Friday, December 10, 2010

ஸ்டெம் செல்கள் (Stem Cells) என்றால் என்ன?.


இந்த பதிவு ஸ்டெம் செல்கள் (Stem Cells) பற்றியும், The Analyst அவர்களின் கட்டுரையில் நமக்கு எதிராக வைத்த வாதத்திற்குரிய பதிலின் தொடர்ச்சியாகவும் இருக்கும்.

பதில்களின் முந்தைய பதிவை காண இங்கு சொடுக்கவும்.

இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க போவது:

     1) Stem cells என்றால் என்ன?

     2) அவைகளின் வகைகள் என்னென்ன?

     3) சாதாரண செல்லுக்கும் stem cells கும் என்ன வித்தியாசம்?

     4) Stem cells எங்கெல்லாம் இருக்கிறது?

     5) Wisdom Teeth ற்கும் stem cell ற்கும் என்ன தொடர்பு?

அதாவது மனிதனின் விந்தனுவிலும் கருமுட்டையிலும் இருப்பது தான் முதலில் stem cell, அவைகள் கரு உருவாவதற்கே பயன்படுகிறது, இரண்டும் இணைத்த பிறகு 4 அல்லது 5 தினங்களில் உருவாவது தான் embaryonic stem cells, இதில் மனிதனின் முழு செய்தியும் முழு செல்களையும் உருவாக்க கூடிய stem cells லாக இருக்கும், முடிவில்லாத உடம்பில் உள்ள எந்த வகை செல்லாகவும் மாறும் அமைப்பு கொண்டது. பிறகு குழந்தை பிறந்த பின் தொப்புள் கொடியில் (umbilical blood card) இருப்பது தான் adult stem cells மனிதனின் முழு உடலையும் உருவாக்க கூடிய செல்கள் இல்லையெனிலும் அதிகப்படியான உறுப்புகளை உருவாக்க கூடிய செல்லாக மாறும் சக்தி பெற்றது.

வளர்ந்த மனிதனின் முதுகு தண்டில் (Bone morrow) அதிகப்படியான செல்களை உருவாக்க கூடிய ஆற்றல் படைத்த stem cells உள்ளது. இது மட்டுமல்லாமல் உடம்பில் பல பாகங்களில் இந்த stem cells கள் இருக்கும், சாதாரண செல் என்பது மற்றொரு செல்லை உருவாக்காது, ஆனால் ஸ்டெம் செல்கள் மற்றொரு செல்களை உருவாக்க கூடியது(Replication). இந்த தனி தனி உறுப்பில் இருக்கும் ஸ்டெம் செல்கள் ஒரு குறுப்பிட்ட வகையான செல்லாக பிரதி எடுக்கும் சக்தி பெற்றவை. இதுவே சாதாரண செல்லுக்கும் ஸ்டெம் செல்லுக்கும் உள்ள வித்தியாசம்.

அவைகள் என்னென்ன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

     1) இரத்த செல்கள் (Blood Cells)

     2) தோல் செல்கள் (Skin Cells)

     3) தசை செல்கள் (Muscle Cells)

     4) நரம்பு செல்கள் (Nerve Cells)

     5) எலும்பு செல்கள் (Bone Cells)

     6) Etc….

தற்போதைய கண்டு பிடிப்பே அவைகள் wisdom teeth ள் இருக்கின்றன என்பது.


அப்படியெனில் உங்கள் பற்களை உருவாக்குவது எது? நீங்கள் தேவை இல்லை என்று கூறும் அந்த wisdom teeth இல்லையெனில் உங்களுக்கு பற்களே இல்லை என்பதே உண்மை, அது மட்டுமல்ல அந்த stem cells கள் தனக்கு தரப்பட்ட உறுப்புகளை உருவாக்குவதோடு மேலும் வேறு சில உறுப்புகளையும் உருவாக்குகிறதாம், அந்த wisdom teeth இல்லையெனில் உங்களுக்கு பற்கள் மட்டும் அல்ல மேலும் சில உருப்புங்களே இருக்காதாம்.

இன்னும் இலகுவாக சொல்ல வேண்டுமென்றால் உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்து கொள்ளுங்கள், அதில் உள்ள பிரதமர் தான் அனைத்து பகுதிகளையும் கட்டுக்குள் வைத்திருப்பார், அதே போல வளர்ந்த உயிரினத்தின் முதுகு தண்டில் (Bone Morrow) இருக்கும் ஸ்டெம் செல் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் பராமரிக்கும் பணியை பெற்றிருக்கும்.

“The primary roles of adult stem cells in a living organism are to maintain and repair the tissue in which they are found.”

 
Read more: http://www.childrenscancer.org/learning-center/treatments-and-therapies/what-are-stem-cells-and-why-are-they-important.html


உடம்பில் மற்ற பாகங்களில் இருக்கும் மற்ற அனைத்து ஸ்டெம் செல்களும் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் போல அந்தந்த பகுதியை பராமரிக்கும் வேலைகளையும் (அதாவது செல்களை பாதுகாப்பது இறந்த செல்களை அகற்றுவது போன்றவை) செய்கிறது. குறுப்பிட்ட பகுதியில் உள்ள உறுப்பிள் அந்த ஒரு குறிப்பிட்ட உறுப்பை உருவாக்க கூடிய செல்கள் மட்டுமே இயக்க நிலையில் கொண்டிருக்கும், அதாவது blood stem cell இவைகள் இரத்த செல்களை மட்டுமே உருவாக்கும், Bone stem cell கள் எலும்புகளை மட்டுமே உருவாக்கும், அப்படியெனில் பற்களை உருவாக்குவது எது? பற்கள் உருவாவதற்காக தரப்பட்ட முதல் அமைச்சர் யார் அது தான் wisdom teeth.

வளர்ச்சிபெற்ற மனிதனுக்கு பற்கள் அனைத்தும் முளைத்து விடும், அதற்கு பிறகு அவைகளின் முதன்மை பனி பற்களை பராமரித்தல் மட்டுமே, நீங்கள் 25 வயதில் அந்த பல்லை பிடுங்கினால் அதனால் மற்ற பற்களை பராமரிக்கும் வேலை மட்டுமே கெடும், மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை, அவற்றில் நோய் போன்ற தொல்லை அதிகமாக வேறு வழி இல்லாத நேரத்தில் அவற்றை பிடுங்கி விடலாம்.

Wisdom teeth ஐ தேவை இல்லாத உறுப்பு என அறைகூடல் விடுபவர்கள் அதை பிறந்த உடனோ அல்லது சிறு வயதிலோ பிடுங்க முடியுமா என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். பரிணாமவாதிகளே தற்போது wisdom teeth இல்லையெனில் என்ன இல்லை என்று புரிகிறதா?, ஹ்ம்ம்ம்ம் பற்களே இல்லை. அப்படியெனில் அது தேவையா தேவை இல்லையா????

//பல நாடுகளில் கிட்டத்தட்ட 1/3 சனத்தொகைக்கு இப்பற்கள் வெளியில் வருவதேயில்லை. இதனாலேயே இவைகள் விரைவில் காணாமல் போகலாமென தருமி சொன்னது பிழையான கணிப்பல்ல. அதோடு இவற்றில் அடிக்கடி infection வருவதாலும் எத்தனையோ பேர் இவற்றை அகற்றிவிடுவர்.//

திரு. தருமி சொன்னது போல இவைகள் எக்காலமும் காணாமல் போகாது என்பதை மேலே கொடுத்த விளக்கத்தின் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

//பல்லின் முதன்மைத்தொழில் என்ன என நான் சொல்லத்தேவையில்லை. தொழில் நமது உணவை நன்கு சப்பி அரைத்து சாப்பாட்டுக்கு இலகுவாக்குவது.//

Wisdom teeth ன் முதன்மை தொழில் மற்ற செல்களை உருவாக்குவதே என்பதை திரு. தருமி அவர்கள் விளங்காமல் இருக்கலாம் ஆனால் அவரின் wisdom பற்கள் கூட அதன் வேலையை சரியான முறையில் செய்து கொண்டிருக்கிறது.

இது வரையில் கூட நான் தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்பால் ஸ்டெம் செல்லை பிரிந்து எடுத்தல், எதிர்காலத்தில் மனிதனின் நோய்களை குணப்படுத்தும் போன்ற எந்த பகுதிக்குமே போகவில்லை. அவைகள் வருங்காலங்களில் அறிவியல் வளர்ச்சியால் மிகவும் பயன்பட கூடியவை. ஸ்டெம் செல்லின் உண்மையான வேலையை மறைக்க முற்படுபவர்கள் என்னவெல்லாம் கூறுகின்றனர் என்பதை விளங்கி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

//பரிணாமக் கொள்கைக்கு எத்தனையோ மில்லியன் சாட்சிகள் உண்டு. எதிராக எந்த உண்மையான சாட்சிகளும் இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை. கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு.//

சாட்சிகள் என்று நீங்கள் கூறியது அனைத்தும் தவிடு போடி ஆகி விட்டது. நீங்கள் டார்வின் காலத்தில் இருகிறீர்கள் போல. சிக்கிரம் வெளி உலகத்தை காணுங்கள்.

//திடீரென்று உண்மையான சாட்சிகள் ஏதேனும் கண்டுபிடித்து அதை verify பண்ணி மற்றவர்களும் நிரூபிக்க முடிந்தால் உங்களுக்கு நிச்சயம் nobel prize கிடைக்கும். ஆனால் அப்படி பிழையென நிரூபித்தால் கூட கடவுள் கொள்கை உண்மையாகிவிடாது.//

என்னுடைய முந்தைய பதிவுகளில் கடவுள் உண்டு என்பதற்கு அதிக விளக்கங்கள் கொடுத்துள்ளேன் அதற்கு முதலில் உங்களுடன் விடை இருக்கிறதா என்று பாருங்கள்.

Reference:

http://www.childrenscancer.org/learning-center/treatments-and-therapies/what-are-stem-cells-and-why-are-they-important.html
http://wiki.answers.com/Q/Which_parts_of_the_human_body_contain_stem_cells
http://learn.genetics.utah.edu/content/tech/stemcells/
http://stemcells.nih.gov/info/basics/
http://science.howstuffworks.com/environmental/life/cellular-microscopic/stem-cell3.htm

Post Comment

8 Comments:

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் கார்பன் கூட்டாளி,

தொடர்ந்து அருமையாக பதில் சொல்லி வருகின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

1. -------------
பரிணாமக் கொள்கைக்கு எத்தனையோ மில்லியன் சாட்சிகள் உண்டு.
-------------

உச்சகட்ட நகைச்சுவை....ப்ளீஸ் ஒரே ஒரு ஆதாரத்தை கொடுங்களேன். ஒன்றுக்கே இங்கு வழியில்லை, இதில் மில்லியன் கணக்கில்?????????????....பரிணாமவாதிகள் நல்ல நகைச்சுவையாளர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சகோதரி அனலிஸ்ட்.

2. ----------
எதிராக எந்த உண்மையான சாட்சிகளும் இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை
---------

ஆஹா...இது என்ன மாதிரியான வாதம்? கிடைக்கும் சாட்சிகள் பலவும் பரிணாமத்திற்கு எதிராகத் தானே இருக்கின்றன? மேலும் ஒரு நகைச்சுவையான வரிகள்.

3. --------
கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு
௦--------

சகோதரி அனலிஸ்ட் எந்த அளவு அப்பாவி என்பதற்கு இது ஒரு உதாரணம். முதலில் பரிணாமம் என்றால் என்ன? என்று சகோதரி விளக்க வேண்டும். Natural Selection + Random Mutations என்று இவற்றால் நடப்பதுதான் பரிணாமம். இதில் ஒன்றை ஒருவர் நம்பாவிட்டாலும் அவர் பரிணாமத்தை நம்பவில்லை என்று தான் அர்த்தம். உயிரினங்கள் மாறி வந்திருக்கலாம் என்று நம்பும் நம்பிக்கையாளர்கள், இதுவெல்லாம் நடக்க NS+RM போன்றவை விளக்கமாக இருக்காது, இதற்கு பின்னால் இறைவன் இருக்கிறார் என்று நம்புபவர்களாக இருக்கின்றனர். இது எப்படி பரிணாமத்தை அவர்கள் நம்புவதாக அமையும்?

பரிணாமம் என்றால் என்னவென்று சகோதரி முதலில் விளக்கட்டும். பிறகு அவர் சொல்வதில் சிறிதாவது லாஜிக் இருக்கிறதா என்று அவரே சிந்திக்கட்டும்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Unknown said...

//கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு//

நகைசுவையின் உச்சம்.

//சகோதரி அனலிஸ்ட் எந்த அளவு அப்பாவி என்பதற்கு இது ஒரு உதாரணம். முதலில் பரிணாமம் என்றால் என்ன? என்று சகோதரி விளக்க வேண்டும். Natural Selection + Random Mutations என்று இவற்றால் நடப்பதுதான் பரிணாமம். இதில் ஒன்றை ஒருவர் நம்பாவிட்டாலும் அவர் பரிணாமத்தை நம்பவில்லை என்று தான் அர்த்தம். உயிரினங்கள் மாறி வந்திருக்கலாம் என்று நம்பும் நம்பிக்கையாளர்கள், இதுவெல்லாம் நடக்க NS+RM போன்றவை விளக்கமாக இருக்காது, இதற்கு பின்னால் இறைவன் இருக்கிறார் என்று நம்புபவர்களாக இருக்கின்றனர். இது எப்படி பரிணாமத்தை அவர்கள் நம்புவதாக அமையும்?//

முதலில் natural selection அப்படி ஓன்று இருக்கிறது என்று யாரவது நிரூபிக்க முடியுமா?,

//பரிணாமம் என்றால் என்னவென்று சகோதரி முதலில் விளக்கட்டும். பிறகு அவர் சொல்வதில் சிறிதாவது லாஜிக் இருக்கிறதா என்று அவரே சிந்திக்கட்டும்... //

பரிணாம நிகழத்தான் மில்லியன் வருடங்கள் ஆகுமே, யார் இருந்து பார்க்க போறார்கள் என்பதே அவர்களின் ஏமாற்று வேலைக்கு அடித்தளம்.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா said...

அருமையான தகவல்.. அரிதான தகவல்.. நன்றிகள்

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாட்சா தொடர்ந்து படியுங்கள்.

Balan said...

//கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு//

நகைசுவையின் உச்சம்.//

மனிதன் பரிணாமம் அடைய விட்டால் அவன் ஏன் இடத்துக்கு இடம் உருவத்திலும் நிறத்திலும் மாறுபட்டு இருக்கிறான் ?????

எப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த பல மிருகங்களும் மரம் செடிகளும் இருக்கின்றன.

Galaxy என்றால் என்னை அதில் எத்தனை கிரகம், நட்சத்திரம் இருக்கிறது என்று தெரியுமா ?? அல்லது இந்த அண்டவெளியில் எத்தனை Galaxy இருக்கிறது என்று தெரியுமா??

Unknown said...

//மனிதன் பரிணாமம் அடைய விட்டால் அவன் ஏன் இடத்துக்கு இடம் உருவத்திலும் நிறத்திலும் மாறுபட்டு இருக்கிறான் ?????

எப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த பல மிருகங்களும் மரம் செடிகளும் இருக்கின்றன.//

இதற்கான பதில் என்னுடைய முதல் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன். பரிணாமத்தில் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, ஓன்று நுண் பரிணாமம் (Micro Evolution), மற்றொன்று பாரிய கூர்ப்பு (Macro Evolution).

இதில் முதல் வகையான Micro Evolution என்றால் ஒரு உயிரினத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ஆகும். அதற்கான காரணிகளாவண: Mutation, மரபு பெருக்கத்தில் ஏற்படும் சிறு பிழைகள், மரபணு இடமற்றத்தின் பொது ஏற்படும் பிழைகள் ஆகும்.

இதில் இரண்டாம் வகையான Macro Evolution, அப்படியெனில் ஒரு உயிரினம் முழுவதுமாக மற்றொரு உயிரினமாக மாறுவது, இது உடனே ஏற்படுவது இல்லை, இந்த மாற்றத்திற்கு லட்ச கணக்கான வருடம் தேவை படும் என்பது அவர்களின் கருத்து, இப்படி ஒரு பரிணாமம் இதுவரையில் எங்கும் எப்போதும் நடந்தது இல்லை, அதற்கான ஆதாரங்களோ படிமங்களோ இது வரையில் இல்லை

http://carbonfriend.blogspot.com/2010/07/blog-post.html

//Galaxy என்றால் என்னை அதில் எத்தனை கிரகம், நட்சத்திரம் இருக்கிறது என்று தெரியுமா ?? அல்லது இந்த அண்டவெளியில் எத்தனை Galaxy இருக்கிறது என்று தெரியுமா??//

தாங்களே குறிப்பிடுங்களேன்.

Balan said...

//மரபு பெருக்கத்தில் ஏற்படும் சிறு பிழைகள், மரபணு இடமற்றத்தின் பொது ஏற்படும் பிழைகள் ஆகும்.//

இப்படி பிழை ஏற்படுவதால் தான் புதிய உயிர் இனங்களே உருவானது, அதாவது ஒரே பிழை தொடர்ந்து நடக்கும் பொது....
மொழிகளும் அப்படித்தானே உருவானது ...

ஒரே இனத்தின் இரண்டு குழுக்கள் அடுத்ததனோடு இணைந்து மரபணுக்களை மாற்றிக்கொள்வதை நிறுத்தும்போது அவை இரண்டும் தனித்தனி மரபணு வழியில் சென்று தனித்தனி இனங்களாக ஆகிவிடுகின்றன...

//Micro Evolution என்றால் ஒரு உயிரினத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ஆகும்//
இப்படியான ஒரு மற்றம் நடக்க எத்தை வருடங்கள் தேவைப்படுமோ
அதை போல் பல லட்சம் ஆண்டுகள் தேவைபடும் Macro Evolution நடைபெற...

ஒரு Galaxy இல் 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும்
இதைப்போல் 100பில்லியன் Galaxy கள் இருக்கின்றன.. எத்தனை கோடி பூமியை போன்ற கிரகம் இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

அதில் உயிரினங்கள் இருக்குமா இருக்கிறதா???

Unknown said...

//இப்படி பிழை ஏற்படுவதால் தான் புதிய உயிர் இனங்களே உருவானது, அதாவது ஒரே பிழை தொடர்ந்து நடக்கும் பொது....//

பிழைகள் நடந்தால் உயிரினங்கள் அழிந்துதான் போகும், புது உயிர் உருவாகாது..

ஒருவர்க்கு நோய்வாய்பட்டால் அவர் வேறு ஒரு உயிரினமாக மாறி விடுவாரா? அது போலதான் மரபு பிழையும்.

//அதை போல் பல லட்சம் ஆண்டுகள் தேவைபடும் Macro Evolution நடைபெற...//

அதுபோல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காகவே நம்முடைய உடம்பில் DNA Repair செய்யும் தொழில்நுட்பமும் உள்ளது.

//ஒரு Galaxy இல் 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும்
இதைப்போல் 100பில்லியன் Galaxy கள் இருக்கின்றன.. எத்தனை கோடி பூமியை போன்ற கிரகம் இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

அதில் உயிரினங்கள் இருக்குமா இருக்கிறதா??//

பல சமிக்கைகள் அனுப்பி விஞ்ஞானிகள் சோதித்து விட்டனர், எதற்கும் பதில் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிரினம்.

Post a Comment