
இவ்வுலகில் 8600 வகையான பறவைகள் இருக்கின்றன, அனைத்தும் முட்டை இட்டு குஞ்சு போறிப்பவை. ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு தனி திறமை இருப்பது போல பறவை இனத்திற்கு பறப்பது என்ற தனித்துவம் உள்ளது.
பரிணாம வாதிகளின் கதைப்படி ஒரு பறவை எப்படி உருவாகி இருக்க வேண்டும்:
1) சூழ்நிலைகேற்ப தானாக இறக்கை முளைத்து (Natural Selection) உருவாகி இருக்கவேண்டும்.
2) வேதிபொருளால் மரபியலில் ஏற்பட்ட பாதிப்பால் (Mutation) இறக்கை முளைத்து உருவாகி இருக்க வேண்டும்.
வேதியியல் மாற்றத்தால் எந்த உருவமும் சரியாக அமையாது ஒரு உயிரினத்தின் சீர்குலைவையே ஏற்படுத்தும் என்று நான் முன்பே விளக்கி இருக்கிறோம், அப்படியெனில் முதலில் கூறிய பறக்க வேண்டும் என்ற ஒரு விலங்கின் தேவையே இறக்கையை உருவாக்கி பறக்க வைத்தது என்ற அவர்களின் கதைகளை நமது பார்வைக்கு எடுத்துகொள்வோம்.
முதலில் ஒரு விலங்கிற்கு பறக்க தேவை இருந்திருக்குமா? நிச்சயம் இருந்திருக்காது, அதனுடைய உணவு மரத்தில் தான் இருக்கிறது எதுவுமே இல்லாத வானில் எதற்கு பறக்க தேவை. முதலில் ஒரு விலங்கிற்கு பறக்க வேண்டும் என்ற தேவை என்று கூறுவதே தவறு.
பறக்கலாம் என்ற சிந்தனை ஒரு விலங்கிற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை, அதற்கு முன் எதாவது பறந்திருந்தால் அதை பார்த்து நாமும் பறந்து உணவை தேடி கொள்ளலாம் என்று எண்ணி இருக்கும், யாருமே பறக்காத காலத்தில் எப்படி அந்த சிந்தனை வந்தது.
அப்படி பறக்க வேண்டும் என்று எண்ணினாலும் அது பறப்பதற்கு இறக்கை வேண்டும் என்று பறவைகளுக்கு யார் சொன்னது? தற்போதுகூட மனிதன் பறவையை பார்த்து தான் பறப்பதற்கு இறக்கை வேண்டும் என அறிந்துகொண்டான், இறக்கையே இல்லாத நேரத்தில் யார் சொன்னது பறவைக்கு? பறவைக்கு மரத்தில் கிடைக்காத உணவு பறந்து வேறு எங்கிருந்து கொண்டுவர போகிறது, மரத்தை தவிர வானத்தில் வேறு எங்கய்யா அதற்கு உணவிருக்கிறது. அப்படியெனில் அது மரம் ஏறி தானே உணவை தேடுமே தவிர பறக்க முயற்சி செய்திருக்கதே.


ஒரு சாதாரண பறவை மேல் எழும்புவதற்கு ஒரு வினாடிக்கு மூன்று முறை இறக்கையை அசைக்க வேண்டி இருக்கிறது. இந்த வேலைக்கு உடல் அமைப்பு முக்கியம், எலும்பு கனம் குறைவானதாகும் அதிக திறன் உள்ளதாகவும், தசைகள் அதிக திறன் உள்ளதாகவும் இருக்கவேண்டும்.
பரிணாமவாதிகளின் வாதப்படி உடனே இறக்கை வந்திருக்காது எப்படியும் இரண்டு மில்லியன் (அப்பொழுது தான் யாராலும் கேள்வி கேட்க முடியாது அல்லவா!!) வருடத்தில் தான் இந்த இறக்கை முளைத்தது என்றால், பறவைக்கு கொஞ்சம் கொஞ்சமாவது இறக்கை முளைத்திருக்க வேண்டும் (இறக்கை திடிரென ஒரே நாளில் முளைத்தது என்று கூறினால் கூட அது ஒரு வாதத்திற்கு சரியாக இருந்திருக்கும்). முதலில் இறக்கை துளிர் விட்டிருக்கும் பிறகு ஒரு பகுதி இறக்கை உருவாகி இருக்கும் ஆனாலும் பறவையால் பறக்க முடியாது, எதற்காக ஒரு உபயோகம் இல்லாத இறக்கையை வைத்து கொண்டு பல மில்லியன் வருடங்கள் அந்த பறவைகள் வாழ வேண்டும். உபயோகம் இல்லாத இறக்கையை எதற்கு ஐயா அது வளர்க்க வேண்டும்.
அப்படியெனில் பறவையின் ஒவ்வொரு சந்ததிக்கும் அது சொல்லி கொடுத்ததோ, இன்னும் ஐநூறு தலைமுறையில் நமக்கு இறக்கை என்ற ஒரு பொருள் வரும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இறக்கையை வளர்த்து கொண்டு கடைசியில் பறக்கலாம் என்று!!
சில வகையான பறவைகள் முழுமையான இறக்கை முளைக்காமல் பாதி இறக்கையுடன் தளர்ந்து பிறகு மரத்தில் ஏறி ஏறி கை முளைத்து மற்றொரு உயிரினமாக மாறியது என்பது இவர்களின் கதைகளின் தொடர்ச்சி. இந்த அடிப்படை இல்லாத கதைகளை நம்புபவர்களை என்னவென்று கூறுவது?
மனிதனுக்கு ஆதி காலம் முதல் தற்போது வரை பறக்க கூடிய தேவையே இல்லையா, விலங்குகளுக்கே அந்த எண்ணம் தோன்றி பறக்கும் போது மனிதன் ஏன் பறக்க வில்லை, மனிதனின் பறக்கும் ஆசை இருந்ததாலயே விமானத்தை உருவாக்க முடிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தற்போதும் மனிதனுக்கு உலகம் முழுவதும் செலவு இல்லாமல் சுற்ற வேண்டும் என்ற தேவை இருக்கிறது, பத்து மில்லியன் வருடத்தில் இறக்கை முளைத்து மனிதன் பறந்து விடுவானா அல்லது பறப்பதற்கு ஒரு வாகனத்தை உற்பத்தி செய்வானா? சிந்தித்து பாருங்கள். மனிதன் பறக்க வேண்டும் என்றால் இறக்கை முளைத்தால் போதாது புதிதாக மரபு வடிவமைக்க பட வேண்டும்.

44 Comments:
இறகு என்பது தேவைக்கு வளர்த்து கொள்ளப்பட்ட ரோமம், உதாரணம் வவ்வால், அதுவும் தான் பறக்குது, அது பறவையா?
இறகுகள் இருந்தும் பறக்கமுடியாத மறவைகளை எப்படி படைத்திருக்க முடியும், அது படைப்புவத வாத கொள்கையின் முரண்பாடல்லவா?
ப்றவைகளின் சூழ்நிலை அதனை தரையிலே வாழ தகவமைப்பை உருவாக்கி தருகிறது, பென்குயினை விட பெரிய உதாரணம் தேவையில்லை!, பறவைகள் கடவுளால் படைக்கபட்டன என்பதை மறுக்க!
பறவை முட்டைகளை ஆராய்ந்த போது அதன் கருவில் வால் வளர்ந்தது, பின் மறைந்தது, அந்த ஜீன் தூண்டுதலை கட்டுபடுத்தியது போது பறவைகள் முன்னர் வாலுடன் திரிந்து கொண்டிருந்த உயிரினங்கள் என்பது கண்டுபிடிக்கபட்டது!
சாத்தியகூறுகளை ஆராய்வோம், ஜுராசிக் யுகத்தில் வவ்வாலை போன்று இறகுகள் அற்ற ராட்சச பறவைகள் இருந்தது, அது முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தது, அதன் நீட்சி வவ்வால், பரிணாம வளர்ச்சியில் அது பாலூட்டி ஆகிவிட்டது!, நீண்ட தூரம் பறக்க பெரிய சிறகுகள், உடல் தேவைக்கு ஏற்ற வகையில் பரிணாம வளர்ச்சி கண்டது!
தொடர்ந்து உரையாடுவோம் தோழரே!
//உபயோகம் இல்லாத இறக்கையை எதற்கு ஐயா அது வளர்க்க வேண்டும். //
இம்மதிரி நீங்களே நிறைய முரண்பாடுகளை சொல்லியிருக்கிங்க, எனது அடுத்த பதிவுக்கு ஹிண்ட்ஸ் கொடுத்தமைக்கு நன்றி!
வேர்டு வெரிபிகேஷனை இன்னும் எடுக்கல! அதில் எதாவது பிரச்ச்னையா தோழர்?
பரிமாணசிந்தனை அருமை. வாழ்த்துக்கள்
அருமையான பரிமாணசிந்தனைகள் தொடருங்கள்...
பகிர்வுக்கு நன்றி.
//இறகு என்பது தேவைக்கு வளர்த்து கொள்ளப்பட்ட ரோமம், உதாரணம் வவ்வால், அதுவும் தான் பறக்குது, அது பறவையா?
இறகுகள் இருந்தும் பறக்கமுடியாத மறவைகளை எப்படி படைத்திருக்க முடியும், அது படைப்புவத வாத கொள்கையின் முரண்பாடல்லவா?
ப்றவைகளின் சூழ்நிலை அதனை தரையிலே வாழ தகவமைப்பை உருவாக்கி தருகிறது, பென்குயினை விட பெரிய உதாரணம் தேவையில்லை!, பறவைகள் கடவுளால் படைக்கபட்டன என்பதை மறுக்க!//
சில விதிவிலக்கான விலங்குகள் இருந்தால் அதனால் பரிணாமம் உண்மை என்பதற்கு ஆதாரமா? மனிதன் என்பவனும் விதிவிலக்கான விலங்கே, இவைகள் எல்லாம் கடவுளின் அதிசியத்தை விளக்குகின்றன.
வௌவாலும் பென்குயினும் அந்த வகையை சார்ந்தவையே, வௌவால் பறவையின் அதே தத்துவத்தை பயன்படுத்தியே பறக்கின்றன, இறகுக்கு பதிலாக அவைகளுக்கு ரோமம்(fur), பென்குயிங்கள் கடலில் நீந்துவதர்காகவே அவைகளுக்கு உள்ளதுதான் அதன் இறக்கை போன்ற அமைப்பு.
////உபயோகம் இல்லாத இறக்கையை எதற்கு ஐயா அது வளர்க்க வேண்டும். //
இம்மதிரி நீங்களே நிறைய முரண்பாடுகளை சொல்லியிருக்கிங்க, எனது அடுத்த பதிவுக்கு ஹிண்ட்ஸ் கொடுத்தமைக்கு நன்றி!//
இப்படி தனியான ஒரு வரியை எடுத்தால் முரண்பாடாகதான் தெரியும், அதற்கு முன் உள்ள வரியையும் பின் உள்ள வரியையும் சேர்த்து படியுங்கள் புரியும்.
முதல் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி திரு மதுரை சரவணன்,திரு. Thomas Ruban.
தொடர்ந்து படியுங்கள்.
சார் நானும் தங்களுடன் கருத்துக்களை பரிமாறலாம் என்று இருக்கிறேன்!
தாங்கள் கூறுவது போல பறவை கொஞ்ச கொஞ்சமாக தேவையில்லாமல் இறகை வளர்த்து வந்திருக்காது என்பது லாஜிக்காக உள்ளதுதான். ஆனால் திடீரென ஒரு நாளில் முளைத்திருக்கவும் முடியாது.
அப்படியானால் இறக்கை வந்தது எப்படி? என் யூகம் தோலில் உள்ள முடிகளே இறகுகளாக மாறியிருக்கலாம். அப்படியிருந்தால் பரிணமாக வளர்ச்சியில் பறவைகளின் முடிகளின் தோற்றம் மாறிக் கொண்டே இருந்து காலமாற்றத்தில் இறகுகளாக ஆகியிருக்கலாம்.
இதில் ஏதேனும் தவறோ எதிர் கருத்தோ இருந்தால் சொல்லவும்.
இது நான் எங்கோ படித்தது. ஊர்வன ஜந்துக்களே பறவைகளாக மாறின எனவும். முதலை எல்லாம் பறவையின் முன்னோடி எனவும் படித்துள்ளேன். இது எந்த அளவு ஏற்றுக் கொள்ளத்தக்கது எனவும் தெரியவில்லை.
முந்தைய பின்னூட்டத்தில் ஒன்றை விட்டு விட்டேன். முடிகள் இறகுகளாகின என்று நான் யூகம் செய்தாலும் இறகுகள் தசைகள் எலும்புகளுடன் உள்ளதல்லாவா அதனாலும் ஒரே குழப்பமாக உள்ளது.
//என் யூகம் தோலில் உள்ள முடிகளே இறகுகளாக மாறியிருக்கலாம். அப்படியிருந்தால் பரிணமாக வளர்ச்சியில் பறவைகளின் முடிகளின் தோற்றம் மாறிக் கொண்டே இருந்து காலமாற்றத்தில் இறகுகளாக ஆகியிருக்கலாம்.//
தோலில் உள்ள முடிகள் மாறியிருக்கலாம் என்றால், எப்படி மாறி இருக்கும் சற்று யோசித்து பாருங்கள், பெண்களின் முடி போல நீளமாக வந்தது என்று கூறினால் கூட அதில் ஒரு அர்த்தம் உள்ளது. இறகுகளால் பறப்போம் என்று பறவைக்கு தெரிந்தால் தானே அது இறகை வளர்க்கும், பறவைக்கு முழுமையாக இறகு வளரும்வரை இறகுகள் பறக்கத்தான் என்பது பறவைக்கு தெரியாது. அப்படி அதை பொருத்தவரை முழுமையாக வளராதவரை அந்த பாதி இறுகு ஒரு அர்த்தம் இல்லாத இறகே, அப்படி அர்த்தம் இல்லாத இறகை எதற்கு அது வளர்க வேண்டும். அதுவும் தசைகள் எலும்புகளுடன். ஒரு உறுப்பு மாற வேண்டுமானால் பறவையின் stem cell இல் உள்ள மரபும் மாற்ற படவேண்டும் என்பதை நினைவுகூறுகிறேன்.
பரிணாமம் என்பது ஒரு முழுமையாக யோசித்து எழுதப்பட்ட கதை என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா?
//ஊர்வன ஜந்துக்களே பறவைகளாக மாறின எனவும். முதலை எல்லாம் பறவையின் முன்னோடி எனவும் படித்துள்ளேன். //
ஊர்வன பறக்க வேண்டும் என்றால் எப்படி இறக்கை முளைக்கும், முதலில் இது அறிவுக்கு ஏற்றுகொள்ளகூடிய வாதமா?
எப்படி உருவாகின என்பது தெரியவில்லை எனில் தானாக வந்தது என்று ஆகிவிடுமா?
//பரிணாமம் என்பது ஒரு முழுமையாக யோசித்து எழுதப்பட்ட கதை என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா? //
என்னாங்க இது! அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்ள பரிணாமத்தை யோசித்து எழுதப்பட்ட கதைங்கிறிங்க!
குரானை உண்மைங்கிறீங்க?
முரண்பாடா இருக்கே?
நீங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ள கூடியதுதான். ஆனால், தாங்கள் கூறுவது போல ஒரு விலங்கு பல மில்லியன் ஆண்டுகள் பொறுமை காத்து இறக்கையையும் வளர்த்து உடல் அமைப்பையும் மாற்றி பறந்தது என்பது ஏற்றுகொள்ள முடியாத வாதம் என்பதும், ஒரு புத்திசாலித்தனமான சக்தி அதை பறக்கும் திறனுடன் உருவாக்கியது என்பதுமே உண்மை என்றால் எது அந்த புத்திசாலித்தனமான சக்தி?
மேலும் வால்பையன் அவர்கள் கூறுவது போல் பரிணாமத்தை வெறும் கதை என்று ஏற்றுக் கொள்ள முடியாது
//என்னாங்க இது! அதிகபட்ச சாத்தியகூறுகள் உள்ள பரிணாமத்தை யோசித்து எழுதப்பட்ட கதைங்கிறிங்க!//
அது சாத்தியகூறுகள் அல்ல, ஒரு மாயை. அனைத்து விலங்குகளுக்கும் உள்ள ஒற்றுமையை பரிணாம சாத்தியகூறாக எடுத்துக்கொண்டீர்.
//அனைத்து விலங்குகளுக்கும் உள்ள ஒற்றுமையை பரிணாம சாத்தியகூறாக எடுத்துக்கொண்டீர். //
உண்மையும் அது தானே!
விலங்கினங்கள் கருக்கள் தோற்றட்தில் ஒரே மாதிரி இருப்பது நிறுபிக்கபட்ட உண்மை, அதன் பின் பெற்றோர்களீன் ஜீனுக்கு ஏற்ப அது மாறுகிறது, அதுவே பரிணாமத்தின் அத்தாட்சி!
//ஒரு புத்திசாலித்தனமான சக்தி அதை பறக்கும் திறனுடன் உருவாக்கியது என்பதுமே உண்மை என்றால் எது அந்த புத்திசாலித்தனமான சக்தி? //
அந்த புத்திசாலியான சக்தியைத்தான் சிவன் என்றும், கர்த்தர் என்றும், அல்லா என்றும், கடவுள் என்றும் வேறு வேறு மொழிகளில் கூறுகின்றனர்.
அறிவியலில் எதையும் ஆராய்ந்த பின்னர்தான் கோட்பாடுகளை வகுக்க முடியும். பரிணாமக் கோட்பாடுகளில் சில விஷயங்கள் முழுமையாக ஆராய முடியாத காரணத்தால் குழப்பமாக இருக்கலாம். ஆனால் அதற்காக மொத்த கோட்பாடுகளையும் மாயை. கட்டுக்கதை என்பது தவறு!
//அந்த புத்திசாலியான சக்தியைத்தான் சிவன் என்றும், கர்த்தர் என்றும், அல்லா என்றும், கடவுள் என்றும் வேறு வேறு மொழிகளில் கூறுகின்றனர். //
இதை அறிவியல் ஏற்றுக் கொள்ளவே செய்யாது. அறிவியலுக்கு ஆதாரம் தேவை. டார்வின் கோட்பாடுகளுக்கு சில ஆதாரம் இருக்கவே அதை பெரும்பாலோனர் ஏற்றுக் கொண்டனர். இதற்கு?
//விலங்கினங்கள் கருக்கள் தோற்றட்தில் ஒரே மாதிரி இருப்பது நிறுபிக்கபட்ட உண்மை, அதன் பின் பெற்றோர்களீன் ஜீனுக்கு ஏற்ப அது மாறுகிறது, அதுவே பரிணாமத்தின் அத்தாட்சி! //
தங்கத்தில் ஒரு வளையல், ஒரு சங்கிலி, ஒரு தோடு, ஒரு மோதிரம் செய்கிறீர்கள் என்றால் அதற்கு இருக்கும் மூல பொருள் தங்கம் என்ற உலோகம் தான். கூறப்பட்ட அனைத்து பொருளுக்கும் ஒற்றுமை இருக்கும், இருக்கத்தான் வேண்டும். மோதிரமும் வளையலும் ஒரு மாதிரித்தான் இருக்கிறது ஆகவே மோதிரம் தான் வளர்ந்து தானாக வளையலாக மாறியது என்பது எப்படி ஏற்றுகொள்ளகூடிய ஓன்று? இது உயிரில்லாத ஒரு பொருளை உதாரணமாக கூறியது, ஆனால் உயிருள்ளவைகளுக்கு மரபு என்ற ஒரு அளவுகோல் உள்ளது, அதை முழுமையாக (புது உயினத்திற்கு ஏற்றார்போல)மாற்றுவதன் மூலமே ஒரு உயிரினம் வேறொரு உயிரினமாக மாறும். அதுவும் தானாக மாற 100% சாத்தியம் இல்லை.
//அறிவியலில் எதையும் ஆராய்ந்த பின்னர்தான் கோட்பாடுகளை வகுக்க முடியும். பரிணாமக் கோட்பாடுகளில் சில விஷயங்கள் முழுமையாக ஆராய முடியாத காரணத்தால் குழப்பமாக இருக்கலாம். ஆனால் அதற்காக மொத்த கோட்பாடுகளையும் மாயை. கட்டுக்கதை என்பது தவறு! //
முழுமையாக ஆதாரம் இல்லததுனாலயே அது இன்னும் கோட்பாடு என்ற நிலையில் உள்ளது. அது அறிவியலாளர்களால் ஏற்று கொள்ள படவில்லை.
//ஆனால் உயிருள்ளவைகளுக்கு மரபு என்ற ஒரு அளவுகோல் உள்ளது, அதை முழுமையாக (புது உயினத்திற்கு ஏற்றார்போல)மாற்றுவதன் மூலமே ஒரு உயிரினம் வேறொரு உயிரினமாக மாறும். அதுவும் தானாக மாற 100% சாத்தியம் இல்லை.//
நீங்கள் கூறுவதில் சிறிய குழப்பம் உள்ளது!. மரபை முழுமையாக மாற்றினால்தான் புது உயிரினம் தோன்ற வேண்டும் என்றில்லை. மரபுகளில் (டிஎன்ஏ, ஜீன்) சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் உயிரியில் மாற்றம் ஏற்படும்.
மீன்களில் பலவகை உண்டு சில மீன்களுக்கு ரம்பம் போன்ற பகுதி இருக்கும். சாதாரண மீனுக்கும், இரம்ப மீனுக்கும் மரபியல் வேற்றுமை பெரிதாக கிடையாது! ஆனால் எப்படி சாதாரண மீன் ரம்ப மீனாக மாறியது?
//இதை அறிவியல் ஏற்றுக் கொள்ளவே செய்யாது. அறிவியலுக்கு ஆதாரம் தேவை. டார்வின் கோட்பாடுகளுக்கு சில ஆதாரம் இருக்கவே அதை பெரும்பாலோனர் ஏற்றுக் கொண்டனர். இதற்கு? //
அறிவியலுக்குதான் அதாரம் தேவை மனிதனுக்கு சிந்தனை இருந்தால் போதும். இன்னும் கோடி விஷயங்கள் அறிவியலால் ஆதாரம் இல்லாமல் இருக்கின்றன, உதாரணமாக பிரபஞ்சம், மனிதன், சக்தியின் மூலம். அனைத்திற்கும் முழுமையான ஆதாரம் கிடைத்த பின்னரே ஏற்று கொள்வேன் என்றால் அதற்கு இன்னும் 1000 வருடங்கள் கூட ஆகலாம்.
//நீங்கள் கூறுவதில் சிறிய குழப்பம் உள்ளது!. மரபை முழுமையாக மாற்றினால்தான் புது உயிரினம் தோன்ற வேண்டும் என்றில்லை. மரபுகளில் (டிஎன்ஏ, ஜீன்) சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் உயிரியில் மாற்றம் ஏற்படும். //
என்னுடைய முதற் பதிவை படித்தல் உங்களுக்கு புரியும். mutation பற்றி எழுதி உள்ளேன்.
நண்பரே உயிரின் ஆதாரத்தை நாம் இருவரும் விவாதித்து முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அறிவியலுக்கும் சாதாரண மனித சிந்தனைக்குமான போராட்டம் காலம் காலமாக இருந்து வருகிறது!
இதை முழுமையாக அறிவியல்ரீதியாக ஆராய்ந்து ஒரு தெளிவு பெற்ற பின்னரே பரிணாமம் பற்றிய ஒரு முடிவுக்கு நாம் வர முடியும். அதற்கு பல விஞ்ஞானிகளும் பல ஆண்டுகள் கூட ஆகலாம்.
எப்படியோ தங்களுடன் விவாதித்த இந்த சில கணங்கள் எனக்கு பெரிதும் மகிழ்ச்சி அளித்தது! தங்களின் சிந்தனை ஆற்றலுக்கு என் வாழ்த்துக்கள்!
நன்றி திரு எஸ்.கே. தொடர்ந்து படியுங்கள்.
அன்பு சகோதரர் கார்பன் கூட்டாளி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//முதலில் ஒரு விலங்கிற்கு பறக்க தேவை இருந்திருக்குமா? நிச்சயம் இருந்திருக்காது, அதனுடைய உணவு மரத்தில் தான் இருக்கிறது எதுவுமே இல்லாத வானில் எதற்கு பறக்க தேவை. முதலில் ஒரு விலங்கிற்கு பறக்க வேண்டும் என்ற தேவை என்று கூறுவதே தவறு//
அட, இது உங்களுக்கு தெரியாதா...
1. அந்த காலத்துல கார், பஸ், ஏரோபிளேன் என்று எதுவும் இல்லையல்லவா? அதனால அப்போ இருந்த ஒரு சில உயிரினங்கள் எப்படி வேகமா இன்னொரு இடத்துக்கு போறதுன்னு யோசிச்சிருக்கும். அப்படி யோசிச்சி, யோசிச்சு வேகமா நடக்க, பின்னர் ஓட, பின்னர் தாவ என்று வேகமாக செல்ல ஆரம்பித்தன. இப்படி தாவ ஆரம்பிச்சத பார்த்த இயற்கை இதுங்க மேலே பாவப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா சிறக கொடுத்து அவைகள் வேகமா வேறொரு இடத்துக்கு போக உதவி செஞ்சிச்சு....
2. அடுத்து, முன்னாடி பார்த்த விளக்கம் உங்களுக்கு புடிக்குலனா இத கன்சிடர் பண்ணுங்க. அதாவது, பூச்சிகள் பறந்துகிட்டு இருந்தனவா? அவைகளை உணவுக்காகவோ அல்லது வேறேதற்க்காகவோ பிடிக்க முயற்சி செய்த உயிரினங்களுக்கு காலப்போக்கில் இயற்கை கடவுள் பாவப்பட்டு சிறிது சிறிதாக வழங்கியது இந்த சிறகு...
ஒரு நிமிஷம், இந்த பறக்கும் பூச்சிகள் எப்படி வந்திருக்கும் அல்லது சரியா வளராத சிறக வைச்சிகிட்டு அவை என்ன செய்யும் என்றெல்லாம் கேட்கக்கூடாது . கேட்டா இன்னொரு அற்புதமான விளக்கத்தை எடுத்து விடுவேன். இதையெல்லாம் நீங்க மறுத்தா "உங்களுக்கு அறிவியல் தெரியல" என்று அறிக்கை விட வேண்டிவரும்...ஜாக்கிரத...
நான் மேலே சொன்ன இரண்டு காரணங்களும் உங்களுக்கு புடிக்குலனா நீங்களே ஒரு காரணத்த கற்பன பண்ணி சொல்லுங்க...நல்ல அழகா லாஜிக்கோட இருந்தா ஏத்துக்குவோம்.
என்னது ஆதாரமா?, நாம பரிணாமத்த பத்தி தானே பேசிட்டு இருக்கோம், இதுக்கு எதுக்கு ஆதாரம்? கதைகளுக்கு யாராவது ஆதாரம் கேட்பாங்களா?... கதைய சொன்னோமா, புள்ள குட்டிகள தூங்க வச்சமான்னு போய்கிட்டே இருக்கணும்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நண்பர் திரு ஆஷிக்,
பரிணாமவாதிகளிடம் அதிகமாக உரையாடியதன் விளைவாக தாங்களும் நன்றாக கதை சொல்ல கற்றுகொண்டீர்.
பரிணாமமா ? கடவுளா ? நல்ல விறுவிறுப்புடன் செல்கிறது விவாதம்.
/// ஒரு புத்திசாலித்தனமான சக்தி அதை பறக்கும் திறனுடன் உருவாக்கியது என்பதுமே உண்மை. ///
அந்த புத்திசாலி சக்தி ஏன் விலங்கினத்தின் நகலை பார்த்து இதை உருவாக்கியிருக்க வேண்டும்
இரண்டு கண்கள் தான் பறவைகளுக்கும் இருக்கிறது :)
பரிணமிக்காமல் உருவாக்கப்பட்டிருக்குமானால் அங்கும் ஏன் இரண்டு கண்கள் இருக்க வேண்டும்???
மூன்று நான்கு கண்களை வைத்து படைத்திருக்க வேண்டியது தானே ?
ஃபாலோயர்ஸ் விட்ஜெட்டை இனைத்தால் தொடர்ந்து படிக்க பயனுள்ளதாக இருக்கும் :)
//அந்த புத்திசாலி சக்தி ஏன் விலங்கினத்தின் நகலை பார்த்து இதை உருவாக்கியிருக்க வேண்டும்
இரண்டு கண்கள் தான் பறவைகளுக்கும் இருக்கிறது :)
பரிணமிக்காமல் உருவாக்கப்பட்டிருக்குமானால் அங்கும் ஏன் இரண்டு கண்கள் இருக்க வேண்டும்???
மூன்று நான்கு கண்களை வைத்து படைத்திருக்க வேண்டியது தானே ? //
இரண்டு கண்கள் என்பது உயிரினத்தின் தேவை, அழகு, அமைப்பு. ஒருவர் நான்கு கண்கள் ஏன் இருக்க வேண்டும் எட்டு இருந்தால் என்ன என்று கேட்டல் பதில் என்னவாக இருக்கும்.
//ஃபாலோயர்ஸ் விட்ஜெட்டை இனைத்தால் தொடர்ந்து படிக்க பயனுள்ளதாக இருக்கும் :) //
ஃபாலோயர்ஸ் விட்ஜெட் இன்னும் எனக்கு அனுமதிக்க படவில்லை (Experimental என்று உள்ளது), அதை பெறுவதற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?
////இரண்டு கண்கள் என்பது உயிரினத்தின் தேவை, அழகு, அமைப்பு.///
அழகு,தேவை எல்லாம் சரி நண்பா :)
நான் கேட்பது அந்த இரண்டு என்ற வரையறை அங்கு எப்படி வந்தது என்பதுதான் ??
///விட்ஜெட் ///////
உங்கள் டெம்பிளேட்டை மாற்றி விட்டு அந்த விட்ஜெட்டை முயற்சி செய்து பாருங்கள் :)
//நான் கேட்பது அந்த இரண்டு என்ற வரையறை அங்கு எப்படி வந்தது என்பதுதான் ??//
பரிணாமத்தில் இதற்கு என்ன பதில்?
/// பரிணாமத்தில் இதற்கு என்ன பதில்? ///
பரிணாமம் கூட இதற்கு பதிலாக இருக்கலாம் என்பது என் வியூகம்
Aashiq Ahamed--//அந்த காலத்துல கார், பஸ், ஏரோபிளேன் என்று எதுவும் இல்லையல்லவா? //
//நாம பரிணாமத்த பத்தி தானே பேசிட்டு இருக்கோம், இதுக்கு எதுக்கு ஆதாரம்? கதைகளுக்கு யாராவது ஆதாரம் கேட்பாங்களா?... //
ஆஷிக் அகமதுவின் "நகைச்சுவை" ரொம்ப நல்லா இருக்கு. ரசித்தேன்!
//உயிரியலில் முதுகலை முடித்து, // நிரம்ப மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம். நீங்கள் எழுதியிருப்பதில் missing link, connecting link, synsacrum, fusion of bones, origin of flight, இப்படி பல விஷயங்களை மறந்தோ மறைத்தோ பேசுவதைப் பார்க்கும்போது ... ஆஷிக் சொன்னாரே ..//நாம பரிணாமத்த பத்தி தானே பேசிட்டு இருக்கோம், இதுக்கு எதுக்கு ஆதாரம்? கதைகளுக்கு யாராவது ஆதாரம் கேட்பாங்களா?.// அதுதான் நினைவுக்கு வருது. இதுக்கு மேல் இப்பதிவைப் பற்றி என்ன சொல்றதுன்னு தெரியலைங்க .
எஸ்.கே. உங்களைப் போல ஓர் உயிரியல் படித்தவரோ என்னவோ .. ஆனாலும் அவர் சரியாக //பெற்றோர்களீன் ஜீனுக்கு ஏற்ப அது மாறுகிறது, // என்றொரு அறிவியல் உண்மையைக் கூறியதற்கு நீங்கள் //மோதிரம் தான் வளர்ந்து தானாக வளையலாக மாறியது என்பது எப்படி ஏற்றுகொள்ளகூடிய ஓன்று? // என்று ஒரு அழகான பதில் தந்த பிறகு நான் இங்கு வந்ததே தப்பு என்றுதான் தோன்றியது.
//நீங்கள் எழுதியிருப்பதில் missing link, connecting link, synsacrum, fusion of bones, origin of flight, இப்படி பல விஷயங்களை மறந்தோ மறைத்தோ பேசுவதைப் பார்க்கும்போது ... //
நண்பர் திரு தருமி, எதையும் மறக்க, மறைக்க வேண்டிய அவசியம் இல்லை, அப்படி மறைத்ததாக தெரிந்தால் சுட்டி காட்டலாம்.missiing link பற்றி பேசினால் முதல் அடி பரிணாம வாதிகளுக்கு தான் விழும்.
////பெற்றோர்களீன் ஜீனுக்கு ஏற்ப அது மாறுகிறது, ////
பெற்றோரின் ஜீனுக்கு ஏற்ப அதுவும் கண் காது மூக்கு வைத்து வளராது நண்பரே.
//என்று ஒரு அழகான பதில் தந்த பிறகு நான் இங்கு வந்ததே தப்பு என்றுதான் தோன்றியது//
தங்களின் கருத்துக்கு என்றுமே நடுநிலையோடு மட்டுமே பதில் தரப்படும், ஒரு தலை பட்சமாக கூறிய ஒரு கருத்தையேனும் கூற முடியுமா?
விளக்கம் கொடுக்காமல் அழகான பதில் இல்லை என்று வெறுமனே கூறுவது எந்த அளவுக்கு சரியானது என்பதை நீங்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
சகோ உங்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளேன் , படித்து விட்டு மாட்டரு கருது இருந்தால் கூறுங்கள்
http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post.html
தானாக ஓடியது, தாவியது, பறந்தது என்பதெல்லாம் பழைய கதை சகோ.
அறிவியல் ஆய்விதழான nature ல் Archaeopteryx முதல் பறவை அல்ல என்று செய்தி வெளியிட்டதை தாங்கள் அறியவில்லையா?
இதை பற்றி சகோ. ஆஷிக் அஹ்மத் வெளியிட்ட கட்டுரைகளை படித்தால் மேலும் அறிந்து கொள்ளலாம்.
http://www.ethirkkural.com/2011/08/bye-bye-birdie.html
"first bird " term itself a misleading one , then wat about Hesperornis?
//"first bird " term itself a misleading one //
Archaeopteryx no longer first bird - Matt Kaplan, Nature news, 27th July 2011.
//இந்த உயிரினத்துக்கு ஜெர்மனில் "யுர்வோகெல் (Urvogel)" என்று பெயர் சூட்டினார்கள். இதற்கு "முதல் பறவை" என்று அர்த்தம். ஆங்கிலத்தில் இதற்கு "அர்கீயாப்டெரிக்ஸ் (Archaeopteryx)" என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு "பழங்கால இறகு (Ancient wing or feather)" என்று அர்த்தம்.
ஆக, டைனாசர்களின் தன்மைகளும் பறவைகளின் தன்மைகளும் ஒருசேர கலந்திருந்ததால், உலகின் முதல் பறவை டைனாசர்களில் இருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டுமென்று நம்பப்பட்டது. அதற்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது. //
அப்படியெனில் nature இதழையும் இவ்விலங்கிற்கு பெயர் வைத்தவரையும் தான் நீங்கள் குறை கூற வேண்டும்.
//then wat about Hesperornis?//
//இவனை பாருங்கள் , இவன் பேரு Hesperornis.இவனுக்கு கிட்டத்தட்ட நம்ம பறவை பண்புகள் எல்லாம் வந்து விட்டது .//
இது ஒரு பறவை அவ்வளவே, அது எவ்வாறு பரிணாமத்தை மெய்ப்பிக்கிறது?????????????
lemme explain u detaily regarding this issue in my next post
Hello, it's just the opposite to what you say.பறக்க வேண்டும் என்ற ஆசையில் இறகுகள் வரவில்லை.இறகுகள் வந்த பின் அது (அது வரை நடந்து கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்த ஒன்று)
)பறக்க ஆரம்பித்தது.இறகுகள் ஏன் வந்தன? எப்படி வந்தன?Nature was trying all the possibilities என்று சொல்லலாம்.
//Hello, it's just the opposite to what you say.பறக்க வேண்டும் என்ற ஆசையில் இறகுகள் வரவில்லை.// Nature was trying all the possibilities என்று சொல்லலாம். //
தொடர்ந்து பரிணாமத்திற்கு எதிரான கருத்துக்களையே வைக்கிறீர்கள் ஆனால் பரிணாமத்திற்கு ஆதரவானவன் என்று கூறுகிறீர்கள். எப்படி??
பறக்க வேண்டும் என்ற ஆசையில் இறகுகள் வரவில்லை என்று தான் நானும் கூறுகிறேன்.
//இறகுகள் வந்த பின் அது (அது வரை நடந்து கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்த ஒன்று)
)பறக்க ஆரம்பித்தது.//
அப்படியெனில் கீழே இருந்த வேறொரு உயிரினத்திற்கு பறக்க வேண்டுமே என்று திடிரென்று பறந்தது அப்படித்தானே??
//இறகுகள் ஏன் வந்தன? எப்படி வந்தன? Nature was trying all the possibilities என்று சொல்லலாம்.//
so nature having the sense right, whether it can do bad or good, right?
//முதலில் இறக்கை துளிர் விட்டிருக்கும் பிறகு ஒரு பகுதி இறக்கை உருவாகி இருக்கும் ஆனாலும் பறவையால் பறக்க முடியாது, எதற்காக ஒரு உபயோகம் இல்லாத இறக்கையை வைத்து கொண்டு பல மில்லியன் வருடங்கள் அந்த பறவைகள் வாழ வேண்டும். உபயோகம் இல்லாத இறக்கையை எதற்கு ஐயா அது வளர்க்க வேண்டும். //
this is right or wrong?
Post a Comment