Friday, December 10, 2010

எச்சங்கள் எனும் பரிணாம கதையின் மிச்சங்கள்

தருமி அவர்களின் ப்ளாகில் The Analyst எழுதிய பதிவுக்கான பதில்கள்:

பதில் தருவதாக இருந்தால் என்ன வேண்டுமானால் தரலாம், அவைகள் அர்த்தம் பொருந்தியதாகவும் ஆதாரமானதாகவும் இருந்தால் மட்டுமே அது அறிவுடையதாக இருக்கும். The Analyst அவர்களின் பதில்கள் அப்படி தான் இருக்கின்றன, எந்த உறுப்பும் பாதி தேவை, கால்வாசி தேவை என்றில்லை, அதேபோல நமது பதிவில் குறுப்பிட்ட உறுப்புகளின் செயல்கள் ஒன்றும் துணை செயங்கள் இல்லை, நோய் எதிர்ப்பு போன்ற மிகவும் அத்தியாவசிய செயல்களே.

Vestigial organs கள் என்பது தேவையான உறுப்புகள் என்று நாம் வெறும் வார்த்தையில் மட்டும் சொல்லவில்லை தற்போதைய அறிவியலாளர்களால் அவைகள் தேவை என்று கண்டுபிடித்ததை ஆதாரத்துடன் கூறி இருக்கிறோம். ஆனால் The Analyst எழுதிய பதிவில் அப்படி எதுவும் காணப்படவில்லை, அவர் கூறியதெல்லாம் அறிவியல் என்ற எண்ணத்தை கொண்டுள்ளாரா அல்லது மற்றவரை ஏமாற்றுகிறாரா என்று புரியவில்லை. ஒரு சிறு துணைசெயல்களை செய்யும் என்று கூறும் நீங்கள் எந்த ஒரு வேலையும் இந்த உறுப்புக்கு இல்லை என்று மனிதனின் ஒரு உறுப்பை கூட காண்பிக்காதது ஏன், உங்களுடைய வாதப்படி வைத்தால் கூட ஒரு உறுப்பு தேவை இல்லை என்கிற நேரத்தில் தான் மறையும், எல்லா உறுப்புகளும் ஏதேனும் ஒரு சிறு வேலையேனும் செய்து கொண்டிருக்கின்றன, அப்படியெனில் எந்த உறுப்பும் மறையாது பரிணாமமும் நிகழாது என்று தான் அர்த்தம் ஆகிறது, அப்படி (பரிணாம எச்சம் என்று நீங்கள் கூறுவது) மறைந்தால் தேவையான உறுப்பு எப்படி மறையும் பரிணாமத்தின் அடிப்படையே பொய் ஆகி விடுமே.

vestigial organ கள் இல்லை என்றாலும் உயிர் வாழலாம் அவைகள் வாழ்க்கைக்கு ஆதாரம் இல்லை என்ற கூற்று எல்லாம் நொண்டி சாக்குகளே, கை விரல்களில் ஒன்று இரண்டை வெட்டி விடுவதாலோ உங்களுக்கு உயிருக்கு எந்த வித பாதிப்பும் வரபோவது இல்லை, ஆனால் உங்கள் வாழ்கையில் சில சிரமங்களை அனுபவிக்க நேரிடும், அதே போன்றே சிறு பாதிப்புகளே இந்த vestigial organs களை இழப்பதால் ஏற்படுவதும்.

தவளை தன் வாயால் கெடும் என்பது போல், The Analyst தன்னுடைய பதிவில் mutation பற்றி எழுதி மாட்டி கொண்டார். அறிவியலை தங்களின் நாத்திக கொள்கைக்கு ஏற்றார்போல மாற்றி காண்பிப்பதே இவர்களின் எண்ணம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் என்று நினைகிறேன், சரி அவை என்ன வென்று பாப்போம்.

//வேலைசெய்யாத மரபணு ஏன் எம்மில் இருக்கவேண்டிய அவசியமென்ன? மற்றைய பல முலையூட்டிகளில் vitamin C யின் வேலைசெய்யக்கூடிய மரபணு உண்டு. எமது மூதாதையரிலும் வேலைசெய்திருக்கிறது. படிப்படியாக எம் vitamin C மரபணுவில் ஏற்பட்ட mutations ன்மூலம் vitmain C உருவாக்கும் சக்தியை இழந்து விட்டது. கடவுள் எம்மை இப்படியே படைத்திருந்தால் ஏன் எமக்கு இந்த மாதிரி உடைந்த மரபணுக்களைத் தருவான்?//

பரிணாம வாதிகளின் விதிப்படி பரிணாமம் என்பது மேல் நோக்கி செல்ல கூடியது அதாவது குரங்கு மனிதன் என்று படிப்படியாக முன்னேற்றம் ஆனால் The analyst அவர்களின் மேலே கொடுக்க பட்டுள்ள வசனமோ ஒரு உயிரினத்தின் குறைபாடு பரிணாமத்திற்கு எதிராக கீழ்நோக்கி போயிருக்கிறது, ஆம் mutation என்பது உயிரினத்தின் குறைபாடே தவிர அவற்றின் பரிணாமம் இல்லை. பரிணாம வாதப்படி Vitamin C பரிணாம வளர்ச்சி பெற்றால் அதற்கு மேல் உள்ள நிலையை தான் அடைய வேண்டும் எப்படி சக்தியை இழக்கும், இவ்வாறுதான் பரிணாமவாதிகள் அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சு போட்டு தங்களை தாங்களே சமாதானபடுத்தி கொள்கின்றனர். Mutation எவ்வாறு நிகழ்கிறது என்று அறிய நமது முந்தைய இந்த பதிவை பார்வை இடலாம்.


mutation ஏன் நடைபெறுகிறது, நோய் எதற்கு வருகிறது, மனிதர்களுக்குள் மரபு மாற்றம் ஏன், வேலை செய்யாத மரபணு ஏன், போன்ற அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் தான், உங்கள் உடம்பில் mutation நடைபெற வில்லையெனில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒன்றாகத்தான் தோற்றமலிப்பார்கள், ஒரே சிந்தனை தான் கொண்டிருப்பார்கள், யாருக்கும் நோய் வராது, உணவு உட்கொள்ளுதலும் அனைவருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும், மனிதர்களுக்குள் கோபம் வராது, ஆசை இருக்காது, உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஒரே மாதிரி தான் உணர்வு இருக்கும், சிறிதளவு கூட மாற்றம் இருக்காது, உலகில் முதலில் உள்ள மனிதன் விவசாயம் செய்தால் அனைத்து மக்களும் அதை மட்டும் தான் செய்ய முடியும், வேறு வேலை தெரியாது, விலங்குகள் மாதிரி கூட மனிதனால் இருக்க முடியாது. சொல்ல போனால் அப்படி இருப்பது மனிதனே அல்ல. ரோபோ மாதிரியான உணர்ச்சி இல்லாத ஒரு பொருள்.

சுருக்க சொல்ல போனால் mutation இல்லை என்றால் இந்த உலகில் மனிதர்களே இயங்க மாட்டர். மனிதர்கள் ஒருவரை ஒரு பிரித்து அறிவதற்கு, கடவுளின் அழகிய படைப்பே இந்த மரபு மாற்றம், Mutation, வகையை சேர்ந்த அனைத்தும்.

நடுநிலை வாதிகளுக்கு புரிந்திருக்குமென நம்புகிறேன்.

Appendix பற்றிய பதிலை தருவாதாக கூறி, அதற்கு ஆதாரமோ அல்லது சரியான வாதமோ வைக்க வில்லை, நம்முடைய பதிவில் அது மிகவும் பயன் பட கூடிய உறுப்பு என்பதற்கு பரிணாம ஆதரவு (Wikepedia) தளத்திலிருந்தே ஆதாரத்தை கொடுத்திருந்தோம், ஆனால் அவர்களால் தர முடியாதது ஏன்?. அதே போன்றே nictitating membrane பற்றிய பதிலும், மற்ற உயிரினங்களில் இருக்க கூடிய இந்த nictitating membrane தான் மனித உடம்பில் கண்களில் இருக்க கூடிய plica semilunaris என்பதற்கே ஆதாரம் இல்லை, இருப்பினும் பரிணாம வாதிகளின் கேள்விக்காக அவைகள் தேவையான உறுப்புதான் என்பதற்கு ஆதாரம் எடுத்து வைத்தோம், சுட்டியும் அளித்தோம், மறுப்பு தெரிவிக்கும் அவர்களால் ஏன் சரியான ஆதாரத்தை காண்பிக்க முடியவில்லை!?

மெகா நகைசுவையை பாப்போம்.

//WOW! SERIOUSLY? நீங்கள் உண்மையாக விளக்கமற்றுத்தான் எழுதுகிறீர்களா என எனக்குத்தெரியாது.ஆனால் உயிரியல் படித்த நீங்கள் இவ்வளவு விளக்கமில்லாதவராக இருப்பீர்களென நம்ப முடியாமல் உள்ளது. ஒன்றைப்பற்றி எழுதும் போது அதைப்பற்றி அறிந்து விளங்காமல் பெரும்பாலும் விளக்கமற்ற மக்களுக்கு சொல்வது மிகவும் பொறுப்பற்ற தனமெனக் கருதுகின்றேன்.//

தங்களின் அரைகுறை விளக்கத்தையும் ஏமாற்று தனத்தையும் விளக்கமாக பாப்போம்.

//உங்களின் இந்த வசனம் இரண்டு விதமாக வாசிப்பவரைத் தவறான புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. முதலாவது, adult stem cells wisdom teeth ல் மட்டும் தான் உண்டு என அர்த்தப்படுத்துவது. //

Adult stem cells wisdom teeth ல் மட்டுமல்ல, இன்னும் அநேக மான உறுப்புகளில் உள்ளது. சரிதான் மேலே பாப்போம்.

//Adult stem cells எத்தனையோ அங்கங்களில் கண்டுபிடித்துள்ளனர். மூளை, சூலகம், இருதயம், தோல், இரத்தம், எனது favourite tissue ஆன endometrium (lining of the uterus), placenta என கிட்டத்தட எல்லா அங்கங்களிலும் ஒரு சிறிய எண்ணிக்கையில் adutl stem cells உண்டு. A very good source of stem cells is umblical cord blood. இப்போது பல நாடுகளில் பிள்ளை பிறந்தவுடன் இந்த umblical cord blood ஜ பிற்காலத் தேவைக்காக நிரந்தரமாக சேமித்து வைக்க வசதிகள் உண்டு.//

சரிதான், எல்லா அங்கங்களிலும் ஒரு சிறிய எண்ணிக்கையில் இருக்கும் என்று கூறிய உங்களுக்கு அது ஏன் சிறிய எண்ணிக்கையில் உள்ளன என்று புரிய வில்லையா? அதை பற்றி படிக்கவும் இல்லையா?

//Wisdom teeth ல் stem cells இருந்தால் அநேகமாக மற்றைய எல்லாப் பற்களிலும் கூட அவை இருக்க வாய்ப்புகள் அதிகம் (adult stem cells ஜப் பற்றி மேலும் அறிய இங்கு செல்லவும்).//

இதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை, 100 % அப்படி இருக்கவும் வாய்ப்பும் இல்லை, முதலில் stem cell என்றால் என்னவென்று விளங்கினால் மட்டுமே அதை பற்றி மேலே பேச எதாவது இருக்கும். முதலில் என்ன வென்று பாப்போம்.

//அதோடு இன்னொரு விடயம் ((stating the obvious, I think), இந்த stem cells ஜ அறிவியலாளர்கள் சிறிது காலத்திற்கு முன்பே கண்டுபிடித்தனர். இவை தானாக உடலில் தேவையான இடத்திற்குப் பயணித்து நோய்களை எல்லாம் குணமாக்காது. நாமே ஒரு tissue இலிருந்து ஆய்வுகூடத்தில் இவற்றைத் தனிப்படுத்திப் பின் culture செய்து பின் தேவையான tissue விற்கு inject பண்ண வேண்டும். இது கூட இன்னும் பல இடங்களில் பரிசோதனை நிலையிலேயே உள்ளது. Am I missing something here? கடவுள் stem cell க்காக wisdom teeth ஜ உருவாக்கி, அதை ஆயிரமாண்டுகளுக்குப் பின், அவற்றை அநேகமாக இறை நம்பிக்கையற்ற மனிதர்களால் கண்டுபிடிக்கச் செய்து அவர்களையே அதன் சக்திகளையும் அறியச் செய்து நோய்களுக்கு treatments உருவாக்கச் செய்தாரா? I don't get it! Do you ...?//

Stem cell என்பதை பற்றிய தங்களுடைய ஞானம் 0 என்பது இதிலிருந்தே தெரிகிறது. நீங்கள் தவறாக புரிந்து கொள்வீர்கள் என்பதனாலே நான் stem cell பற்றிய தளங்களை தங்களின் பார்வைக்கு தந்தேன், அதையாவது பார்த்து தெரிந்து இருக்கலாம். பற்களில் stem cells இருக்கிறது என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர் என்று கூறினேன், ஆய்வு கூடத்தில் தனிபடுத்தி பின் culture செய்து ..... இந்த கதையெல்லாம் யார் கூறியது, நான் அந்த subject பக்கமே போக வில்லை, நீங்கள் கூறியது அனைத்தும் out of syllabus.

தற்போது அவைகள் பயன்படுவது என்பது ஒரு அறிவியல் வளர்ச்சியே ஆனால் அவைகளுக்கு மனித உடம்பில் வேறு வேலையே இல்லையா.!!!!???... சாதாரண செல்லுக்கே மனித உடலில் தனித்துவம் மிக்க வேலை இருக்கும் போது stem cell க்கு வேலை இல்லாமலா! அதை பற்றி யோசிக்கவே இல்லையா?

அதற்குள் இறை நம்பிக்கையற்ற அப்படி இப்படி என்று கதை அளந்துருக்கிரீர்களே மேலே குறிப்பிட்டதே out of syllabus எனும் போது இவைகள் பரிணாம வாதிகளின் திசை திருப்பும் வழிகள் என்பதை படிப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

Wisdom teeth பற்றி நான் தற்போது கூற போவதை கேட்டால் வியப்பின் உச்சத்திற்கே போய் விடுவீர்கள்.

அவற்றை பற்றிய பதிவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

Post Comment

4 Comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

கார்பன் கூட்டாளி.
தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக...

'நான் vestigial organ' என்று எந்த உறுப்பிலும் எழுதி ஒட்டி இல்லை. நாமாக சிந்தித்து எந்த உறுப்பின் பயனாவது 'தெரியவில்லை' என்றால், அது பற்றிய விளக்கம் இல்லை என்றால், அந்த அறியாமையாகிய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 'அது தேவை அற்றது' என்று அவசரப்பட்டு அறிவித்து விடுகிறோம். பின்னாளில் உண்மை புரியும்போது அதன் அவசியம் உணரும்போது கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். நம் உடலில் எதுவும் வேஸ்டாக இருக்காது என்பது என் அனுபத்தில் எடுத்த அசைக்க முடியாத முடிவு. அதை எந்த விஞ்ஞானி வந்து சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஓர் உண்மைச்சம்பவம் ஒன்றை ஊருக்கும் உலகுக்கும் உரைக்கிறேன்.

//coccyx எலும்புகள் உள்ளன, இது முக்கியமான சதைகளை இணைக்க கூடியதாக உள்ளது, உட்காரும் போது ஒரு உதவியாகவும் கீழ் விழுந்தாலோ அதிகமாக வலி ஏற்படாதவாறு மனிதனுக்கு தரப்பட்டுள்ளது. இதுவும் மனிதனுக்கு மிகவும் பயன் பட கூடிய ஒரு உறுப்பே.//

என் வாழ்வில் எனக்கு அது நடந்தது...

அந்த பில்டிங்கில் மொட்டை மாடிக்கு கீழிருந்து டேரக்டாய் வலப்பக்கம் படியும், முதல் மாடிக்கு கீழிருந்து இடப்பக்கம் படியும் வைத்து கட்டி இருந்தார்கள். ஒருமுறை மொட்டைமாடியில் இருந்து ரொம்ப வேகமாய் துள்ளிக்குதித்து இறங்கும்போது, முதல் படி வழுக்கிவிட தடால் என முதல் படியின் விளிம்பில் பின் பகுதி பட விழுந்து உடனே அது சருக்கிவிட அடுத்த முப்பது படிகளின் முகனைகளிலும் அதே பின் பகுதியில் (பட்டக்சின் மேல்பகுதி-முதுகெலும்பின் அடிப்பகுதி) அதே இடத்தில் தட் தட் தட் என தொடர்ந்து அடிபட, எல்லா படிகளிலும் இடிவாங்கியபின்னர் கடைசி படியில் நிலைகுலைந்து விழுந்தவுடன்.. உடனே மயக்கமானேன்.

அதற்குப்பிறகு நண்பர்கள் மருத்தவமனைக்கு தூக்கி சென்று பின் இடுப்பில் எக்ஸ் ரே எடுத்ததில் 'நோ பிராக்ச்சர்'. 'காக்சிஸ் உங்களை காப்பாற்றியது' என்றார் டாக்டர். அல்ஹம்துளில்லாஹ். டாக்டர் சொன்னது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. 'அந்த காக்சிஸ் ஒரு ஷாக் அப்சற்பர் போல முப்பது முறை அமுங்கி அமுங்கி எழுந்திருத்து இருக்கிறது. இந்த வலி சரியாக நிறைய மாதம் ஆகும்' என்றார்.

அப்புறம் ஒருவாரம் படுத்த படுக்கை... குப்புற மட்டும்..! உடலை மடிக்காமல் அப்படியே தூக்கி சென்று என்னை காலைக்கடன் முடிக்க வேண்டி டாய்லட்டில் முன்பக்கம் குப்புற படுக்க வைத்து 'முடிந்தது' என்றவுடன் பிரட்டி பின்பக்கம் (எலும்பை அழுத்தாமல் சரியாக பேசினில் பொருந்த) படுக்கவைத்துவிட்டு கதவைமூடி விட 'முடிந்தவுடன்' கைகள் வேலை செய்ததால் டியுப் மூலம் கழுவிக்கொள்வதில் எனக்கு எந்த உதவியும் தேவைப்படவில்லை. அப்புறம் தூக்கி வந்து விடுவர்... என் பெற்றோர்கள். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தேன்.

ஒருவாரம் கழித்து நடக்க முடிந்தது. நானாகவே படுக்க முடிந்தது. எழ வேண்டினால் கம்பம் போல தூக்கி நேராக நிமித்தி விட மட்டும் பெற்றோர் உதவி வேண்டி இருந்தது.

அடுத்த வாரம் கொஞ்சம் வளைந்தேன்.

பேருந்தில் அமர்ந்து செல்ல ஆறுமாதம் ஆனது. அதுவரை சீட் காலி என்றாலும் நிற்க மட்டும்தான் செய்வேன். வகுப்பிலும் பெரும்பாலும் நிற்பேன்.

படிப்படியாக உட்கார்ந்து...மீண்டும் சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்க ஒருவருடம் ஆனது. சுத்தமாக வலி மறக்க ஒன்றரை வருடம் ஆனது.

இந்நாட்களில் என்னக்காப்பாற்றியதாக சொன்ன அந்த 'காக்ஸிஸ்' பற்றி படித்தேன். அந்த ரஷ்யன் ஆதர், 'அது ஒரு தேவை இல்லாத எலும்பு' என்று எழுதி இருந்தார். சே.. என்று வேறு சில புத்தகங்கள் பார்க்க இந்தியன் ஆதர்களும் அப்படியே எழுதி இருந்தனர்.

புத்தகத்தை எடுத்துக்கொண்டு டாக்டரை சந்தித்தேன். கேட்டேன். 'எழுதியவருக்கு அங்கே அடிபட விழுந்து அனுபமில்லை போல' என்றார். 'அது இல்லையேல் நீங்கள் கோமவில்தான் என்றென்றும் இருந்திருப்பீர்கள்' என்றார்...! ஏனென்றால் ஸ்பைனல் கார்ட், காக்சிசில் கனெக்ட் ஆகலியாம். அதற்கு மேல் உள்ள முதுகுஎலும்புத்துண்டுகளுடன் தான் கனெக்ட் ஆகி உள்ளதாம். ஒருவேளை காக்சிஸ் இல்லை என்றால் முதுகெலும்பில் அடிபட்டு மொத்த நெர்வும் டிஸ்-அர்ர்ரே ஆகி கட்டாகி காலம் முழுதும் கோமாவில்தான் பிறந்த குழந்தை போலகூட அல்லாமல்.. அழாமல், பசி, தொடு உணர்ச்சி இல்லாமல் கிடந்திருப்பேனாம்..!

காக்சிஸ் - சுபஹால்லாஹ்.

மனிதனுக்கு ஒரு இன்றியமையாத எலும்பு.

இப்போது சொல்லுங்கள் யாராவது காக்சிஸ் பற்றி தேவையற்றது என்று..!

Unknown said...

நண்பர் திரு ஆஷிக்,

பரிணாமவாதிகளுக்கும் அனைத்து விசயங்களும் தெரியும், இருப்பினும் அவர்களுடைய கொள்கையை உயிர்பிக்க எடுத்து கொள்ளும் முயற்சிகள் தான் இவைகள்.

Anna said...

I am going to try and post a series of posts on evolution as I believe it might help people understand it a bit better. I'll try to get to this soon. I've put up the first post on my blog.
http://annatheanalyst.blogspot.com/2011/01/blog-post.html
Thank you for giving me the incentive to start writing.

Unknown said...

thank you for your comment and i am appreciating your interest in putting new posts on evolution. i hope i will be giving suitable explanation on your topic.

Post a Comment