டை இடும் உயிரினங்களுள் அதிகமான முட்டையிடும் வகை மீனான oceans sunfish அதன் ஒரு இனபெருக்க காலத்தில் முப்பது கோடி (~) முட்டைகள் வரை இடும், அதே போன்று ஒரு சிப்பியானது (oyster) அதன் வாழ் நாளில் 20 லட்சம் (~) முட்டைகள் வரை இடும், etc. அப்படி இருந்தும் கடலை மூடக்கூடிய அளவிற்கு மீன்கள் இல்லையே ஏன்? ஏனெனில் அந்த மீன்களை சாப்பிடுகிற மற்ற மீன்கள் இருக்கின்றன, அந்த வேறொரு இன மீன்கள் இந்த வகை மீன்களை அதன் எண்ணிக்கைக்கு மேல் அதிகமாகி விடாமல் சமநிலையை தக்க வைத்து கொள்கின்றன.


உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, ஒரு விலங்கோ அல்லது தாவரமோ இறந்த பின்பு அதை உண்பதர்காகவே சில பாக்டீரியா (Bacteria), பன்கேஸ் (Fungus) போன்ற நுண்ணுயிரிகளை கடவுள் உருவாக்கி உள்ளார், இவர்களை இயற்கையின் பாதுகாவலர்கள் என்றும் அழைப்பர். குறிப்பாக Burying beetle என்ற வண்டு இனம் தொலை தூரத்தில் இறந்த விலங்குகளையும் அறிய கூடிய ஆற்றல் பெற்றுள்ளது, இது போன்று இன்னும் பல, இறந்த உயிரினங்களை இவைகள் உண்ணவில்லை என்றால் என்ன ஆகும், உயிரினங்கள் இப்பூமியில் அடுத்த சந்ததிகள் வாழ்வதே இயலாத காரியமாக ஆயிருக்கும்.

இதே போன்று ஒவ்வொரு உயிரினமும் இயற்கையை சமநிலை படுத்த ஒவ்வொரு விளக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது, அவை அனைத்தையும் கூறினால் அது ஆச்சர்யமானதாகவே இருக்கும். ஒரு இனம் மட்டும் வாழும் அளவிற்கு இந்த பூமி இருக்கவில்லை குறிப்பிட்ட இனத்திலிருந்து அனைத்தும் வந்திருந்தால் மற்ற உயிரினத்தை உணவிற்காக கூட அழித்திருக்கும் தற்போது இருப்பது போல அனைத்தும் வாழவேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்காது இது போன்ற வித்தியாசமான நிர்ணயிக்கப்பட்ட முறைகளை காணும் எவரும் இவைகள் ஒவ்வொன்றாக தானாக வந்திருக்கும் என கூற வாய்ப்பில்லை, ஏனெனில் தன்னகத்தே சிக்கலான அமைப்பை பெற்றுள்ளதோடு ஒன்றில்லையே ஒன்றில்லை என பிற உயிரினங்களிலும் பிரிக்க முடியாத குழுவாக வாழ்கையை நடத்துகின்றன. 

மேலும் சொல்வோமானால் சிறு விலங்குகள் அதிக இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் பெரிய விலங்குகளோ சிறிய அளவிலான (சூழ்நிலையை பொருத்து) இனப்பெருக்கத்தை செய்கிறது. இயற்கையின் தன்மையை நிலை நாட்டுவதற்காக இனப்பெருக்கத்தையும் மாபெரும் சக்தி கட்டுபடுத்துகிறது.

தாவரங்களும் விலங்குகளும் மனிதனுடன் இணைந்து இயற்கையை நடுநிலை படுத்த காரணமாய் இருக்கின்றது. நம் அனைவருக்கும் தெரிந்து ஒரு உதாரணம், மனிதன் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவான், ஆக்சிஜன் இல்லையேல் நம்மால் உயிர் வாழ முடியாது, ஆனால் மரங்களோ கார்பன் டை ஆக்சைடை வாயுவை உட்கொண்டு மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றது, அப்படியல்லாமல் அனைத்து தாவரங்களும் ஆக்சிஜன் தான் வேண்டும் என்றால் நிலைமை என்ன ஆகும். (அதேநேரம் இரவில் தாவரங்கள் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும், இதன் காரணமாகவே இரவில் மரத்தின் அடியில் படுக்க வேண்டாம் என்பர்.)


மேலும் மனித உற்பத்தியை எடுத்து கொள்ளுங்கள், ஆண் பெண் இரண்டு வர்க்கத்தினரும் பிறக்கின்றனர், சராசரியாக சீர்படுத்த கூடிய அளவில் தான் பிறப்பு விகிதம் இருக்கிறது. ஆனால் ஆண் குழந்தை பிறப்பது வெகுவாக குறைந்தால் பெண்கள் திருமணமாகாமல் தவிப்பார், அதே பெண்குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் ஆண்கள் திருமணத்திற்கு பெண் இல்லாமல் திரிவர், ஆனால் நடைமுறையில் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் (2011 census) என இந்தியாவில் பெண்களின் விகிதம் இருக்கிறது, சிசுக்கொலை அதிகமாக உள்ள நமது நாட்டில் இந்த நிலை மற்ற நாடுகளை கணக்கில் கொண்டால் தோராயமாக சமமாகவே அல்லது பெண்களின் விகிதம் சற்று அதிகரித்தோ இருக்கும். இருப்பினும் ஒரே அடியாக பெண்களின் எண்ணிக்கையோ ஆண்களின் எண்ணிக்கையோ தாறுமாறாக உயர்வதோ அல்லது குறைவதோ இல்லை, ஒரு சமநிலையை நிலை படுத்தி கொண்டே உள்ளது, ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனியானவர்களே எனும் போது இது போன்ற நிலைபாட்டை ஏற்படுத்துவது யார்? சிந்திக்க தெரிந்தவர்களுக்கு கடவுளை அறிய பச்சை மரத்தாணிபோல இது ஒன்றே போதும்.


இயற்கையான முறை என அனைத்திலும் உள்ளது அதை பயன்படுத்தும் காலமெல்லாம் நம்மால் இயற்கைக்கு ஆதரவான நடுநிலைபாட்டை ஏற்படுத்த முடியும், இதை அலட்சியபடுத்தும் போது அது இயற்கையாக அமையபெற்ற நடுநிலை தன்மையை சீர்குலைப்பதாக இருக்கும், அந்த நேரங்களில் அபாயகரமான விளைவுகளை நமது இனம் சந்திக்க நேரிடும். உதாரணமாக குளோபல் வார்மிங்கை ஏற்படுத்தும் க்லோரோ ப்லோரோ கார்பன், ஒரே இடத்தில் அடுக்கடுக்காக கட்டப்பட்ட கட்டிடங்களின் இயற்கைக்கு மாறன நிலைப்பாடு நிலநடுக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துவது. அனைத்தும் முறையாக வடிவமைக்கப்பட்ட பூமி நமது தவறுகளினால் சீர்குலைக்க படுகிறது, சீர்குலையாத பூமி என்ற நிலைக்கு அனைத்து வகை உயிரினங்களும் சூழ்நிலைகளும் அச்சாணி என்றிருக்க அவை ஒவ்வொன்றாக உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. 

இயற்கையாக இது போன்ற ஒரு நிலைத்தன்மை நிலவுவதற்கு இப்பூமியில் உள்ள அனைத்தின் செயல்பாடுகளும் அறிந்த நடுநிலைத்தன்மையை உருவாக்க கூடிய ஒரு சக்தியினால் மட்டுமே முடியும். இந்த சீரிய அமைப்பிலிருந்து உயிரினங்கள் குறிக்கோளுடன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம். 

“மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன.” (அல்குர்ஆன் 45:4) 

- கார்பன் கூட்டாளி 

Post Comment

42 Comments:

suvanappiriyan said...

சலாம் சகோ!

இப்பொழுதுதான் ஆஷிக்கின் பதிவுக்கு பின்னூட்டம் இட்டுவிட்டு இங்கு வந்தால் அதேபோல் டார்வினின் கோட்பாட்டுக்கு எதிரான மற்றொரு பதிவு. இது என்ன டார்வின் எதிர்ப்பு வாரமா? பார்ப்போம். டார்வின் ஆதரவாளர்கள் என்ன பதிலோடு வருகிறார்கள் என்று!

அறிவுபூர்வமான பதிவை தந்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...
This comment has been removed by the author.
Unknown said...

வஅலைக்கும் அஸ்ஸலாம்,

//இப்பொழுதுதான் ஆஷிக்கின் பதிவுக்கு பின்னூட்டம் இட்டுவிட்டு இங்கு வந்தால் அதேபோல் டார்வினின் கோட்பாட்டுக்கு எதிரான மற்றொரு பதிவு. இது என்ன டார்வின் எதிர்ப்பு வாரமா? பார்ப்போம். டார்வின் ஆதரவாளர்கள் என்ன பதிலோடு வருகிறார்கள் என்று!//

சகோ. முன்பு கொடுக்க பட்டதற்கே சரியான பதில் இல்லை. ஆக பதிலை எதிர்பார்க்காமல் தெளிவை தருவோம்.

நன்றி சகோ.

Unknown said...

Assalamu alikum bro! Masha allah super article!
Adikadi ethumathiri pathivu podungal
allah ungaluku atharkundana nalla palanai tharuvanaga!!
Jazhkallahu kair

Unknown said...

வஅலைக்கும் அஸ்ஸலாம்,
சகோ. s. jaffer khan,

இறைவன் நாடினால் தொடர்ந்து பதிவிடுகிறேன் சகோ.

கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து படியுங்கள்.

அம்பலத்தார் said...

உயிரினங்களின் வாழ்வியலின் அடிப்படைகளில் ஒன்றான உணவு சங்கிலியை எளிமையாக விளக்கிப்பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் நண்பா

Unknown said...

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோ. அம்பலத்தார்.

Barari said...

மிக பெரிய விஷயத்தை எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

படங்களும் விளக்கமும் மிக அருமை அதிலும் படங்களின் தரம் ரொம்ப நல்லாயிருக்கு
இதற்காக ரொம்ப சிரமப்பட்டு உழைத்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் சகோ

சிராஜ் said...

சகோ கார்பன் கூட்டாளி ,

அற்புதமான பதிவு. விவரிக்க வார்த்தைகள் இல்லை. உங்கள் உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. எங்களைப் போன்றவர்கள் நோகாமல் மேலோட்டமாக எழுதிக்கொண்டு இருக்கையில், ஒரு பதிவிற்கான உங்கள் மெனக்கெடல் மிகப் பெரிய ஆச்சரியம் சகோ. மனமார்ந்த வாழ்த்துக்கள். நியாயமாக இந்த பதிவு மகுடம் சூட வேண்டும். ஆனால் சூடாது. ஏனெனில் அதுதான் பதிவுலக நிலை. இங்கு மொக்கைகள் மட்டுமே சூடான இடுகைகளுக்கு பெரும்பாலும் வருகிறது. அரசியல் அல்லது சினிமா.


/* இருப்பினும் ஒரே அடியாக பெண்களின் எண்ணிக்கையோ ஆண்களின் எண்ணிக்கையோ தாறுமாறாக உயர்வதோ அல்லது குறைவதோ இல்லை, ஒரு சமநிலையை நிலை படுத்தி கொண்டே உள்ளது, ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனியானவர்களே எனும் போது இது போன்ற நிலைபாட்டை ஏற்படுத்துவது யார்? சிந்திக்க தெரிந்தவர்களுக்கு கடவுளை அறிய பச்சை மரத்தாணிபோல இது ஒன்றே போதும்.
*/

ஆதாரப் பூர்வமான உங்கள் விவாதங்கள் நமது நாத்திக நண்பர்களின் மனதை அசைக்கும் சகோ, இறைவன் நாடினால். தொடரட்டும் உங்கள் பணி.

Unknown said...

சகோ. barari,

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து படியுங்கள்.

Unknown said...

//படங்களும் விளக்கமும் மிக அருமை அதிலும் படங்களின் தரம் ரொம்ப நல்லாயிருக்கு
இதற்காக ரொம்ப சிரமப்பட்டு உழைத்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் சகோ//

ஆமாம் சகோ. சற்று சிரமமாக தான் இருந்தது, எழுதுவதை விட, செய்திகளை சரி பார்ப்பதற்கு தான் சிரமமே.

ஊக்கத்திற்கு நன்றி சகோ.

Unknown said...

//நியாயமாக இந்த பதிவு மகுடம் சூட வேண்டும். ஆனால் சூடாது. ஏனெனில் அதுதான் பதிவுலக நிலை. இங்கு மொக்கைகள் மட்டுமே சூடான இடுகைகளுக்கு பெரும்பாலும் வருகிறது. அரசியல் அல்லது சினிமா. //

நமது கடைசி பதிவு மகுடத்தில் வந்தது சகோ. இந்த பதிவையும் எதிர்பார்த்தேன் இறைவன் நாடினால் வரும்.

//ஆதாரப் பூர்வமான உங்கள் விவாதங்கள் நமது நாத்திக நண்பர்களின் மனதை அசைக்கும் சகோ, இறைவன் நாடினால். தொடரட்டும் உங்கள் பணி.//

உங்களுடன் சேர்ந்து நானும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

தங்களின் ஊக்கத்திற்கு நன்றி சகோ. தொடர்ந்து பதிவுகள் எழுத போதிய அறிவை பெற இறைவனிடம் பிரதியுங்கள்.

வால்பையன் said...

இப்படி ஒரு பேலன்ஸ் கடவுளால் உருவாக்கபட்டது என்றால் டைனோசர்கள் ஏன் அழிந்தன?, அதன் பாசில்கள் எல்லாம் பொய்யா?

இன்று இல்லாத கிடைக்கப்பெற்ற பாசில்கள் எல்லாம் பொய்யா? அவைகள் ஏன் அழிந்தன?

Unknown said...

//இப்படி ஒரு பேலன்ஸ் கடவுளால் உருவாக்கபட்டது என்றால் டைனோசர்கள் ஏன் அழிந்தன?, அதன் பாசில்கள் எல்லாம் பொய்யா?

இன்று இல்லாத கிடைக்கப்பெற்ற பாசில்கள் எல்லாம் பொய்யா? அவைகள் ஏன் அழிந்தன?//

பொய்யாக இருக்க வாய்ப்பில்லை, அவைகள் அழிக்கப்பட்டிருக்கலாம்.

உயிரினங்கள் எல்லாம் இஷ்டப்படி செய்யும் குறிப்பிட்ட சக்தியை பெற்றுத்தான் உள்ளன,ஏன் இன்று அமெரிக்கா இவ்வுலகத்தையே அழிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். தன்னிடம் உள்ள நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்களை வைத்து முழுவதும் அழிக்க முடியும்.சமநிலை படுத்த படுவதைவிட அதிகப்படியான சக்தியை கொண்டு மட்டுமே அழிக்க முடியும்.

அறிவியல் உலகமே இவ்விலங்குகள் வெள்ளப்பெருக்கு போன்ற பேரழிவினால் தான் அழிந்தன என்றே கூறுகின்றது. அப்படியே ஒரு குறிப்பிட்ட விலங்கு முழுமையாக இறந்து போகிறது என்றாலும் மற்ற சமநிலையை சரிசெய்யும் மற்ற விலங்குகள் இருக்கத்தானே செய்கின்றன.

டைனசர்கள் அழிகின்றது எனும் போது அங்கு பரிணாம கருத்துக்கள் உடைந்து போகின்றன என்றே கூறுவேன்,ஏனெனில் இயற்கையாக தானாக உருவான அனைத்தும் ஒவ்வொரு நிலையாக மாறி மேல்மட்ட நிலைக்கு செல்லும் போது அங்கு ஒரு இனமே எவ்வாறு அழியும். அதற்கான வாய்ப்பு எவ்வாறு உருவாகும். மேல்மட்ட நிலைக்கு மட்டுமே உயிரினங்கள் செல்லும் என்ற பரிணாமத்தின் அடிமட்ட நிலையே பொய் என்று ஆகிறது.

ஆக டைனசர்கள் அழிந்ததை வைத்து சமநிலைபடுத்த படுவதைவும், தெரிந்தே அழிக்கப்பட்டன என்பதையும் பொய் படுத்த முடியாது. நாம் இங்கு கூற வருவது அனைத்தும் கட்டுப்படுத்த படுகின்றது என்பதை தான்,
இவையெல்லாம் கட்டுபடுத்தும் ஒரு சக்தியைத்தான் கடவுள் என்கிறோம், அதை நீங்கள் இயற்கை என்று பெயர் வைத்தாலும் சரி. வேறு எந்த பெயரில் அழைத்தாலும் அது உங்கள் விருப்பம். ஒரு மாபெரும் திட்டமிடக்கூடிய சக்தி இருப்பது மட்டும் உண்மை.

வால்பையன் said...

டைனோசர்கள் அழிந்தது பரிணாமத்தை பொய் படுத்துதா?

அப்போ ஏன் டைனோசர்கள் படைக்கப்படனும், கடவுள் என்ன லூசா?

வால்பையன் said...

எதாவது ஒண்ணு இருக்கனும்னு எதாவது கட்டாயமா?

நான் உலகம் உருவாக கடவுள் தேவையில்லைன்னு சொல்றேன், நீங்க கடவுள் தேவைன்னு சொல்றீங்க, அந்த விவாததுக்கு வாங்க, உங்க கடைசி பின்னூட்டம் வேற பக்கம் இழுத்துட்டு போகுது@

வால்பையன் said...

@ சுவனப்பிரியன்

டார்வின் ஆரம்பம் மட்டுமே, அதன் பிறகு பரிணாமத்தின் கோட்பாட்டை விரிவுபடுத்தியது பலர்!

வால்பையன் said...

ஹைதர் அலி said...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

படங்களும் விளக்கமும் மிக அருமை அதிலும் படங்களின் தரம் ரொம்ப நல்லாயிருக்கு
இதற்காக ரொம்ப சிரமப்பட்டு உழைத்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் சகோ//

ஆமாமா

ரொம்ப சிரமப்பட்டிருக்கார்!
அதற்காக சுவனத்தில் எக்ஸ்ட்ரா நித்திய கன்னிகைகள் கிடைக்குமா என்ன?

Unknown said...

//அப்போ ஏன் டைனோசர்கள் படைக்கப்படனும், கடவுள் என்ன லூசா?//

பாதி சிந்திக்காதீர்கள் சகோ. என் தாத்தாவிற்கு தாத்தா ஏன் இறந்து போனார் அதனால் கடவுள் இல்லை என்று கூறுவீர்கள் போல.

இவையெல்லாம் systematic காக நடைபெறும் விஷயங்கள்.

//எதாவது ஒண்ணு இருக்கனும்னு எதாவது கட்டாயமா?//

இல்லையென்றால் சமநிலை இருக்காது என்பதை விளக்கியுள்ளேன், அதற்கு பதில் தாருங்கள்.

//நான் உலகம் உருவாக கடவுள் தேவையில்லைன்னு சொல்றேன், நீங்க கடவுள் தேவைன்னு சொல்றீங்க, அந்த விவாததுக்கு வாங்க, உங்க கடைசி பின்னூட்டம் வேற பக்கம் இழுத்துட்டு போகுது@//

நான் அப்படி கூறவில்லை கடவுள் என்பதை தான் இயற்கை என்று வேறு வார்த்தைகளில் கூறுகிறீர்கள் என்று கூறுகிறேன்.

உங்களுடைய கேள்விக்கு கரெக்டா பதில் தரவேண்டுமெனில் ஏன் அழிந்தன என்றா வெல்ல பேருக்கு போன்ற சீற்றத்தால் அழிந்தன...............

Unknown said...

//ஆமாமா

ரொம்ப சிரமப்பட்டிருக்கார்!
அதற்காக சுவனத்தில் எக்ஸ்ட்ரா நித்திய கன்னிகைகள் கிடைக்குமா என்ன?//

இது இந்த நேரத்தில் தேவை இல்லாததும் பதிவிற்கு சம்பந்தம் இல்லாத கேள்வி. ஏதேனும் பதில் இல்லையெனில் கூறுவதை ஏற்று கொள்ளலாம், இது போன்று சம்பந்தம் இல்லாமல் கேள்வியை எழுப்ப வேண்டாம்.

Dr.Dolittle said...

//கடவுள் என்பதை தான் இயற்கை என்று வேறு வார்த்தைகளில் கூறுகிறீர்கள் என்று கூறுகிறேன்.//

இயற்கை, அறிவியல் என்பதை தான் வேறு வார்த்தைகளில் நீங்கள் கூறுகிறீர்கள் என்று நான் கருதுகிறேன்

Unknown said...

/இயற்கை, அறிவியல் என்பதை தான் வேறு வார்த்தைகளில் நீங்கள் கூறுகிறீர்கள் என்று நான் கருதுகிறேன்//

நான் இந்த வார்த்தை விளையாட்டிற்கு வரவில்லை. இரண்டும் ஒன்றுதான் என்று ஒப்பு கொண்டதற்கு நன்றி. அப்படியே அதற்கு மனிதனை மிஞ்சிய அறிவு உள்ளது என்றும் ஒப்பு கொள்ளுங்கள்...

Unknown said...

Anonymous has left a new comment on your post

/ஆண் பெண் இரண்டு வர்க்கத்தினரும் பிறக்கின்றனர், சராசரியாக சீர்படுத்த கூடிய அளவில் தான் பிறப்பு விகிதம் இருக்கிறது. ஆனால் ஆண் குழந்தை பிறப்பது வெகுவாக குறைந்தால் பெண்கள் திருமணமாகாமல் தவிப்பார், அதே பெண்குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் ஆண்கள் திருமணத்திற்கு பெண் இல்லாமல் திரிவர், ஆனால் நடைமுறையில் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் (2011 census) என இந்தியாவில் பெண்களின் விகிதம் இருக்கிறது, சிசுக்கொலை அதிகமாக உள்ள நமது நாட்டில் இந்த நிலை மற்ற நாடுகளை கணக்கில் கொண்டால் தோராயமாக சமமாகவே அல்லது பெண்களின் விகிதம் சற்று அதிகரித்தோ இருக்கும். இருப்பினும் ஒரே அடியாக பெண்களின் எண்ணிக்கையோ ஆண்களின் எண்ணிக்கையோ தாறுமாறாக உயர்வதோ அல்லது குறைவதோ இல்லை, ஒரு சமநிலையை நிலை படுத்தி கொண்டே உள்ளது, ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனியானவர்களே எனும் போது இது போன்ற நிலைபாட்டை ஏற்படுத்துவது யார்?//

இது கூட தெரியவில்லையா வண்டிக் கருப்பண்ண சாமிதான்.அரபிகளின் கடவுள் அல்லாவின் விகிதம் ஒரு ஆணுக்கு நாலு பெண்கள்(1:4).குறைந்த பட்சம் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்களாவது இருந்தால் மட்டுமே குரான் வசனம் உண்மையாகும்.
Surah 4 Verse 3:
And if you fear that you cannot act equitably towards orphans, then marry such women as seem good to you, two and three and four; but if you fear that you will not do justice (between them), then (marry) only one or what your right hands possess; this is more proper, that you may not deviate from the right course.

அப்ப‌டி இல்லாமல் 1:1 என இருப்பதற்கு கருப்பண்ண சாமிதான் காரணம்.

Unknown said...

//இது கூட தெரியவில்லையா வண்டிக் கருப்பண்ண சாமிதான்.அரபிகளின் கடவுள் அல்லாவின் விகிதம் ஒரு ஆணுக்கு நாலு பெண்கள்(1:4).குறைந்த பட்சம் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்களாவது இருந்தால் மட்டுமே குரான் வசனம் உண்மையாகும்.
Surah 4 Verse 3:
And if you fear that you cannot act equitably towards orphans, then marry such women as seem good to you, two and three and four; but if you fear that you will not do justice (between them), then (marry) only one or what your right hands possess; this is more proper, that you may not deviate from the right course.

அப்ப‌டி இல்லாமல் 1:1 என இருப்பதற்கு கருப்பண்ண சாமிதான் காரணம்.//

கேட்ட கேள்வி மிக அருமை ஆனால் முறை தான் சரி இல்லை. இஸ்லாம் பற்றிய கேள்வியாக இருந்தாலும் பதிவிற்கு சிறு சம்பந்தம் இருப்பதால் விளக்குகிறேன். சரி. பதிலை பாருங்கள்.

நான்கு என்பது கட்டாயமல்ல, நான்கு திருமணம் செய்தால் தான் சுவனம் என்றும் அல்ல. இது ஒரு அனுமதி. எதற்காக இந்த அனுமதி(சமநிலை படுத்த), போர் போன்ற நிலைகளில் ஆண்கள் அதிகமாக கொல்லப்பட்டு பெண்களின் எண்ணிக்கை மிகுதியாகி விடுகிறது. இது போன்ற சமயங்களில் என்ன செய்வீர்கள், ஒன்றுக்கு ஒன்று எனும் போது மிச்சமிருக்கும் பெண்களை என்ன செய்வீர்கள், இதற்கு எடுத்து காட்டாக சமீபத்தில் நடந்த இலங்கை போரில் ஆண்கள் கொல்லப்பட்டு 89000 தமிழ் பெண்கள் விதவைகளாக இருகின்றார்களாம், (http://tamilinsight.com/mypress/content/debate-indian-parliament-40000-tamil-people-were-massacred-sri-lanka-not-seen-such-massacre) எதற்கு என்ன தீர்வு? அவர்கள் விபசாரம் செய்வதை தான் ஆதரிகிரீர்களா? இது தான் சமூக அக்கறையா? இது போன்ற சமயங்களில் மற்ற இயலும் ஆண்கள் ஏன் அவர்களை திருமணம் செய்து கொள்ள கூடாது.

இதே போன்றே இராகிலும் ஆப்கானிஸ்தானிலும்.

மேலும் இஸ்லாம் கூறுகிறது வரும் காலங்களில் பெண்களின் விகிதம் அதிகமாகும் என்று, அந்த சமயங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது.

பதில் கிடைத்ததா?

Dr.Dolittle said...

//நான் இந்த வார்த்தை விளையாட்டிற்கு வரவில்லை. இரண்டும் ஒன்றுதான் என்று ஒப்பு கொண்டதற்கு நன்றி. //

அறிவியல் இயற்கையிலிருந்து தான் கற்றுக்கொள்ளபட்டது , இயற்கை இல்லையேல் அறிவியல் இல்லை மண்டையில் விழுந்த பேரிலந்தை பழத்திலிருந்து தான் புவியீர்ப்பு விசையை கற்றோம்..பறக்கும் பறவையிலிருந்து தான் விமானம் செய்ய கற்றுக்கொண்டோம் .

//அப்படியே அதற்கு மனிதனை மிஞ்சிய அறிவு உள்ளது என்றும் ஒப்பு கொள்ளுங்கள்...//

ஒப்புகொள்கிறேன் ... மனிதனை மிஞ்சிய அறிவு ஒன்று உள்ளது , அதன் பெயர் இயற்கை , அதனை உயிரினங்கள் அறிய ஒன்றிலிருந்து ஆறாக அறிவை உயர்த்தி உள்ளது ( அந்த இயற்கையின் துணையோடு ,பரிணாம படிகளில் முன்னேறி ) ,

கவலை படாதீர்கள் பரிணாமத்தின் படி நமது அறிவு இன்னும் உயர்ந்து , அந்த இயற்கையும் இறைவனும் ஒன்றா என்று கண்டுபிடித்து விடுவோம் .

சரி , நீங்கள் பரிணாமத்தை ஒத்துகொள்கிறீர்களா ?

Dr.Dolittle said...

//டைனசர்கள் அழிகின்றது எனும் போது அங்கு பரிணாம கருத்துக்கள் உடைந்து போகின்றன என்றே கூறுவேன்,ஏனெனில் இயற்கையாக தானாக உருவான அனைத்தும் ஒவ்வொரு நிலையாக மாறி மேல்மட்ட நிலைக்கு செல்லும் போது அங்கு ஒரு இனமே எவ்வாறு அழியும் .மேல்மட்ட நிலைக்கு மட்டுமே உயிரினங்கள் செல்லும் என்ற பரிணாமத்தின் அடிமட்ட நிலையே பொய் என்று ஆகிறது.. //

இயற்கையின் மாற்றங்களில் நிலை நிற்கத்தெரியாத உயிரினங்கள் அழிவுக்கு தான் செல்லும் , இயற்கைக்கு இறைவன் அளவுக்கு கருணை கிடையாது , இங்கு எல்லாமே survival of the fittest தான் .

எடுத்துக்காட்டு : பனியுகம் முடிந்த போது அழிந்த உயிர்கள் பல உண்டு ,

//ஏனெனில் இயற்கையாக தானாக உருவான அனைத்தும் ஒவ்வொரு நிலையாக மாறி மேல்மட்ட நிலைக்கு செல்லும் போது அங்கு ஒரு இனமே எவ்வாறு அழியும். //

உண்மை தான் , முற்றிலுமாக அழியாது smilodon (saben toothed cat ), பெரிய sloth கரடி , போன்றவை வெவேறு ரூபங்களில் பனிக்கு தக்கவாறு இருந்த உடலமைப்பை மாற்றி தற்போது பரிணாமம் அடைந்து உலவிக்கொண்டு உள்ளன .

அப்போ டைனோசர்கள் என்னவாயிற்று?

komodo dragon , முதலை , பறவைகள் ரூபத்தில் நம் முன்னே உலவிக்கொண்டு தானே உள்ளது ?

Dr.Dolittle said...

//பறவை போன்ற மேல்மட்ட விலங்குகளே பூச்சி போன்ற இனத்தை சாப்பிடுகின்றன, ஆனால் பரிணாமத்தின் படி பூச்சி வகைகள் வந்த பிறகு தான் பறவை இனம் வந்தது, பூச்சிகளை சாப்பிட பறவைகள் இல்லாத நேரத்தில், பூச்சிகள் உலகில் உள்ள அனைத்து வகையான தாவரங்களை உண்டு மொத்த இனத்தையும் அழித்திருக்கும், அப்படியெனில் பரிணாமத்தின் படி தாவரத்தை உண்டு வாழும் மேல்மட்ட உயிரினங்கள் வருவதற்கு வாய்ப்புக்களே இருந்திருக்காது. ஆக அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றி இருந்தால் மட்டுமே இப்படி ஒரு உலக அமைப்பு இருப்பதற்கு சாத்தியம்.//

பூச்சிகளை பறவைகள் மட்டும் உண்பதில்லை , அவற்றை அதன் இனத்தை சேர்த்த

பூச்சிகளே உண்ணலாம்
( cannibalism - http://en.wikipedia.org/wiki/Sexual_cannibalism,http://www.ncbi.nlm.nih.gov/pubmed/19961322,http://www.environmentalgraffiti.com/featured/insects-kill-partners/15386 ),

மற்ற பூச்சிகள் உண்ணலாம் , (http://oregonbd.org/Class/Pred.htm,http://en.wikipedia.org/wiki/Biological_pest_control,http://courses.cit.cornell.edu/ent201/content/predators_lec.pdf)

தாவரங்களே கூட உண்ணலாம் (http://en.wikipedia.org/wiki/Carnivorous_plant,http://www.botany.org/carnivorous_plants/ )

நோய் தாக்கி இறந்து போகலாம்

Unknown said...

//அறிவியல் இயற்கையிலிருந்து தான் கற்றுக்கொள்ளபட்டது , இயற்கை இல்லையேல் அறிவியல் இல்லை மண்டையில் விழுந்த பேரிலந்தை பழத்திலிருந்து தான் புவியீர்ப்பு விசையை கற்றோம்..பறக்கும் பறவையிலிருந்து தான் விமானம் செய்ய கற்றுக்கொண்டோம் .//

இது தற்கால அறிவியல், நான் கூறுவது மனிதன் உருவான போதே அறிவியலுடன் தான் இருக்கிறான், தான் சமைக்க கற்று கொண்டது கூட ஒரு அறிவியல் தான்,

//கவலை படாதீர்கள் பரிணாமத்தின் படி நமது அறிவு இன்னும் உயர்ந்து , அந்த இயற்கையும் இறைவனும் ஒன்றா என்று கண்டுபிடித்து விடுவோம் . //

இன்னும் உயரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, இருப்பதை தான் முழுமையாக உபயோக படுத்த போகிறோம். இருப்பினும் அப்பொழுது விவாதிக்க நாம் இருப்போமா விவாதிக்க?

//சரி , நீங்கள் பரிணாமத்தை ஒத்துகொள்கிறீர்களா ?//

இல்லை, இருப்பினும் micro evolution என்பது உண்மை. இதை பற்றி என்னுடைய முதல் பதிவிலயே கொடுத்துள்ளேன். விருப்பம் இருந்தால் பாருங்கள்.

http://carbonfriend.blogspot.com/2010/07/blog-post.html

Unknown said...

//இயற்கையின் மாற்றங்களில் நிலை நிற்கத்தெரியாத உயிரினங்கள் அழிவுக்கு தான் செல்லும் , இயற்கைக்கு இறைவன் அளவுக்கு கருணை கிடையாது , இங்கு எல்லாமே survival of the fittest தான் . எடுத்துக்காட்டு : பனியுகம் முடிந்த போது அழிந்த உயிர்கள் பல உண்டு ,//

முற்றிலும் தவறு. திடிரென ஒரு கோள் பூமியின் மீது மோதினால் அனைத்து உயிரினமும் அழிந்து தானே போகும், அப்படியெனில் அனைத்து உயிரினமும் நிலை நிற்க தெரியாத உயிரினம் என்றாகிறது, நிலை நிற்க தெரியாத உயிரினத்தை எதற்காக இயற்கை உருவாக்க வேண்டும்.

நீங்கள் கூறும் இயற்கை எனபதே கற்பனை என்று கூறுகிறேன். கருணை இல்லாத இயற்கைக்கு ஆக்ரோசம் மட்டும் எங்கிருந்து வந்தது?????????? எதற்காக பல உயிர்களை அழிக்க வேண்டும், எதற்காக சுனாமி நிலநடுக்கம் வர வேண்டும், மத கொள்கையை தவிர வேறு எந்த கொள்கையாலும் இதற்கு பதில் தர முடியாது.

//உண்மை தான் , முற்றிலுமாக அழியாது smilodon (saben toothed cat ), பெரிய sloth கரடி , போன்றவை வெவேறு ரூபங்களில் பனிக்கு தக்கவாறு இருந்த உடலமைப்பை மாற்றி தற்போது பரிணாமம் அடைந்து உலவிக்கொண்டு உள்ளன .

அப்போ டைனோசர்கள் என்னவாயிற்று?

komodo dragon , முதலை , பறவைகள் ரூபத்தில் நம் முன்னே உலவிக்கொண்டு தானே உள்ளது ?//

டைனசர்கள் எனும் போது டைனசர்களை மட்டும் பேசுங்கள், ஏன் மனிதன் கூட அதன் வழி தோன்றல்கள் தானே (உங்கள் வாதப்படி) அதனால் மனிதன் இருக்கிறான் அதனால் டைனசர் இனமே அழிந்தது என்பது தவறு அது அழியவில்லை மனிதன் உருவில் வாழ்கிறது என்று கூறுவீர்கள் போல.

Unknown said...

//பூச்சிகளே உண்ணலாம் //

//மற்ற பூச்சிகள் உண்ணலாம் , //

//தாவரங்களே கூட உண்ணலாம் //

//நோய் தாக்கி இறந்து போகலாம்//

அப்படியெனில் தன்னை தானே அழித்து கொள்ளுமல்லவா, மேல்மட்ட விலங்குகள் எவ்வாறு உருவாகும்.

Dr.Dolittle said...

// நான் கூறுவது மனிதன் உருவான போதே அறிவியலுடன் தான் இருக்கிறான், தான் சமைக்க கற்று கொண்டது கூட ஒரு அறிவியல் தான், //

இதே கருத்தை நானும் கூறினேன்

//இன்னும் உயரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, இருப்பதை தான் முழுமையாக உபயோக படுத்த போகிறோம். இருப்பினும் அப்பொழுது விவாதிக்க நாம் இருப்போமா விவாதிக்க?//

மாமரத்தை நம் நடுவோம் , கனியை நம் சந்ததி சுவைக்கட்டும் .

//இல்லை, இருப்பினும் micro evolution என்பது உண்மை. இதை பற்றி என்னுடைய முதல் பதிவிலயே கொடுத்துள்ளேன். விருப்பம் இருந்தால் பாருங்கள். //

நன்றாக நினைவில் உள்ளது , மிக்க மகிழ்ச்சி

//முற்றிலும் தவறு. திடிரென ஒரு கோள் பூமியின் மீது மோதினால் அனைத்து உயிரினமும் அழிந்து தானே போகும், அப்படியெனில் அனைத்து உயிரினமும் நிலை நிற்க தெரியாத உயிரினம் என்றாகிறது, நிலை நிற்க தெரியாத உயிரினத்தை எதற்காக இயற்கை உருவாக்க வேண்டும்//

அப்படி இது வரை நடக்க வில்லையே , அதற்கு சாட்சி உயிரோடு இருக்கும் நீங்களும் நானும் தான் .

//நீங்கள் கூறும் இயற்கை எனபதே கற்பனை என்று கூறுகிறேன். கருணை இல்லாத இயற்கைக்கு ஆக்ரோசம் மட்டும் எங்கிருந்து வந்தது?????????? எதற்காக பல உயிர்களை அழிக்க வேண்டும், எதற்காக சுனாமி நிலநடுக்கம் வர வேண்டும், மத கொள்கையை தவிர வேறு எந்த கொள்கையாலும் இதற்கு பதில் தர முடியாது.//

சுனாமி வருவது , நிலநடுக்கம் வருவது எல்லாம் tectonic plates இன் ஆட்டத்தினால் , இதை பற்றி முழுவதும் எனக்கு தெரியாது , யாராவது தெரிந்தவர்கள் பதிவிடலாம் .

//டைனசர்கள் எனும் போது டைனசர்களை மட்டும் பேசுங்கள், ஏன் மனிதன் கூட அதன் வழி தோன்றல்கள் தானே (உங்கள் வாதப்படி) அதனால் மனிதன் இருக்கிறான் அதனால் டைனசர் இனமே அழிந்தது என்பது தவறு அது அழியவில்லை மனிதன் உருவில் வாழ்கிறது என்று கூறுவீர்கள் போல.//

எனது கருத்தின் படி மனிதனே ஒரு வாழும் fossil தான்

//அப்படியெனில் தன்னை தானே அழித்து கொள்ளுமல்லவா, மேல்மட்ட விலங்குகள் எவ்வாறு உருவாகும்.//

பல பதிவுகளுக்கு இட்டு செல்லக்கூடிய ஒரு வரி கேள்வி , அறிவியல் விரும்பினால் தொடரலாம் .

சமுத்ரா said...

கடவுள் ஒரு பூச்சியையும் , மனிதனையும் ஒரேநேரத்தில் தான் படைத்தாரா? அப்படியென்றால் மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? அவனும் பூச்சியும் பாக்டீரியாவும் ஒன்றுதான் என்று ஆகி விடும்.மனிதன் போன்ற complex structures பரிணாமத்தின் மூலமே சாத்தியம்.

Unknown said...

//மனிதன் போன்ற complex structures பரிணாமத்தின் மூலமே சாத்தியம். //

எப்படி என்று கூறுங்களேன்... உயிரியலில் அதற்கான சாத்தியம் இருக்கிறதா???????

சமுத்ரா said...

என் கருத்து என்ன என்றால் மனிதனின் விதை எப்போதோ பூமியில் தோன்றி இருக்க வேண்டும். இன்று புவியில் இருக்கக்கூடிய எண்ணிலடங்காத ஜீவராசிகளின் விதையும் பூமி குளிர்ந்து
உயிரினங்களை அனுமதிக்கும் அந்தக் காலகட்டத்திலேயே வந்திருக்க வேண்டும். இந்த விதைகளை படைத்தது கடவுளாக இருக்கலாம். அல்லது இயற்கையாக இருக்கலாம்.அதுதான் அல்லா என்று மத சார்புடன்
சொல்லாதீர்கள்.அறிவியலை எழுதினால் தயவு செய்து மதசார்பின்மையுடன் எழுதுங்கள்.This is my request ...ஒரு நிலத்தில் வெவ்வேறு விதைகளைப் போட்டால் எல்லாம் ஒரே சமயத்தில் முளைப்பது இல்லை அல்லவா? சில சீக்கிரம் முளைக்கும்.சில நேரம் எடுத்துக் கொள்ளும். அறிய அபூர்வ தாவரங்கள் முழு வளர்ச்சி அடைய நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (சந்தன மரம் !).அது போல மனிதனின் விதை எப்போதோ பூமியில் விழுந்து இருந்தாலும் கூட அவன் வருவதற்கு சில சாதகமான சூழ்நிலைகள் தேவைப்பட்டிருக்கிறது.
ஆதியில் பூமியின் மடியில் விழுந்த உயிர் விதைகள் கால மாற்றத்துக்கு ஏற்ப ஒவ்வொன்றாக
முளைத்தன. இதை தான் அறிவியல் பரிணாமம் என்கிறது.

Unknown said...

//என் கருத்து என்ன என்றால் மனிதனின் விதை எப்போதோ பூமியில் தோன்றி இருக்க வேண்டும். இன்று புவியில் இருக்கக்கூடிய எண்ணிலடங்காத ஜீவராசிகளின் விதையும் பூமி குளிர்ந்து
உயிரினங்களை அனுமதிக்கும் அந்தக் காலகட்டத்திலேயே வந்திருக்க வேண்டும். //

இது ஒரு புதுமையான கருத்து தான் ஆனாலும் பரிணாமத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்து. விதை என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?

//இந்த விதைகளை படைத்தது கடவுளாக இருக்கலாம். அல்லது இயற்கையாக இருக்கலாம்.அதுதான் அல்லா என்று மத சார்புடன்
சொல்லாதீர்கள்.அறிவியலை எழுதினால் தயவு செய்து மதசார்பின்மையுடன் எழுதுங்கள்.This is my request ..//

அல்லாஹ் என்பது அரபி வார்த்தை அவ்வளவு தான், அது ஒரு போது வார்த்தை, “பிரபஞ்சத்தை உருவாக்கி நடத்துபவன்” என்ற அர்த்தம் உள்ள வார்த்தை, கடவுள் என்று கூறினால் ஓகே வா?. என்னை பொறுத்த வரை இரண்டும் ஒன்று தான்(அர்த்தத்தில்). இனி பொதுவான பதிவுகளில் “பிரபஞ்சத்தை இயக்கம் சக்தி” என்று பயன்படுத்துகிறேன்.

//அது போல மனிதனின் விதை எப்போதோ பூமியில் விழுந்து இருந்தாலும் கூட அவன் வருவதற்கு சில சாதகமான சூழ்நிலைகள் தேவைப்பட்டிருக்கிறது.
ஆதியில் பூமியின் மடியில் விழுந்த உயிர் விதைகள் கால மாற்றத்துக்கு ஏற்ப ஒவ்வொன்றாக
முளைத்தன. இதை தான் அறிவியல் பரிணாமம் என்கிறது.//

தங்களின் வாதப்படி மனிதன் உருவாக ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் பரிணாம படி இது தவறு. திட்டமிட்டால் (design) என்பதை பரிணாமம் ஏற்று கொள்வது இல்லை, அதற்கு பதிலாக இயற்கையின் தேர்வு (natural selection) என்பதை மட்டுமே ஏற்று கொள்கிறது.

உங்களின் கருத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது போன்று பொருள் படுகிறது, நீங்கள் எதை ஏற்கிரீர்கள்?

சமுத்ரா said...

நான் பரிணாமத்தை எதிர்க்கவும் இல்லை ...ஆதரிக்கவும் இல்லை.No one knows the truth.மேலும் எனக்கு இயற்பியல் தெரிந்த அளவு உயிரியல் அவ்வளவாகத்தெரியாது. இருந்தாலும் எல்லா கோணங்களிலும் யோசித்துப் பாருங்கள்
என்று இரு அணிகளுக்கும் கூறுகிறேன்.

Unknown said...

//மேலும் எனக்கு இயற்பியல் தெரிந்த அளவு உயிரியல் அவ்வளவாகத்தெரியாது. இருந்தாலும் எல்லா கோணங்களிலும் யோசித்துப் பாருங்கள்
என்று இரு அணிகளுக்கும் கூறுகிறேன். //

நானும் பரிணாமத்தை நம்பியவன் தான், என்னுடைய படிப்பிற்கு முன்பு வரை அது என்னவென்று தெரியாதிருக்கும் பொழுது, அதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிந்தபின் நம்புவதில்லை.

Suresh Manickam said...

படைப்பும், பரிணாம வளர்ச்சியும் முற்றிலும் ஒன்றுக்கொன்று எதிரானவை. படைத்தல் என்றால் முடித்தல், பரிணாம வளர்ச்சி என்றால் தொடர் வளர்ச்சி என்று அர்த்தமாகும். பொருட்கள் முழுமை பெறாமல் இருந்தால்தான் வளர்ச்சி சாத்தியப்படும். மேலும் அவைகள் முழுமை எவ்வளவுதான் வளர்ந்தாலும் அங்கே இன்னும் அதிகம் வளர்வதற்கான சாத்தியங்கள் எப்போதும் இருக்கிறது.

"ஒரு பக்கம் கடவுள் உங்களைப் படைக்கிறார்; ஆனால் மறுபக்கம் நீங்கள் ஏதாவது தவறு செய்தால் அவர் உங்களைத் தண்டிக்கிறார்." கடவுள் உங்களைப் படைத்திருந்தால், மேலும் அவர் உங்களது இயல்பை தீர்மானித்திருந்தால், நீங்கள் அதற்கு எதிராகப் போக முடியாது. உங்களுக்கு சுதந்திரம் கிடையாது. படைத்தவன் ஒருவன் இருந்தால், அதன் பிறகு நீங்களும் ஒரு கணிப்பொறிதான். சாத்தானிடம் எந்த ஆபத்தும் இல்லை,உண்மையான ஆபத்து கடவுளிடமிருந்து தான் வருகிறது. சாத்தான் என்பது வெறும் நிழல். கடவுள் மறைந்துவிட்டால் சாத்தான் என்ற நிழலும் தானாகவே மறைந்துவிடும். உண்மையான பிரச்னை கடவுள்தான்.
ஆகவே தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள் நான் நம்பிக்கை இல்லாதவன் என்று கூற ஆரம்பித்து விடாதீர்கள். நான் நம்புகிறவனும் அல்ல. நம்பாதவனும் அல்ல. நடுவில் இருப்பவனும் அல்ல. இந்த முழு விஷயமும் மனித மனதில் வெறும் திரையில் தான் என்றும், நமக்கு எதிராக நாமே விளையாடிக் கொண்டிருக்கிற இந்த விளையாட்டை நிறுத்துவதற்கான காலம் இதுதான் என்று தான் நான் கூறுகிறேன். கடவுளுக்கு எப்போதைக்கும் பிரியாவிடை கொடுப்பதற்கான காலம் இதுதான்.

Unknown said...

//பரிணாம வளர்ச்சி என்றால் தொடர் வளர்ச்சி என்று அர்த்தமாகும். பொருட்கள் முழுமை பெறாமல் இருந்தால்தான் வளர்ச்சி சாத்தியப்படும். மேலும் அவைகள் முழுமை எவ்வளவுதான் வளர்ந்தாலும் அங்கே இன்னும் அதிகம் வளர்வதற்கான சாத்தியங்கள் எப்போதும் இருக்கிறது.//

அதுபோல தற்போது இருக்கிறதா?

/"ஒரு பக்கம் கடவுள் உங்களைப் படைக்கிறார்; ஆனால் மறுபக்கம் நீங்கள் ஏதாவது தவறு செய்தால் அவர் உங்களைத் தண்டிக்கிறார்." கடவுள் உங்களைப் படைத்திருந்தால், மேலும் அவர் உங்களது இயல்பை தீர்மானித்திருந்தால், நீங்கள் அதற்கு எதிராகப் போக முடியாது. உங்களுக்கு சுதந்திரம் கிடையாது.//

இது தங்களின் கருத்தாக இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம், தற்போது நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்ற சுதந்திரத்துடன் தான் உள்ளீர்கள், அது தீர்மானிக்க படாதது என்று எவ்வாறு உங்களால் கூறமுடியும்.

//படைத்தவன் ஒருவன் இருந்தால், அதன் பிறகு நீங்களும் ஒரு கணிப்பொறிதான்.//

கணிப்போறிதான் ஆனால் சுயமாக சிந்தித்து செய்ய கூடிய கணிப்பொறி.

//, நமக்கு எதிராக நாமே விளையாடிக் கொண்டிருக்கிற இந்த விளையாட்டை நிறுத்துவதற்கான காலம் இதுதான் என்று தான் நான் கூறுகிறேன். கடவுளுக்கு எப்போதைக்கும் பிரியாவிடை கொடுப்பதற்கான காலம் இதுதான்.//

இது நிறுத்துவதற்கான காலம் அல்ல, அதிகபடுத்துவதர்கான காலம் என்று ஏன் எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் முன்பை விட அறிவியலில் அதிக வளர்ச்சி தற்போது இருக்கிறது, நாம் எதற்காக இவ்வுலகில் வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

இது விடை கொடுக்கும் நேரம் அல்ல விளங்கி கொள்ள வேண்டிய நேரம் என எடுத்து கொள்ளலாமே.!

ஸாதிகா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

Anonymous said...

humans are not computers....but all other creations such as stars,planets,sea,animals,tree and angels are like computers..they live as per orders...only we are entitled to live on our own....that is why we are the best among God's creations...what is the point in creating everything that will submit to the will of God?...that is why God created us and raised us above everything....

Post a Comment