Friday, February 04, 2011

மழை மனிதனுக்கு கற்றுத்தரும் பாடம்


உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக....

நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.


சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம்.
வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி  நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர்.


மழை பெய்வதினால் உயிரினங்களுக்கு பலவகையான நன்மைகள் உள்ளன, மழை உயிர் வாழ்வதற்கான ஆதாரம், ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லையெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம். மழை என்பதே இல்லையெனில் அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று சொல்லதேவை இல்லை அனைவரும் அறிந்ததே உயிரினங்கள் வாழவே முடியாத அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகமாகிவிடும். ஒரு பக்கம் முழுவதும் வெப்பமாகவும் ஒரு பக்கம் முழுவதும் கடல் நீராகவும் இருக்கும், அதாவது தற்போது இருக்கும் படியான சமநிலை படுத்தப்பட்ட பூமி இருக்கவே இருக்காது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி அழியவும் கூடாது ஆனால் அவை அனைத்திற்கும் இன்றி அமையாத தேவைக்காக நீரும் தரப்படவேண்டும் என்ற நிலையில் இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம். இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.

இது உண்மையில் மாபெரும் சக்தியின் உன்னதமான அருட்கொடை என்பதை சந்தேகமின்றி என்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே செல்வோம்.

கடவுள் மறுப்பாளர்கள் கூற்றுப்படி முதல் மழை எப்படி பெய்திருக்கவேண்டும், இயற்கையாக (!?) உருவான ஆக்சிஜன் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் தானாக ஒன்றிணைந்து நீர்த்துளி உருவாகி பின் ஒவ்வொரு நீர்துளியாக அதிகமாகி கடல் உருவாகி இருக்க பிறகு பூமியிலுள்ள வெப்பத்தின் காரணமாக அவைகள் தங்களின் தன்மையை அதாவது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு தானாக (!?) மாற்றி மேல் சென்று பிறகு பூமிக்கு தரவேண்டும்.


இவை அனைத்தும் தானாக உருவாகி இருக்குமானால் எப்படி இருக்கும் தெரியுமா? மேகம் எங்கு நீர் எடுக்கிறதோ அங்கு மட்டும் தான் மழை உருவாக வேண்டும், கடல், ஏரி, ஆறு போன்று நீர் உள்ள இடங்களிலிருந்து மேகம் நீர் எடுக்கிறது, உதாரணமாக கடல் நீர் மேகமாக மாருமானால் மழை கடலில் மட்டும் தான் பெய்யவேண்டும், அவ்வாறா நடக்கிறது இப்பூவுலகில், அதற்காக கடவுள் கொடுத்த ஒரு அமைப்புதான் காற்றில் மேகம் நகருதல்,எங்கிருந்து அது நீர் எடுத்தாலும் சுழன்று கொண்டு அனைத்து இடங்களுக்கும் மழையை தருகிறது, நம் ஊரில் உள்ள தண்ணீர் வண்டி என்ன செய்கிறது, அசுத்தமான நீரை சுத்தபடுத்தி அதை ஒரு வண்டியில் ஏற்று ஊர் முழுவதுமாக வளம் வருகிறது எங்கு தண்ணீர் வேண்டுமோ அங்கு அளிக்கிறது, இதே வேலையை செய்யத்தான் மழை என்ற ஒன்றை கடவுள் ஏற்படுத்தி தேவை படும் இடங்களில் பொழிய செய்கிறார், இந்த அமைப்பு எதற்காக நடக்கிறது அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக.

மேகத்தின் வேகம் என்பது இந்த பூமி சுழற்சியின் வேகத்தைவிட அதிகம் என்று கூட கூறலாம், ஏனெனில் பூமி தான் சுற்றும் போது தன்னுடைய வலிமண்டலதையும் இழுத்துக்கொண்டு சுற்றுகிறது, மேகம் என்பது பூமியின் வலிமண்டலத்தில் தான் உள்ளது. உதாரணமாக ஒருவர் மணிக்கு 10 கி மி வேகத்தில் நடக்கிறார் என்றால் அவர் உண்மையில் பூமியின் சுழற்சியையும் (529.75 kmph) சேர்த்து 539.75 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கிறார் என்று தான் பொருள், இதை இங்கு நாம் குருப்பிடுவதற்கான காரணம் பூமிதான் சுற்றுகிறதே மேகம் எதற்காக நகர வேண்டும், அப்படி நகராமல் ஒரே இடத்தில் இருந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா தண்ணீர் இருக்கும் இடங்களில் மட்டுமே மழை கிடைக்கும், அப்படியெனில் உயிரினங்கள் இருக்குமா, நாம் தற்போது இருப்பது போன்ற எந்த குறையும் இல்லாமல் வாழ முடியுமா? இந்த தத்துவத்தை பார்க்கும், சிந்திக்கும் ஒரு மனிதன் என்ன உணருவான் இப்பூமியில் உயிரினங்களை வாழவைக்க மறைமுகமாகவோ அல்லது நேராகவோ ஒரு சக்தி உதவுகிறது என்று அடிப்படை நிலையை ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும், இல்லையெனில் மேகம் எதற்காக நகரவேண்டும் மழை எதற்காக பொழிய வேண்டும், இது போன்ற நாம் உணரவே முடியாத இவ்வுலகையும் இந்த தத்துவங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கும் அந்த மாபெரும் சக்தியை அரைகுறையாக கூட உணரமட்டோம்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தற்போதைய அறிவியல் படி  மழை பெய்ய மேகம் உருவானால் மட்டுமல்லாமல் ஏர்பான் (Airborne) என்ற ஒரு வகையான பாக்டீரியாவின் பங்கும் அதிகம் உள்ளதாம். உயிர்களை வாழவைக்க உதவுவது நுண்ணுயிரிகள், பூமியில் நீர் இல்லையெனில் உயிரினங்கள் இல்லை, நீர் இல்லையெனில் கடல் இல்லை, கடல் இருந்தாலும் வெப்பம் இல்லையெனில் மேகம் இல்லை, மேகம் இருந்தும் புவி ஈர்ப்பு விசை இல்லையெனில் மழை இல்லை. சுருங்க சொல்வதென்றால் ஒன்றில்லையேல் ஒன்றில்லை என்ற மிகவும் சிக்கலான ஆயிரக்கணக்கான அமைப்பை வைத்து கொண்டு இதுதான் முதலில் வந்தது அதுவும் தானாக வந்தது என்ற வாதம் எந்த அளவிற்கு அறிவுடையதாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

பொதுவாக வெள்ளம் வறட்சி ஏற்படுதல் என்பது எப்போது என்பது நாம் அறிந்ததே இயற்கைக்கு முரணான (அதாவது உலக அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பொழுது) இவைகள் நடைபெறும், குளோரோ ப்லோரோ கார்பன் அதிகமாக வெளியிடும் பொழுது, ஒரே இடத்தில் சுரங்கம் தண்டவாளம் போன்றவைகளுக்காக குண்டு வெடிப்புகளால் தொண்டபடுதல் போன்ற இயற்கை அமைப்பை சிதைக்கும் போதுதான் நமக்கு வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பெரிய பாதிப்புகள் நடைபெறும். இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது மேலே குறுப்பிட்ட இந்த இயற்கை அமைப்பு என்பது எவ்வாறு ஏற்பட்டது. தானாக உருவான ஒன்று அதன் அமைப்பை மாற்றும் போது எதற்காக எதிர்மறை விளைவை ஏற்படுத்த வேண்டும். சாதரணமாக எதிர்மறை விளைவை ஏற்படுத்தாத அமைதியான அமைப்பை அது எப்படி பெற்றது என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும்.

இவைகள் அனைத்தும் நடப்பது ஒரு காரணம் இல்லாமலா? இதை பார்க்கும் போதே தெரியவில்லையா ஒரு சக்தி தான் இதை இயக்குகிறது என்று.

மழை எதற்காக பெய்கிறது என்று யாரிடமாவது கேட்டால் அதற்கு பதில் உயிரினங்களுக்காக என்றுதான் கூறுவார்கள், இது உலகில் அனைவரும் அறிந்த நியதி என்று கூட கூறலாம், இணையத்தில் மழை ஏன் பெய்கிறது என்ற கேள்வியை பற்றி தேடினால், எப்படி உருவாகிறது எங்கிருந்து பெய்கிறது, என்னென்ன வகைகள் அதில் உள்ளன என்ற பதிலெல்லாம் கிடைத்தது, என்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்னுடைய கேள்வி:

மழை ஏன் பெய்கிறது? எதற்காக பெய்ய வேண்டும் என்பது தான்.


"அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்.  அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?  (அல் குர்ஆன் 32 : 27)"

References:


Post Comment

15 Comments:

வால்பையன் said...

நல்லதண்ணியா மழை பெய்யது, கடல் மட்டும் ஏன்னே உப்பா இருக்கு? கடவுள் அதை மட்டும் உப்பா படைக்க காரணம் என்ன!?

கடலை படைத்த கடவுள் நிச்சயம் அதை உப்பா தான் படைச்சிருக்கனும், நிலப்பிரதேசத்தில் அடித்து செல்லப்படும் நீரில் கலந்த உப்பே அதுன்னு அறிவியல் பேச மாட்டிங்கன்னு நினைக்கிறேன்!

Unknown said...

//கடவுள் அதை மட்டும் உப்பா படைக்க காரணம் என்ன!?//

நல்ல கேள்விதான், இது போன்று பல கேள்விகளுக்கு நாம் விடை தெரியாமலே இருக்கிறோம்.

ஆனால் கடல் நீர் முழுவதும் கடும் விஷத்தொடு கால் வைத்தாலே மனிதன் இறந்துவிடும் அளவிற்கு இருக்கவில்லையே, அது கூட உயிரின் வாழ்விற்கு மறைமுகமாக உதவுகிறது. மனிதனுக்கு சாதகமான சூழ்நிலையை அது எங்கிருந்து பெற்றது.

வால்பையன் said...

//கடல் நீர் முழுவதும் கடும் விஷத்தொடு கால் வைத்தாலே மனிதன் இறந்துவிடும் அளவிற்கு இருக்கவில்லையே, அது கூட உயிரின் வாழ்விற்கு மறைமுகமாக உதவுகிறது. மனிதனுக்கு சாதகமான சூழ்நிலையை அது எங்கிருந்து பெற்றது. //


ஹாஹாஹா!
அப்ப கடவுள் அதை உப்புகடலா படைக்கல தானே!

Unknown said...

//அப்ப கடவுள் அதை உப்புகடலா படைக்கல தானே//

இதனை பலவாறு சிந்திக்கலாம், நேரடியாக கடவுள் கடல் முழுவதும் உப்பாக உருவாக்கி இருக்கலாம், அல்லது கடலில் உள்ள பாக்டீரியா ஏதேனும் நீரை உப்பக்கலாம் அல்லது வேறேதேனும் வழியில் நீர் உப்பகலாம்.....

வால்பையன் said...

//இதனை பலவாறு சிந்திக்கலாம், நேரடியாக கடவுள் கடல் முழுவதும் உப்பாக உருவாக்கி இருக்கலாம், அல்லது கடலில் உள்ள பாக்டீரியா ஏதேனும் நீரை உப்பக்கலாம் அல்லது வேறேதேனும் வழியில் நீர் உப்பகலாம்...//


அவ்ளோ பெரிய கடலை நல்லதண்ணியா படைச்சாரா, உப்பு தண்ணியா படைச்சாரா என்பது தான் கேள்வி, ஏன் சில இடங்களில் உப்பின் அளவு முகியாகவும், சில இடங்களில் குறைவாகவும் உள்ளது!?

குரானில் எல்லாம் சொன்ன கடவுள் இதற்கு மட்டும் ஏன், இருக்கலாம்னு மூணு வாட்டி உங்களை சொல்ல வைத்தார். அதற்கான காரணம் அப்ப கதைவிட்ட முகமதுவுக்கு தெரியலையா!?

Unknown said...

தங்களின் கருத்து மிக நகைசுவையாக உள்ளது, மேலும் அறிவு பூர்வமாக இல்லை. கடல் நீரை பற்றி இருக்க வேண்டுமெனில் அதில் அந்த கடலில் எத்தனை மீன்கள் இருக்கிறது அது எல்லாம் என்ன வண்ணத்தில் இருக்கிறது என எல்லாம் விவரங்களும் கேட்பீர்கள் போல, அதில் பச்சை நிறத்தில் உள்ள மீனின் செதில்கள் எத்தனை என்பது உங்களுக்கு தேவையான விசயமா. அப்படி அனைத்து விசயங்களையும் அறிவித்த பிறகு உங்களுக்கு எதற்கு ஆறு அறிவு?

ஏதாவது முழுமையான அறிவு சார்ந்ததாக உள்ளதா தங்களின் கேள்வி என்று நினைத்து பாருங்கள்.

வால்பையன் said...

தேனி பழத்தை உண்ணுதுன்னு உளர தெரிஞ்ச குரானுக்கு கடல் நீர் ஏன் உப்பா இருக்குன்னு சொல்வது முக்கியமில்லையாக்கும், யார் நகைச்சுவையாக பேசுவது!?

Unknown said...

ஆவேசபடாமல் நிதானமாக இருந்தாலே தங்களின் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும், தங்களின் தேனீ பற்றிய கேள்வி இப்பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது. தேனீ பற்றிய பதிவில் அல்லது சந்தர்பம் வரும் போது அதற்கான பதிலை எதிர்பாருங்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.கார்பன்கூட்டாளி,
உங்கள் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக....

இன்றைய என் பதிவில் சுட்டி இணைக்கும்போது, 'என்ன, ரொம்ப நாளாய் காணவில்லையே' என்று நினைத்தேன். இன்றே உங்கள் பதிவும் காண நேர்ந்தது..! மகிழ்ச்சி.

//மழை ஏன் பெய்கிறது? எதற்காக பெய்ய வேண்டும் என்பது தான்.//--நல்லதொரு சிந்தனைத்தூண்டல்.

அத்தோடு, பதிவின் இணைப்பாய்...

"முதலில் வந்தவை தாவரங்களா? அல்லது ஆக்சிஜனா? அல்லது தண்ணீரா?"

(ஏனெனில்,
தாவரங்கள் இன்றி ஆக்சிஜன் இல்லை,
ஆக்சிஜன் இன்றி தண்ணீர் இல்லை,
தண்ணீர் இன்றி தாவரங்கள் இல்லை)

அறிவியல் சொல்கிறது:-
உலகின் 98% ஆக்சிஜன் தாவரங்களிலிருந்து வருகின்றன என்று. அப்படி என்றால், வெறும் 2% (from the whole earth crust) ஆக்ஸிஜனில்தான் உலகம் மற்றும் உலக தாவரங்கள் 'திடுதிப் என்று தானாக தோன்றியதா'? இருக்கலாம் எனில், தண்ணீர் இன்றி தாவரங்கள் எப்படி முளைத்தன?

சரி, சரி, குர்ஆனை பிட் அடிக்காமல்... வால்பையன் அறிவியல் மூலமாய் விடையளிப்பார் என நம்புகிறேன்.

Unknown said...

உங்களின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக...

//"முதலில் வந்தவை தாவரங்களா? அல்லது ஆக்சிஜனா? அல்லது தண்ணீரா?"

(ஏனெனில்,
தாவரங்கள் இன்றி ஆக்சிஜன் இல்லை,
ஆக்சிஜன் இன்றி தண்ணீர் இல்லை,
தண்ணீர் இன்றி தாவரங்கள் இல்லை)//

ஆக்சிஜன் மட்டும் அல்ல பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒரு தொடர்புடன் தான் உள்ளது.

இப்பிரபஞ்சம் திடிரென உருவானது என்று பெரு வெடி கொள்கையை நம்புபவர்கள் இப்பூமி அதில் உள்ள உயிரினங்கள் தாவரங்கள் எல்லாம் திடிரென உருவாகி இருக்காது என்று எப்படி கண்மூடி தனமாக நம்புகிறார்கள், இப்பிரபஞ்சம் திடிரென உருவாகி அனைத்து கோள்களும் தங்களுக்குள் குறிப்பிட்ட ஈர்ப்பு விசையில் சுற்றுகின்றன என்னும்போது, ஏன் ஆக்சிஜன், நீர் திடிரென உருவாகி இருக்க முடியாது.

ஆக்சிஜன் நீர் திடிரென உருவானது என்ற கொள்கைக்கு முதலில் வந்தாலே மற்ற கிரகங்களில் உருவாகாமல் பூமியில் ஏன் உருவாகின என்ற கேள்வி தோன்றி இப்பூமியை திட்டமிட்டு எதோ ஒரு சக்தி உருவாக்கியது என்ற முடிவுக்கு வர நேரிடும்,

அப்படி ஒரு நிலைக்கு வந்துவிடுவோமோ என்று தான் நாத்திக வாதிகள் இவற்றில் எது முதலில் வந்தது என்ற கேள்விக்கே செல்வது இல்லை.

வால்பையன் said...

பெருவெடிப்பு திடீரென்று உருவாகி இருக்கலாம், ஆனால் அதற்கு முன் என்ன நடந்ததுன்னு யோசிக்கனும்!

உங்களிடம் 50 கிலோ எடையை கொடுத்து தூக்கிட்டு நிக்க சொல்றோம் ஒரு அஞ்சு நிமிசம், நீங்க மூச்சை இருக்கி பிடிச்சிகிட்டு தூங்கிகிட்டு இருப்பிங்க, கீழே வைக்கும் பொழுது உங்களிடம் இருந்து வெடித்து கிளம்புமே ஒரு பெருமூச்சு, அதான் பெருவெடிப்பு!

லாஜிக் இல்லாம எதையாவது நம்புனா மத அடிப்படைவாதிக்கும், பகுத்தறிவுவாதிக்கும் என்ன வித்தியாசம்!

Unknown said...

//பெருவெடிப்பு திடீரென்று உருவாகி இருக்கலாம், ஆனால் அதற்கு முன் என்ன நடந்ததுன்னு யோசிக்கனும்!//

அப்படி வெடித்து சிதறிய பிரபஞ்சம் எதற்காக தனக்கென ஒரு தத்துவத்தை வைத்து சுழல வேண்டும், அந்த தத்துவத்தை எங்கிருந்து பெற்றது.

//லாஜிக் இல்லாம எதையாவது நம்புனா மத அடிப்படைவாதிக்கும், பகுத்தறிவுவாதிக்கும் என்ன வித்தியாசம்!//

பகுத்தறிவிற்கு தங்களின் இலக்கணம் என்ன? ஒரு பதிவை படித்துவிட்டு அதை சரிதான் என்று ஏற்று கொள்ள முடியாமல், அதை திசை திருப்ப வேறு எதையாவது சொல்வது தான் பகுத்தறிவா?

Aashiq Ahamed said...

சகோதரர் கார்பன் கூட்டாளி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துல்லில்லாஹ். அருமை. மற்றுமொரு நல்ல பதிவு. பல தகவல்களை தெரிந்து கொண்டேன். இதற்கெல்லாம் பரிணாமத்தில் பதில்?????????????????????

அப்புறம் சகோதரர், பரிணாமம் குறித்து தொடர் பதிவுகள் எழுதப்போவதாக சகோதரி அனலிஸ்ட் என்பவர் தெரிவித்திருந்ததை உங்களது முந்தைய பதிவில் பார்த்தேன். ஆனால் அவர் கொடுத்த லிங்க் வேலை செய்யவில்லையே? (It says "Blog has been removed") இது குறித்து உங்களுக்கு ஏதும் தெரியுமா?

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Unknown said...

வா அலைக்கும் அஸ்ஸலாம்,

நானும் அவர்களின் பதிவுகை தான் எதிர் பார்க்கிறேன், ஒரு பதிவு போட்டார், பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை அவரின் அந்த ப்ளாக் கூட ஓபன் அக வில்லை.

தமிழ்த்தோட்டம் said...

மிகவும் பயனுள்ள நல்ல அறிவியல் கட்டுரை, தொடரட்டும் உங்கள் பணீ

Post a Comment