Thursday, July 21, 2011

கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும் (Time and Space):

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக..

கடவுளின் இருப்பை விளக்கும் நம் பல்வேறு முயற்சிகளில் ஒன்று இந்த காலம் மற்றும் வெளி பற்றிய புரிதல்கள்:

அறிஞர்களில் பலர் காலம் என்றே ஒன்று இல்லை என்றும் கூறுவர். ஆனால் சில நூற்றாண்டுகள் முன்பு வரை சிறந்த விஞ்ஞானிகளாக திகழ்ந்தவர்கள் அரிஸ்டாட்டில் மற்றும் ஐசக் நியுட்டன், அவர்களின் காலம் பற்றிய  கூற்றுக்களைக்கூட பொய் என நிரூபித்தார் ஐன்ஸ்டீன். ஐன்ஸ்டீனின் ஒளி பற்றிய ஆராய்ச்சியில் இருந்த ஈடுபாடே அவரை காலத்தையும் வெளியையும் பற்றி சிந்திக்க வைத்தது. காலம் என்றால் என்ன என்பதை பல்லாயிரம் வருடங்களாக தவறான விளக்கம் கொண்டவர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது ஐன்ஸ்டீன் (Einstein) மற்றும் கொடேலின் (Godel) காலம் வெளி பற்றிய கருத்துக்கள் என்றால் அது மிகையில்லை.


காலம் மற்றும் வெளி ஆகிய இரண்டின் பிறப்பிடமும் ஒன்றே. அதாவது இந்த பிரபஞ்சம் உருவாக்க பட்ட போது அதற்கு இணையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் இந்த காலம். தற்போது அதை பிரிக்க முடியாமல் வெளிகாலம் (spacetime) என்றே அழைக்கின்றனர்.
காலமே இல்லையெனில் இந்த வெளி எப்படி இருக்கும், எப்படி இயங்கும் என நினைக்கும் போது தலை சுற்றினாலும் அப்படி இயங்குவதற்கு வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது. இயங்குகின்றது என்றாலும் மனிதனுக்கு இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எதுவும் இருந்திருக்காது.

பெருவெடிப்பு மூலம் (?!) உருவான இப்பிரபஞ்சம், எந்தவித அறிவையும் தன்னகத்தே கொள்ளாத இப்பிரபஞ்சம் தனியாக உருவாகி இருக்க வேண்டும், பாருங்கள் காலத்தையும் தன்னுடனேயே அழைத்துக்கொண்டு செல்கின்றது. தன்னுடைய இலக்கை சரிவர செய்ய காலம் என்ற ஒன்றை தன்னோடு அணைத்து கொண்டு வர வேண்டிய அவசியம் அதற்கு என்னவென்று தெரியவில்லை. காலம் உருவானதற்கான எந்த பரிணாம கதையும் பரிணாம அதரவாளர்களிடமிருந்து கிடைக்கவில்லை. காலம் என்பது முழுக்க முழுக்க மற்ற பொருள்களை சார்ந்தே உள்ளது. அது கடவுளை மெய்ப்படுத்த கூடிய ஆணித்தரமான ஆதரமாகவும் உள்ளது.

தற்போதைய விஞ்ஞானத்தின்படி காலம் என்பது நீளம், அகலம், உயரம் போன்ற ஒரு நான்காவது (!?) பரிமாணமே. காலத்தில் பிரயாணம் செய்யும் வாய்ப்பு உள்ளது என்று தெளிவு படுத்தினர் ஐன்ஸ்டீனுக்கு பின் வந்த விஞ்ஞானிகள், அதன் அளவீட்டிற்கான சூத்திரதையும் கண்டறிந்தனர். காலத்தில் நாம் முன்னோக்கி செல்லலாம், சிம்பிளாக சொல்லவேண்டுமென்றால் நமது பயண வேகத்தை அதிகபடுத்த அதிகபடுத்த காலத்தை விரைவாக கடந்து எதிர்காலத்திற்கு சென்று விடலாம். ரிலேடிவிட்டி படி ஒளியின் வேகமே வேகத்திற்கான எல்லை என்பதை அறிவீர்கள், அதையும் மிஞ்சிய வேகத்தில் (ஒரு வார்த்தைக்கு) பயணித்தால் காலத்தில் பின்னோக்கி பயணிக்கலாம் அதாவது இறந்த காலத்திற்கு செல்லலாம் என கூறப்பட்டாலும் அதற்கான வாய்ப்புகளை தெளிவு படுத்தவில்லை. அதில் பலவகை முரண்பாடுகள் காணப்படுவதால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

வெளிக்கு காலம் தேவையான ஒன்று என்று ஜோடி சேர்த்து விட்டது எது?, தானாக உருவான வெளி எனில் அது எப்படி காலத்தையும் தன்னுடன் இணைத்து கொண்டு இருக்க வேண்டும். காலம் என்பது உயிரினங்கள் (?!) போன்று சிறுக சிறுக தானாக உருவானது என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இவ்விடத்தில் பரிணாமகதைக்கும் வேலை இல்லை.

ஐன்ஸ்டீனுக்கு முந்தைய விஞ்ஞானிகளும் கூட காலத்தை பற்றிய தவறான கருத்து வைத்திருக்கையில், பண்டைய வேதங்களில் காலத்தில் பிரயாணம் (Time Travel) செய்த செய்தியும், கால மாறுதல் (Time dilation) பற்றிய செய்திகளும் அதிக அளவில் காண முடிகிறது. விஞ்ஞானிகளே தவறு என்று எண்ணிய செய்திகளை மதங்களை சேர்த்தவர்கள் எப்படி தெளிவாக பெற்றனர் என்பது கடவுளே இல்லை என்று கூறுபவர்களுக்கு கூட மூக்கில் விரல்வைக்கும் அளவிற்கு தான் உள்ளது. மனித மூளை தனக்கு அறியப்படாத விசயங்களை விளக்குகிறது எனில் அதன் மூலம் வேறொரு இடமாகத்தான் இருக்கமுடியும்.

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் தங்களுக்கு சாதகமாக கடவுள் இருந்திருந்தால் தெரிந்திருப்பரே என்று வினா எழுப்புகின்றனர், அதற்கு பதில் கடவுள் தெரிகின்றார் ஆனால் உங்களால் தான் பார்க்க முடியவில்லை என்பதே.

ஆம், கரும்பொருள் (dark matter) மற்றும் கருப்பு ஆற்றல் (dark energy)  என்பதை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள், அது என்னவெனில் கண்ணுக்கு தெரியாத உணரமுடியாத பொருள்கள். உண்மையில் நாம் காணும் உணரும் பொருள்களை தவிற வேறு சில காண முடியாத உணர முடியாத பொருள்களும் இந்த வெளியில்(Space) உள்ளன. இப்பிரபஞ்சத்தில் உள்ள மொத்த பொருள்களும் முழு அளவில் 17  % மட்டும் தான் உள்ளதாம், மீதமுள்ள 83% இடத்தில் நாம் பார்க்க முடியாத உணரவே முடியாத என்னவென்றே புரியாத இருந்த நிறைகள் (Mass) விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது, பிறகு அதுவே கரும்பொருள்கள் ) Dark Matters) என உறுதிபடுத்த பட்டுள்ளது.

உணரவே முடியவில்லை என்றாலும் நாம் அறியாத 83% பிரபஞ்சத்தை இந்த கரும் பொருள் அடைத்துள்ளது. உண்மையில் அந்த பொருள்களை காண நமது கண்களுக்கு சக்தி இல்லை, அதுவே கண்ணுக்கு தெரியாத கடவுளும் இருப்பதற்கான ஆதாரமாகவும் நமது கண்கள் அனைத்தையும் பார்க்கும் சக்தியுடன் உருவாக்க படவில்லை என்பதும் உண்மையாகிவிட்டது. அதற்காக கடவுள் ‘வெளியில்’ உள்ளார் என்ற கருத்தை நாம் ஏற்கவில்லை, அவர் ‘கால வெளியிற்கு’ அப்பாற்பட்டவராகதான் இருக்க வேண்டும்.


ஒரு வாதத்திற்கு இப்பிரபஞ்ச இயக்கத்திற்கு கடவுள் தேவை இல்லை அனைத்தும் தானாகவே கட்டுகோப்புடன் இயங்குகிறது என்றால் அதன் இயக்கங்களில் எந்த தடையும் வர வாய்ப்பே இல்லை, அது ஒரு குறிப்பிட்ட பாதையில் குறுப்பிட்ட வேலையை நடத்திக்கொண்டே இருக்கும். ஆனால் உண்மையில் பல நட்சத்திரங்கள் தன்னுடைய ஒளியை இழக்கின்றன, கோள்கள் பிற கோள்களோடு மோதுகின்றன. சில முரணான செயல்களும் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. இதை பார்க்கும் போது எதோ ஒரு பிரமாண்டமான சக்தி இப்பிரபஞ்சத்தை தன்னுடைய விருப்பத்திற்கேற்ப ஒரு சீரமைப்பை வைத்துக்கொண்டு ஆட்டி படிப்பதை நம்மால் உணர முடிகிறது.

சிறு வாக்கியத்தில் கூட கடவுளை விளங்கி கொள்ளலாம், இயற்கைக்கு ஆறறிவை மிஞ்சிய அறிவு உள்ளதா? இல்லையெனில் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட உலக இயக்கம் எப்படி நடக்க வாய்ப்புள்ளது. ஒரு பொருள் தன்னுடைய மேம்பட்ட நிலையை அடையுமானால் அங்குதான் மிகபெரிய சக்தியின் ஈடுபாடு உள்ளது, அந்த மிகப்பெரிய சக்தியைத்தான் கடவுள், இயற்கை என குறிப்பிடுகிறோம். கடவுளே இல்லை என கூறும் நாத்திகர்களே, பெரு வெடிப்பில் எந்த சக்தியின் துணையும் இல்லாமல் உலகம் உருவாகி இருந்தால் ஒரே மாதிரி பொருள்கள் மட்டுமல்லவா உருவாகி இருக்கும், காலம், வண்ணம், ஒலி, வெப்பம் என வியக்கத்தக்க புதிர்கள் எல்லாம் எப்படி வந்தது, இவைகள் தானாக வந்தது என்பது எந்த வகையில் பகுத்தறிவு. சிந்தியுங்கள் பரிணாமவாதிகளே முட்டாள் தனத்தை போதிக்கும் நாத்திக பரிணாம கொள்கையை தூக்கி எறியுங்கள், உண்மையான பகுத்தறிவிற்கு வாருங்கள் கடவுளை உணருங்கள்.சூரியன், பூமி, கோள்கள் என அனைத்தும் மிக தெளிவாக தம்முடைய வேலையை செய்து கொண்டிருக்கையில் அதன் மூலம் உணரக்கூடிய கடவுளை மட்டும் மறுப்பது கண்ணை கட்டி கொண்டு இவ்வுலகில் சூரியன் பூமி என எதுவுமே இல்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும்.


References: 

http://en.wikipedia.org/wiki/Dark_matter
http://universesandbox.com/screenshots/


நன்றி,
உங்கள் தோழன், 
கார்பன் கூட்டாளி


குறிப்பு: என்னுடைய பதிவில் பூசி மொழுகி அனைத்தும் சொல்ல படுவதாக தருமி என்பவர் ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார், அதனாலேயே  அவர் பதிலளிக்க வில்லையாம். அப்படியெல்லாம் இல்லை, வெளிப்படையாகவே குறிப்பிடுகிறேன், பரிணாமம் என்பது நடக்கவே சாத்தியமில்லாத ஒரு கட்டுக்கதை. 

மேலும் நம்முடைய பதிவுகள் பலவற்றிற்கு நாத்திகர்களிடம் பதில் இல்லை என்பதே உண்மை.

Post Comment

25 Comments:

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக..

'நறுக்' கருத்துக்கள்..!

'நச்' கட்டுரை..!

அறிவியல் பூர்வமான சிறப்பான வாதங்களுக்கு நன்றி சகோ...!

மற்ற கோள்கள் எல்லாம் ஒழுங்கா சுத்த... நம்ம பூமியை மட்டும் யாருங்க 22.5 degree சாய்ச்சு உட்டது..?

அது மட்டும் இப்படி கோனையா இல்லைன்னா... சீதோஷ்ண பருவ காலமே இல்லாம, மழையே பேயாம, ஒண்ணுமே பூக்காம, ஒண்ணுமே உற்பத்தி யாகாமே, ஒண்ணுமே வாழாமே, ஒரே மண்ணாகவே... இருந்திருக்கும் இல்லையா..? நாத்திக கொள்கைகள் மாதிரி..!

சுவனப்பிரியன் said...

//என்னுடைய பதிவில் பூசி மொழுகி அனைத்தும் சொல்ல படுவதாக தருமி என்பவர் ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்,//
சிறந்த கட்டுரை. தருமியைப் பொருத்த வரை இது போன்ற அறிவுபூர்வமான வாதங்கள் அனைத்தும் பூசி மெழுகுவதாகத்தான் தெரியும்.

இது போன்ற அறிவியல் கட்டுரைகளை அதிகம் எழுதுங்கள்.

G u l a m said...

அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்! நல்ல இடுகை., அறிவியல் ரீதியில் அலசப்பட்ட நேர்த்தியான பதிவு, சகோ எதையும் அறிவு ரீதியாக அணுகும் போது அதற்குப் பெயர் அனுமானங்களும் ஊகங்களும் எனக்கூறி- அதே நேரத்தில் பரிணாமக்கதைகளை நிருபணமான ஆதாரமாக கொள்வது தருமி ஐயா போன்றோர்களுக்கு ஏன் என்று தான் இன்னும் தெரியவில்லை...

கார்பன் கூட்டாளி said...

சஹோ. முஹம்மத் ஆஷிக்,

உங்கள் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக.

//மற்ற கோள்கள் எல்லாம் ஒழுங்கா சுத்த... நம்ம பூமியை மட்டும் யாருங்க 22.5 degree சாய்ச்சு உட்டது..? //

ஒரு வேலை பரிணாமம் அடைந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து இருக்குமோ?

கார்பன் கூட்டாளி said...

சஹோ.சுவனப்பிரியன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//சிறந்த கட்டுரை. தருமியைப் பொருத்த வரை இது போன்ற அறிவுபூர்வமான வாதங்கள் அனைத்தும் பூசி மெழுகுவதாகத்தான் தெரியும்.//

அவருடைய சமீபத்திய பதிவுகள் பார்க்க நேர்ந்தது, அதனையும் மிகை படுத்த பட்ட, பொய்கள் கலந்த அருவருக்க தக்க கருத்துக்கள்.

பரிணாமவாதிகளின் மனசாட்சி இதுதான் போல, நாங்கள் எல்லாம் பரிணாமத்தின் மேல்மட்ட நிலைக்கு சென்று மனசாட்சியையே எடுத்துவிட்டோம் என்று கூறினாலும் கூறுவார்கள் போல.

கார்பன் கூட்டாளி said...

வ அலைக்கும் அஸ்ஸலாம்,

சஹோ. குலாம்.

//அதே நேரத்தில் பரிணாமக்கதைகளை நிருபணமான ஆதாரமாக கொள்வது தருமி ஐயா போன்றோர்களுக்கு ஏன் என்று தான் இன்னும் தெரியவில்லை..//

நீங்கள் வேற, அவர்கள் பரிணாம கதைகள் எழுதுவதில் ph.D வாங்கிவிட்டார்கள் போல. சயின்ஸ் ஃபிக்சனை தூக்கி நிறுத்துவதில் அவ்வளவு பெருமை.

Balan said...
This comment has been removed by the author.
Balan said...

//இப்பிரபஞ்ச இயக்கத்திற்கு கடவுள் தேவை இல்லை அனைத்தும் தானாகவே கட்டுகோப்புடன் இயங்குகிறது என்றால் அதன் இயக்கங்களில் எந்த தடையும் வர வாய்ப்பே இல்லை, அது ஒரு குறிப்பிட்ட பாதையில் குறுப்பிட்ட வேலையை நடத்திக்கொண்டே இருக்கும். ஆனால் உண்மையில் பல நட்சத்திரங்கள் தன்னுடைய ஒளியை இழக்கின்றன,/// அப்படி என்றால் கடவுள் தான் நட்சத்திரங்களுக்கு எண்ணெய் ஊற்றுகிறாரா??
எண்ணெய் தட்டுப்பாடா அதுதான் நட்சத்திரம் ஒளியை இழக்கின்றனவா ??

ஜுராசிக் காலத்தில் உயிரினங்கள் இருக்கவே இல்லை, பூமி 2 நாட்களில் படைக்கப்பட்டது, 7 வானங்கள் உள்ளது 4 நான்கு நாட்களில் உணவுகள் சீரமைக்கப்பட்டது.

Balan said...

அவர்களை நிர்வாணிகளாக்கி, அவர்களது மானத்தை காணும் பொருட்டு சாத்தான் அவர்களை நித்திய மரத்தின் கனியை புசிக்க சொன்னான், அதன் மூலம் பாவம் வந்தது..

அவர்களுக்கு எப்படி குழந்தை உருவானது ,
விந்து, கருமுட்டை அல்லது கர்ப்பமாகும் முறையை கடவுள் ஏற்கனவே படைத்து அதை DEACTIVATE பண்ணி வைத்தாரா?? மரத்தின் கனியை கொண்டு அதை சாத்தான் ACTIVATE பண்ணினார ..

Balan said...

http://www.facebook.com/video/video.php?v=246840565344092

http://www.facebook.com/video/video.php?v=246839395344209

இதெல்லாம் இரக்கம் உள்ள ஒருவரின் படைப்பா ?

கார்பன் கூட்டாளி said...

//அப்படி என்றால் கடவுள் தான் நட்சத்திரங்களுக்கு எண்ணெய் ஊற்றுகிறாரா?? //

எண்ணெய் என்பதை சக்தி என்று மாற்றி கொள்ளுங்கள்.

//எண்ணெய் தட்டுப்பாடா அதுதான் நட்சத்திரம் ஒளியை இழக்கின்றனவா ??//

நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை, அது என்றுமே பரிணாமத்திற்கு ஆதரவாக இருக்காது.

//ஜுராசிக் காலத்தில் உயிரினங்கள் இருக்கவே இல்லை, //

உயிரினங்கள் வந்ததற்கு முன்பு உயிரினங்கள் இல்லாமலேயே இருந்திருக்கும், அதனால் என்ன அதிசயம்.

//பூமி 2 நாட்களில் படைக்கப்பட்டது, 7 வானங்கள் உள்ளது 4 நான்கு நாட்களில் உணவுகள் சீரமைக்கப்பட்டது.//

இதில் உங்களுடைய கேள்வி என்ன?

//அவர்களுக்கு எப்படி குழந்தை உருவானது ,
விந்து, கருமுட்டை அல்லது கர்ப்பமாகும் முறையை கடவுள் ஏற்கனவே படைத்து அதை DEACTIVATE பண்ணி வைத்தாரா?? மரத்தின் கனியை கொண்டு அதை சாத்தான் ACTIVATE பண்ணினார .//

இருக்கலாம், தெரியவில்லை.

//இதெல்லாம் இரக்கம் உள்ள ஒருவரின் படைப்பா?//

அக்குழந்தைகளின் முந்தைய தலைமுறையினர், அதாவது தாய் தந்தை யாரோ அதிக வேதியியல் பணிகளையோ, அணுகுண்டு போடப்பட்ட இடத்திலையோ அல்லது அகச்சிவப்பு கதிர்கள் மேல் படும் அளவிற்கோ இருந்துள்ளனர், அது அவர்களின் பெற்றோர் அல்லது மற்ற மனிதர்களின் தவறு. இதை கடவுள் தவறு என்று குறிப்பிடுவது அபத்தம்.அர்த்தம் இல்லாதது.

கடவுள் இரக்கம் மட்டுமே உள்ளவர் என்று யார் சொன்னது.

ஹைதர் அலி said...

நண்பரே மிகச் சரியான பதிவு.

//மேலும் நம்முடைய பதிவுகள் பலவற்றிற்கு நாத்திகர்களிடம் பதில் இல்லை என்பதே உண்மை.//

பதில் சொல்ல முடியாமல் ஓடி ஓடி முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு முழிக்கும்போதேல்லாம் பரிணாமவாதிகள் சொல்லுகின்ற பதில் தான்

அவர் பூசி மொழுகிறார் அதனால் தான் அவர் தளத்திற்கு போவதில்லை போன்ற பதில்கள்.

தொடருங்கள் நண்பரே வாழ்த்துக்கள்

கார்பன் கூட்டாளி said...

சஹோ. ஹைதர் அலி,

//பதில் சொல்ல முடியாமல் ஓடி ஓடி முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு முழிக்கும்போதேல்லாம் பரிணாமவாதிகள் சொல்லுகின்ற பதில் தான்//

தேடி பிடித்து விடுவோம் என்று யாருக்கும் தெரியாத இடமாய் பார்த்து ஒளிந்து கொள்கின்றனர்.

இதே நிலையில் சென்றால் நாத்திகம் என்பதே கூடிய விரைவில் இல்லாமல் போகும்.

Anonymous said...

ஏக இறைவனின் திருப்பெயரால்.
மிகச்சிறப்பான பதிவு. பரிணாமவியல் பேசும் மடையர்களுக்கு பளாரென்று அறைவிட்டு சவுக்கடி கொடுத்து செருபப்டி அடித்திருக்கிறீர்கள்.
//காலம் என்பது உயிரினங்கள் (?!) போன்று சிறுக சிறுக தானாக உருவானது என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இவ்விடத்தில் பரிணாமகதைக்கும் வேலை இல்லை.//
அட்டகாசம். பரிணாமவியலையும் காலத்தையும் சேர்த்து நீங்கள் பேசியதில் பயங்கர குழப்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள் இந்த நாத்திகவாதிகள்.

சூரியன் மாலையில் மறைவதை பற்றிய நபிமொழியை இந்த நாத்திகர்கள் அறிவார்களா?
நபி மொழி 7433 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:நான் நபி (ஸல்) அவர்களிடம் சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனும் (திருக்குர்ஆன்- 36:38வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன்.அதற்கு அவர்கள் அதன் நிலைகொள்ளும் இடம் அரியாசனத்திற்கு கீழே உள்ளது என்றார்கள்.நபி மொழி 4803 அபுதர் (ரலி) அறிவித்தார்:நான் நபி (ஸல்) அவர்களிடம் சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனும் (திருக்குர்ஆன் 36:38வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் அதன் நிலைகொள்ளும் இடம் இறைவனின் அரியாசனத்திற்கு கீழே உள்ளது என்று கூறினார்கள்.நபி மொழி 7424 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:இறைத்துதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி (ஸல்) அவர்கள் அபுதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன். அவர்கள் இது இறைவனுக்கு (அவனுடைய அரியாசனத்திற்கு கீழே) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காக செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம் நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல் என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்றிருக்கும். உடனே அது மறைந்த இடத்தில் இருந்து (இறுதி நாளில்) உதயமாகும். என்று சொல்லிவிட்டு அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும். (தாலிக்க முஸ்தஹருல்லா) என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வுத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி (திருக்குர்ஆன் 36:38வது வசனத்தை) ஓதினார்கள்.நபி மொழி 3199 அபுதர் (ரலி) அறிவித்தார்:நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்கு) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காக செல்கிறது. அங்கு அது (கிழக்கில் இருந்து உதயமாவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இரவில் சூரியன் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் அமர்ந்து அல்லாஹ்வின் அனுமதி கோரி, அடுத்த நாள் உதிப்பதற்கு அனுமதி கோரி அமர்ந்திருக்கிறது என்று புரியாமல், இந்த நாத்திக மடையர்கள் அது மறைவதே இல்லை. அது பூமி சுற்றுவதால் மறைவது போல மனிதர்களுக்கு தெரிகிறது என்று உளறுகிறார்கள். அல்லாஹ்வின் அர்ஷ் பூமிக்கு பின்னால் இருக்கிறது என்று கூட தெரியாமல் இப்படி உளறும் நாத்திகர்களுக்கு நீங்கள் காலம், இடம் பொருள் வெளி டார்க் மேட்டர் என்றெல்லாம் சொல்லி குழப்பிவிட்டு விட்டிருக்கிறீர்கள். இனி இந்த பக்கம் வரவே மாட்டான்கள்.

நன்றி
இப்னுபஷீர்

bat said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான, அறிவியல் கருத்துகள் நிறைந்த கட்டுரை பட விளக்கம் கூடுதல் சிறப்பு

கார்பன் கூட்டாளி said...

//அல்லாஹ்வின் அர்ஷ் பூமிக்கு பின்னால் இருக்கிறது என்று கூட தெரியாமல் இப்படி உளறும் நாத்திகர்களுக்கு நீங்கள் காலம், இடம் பொருள் வெளி டார்க் மேட்டர் என்றெல்லாம் சொல்லி குழப்பிவிட்டு விட்டிருக்கிறீர்கள். இனி இந்த பக்கம் வரவே மாட்டான்கள்.//

சஹோ. இப்னு பஷீர் என்ற பெயரில்லா.

தங்களின் ஆதங்கம் புரிகிறது, விரைவில் உங்களுடைய பதிலை எதிர்பாருங்கள் உண்மையில் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்.

கார்பன் கூட்டாளி said...

வா அழைக்கும் அஸ்ஸலாம்,
சஹோ. bat, உங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றி, தொடர்ந்து தொய்வில்லாமல் எழுதுவதற்கு இறைவனிடம் பிராத்தியுங்கள்.

Almahwa Accounting Services said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. அல்லாஹ் திருமறையில் கூறும் போது வானம் மற்றும் பூமியை 6 நாட்களில் படைத்ததாக கூறுகிறான்! இன்னொரு இடத்தில் பூமியை இரண்டு நாட்களில் படைத்தேன் என்று சொல்கிறான், அதை தொடர்ந்து 4 நாட்களில் அதன் மீது பாக்கியங்களை அமைத்தேன் என்று சொல்கின்றான். அதன் பின்பு வானங்களை ஏழு வானங்களாக 2 நாட்களில் படைத்தேன் என்று கூறுகிறானே! இப்போ என் கேள்வி என்னவென்றால் மொத்ததையும் கூட்டினால் 8 நாட்கள் வருகின்றதே இது என்ன கணக்கு? 6 நாட்களா? இல்லை 8 நாட்களா? பதில் தரவும்

FAZRIN FAROOK said...

Wave Nice Article May allah Give You More Knowledge and Health

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கார்பன் கூட்டாளி said...

@fazrin,

welcome to my blog, thanks for for your valuable comment.

i think you are the fazrin, most of the islamic videos posted in youtube.

i was amazed about you, i pray allah to give more knowledge to you.

Anonymous said...

ஒப்பற்ற ஓறிறையின் சாந்தியும் சமதானமும் உண்டாவதாக நத்திகம் பேசும் என் தோழனே
உங்களிடம் பேசுவதற்க்கு நிறைய கருத்துக்கள் இருக்கிறதே ஏன் ஓடி ஒளிகிறீர்கள் நாங்கள் வாழும் இந்த உலகத்தில் நீங்கள் படைத்தவனை மனோயிச்சையின் பால் மறுத்து மறுமையில் உங்கள் வாழ்வை நரக படுகுளியில் வீழ்த்தி விடதீர்கள் என்பதே இந்த பதிவு தரும் கருத்தாக இருக்க முடியும் என்பது என் கருத்து.

தொடர்ந்து எழுதுங்கள் சகோ எனது வலைப்பூவில் 13 வெப் லிஸ்ட்டில் உங்கள் பதிவுக்காக இணைந்திருக்கிறேன்
அன்புடன்
ஓ.பி.கலில் ரஹ்மான்
எஸ்.பி.பட்டினம்
http://www.kaleelsms.com/2011/09/time-and-space.html

கார்பன் கூட்டாளி said...

சகோ. kaleel,

உங்கள் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக, கருத்தை மிகவும் சரியாக புரிந்து கொண்டீர்கள், இருந்தும் நாம் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது.

//தொடர்ந்து எழுதுங்கள் சகோ எனது வலைப்பூவில் 13 வெப் லிஸ்ட்டில் உங்கள் பதிவுக்காக இணைந்திருக்கிறேன்//

தங்களின் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி, தொடர்ந்து படியுங்கள், உங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு படிக்க சொல்லுங்கள், குறிப்பாக இறை நிராகரிப்பவர்களுக்காக.

Anonymous said...

மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். அறிவியல் பூர்வமான அலசல், இன்னும் அறிவியல் ரீதியான விளக்கம் கொடுத்திருக்கலாம்.
S.Sankar Ganesh, Karaikudi

Anonymous said...

உலகம் தட்டை என்றுதான் குரான் சொல்கிறது என்று உலகம் முழுவதும் முஸ்லீம்கள் போராடி வருகிறார்கள். ஆனால், நீங்கள் இப்படி dark matter, black hole எல்லாம் குரானில் இருக்கிறது என்று எழுதுகிறீர்களே.

நீங்கள் விளக்கியிருக்கும் கட்டுரை ஒரு வேளை கடவுள் எனப்தற்கு சாத்தியக்கூறு இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அது அல்லாஹ்தான் என்பதற்கு ஆதாரம் என்ன?

அல்லாஹ் என்ற தெய்வம் உண்டு, அது முகம்மது நபியிடம் வந்து சொன்னது என்பதற்கு ஒரு ஆதாரமும் வைக்காமல் இருக்கிறீர்களே.

உங்கள் மதத்தை சேர்ந்தவர்களே இது பற்றி கேள்வி எழுப்பும்போது அவர்களிடம் பேசாமல் நாத்திகர்களிடம் பேசுவதில் என்ன பயன்?

Post a Comment