Thursday, August 05, 2010

பரிணாமம் - பாக்டீரியா (பகுதி-4)

அபியோ ஜெனிசிஸ் (Abiogenesis), ஒரு உயிர் இந்த பூமியில் எப்படி உருவானது என்பதை பற்றி விளக்கக்கூடிய ஒரு பாடம். உயிரினம் எப்படி உருவானது என்பதை பற்றிய தெளிவு இல்லை என்றாலும் அனுமானங்களை வைத்து எப்படி விருவாகி இருக்கும் என்ற கொள்கையை மனிதன் உருவாக்கினான்.

பூமி உருவாகி பல லட்சகணக்கான வருடங்களுக்கு பிறகு ஒரு மின்னல் வெட்டியது அந்த மின்னலிளிருந்துதான் இந்த உயிரினம் உருவாக (உட்காரு இல்லாத ஒரு அமினோ அமிலம் மட்டும் கொண்ட உயிரினம்) ஆரம்பித்தது. பிறகு ஒவ்வொரு உயிரினமாக மாறி மனிதனாகிவிட்டது.


அது ஒரு செல் உயிரினமான உட்காரு இல்லாத (Single cell prokaryotes) பாக்டீரியாவாக இருக்கலாம் என்று கூறினாலும் இது வரையில் யாரிடமும சரியான விளக்கம் இல்லை, உயிர்களின் தோற்றத்தை பற்றி பல கொள்கைகள் முன்வைக்கபட்டலும் அதில் Iyon Sulfar World Theory – Metabolism without genetics (மரபியல் இல்லாத வளர்சிதைமாற்றம் கொண்ட) யும் RNA Life Forms Theory யும் தான் குருப்பிடத்தக்கவை.

எந்த கொள்கையாக இருந்தாலும் வளர்சிதைமாற்றம் (Metabolism) செல் நகலேடுதுத்தல் (Cell Replication) என்ற இரண்டு நிகழ்வுகளை ஏற்றுக்கொள்கின்றன,.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முன்பு வரை அரிஸ்டாட்டில் இயற்றிய ஸ்பாண்டனஸ் கொள்கையான (Spontaneous generation) ஒரு உயிர் என்பது ஒரு உயிரில்லாத பொருளிருந்து வந்ததாக நம்பப்பட்டது, அப்பொழுது அதுதான் அறிவியலாகவும் இருந்தது.

மரபணு இல்லாமல் எந்த உயிரினமும் இல்லை அதுபோல அமினோ அமிலம் (Amino Acids) இல்லாமலும் எந்த உயிரினமும் இல்லை எனலாம், மரபணு இருக்கிறது எனில் அவைகளுக்கு மரபுகோடன் இருந்திருக்க கூடும், அதில் அந்த உயிரினம் பற்றிய முழுமையான செய்திகள் அடங்கி இருக்கும். அந்த செய்திகள் எப்படி வந்தது யார்கொடுத்தது என்பதை கவனிக்காமலே தங்களுடைய கொள்கைகளில் முழுமை இருப்பதாக நம்பினர்.


மின்னல் வெட்டி ஒரு சாதாரண கல் வந்தது என்றாலே ஏற்றுக்கொள்ளமுடியாது, மின்னல் வெட்டி இந்த உயிர் தோன்றியது என்று எப்படி ஏற்றுகொள்ள முடியும், இதுவரையில் கல் கூட வந்தது இல்லை அப்படியே ஒரு பொருள் வந்தது என்று ஒரு வாதத்திற்கு வைத்துகொன்டாலும் அதில் DNA எப்படி வந்தது, RNA எப்படி வந்தது, அமினோ அமிலங்கள் எப்படி வந்தன? அந்த ஒரு செல் உயிரிக்கு அந்த உயிரினத்தின் மரபு கொடுத்தது யார்??

இவை அனைத்தும் சேர்ந்து எப்படியோ உருவாகியது என்று மறுபடியும் ஒரு வாதத்திற்கு வைத்துகொண்டாலும். அவைகள் நகல் எடுக்கும் திறமையோடும் வளர்சிதை மாற்ற அமைப்போடும் உருவாகி இருக்க முடியாது. அப்படி நகல் எடுக்கும் திறமையோடு உருவாகியது என்றால் வேறு எதோ அந்த ஒரு சக்தி அந்த உயிரினத்தை உருவாக்கியது என்பதை நம்ப வேண்டும்.

இல்லை மரபணு பிரதி எடுத்தல் என்ற அமைப்போடு அது உருவாகவில்லை என்று கூருவீர்களானால், அதற்கு மரபு பிரதி எடுத்தலை யார் கற்று கொடுத்தது, மனிதனை முதலில் ஒரு உதாரணமாக எடுத்துகொள்ளுங்கள், ஆறறிவு படைத்த நமக்கு ஒரு செல் வலர வேண்டும் என்று நீங்கள் நினைத்தா வளருகிறது, இல்லவே இல்லை பசி உங்களை சாப்பிட வைக்கிறது செல் வளருகிறது.

அப்படி அந்த உயிருக்கும் பசி எடுத்திருக்கும் வளர்ந்திருக்கும் என்றால் அவை எப்படி வளர்ந்திருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். நகல் எடுக்கும் போது அந்த செல் எப்படி இருக்கிறதோ அப்படியே நகல் எடுக்கும், அந்த ஒரு செல் போலவே அனைத்து செல்களும் இருந்திருக்கும், முழு வடிவம் என்பது ஒரு உருண்டை வடிவத்திலோ அல்ல வடிவம் இல்லாமலோ இருந்திருக்கும். கைகால், மூக்கு, வாய், இனப்பெருக்க உறுப்பு வைத்து எடுக்காது.

இலட்சகணக்கான வருடத்தில் இவைகள் வந்தன என்பதை எடுத்துகொண்டாலும், ஒவ்வொரு உயிரினதிற்கும் ஒரு ஆயுட்காலம் உண்டு. அப்படி அந்த உயிரினத்திற்கும் ஒரு ஆயுட்காலம் இருந்திருக்கும். முதலில் செல்கள் நகலெடுக்க நினைப்பதற்கு முன்னரே அவைகள் இறந்திருக்கும்.

ஒவ்வொரு முறையும் மின்னல் வெட்டி ஒரு உயிர் உருவாகும் என்றாலும் கூட அதுவும் முதலில் தோன்றிய உயிர் போலவே மரபு பிரதி எடுத்தல், உணவை தேடி கொள்ளுதல் போன்ற குணம் வருவதற்கு முன்னரே அது இறந்திருக்கும். அவைகள் வாழ்வை தொடர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை.

இவைகளை எல்லாம் விட சுகம், சோகம், காமம், நினைவு போன்ற உணர்வுகளை யார் ஏற்படுத்தியது, ஆண் பெண் என்ற அமைப்பு எதற்காக ஏற்படுத்தி கொள்ள வேண்டும். உயிரினங்கள் எப்படி வந்தது என்று தெரியாமலே உயிரினங்களை ஒரு செல் அளவுக்கு சுருக்கி அதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டனர், ஒரு செல் உயிரினம் அதன் முழு மரபியலோடு தானாக உருவானது என்று நம்புகிறீர் எனில் மனிதன் ஏன் திடிரென உருவாக கூடாது? மற்ற விலங்குகள் ஏன் திடிரென உருவாக கூடாது?


திடிரென மனிதன் வந்தான் என்று ஏற்றாலும் அல்ல திடிரென ஒரு செல் உயிரி வந்தது என்று ஏற்றாலும், இவை அனைத்தையும் ஏற்படுத்தியது ஒரு புத்திசாலித்தனமான ஒரு சக்தி என்பதை விளங்கியே ஆகவேண்டும்.

Post Comment

21 Comments:

வால்பையன் said...

புத்திசாலிதனமான அந்த சக்தி ஏன் தற்செயலாக இருக்கக்கூடாது!?

Unknown said...

தற்செயலாக இருக்கும் எனில் அது எப்படி புத்திசாலியாக இருக்கும்.

Aashiq Ahamed said...

அன்பு சகோதரர் கார்பன் கூட்டாளி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்...

------------------------------
//மின்னல் வெட்டி ஒரு சாதாரண கல் வந்தது என்றாலே ஏற்றுக்கொள்ளமுடியாது, மின்னல் வெட்டி இந்த உயிர் தோன்றியது என்று எப்படி ஏற்றுகொள்ள முடியும், இதுவரையில் கல் கூட வந்தது இல்லை அப்படியே ஒரு பொருள் வந்தது என்று ஒரு வாதத்திற்கு வைத்துகொன்டாலும் அதில் DNA எப்படி வந்தது, RNA எப்படி வந்தது, அமினோ அமிலங்கள் எப்படி வந்தன? அந்த ஒரு செல் உயிரிக்கு அந்த உயிரினத்தின் மரபு கொடுத்தது யார்??//
--------------------------------------

உங்களுடைய இந்த கருத்தைப் பற்றி comment பண்ண நினைத்து எழுதியது தான் என்னுடைய சமீபத்திய பதிவு. compose பண்ணும் போது நீளம் அதிமாக, அதனை ஒரு பதிவாகவே இட்டு விட்டேன்.

உங்களுக்கு இறைவன் மென்மேலும் கல்வி ஞானத்தை தந்தருள்வானாக....ஆமின்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Unknown said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஆசிக் அவர்களே,தொடந்து படியுங்கள்.

பின்னோக்கி said...

மிகவும் சுவாரசியமான தகவல்களுடன், நல்ல தொடர். எப்படி உயிர் தோன்றியிருக்கும் என்பதனை தொடர்ந்து வந்து படிக்க ஆவல். தொடருங்கள்.

Unknown said...

நன்றி திரு பின்னோக்கி அவர்களே.

ஹைதர் அலி said...

கார்பன் கூட்டாளி அவர்களுக்கு நன்றி, உங்களின் பதிவு மிகவும் ஆவசியமானது உங்களின் பனி தொடர வாழ்த்துக்கள்

ஹைதர் அலி said...

நன்றி கார்பன் கூட்டாளி அவர்களே, உங்களுடைய பதிவு மிகவும் அவசியமானது உங்களின் பனி தொடர வாழ்த்துக்கள். அன்புடன் ஹைதர் அலி

THE UFO said...

கார்பன் கூட்டாளி அவர்களே...
மிக நன்றாக எளிமையாக எழுதுகிறீர்கள்.

பரிணாமவியலுக்கு எதிரான கேள்விகள் கணக்கின்றி நிறைய இருக்கின்றன.

எந்த கேள்விகள் கேட்டாலும் பரிணாமவியல் அடிபொடிகள் பதில் சொல்ல மாட்டார்கள். கட்டுரையின் மையப்பொருளுக்கு சம்பந்தாசம்பந்தமில்லாத அர்த்தமற்ற எதிர்கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டு இருப்பார்கள். //புத்திசாலிதனமான அந்த சக்தி ஏன் தற்செயலாக இருக்கக்கூடாது!?//--இப்படி...!

இவர்கள், வேண்டுமென்றே உண்மைகளை விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.

நம் தமிழகத்தில் பரினாமவியலை ஆதரிப்பவர் நாத்திகர்கள் மற்றும் கம்யுநிஸ்டுகள் மட்டுமே. ஏனென்றால் அவர்கள் 'கொள்கைக்கு' பரிணாமவியல் கட்டுக்கதைதான் ஆக்சிஜன். அது இல்லையெனில் அவர்கள் கொள்கை செத்து விடும்.
எனவே, அதை மானமே போனாலும் கொள்கைக்காக விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

ஆனால், அறிவியல்-உயிரியல் படித்த இறைநம்பிக்கை கொண்ட பகுத்தறிவாளர்கள், பரினாமவியலை கண்டு கொள்வதும் இல்லை. நம்புவதும் இல்லை. அது அறிவியல்பூர்வமற்ற-ஆதாரமற்ற கட்டுக்கதை என்பதை நன்கு விளங்கிக்கொண்டவர்கள்.

இருந்தாலும் உங்கள் முயற்சியினை தொடருங்கள்.

வாழ்த்துக்கள்.

Unknown said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஹைதர் அலி அவர்களே. தொடர்ந்து படியுங்கள்.

Unknown said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு UFO,

//பரிணாமவியலுக்கு எதிரான கேள்விகள் கணக்கின்றி நிறைய இருக்கின்றன.//

ஒவ்வொரு உயிரினத்திலும் பரிணாமத்தை பொய் படுத்த நிறைய சமாச்சாரங்கள் இருக்கின்றன. அவைகளை எழுத வேண்டுமெனில் 1.7 மில்லியன் பதிவு எழுதலாம்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் கார்பன் கூட்டாளி,
அல்ஹம்துலில்லாஹ். மிகவும் டெக்னிக்கலாக அதே சமயம் நன்கு விளங்கும் வண்ணம் பரிணாமவியலை பற்றி எழுதுகின்றீர்கள். என்னுடைய சிறு யோசனை என்னவெனில் உங்களுடைய ஒவ்வொரு பதிவின் தலைப்பின் பக்கத்தில் (பகுதி -1, பகுதி - 2) என வரிசைப் படுத்தினால் பின்னாளில் எடுத்து படிக்கவும் வசதியாக இருக்கும்.

சகோதரர் UFO சொன்னது போல பரிணாமத்தைப் பற்றி கேள்விகள் வகை தொகையின்றி விரவியிருக்கின்றன. ஆனால் பரிணாமவியல் ஆதரவு குழாம் தெளிவான பதிலை ஒரு போதும் சொல்லப்போவதில்லை. வெற்று நம்பிக்கையாளர்களான அவர்கள் என்று தான் உண்மையான அறிவியலை அறிந்து கொள்ள போகின்றார்களோ?

பி.ஏ.ஷேக் தாவூத் said...

பரினாமவியலைப் பற்றி அறிந்து கொள்ள துறை சார்ந்தவர்கள் என்று சிலரின் சுட்டிகளை பரிணாமவியல் ஆதரவாளர்கள் கொடுத்தனர். அந்த சுட்டியில் சென்று பார்த்தால் அந்த "துறை????" வல்லுனரோ 1950 - களின் மத்தியில் வந்த பரிணாமவியல் புத்தகங்களை மொழிப் பெயர்த்து கொண்டிருக்கின்றார். ஐயோ பாவம் அவருக்கு யாராவது சொல்லுங்கள் அதற்கு பிறகு பரிணாமவியல் நிரூபணங்கள் என்று சொல்லபடுபவை பக்கா பிராடுத்தனமானவை என்று பல அறிவியலாளர்கள் நிரூபித்திருக்கின்றனர் என்று. இது தெரியாமல் அவர் பழைய பரிணாமவியல் ஆதாரங்களை முன்வைத்து பரிணாமத்தை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார் !!!

Unknown said...

நன்றி திரு ஷேக் தாவூத் அவர்களே, உங்களுடைய யோசனையை கவனத்தில் வைக்கிறேன்.

G u l a m said...

சகோதரர்.,அவர்களுக்கு இது நல்ல மற்றும் தேவையான பதிவு., // உட்காரு இல்லாத // -என்ற வாசகம் இரண்டாம் பத்தியில் இருமுறை வந்துள்ளது.அவ்வாசகம் அநேகமாக "உட்கரு இல்லாத" என வர வேண்டும் என நினைக்கிறேன்.... சரிப்பார்க்கவும்.

Unknown said...

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி.

தமிழன்-கோபி said...

மிகவும் சுவாரசியமாக உள்ளது....குழு சேரும் பட்டையை உங்கள் ப்ளோகில் சேருங்கள்...

Unknown said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு தமிழன் கோபி. சேர்க்கிறேன்.

shamura said...

புத்திசாலிதனமான அந்த சக்தி ஏன் தற்செயலாக இருக்கக்கூடாது!?
உங்களுடைய கேள்வி அறிவை இன்னும் அதிக படித்திக் கொள்ளவும்
இன்ஷா அல்லா இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
இப்படிக்கு உங்கள் சகோதரன்

shamura said...

வால்பையன்...

புத்திசாலிதனமான அந்த சக்தி ஏன் தற்செயலாக இருக்கக்கூடாது!?

உங்களுடைய இந்த கேள்வி அறிவை இன்னும் அதிக படித்திக் கொள்ளவும்
இன்ஷா அல்லா இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
இப்படிக்கு உங்கள் சகோதரன்

வால்பையன் said...

தற்செயலாக இருக்கும் எனில் அது எப்படி புத்திசாலியாக இருக்கும்.//

புத்திசாலியா இருக்குறதுக்கு ஏதும் வரைமுறை இருக்கா என்ன?

Post a Comment