Thursday, August 12, 2010

பூமி - ஓர் ஆய்வு

அண்டம் (Universe) 93 பில்லியன் (~) ஒளி ஆண்டுகள் விட்டம் கொண்ட பால்வழிதிறள் (Milky way) விண்மீன்திரள் (Galaxy) என அனைத்தையும் உள்ளடக்கியது.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு கோள்களும் ஒரு பாதையை அமைத்து கொண்டு சுற்றுகின்றன. பூமி தன்னை தானே சுற்றி சூரியனையும் சுற்றுகிறது, சூரியன் விண்மீன் (Galaxy) மண்டலத்தை 225 (~) மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது, அந்த விண்மீன் மண்டலம் அண்ட மையத்தை 550km/s என்ற வேகத்தில் சுற்றிவருகிறது, அந்த அண்ட மையம் எதை சுற்றுகிறது என்று கண்டுபிடிக்க படவில்லை.


இவைகள் எல்லாம் எதற்காக சுற்றுகின்றன? உலகம் இயங்குவதற்காக, இப்படி சுற்றவில்லை என்றால் உயிரினமே இல்லை எனலாம். இவைகள் தான் பூமியில் உயிர்கள் வாழ முதற்காரணம்.

உயிர்கள் வாழ அத்தியாவசியமான தேவைகள் காற்று, நீர் எங்கோ அறிவியல் பாடத்தில் படித்த ஞாபகம் இவைகள் மட்டும் இருந்தால் உயிர்கள் வாழ்ந்துவிடுமா என்றால் இல்லை, (தற்போதைய கூற்றுப்படி) பூமி சூரியனிலிருந்து உள்ள தூரம், பூமி சுழலும் வேகம், புவியின் ஆச்சு சாய்வு, ஈர்ப்பு விசை, தட்ப வெப்ப நிலை, வேதியல் மூலக்கூறு உருவாகும் தன்மை, வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான சக்தி (வெப்ப ஆற்றல் விதிப்படி) ஆகியவை உயிர்கள் வாழ்வதற்கு அத்தியாவசியமாக உள்ளன. இவை அனைத்தும் மற்ற கிரகங்களில் இருக்கின்றனவா என்கிற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது என்றாலும் இதுவரையில் எந்த ஒரு முழுமையான கிரகமும் நமது குடும்பத்தில் மட்டும் அல்லாமல் அண்டம் முழுவதும் அப்படி இருப்பதாக அறிகுறி கூட இல்லை.

பூமியும் மற்ற கிரகங்களை போன்ற ஒரு கிரகமே அதுவும் சூரியனிலிருந்து தான் பிரிந்து வந்தது என்று கூறப்படுகிறது, அதுவும் மற்ற கிரகங்களை போன்று சூரியனை சுற்றுகிறது, சுற்றுவதற்கு ஈர்ப்பு விசை காரணமாக இருந்தாலும், அந்த ஈர்ப்பு விசையால் மோதாமல் சரியான ஈர்ப்பு விசையில் சுற்றுகின்றன. எப்படி?

சுற்று பாதையை அவைகளுக்கு அமைத்து கொடுத்தது யார்? இந்த ஒழுங்கமைப்பை எங்கிருந்து கற்றன. உலகம் இயங்கவேண்டும் என்ற நிலையை உருவாகியது யார்?

இவ்வுலகில் எத்தனையோ லட்சக்கணக்கான கிரகங்கள் இருந்தாலும் அதில் சூரியனும் சந்திரனும் ஒளி தருவது மட்டும் அல்லாமல் பல்வேறு வழிகளில் நம்முடைய வாழ்க்கைக்கு முதல் ஆதாரமாக இருக்கிறது, எப்படியெனில் சூரியன் ஒளி தருவதனாலேயே உயிரினங்கள் சக்தியை பெற்றி வாழ்க்கை நடத்துகின்றன. இந்த சூரியன் இல்லையெனில் நமக்கு வாழ்வே இல்லை எனலாம், எதற்காக சூரியன் நமக்கு ஒளி தரவேண்டும்? சந்திரனை எடுத்துக்கொள்வோம். சந்திரன் சூரியனின் ஒளியை கிரகித்து அதை இரவில் நமக்கு பிறதி பலிக்கிறது. சந்திரன் எதற்காக சூரிய ஒளியை கிரகித்து இரவில் நமக்கு ஒளி தரவேண்டும். சூரியனும் சந்திரனும் பூமிக்காகவே இயங்குகின்றன, ஒளியையும் தந்து முறையே நேரத்தையும் நாள் கணக்கையும் நமக்கு தருகின்றது.


சூரியனிடமிருந்து பலவகையான கதிர்கள் வெளிவருகின்றன. உதாரணமாக காம கதிர்கள், எக்ஸ் கதிர்கள் போன்றவை, அதில் அதிக அலைநீளம் கொண்ட புறஊதா கதிர்கள் நமக்கு ஆபத்தானவை, அந்த புற ஊதா (UV – Ultra Violet) கதிர்களிடமிருந்து நமக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பது ஓசோன் (Ozone) என்ற வாயு, இது பூமியின் மேற்பரப்பில் 15 முதல் 45 கிமீ உயரத்தில் வளிமண்டலத்தின் அதிகமான பகுதியை உள்ளடக்கி உள்ளது. ஓசோன் படலம் இல்லையெனில் இவ்வுலகில் எந்த உயிரும் வாழவே முடியாது. இவைகள் எதற்காக நம்மை பாதுகாக்க வேண்டும்? அனைத்து உயிர்களும் வாழ வேண்டும் என்று யார் இதை செய்தது?

இதுமாட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்கான வால் நட்சத்திரங்களும் (Comet) எரி கற்களும் (Asteroids) பூமியை நோக்கி வருகின்றன, அவைகள் முழு கற்களாக வந்தால் பூமிக்கும் உயிர்களுக்கும் சேதமாகும், அந்த எரிகற்கள் பூமியின் வெளிபகுதியிலேயே எரிக்கப்பட்டு, தூள் தூளாக விழுகின்றன. எதற்காக அவைகள் எரிக்கப்பட்டு உயிர்கள் காக்க பட வேண்டும்?

பூமி தனது அச்சில் 23.4° செங்குத்தாக சாய்ந்து இருப்பது அனைவரும் அறிந்தது, இதனால் பூமியில் விழும் சூரிய ஒளி வெவ்வேறு இடங்களில் வேறுபடுகின்றது. இதுவே தட்பவெப்ப நிலையை உண்டாக்குகின்றன. சூரியனை நோக்கி இருக்கும் போது கோடைகாலமும் விலகி இருக்கும் போது குளிர்காலமும் ஏற்படுகின்றது. இந்த ஆச்சு சாய்வை நிலைபடுத்துவதில் சந்திரன் முக்கிய பங்குவகிக்கிறது.

சந்திரனின் வெப்பம் அதிகம், இது உயிர்கள் வாழ ஏற்ற ஒரு கிரகம் அல்ல, அது போல வியாழன் என்ற கிரகத்தில் பூமியை விட 350 மடங்கு ஈர்ப்பு விசை அதிகம். அதனாலயே தினந்தோறும் விண்கற்களும் வால் நட்சத்திரங்களும் வியாழனில் விழுந்துகொண்டிறுக்கின்றன. 18 ம் நூற்றாண்டில் தொடங்கிய ஒரு பெரும்புயல் இன்றளவும் வியாழன் கிரகத்தில் வீசிகொண்டே இருக்கின்றனவாம். இப்படி மற்ற அனைத்து கிரகங்களை பார்த்தாலும் ஈர்ப்பு விசை அதிகம், மிக குறைவு, காற்று இல்லை, தண்ணீர் இல்லை என்று உயிர் வாழ்க்கைக்கு தேவையான எதாவது ஒரு குறைபாடு இருக்கும். ஆனால் பூமிக்கு மட்டும் இந்த சம நிலையை ஏற்படுத்தியது யார்??


பூமிக்கு தாயான சூரியன் பூமிக்கு பிள்ளையான சந்திரன் இரண்டிலும் மனிதன் வாழ தேவையான எதுவும் இல்லாத போது இடைப்பட்ட பூமிக்கு மட்டும் எங்கிருந்து வந்தது அந்த சக்தி? இதுவும் மற்ற கிரகங்களை போன்றே சுற்றி கொண்டுருக்கிறது. பூமிக்கு மட்டும் எப்படி உயிர் வாழ அத்தியாவசிய தேவைகளான பொருள்கள் உருவாகின? பூமிக்கு உருவானது எனில் அனைத்து கிரகங்களுக்கும் அல்லவா உருவாகி இருக்க வேண்டும்.

தேவைகேற்ப ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக மாறுகிறது (பரிணாமவாதிகள் கருத்துப்படி) என்று கூறும்போது அவைகள் மற்ற கிரகங்களின் சுற்றுசூழலுக்கு ஏற்ப உருவாகி இருக்க வேண்டும் அல்லவா? ஏன் உருவாக வில்லை?

மிதமான தட்பவெப்பம், கடல் அலைகள், மழை, பனிக்கட்டி என ஏன் அனைத்தும் பூமிக்கே சரியாக நிகழ வேண்டும்?

இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன, பிரபஞ்சம் தானாக உருவானதா! இல்லை திட்டமிட்டு வடிவமைக்க பட்டதா?

Post Comment

23 Comments:

வால்பையன் said...

//சூரியனும் சந்திரனும் ஒளி தருவது மட்டும் அல்லாமல்//


ஆமாம்னே சந்திரன் சும்மா பளீர்னு ஒளி தருதுண்ணே! மத்த சந்திரன்ல இருந்து பூமிய பார்த்தா ஒரே இருட்டா இருக்குதுண்ணே! கரிகட்டா சொன்னிங்க!

word verification எடுத்துடிங்களா?

வால்பையன் said...

இப்படி விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சதையெல்லாம் யார் செய்தது யார் செய்ததுன்னு கேட்டுகிட்டே இருங்க, சொந்தமா அறிவை மட்டும் வளர்த்துகாதிங்க! ரொம்ப வருசத்துக்கு நல்லா இருப்பிங்க!

ஹைதர் அலி said...

வால் பையன்,///இப்படி விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சதையெல்லாம் யார் செய்தது யார் செய்ததுன்னு கேட்டுகிட்டே இருங்க, சொந்தமா அறிவை மட்டும் வளர்த்துகாதிங்க///// இப்படித்தான் பல நூட்பமான படைப்புகளை தற்செயலாய் உருவாச்சுன்னு சொல்லிகிட்டு கேடங்க உருப்புட்ட மாதிரி தான்

கார்பன் கூட்டாளி said...

நண்பர் வால் பையன்,

//ஆமாம்னே சந்திரன் சும்மா பளீர்னு ஒளி தருதுண்ணே! மத்த சந்திரன்ல இருந்து பூமிய பார்த்தா ஒரே இருட்டா இருக்குதுண்ணே! கரிகட்டா சொன்னிங்க!//

பூமி மாத்திரம் அல்ல மற்ற கிரகங்களும் ஒளியை பிரதி பலிக்கின்றன, சூரியனும் சந்திரனும் பூமிக்காகவே இயங்குகின்றன என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா? அப்படி இருப்பின் அவைகளால் பூமிக்கு இருக்கும் பயன்களை விட வேறு எந்த கிரகத்துக்கு பயன் அதிகம் என்பதை கூறுங்கள்.

//word verification எடுத்துடிங்களா? //

தற்போது தான் எடுத்தேன் கருத்திடுவதில் பிழைகள் வருகிறதா?

//இப்படி விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சதையெல்லாம் யார் செய்தது யார் செய்ததுன்னு கேட்டுகிட்டே இருங்க, சொந்தமா அறிவை மட்டும் வளர்த்துகாதிங்க! ரொம்ப வருசத்துக்கு நல்லா இருப்பிங்க! //

தாங்கள் வானில் புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்ததாக அறிந்தேன், அதை பற்றி சற்று விளக்குங்களேன்.

U F O said...
This comment has been removed by a blog administrator.
UFO said...

அன்புள்ள கார்பன் கூட்டாளி...

மிகச்சரியான தலைப்புகளை தேர்ந்து எடுத்து வாசகர்களை நேரான பாதையில் கொண்டு செல்கிறீர்கள். மிகச்சமீபத்தில் வேறொரு பிளாகில் ஏற்பட்ட மனக்கசப்பால் இனி 'எந்த பதிவரின் இடுகைக்கும் பின்நூட்டமிட வேண்டாம்' என்று வெறுத்துப்போய் இருந்த நிலையில் இந்த இடுகையை இன்று படித்து விட்டு சும்மா செல்ல முடியவில்லை சகோதரா.... பாராட்டுக்கள்.

அதோடு என் பழைய நியாபகங்களையும் கிளறி விட்டு விட்டீர்கள். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பதிவர் 'நான் ஏன் மதம் மாறினேன்' என்று தொடராக எழுதினார்...(அவர் ஒன்றும் மதமெல்லாம் மாறவில்லை... அவரின் கிருத்துவ மதத்திலிருந்து அது பிடிக்காமல் வெளியேறி நாத்திகரானார்...தட்ஸ் ஆல்.) அப்போது அவர் சும்மா செல்லாமல் அனைத்துமதங்களையும் சாடிவிட்டு கிருத்துவத்திலிருந்து வெளியேறினார். அப்போது, "இஸ்லாத்தில் முதல் பெண்ணுக்கு பெயரே இல்லை..., அந்த அளவுக்கு ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் கொண்ட மதம் அது" என்று இஸ்லாம் பற்றி அவர் சொன்னதாக இன்னும் நன்றாக நியாபகம் இருக்கிறது. அவரின் தேடல், அறிதல், புரிதல் அவ்வளவுதான்.

இதைப்படித்த நான்,
இப்பிரபஞ்சம்,
அதில் வாழுமிடமாக ஒரே ஒரு பூமி,
அதில் உயிர்கள்,
அதனுள் மனிதன் மட்டுமே எல்லாவற்றையும்விட உயர்வாக...
அதன் அனாடமி&பிசியாலாஜி அதிசயங்கள்...

(to be continued)

UFO said...

(continues...)

....என எல்லாமே தான்தோன்றிகளாக இருக்க கொஞ்சம்கூட வாய்ப்பே இல்லாமல் சொல்லிவைத்ததுபோல கணக்கச்சிதமாக உருவாக்கப்பட்ட அதிசயமும் மற்றும் இவற்றின் அனைத்து இயக்கங்களையும் யாரும் கட்டுப்படுத்தாமலேயே தானாக இயங்கும் அதிசயங்களையும் வைத்து என்னுள் எழுந்த பற்பல கேள்விகளையும் தொகுத்து எழுதி, வேர்டுபிரஸ்ஸில் ஒரு புது தளம் ஆரம்பித்து....

"நான் ஏன் மதம் மாறவில்லை"

---என்று அவர் மாதிரியே ஒரு தொடர் பதிவு போட எண்ணி அதற்கான மட்டீரியல் அனைத்தையும் சேகரித்து வைத்திருந்த வேளையில்... வந்தது என் வாழ்விலும் ஒரு தலைகீழ் திருப்பம்... சவுதியில் நட்டநடு பாலைவனத்தில் பணிநிமித்தம் அடுத்த மூன்றாண்டுகள் இணைய தொடர்பற்று... பின்னர் திருமணம் ஆகி... பல பொறுப்புகள் வந்து... அப்புறம் எல்லாத்தையும் தாண்டி... மீண்டு(ம்) தமிழ் பதிவுலகம் வந்து பார்த்தால்... அப்போது எழுதிய பெரும்பாலோரை காணவில்லை... தமிழ்மணம், தமிழிஸ்... கணக்கிலடங்கா புதிய பிளாக்குகள்... என்று பெருத்த மாற்றங்கள்... பெரும்பாலும் சினிமா, அரசியல், சுயஅனுபவங்களை பகிர்தல், மொக்கைகள் என்று இருக்க... நான் அப்படியே தேங்கி விட்டேன்....

ஆனால், உங்கள் தளம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்கப்பூர்வமாக முன்னேறுகிறது... பலே..பலே.. சபாஷ். உங்களுள் நான் என்னை பார்க்கிறேன்.

கார்பனுக்கு மட்டுமல்ல... இனி நீங்கள் சகலருக்கும் கூட்டாளி....

மீண்டும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

(பின் குறிப்பு: திரட்டிகளில் இணைக்கலாமே... பல புதிய வாசகர்கள் பார்வையிலும் உங்கள் இடுகை படுமே... அவை, உங்கள் கருத்துக்கள் பலரை சென்று சேர உதவும்.)

UFO said...

இந்த இடுகைக்கு பொருத்தமாக தோன்றுவதால் என்னுடைய மேலும் சில கேள்விகள்...
(அப்போது பதிவிட நினைத்து வைதிருந்தவைதான்... பெரும்பாலும் மறந்து விட்டேன் சில இன்னும் நியாபகத்தில் இருக்கின்றன... அவை மட்டும் பதிவிற்கு தொடர்பானதாகையால்...)

----நம் பூமியின் மேற்புறம் பிளேட் டேக்டாநிக்ஸ் என்ற அமைப்பில் பல அடுக்கடுக்கான தட்டுகளால் ஆக்கப்பெற்றது. அவை பூமியின் உட்காருவான மேக்மாவின் மீது மிதந்து கொண்டும் ஒன்று மற்றொன்றின்மேல் உரசினாலும் ஒன்றின்மேல் ஒன்று ஏறிவிடுமேயானாலும் மேற்புரத்தகடு அப்படியே இருக்கும் அதேநேரம் உட்புரத்தகடு தானாகவே கீழே சென்று விடும் இயல்பு கொண்டது. இப்புவியின் மேல் நாம் வாழ இது ரொம்ப முக்கியம்.

சமுத்திர நுண் உயிர்கள் செத்துவிட்டால் - கார்பன் அளவில் அதிகமாக இருக்கும் அவை பூமிக்குள்ளே இழுத்து செல்லப்பட்டுவிடும். இது சுற்றுப்புற கார்பன் சமநிலையை காக்கிறது. மேலும், வீனசில் ஏற்பட்டது போல கிரீன் ஹவுஸ் எபெக்ட் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. இந்த டெக்டானிக் தகடுகள் தான் இந்த கார்பன் சுழற்சிக்கு காரணம். அவை இல்லையேல் இப்பூமி கார்பன் அளவுகூடி வெப்பத்தால் கொதிக்க ஆரம்பித்துவிடும்.
இதெல்லாம் தானாக தோன்றியிருக்குமா?

Please, delete this (13 ஆகஸ்ட், 2010 11:50) comment as it is repeated in detail in two parts next.

UFO said...

நம் பூமியின் மத்தியில் இரும்புச்செறிவு அதிகம் என்பதால் அதன் உட்புற அடர்த்தியும் அதன் இயக்கமும் பூமியை சுற்றி காந்தப்புலனை தோற்றுவிட்டு பூமியை ஒரு பெரிய காந்தம் போல ஆக்கி இருக்கிறது. அதன் மேக்னேடிக் பீல்ட் பூமியின் பரப்பிலிருந்து பல ஆயிரக்கானக்கான கிலோ மீட்டர்கள் வரை(மேக்னேடோஸ்பியர்)பரவி இருக்கும். இது கெட்ட சோலார் விண்டிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்களை சிதறடித்து பூமியை பஸ்பம் ஆவதிலிருந்து காக்கிறது.

பூமியில் உயிரினம் வாழ முக்கியமான விஷயம் பூமிக்கும் சூரியனுக்கும் இருக்கும் மிகச்சரியான தூரம். இது கூடவோ குறைச்சலோ ஆனால் முடிந்தது கதை.

அப்புறம் பூமிக்கு பக்கத்தில் இருக்கும் அதிக ஈர்ப்புசக்தி கொண்ட பெரிய சைஸ் வியாழன் இருப்பதால்... பூமியை தாக்க வரும் அனைத்து வின் கற்களும் பாதை விலகி வியாழனை நோக்கி ஈர்க்கப்பட்டு திரும்பிவிடுகின்றன. பூமி காக்கப்படுகிறது.

----இவையாவுமே தானாகவே தோன்றியிருக்குமா என்று ஐயத்தை அற்படுத்துகிறது.

UFO said...

ஆக்சிஜன்...!

இது பூமியால் உருவாக்கப்படுவதில்லை. இது பூமியில் உள்ள தாவரங்களாலும், கடல் வாழ் தாவரங்களாலும் உருவாக்கப்படுகிறது. எனில், பூமியில் யார் சீனியர்? ஆக்சிஜனா இல்லை தாவரங்களா? சிந்திக்கவேண்டிய கேள்வி. அக்சிஜந்தான் சீனியர். ஆனால், இப்போது உண்டாவதுபோல அப்போது அது தாவரங்கள் இன்றி எப்படி தானாக உண்டாகியிருக்கமுடியும்?

தாவரங்களை இப்பூமியில் இழந்தோம் என்றால் மொத லைஃபும் காலி. நிறைய தாவரங்களை வளர்க்க வேண்டியது நம் அனைவர் மீதும் கட்டாயக்கடமை. இதனால் ஆக்சிஜன் கிடைப்பது மட்டுமின்றி குளோபல் வார்மிங் ஏற்படாதிருக்க இது ஒன்றே உடனடி தீர்வு. இதற்காக உலக அரசுகள் அனைவரும் மக்களை தாவரங்கள் வளர்க்க சட்டமே போடலாம்... தவறில்லை. நம்மால் சீகுலைக்கப்பட்ட பூமியை நாம் தான் சீபடுத்த வேண்டும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் நியாபகம் வருகிறது. முக்கிய குறிப்புகள் எல்லாம் ஊரில் உள்ளன... இணையத்தில் தேடினாலும் கிடைக்கும்... உங்கள் பரிணாமம் தொடர் போலவே இதையும் தொடராக எழுத நிறைய இருக்கிறது கூட்டாளி... தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள்...

இறைநாடினால், மீண்டும் அவ்வப்போது சந்திப்போம்... நிறைய சிந்திப்போம்...

கார்பன் கூட்டாளி said...

இதில் அதிகமான தகவல்கள் நான் அறிந்திராதவை, புதிய தகவல் அளித்தமைக்கு நன்றி திரு UFO.

//இது பூமியால் உருவாக்கப்படுவதில்லை. இது பூமியில் உள்ள தாவரங்களாலும், கடல் வாழ் தாவரங்களாலும் உருவாக்கப்படுகிறது. எனில், பூமியில் யார் சீனியர்? ஆக்சிஜனா இல்லை தாவரங்களா? சிந்திக்கவேண்டிய கேள்வி. //

உயிர்கள் இன பெருக்கம் செய்து சந்ததியை அதிகரிக்கிறது, ஆக்சிஜனும் நீரும் பூமியில் மூன்றில் இரண்டு பங்கு எப்படி வந்தது,முதலில் உருவான நீர் மட்டும் அல்லவா இருந்திருக்க முடியும், தங்களுக்கு பதில் தெரிந்தால் தருமாறு கேட்கிறேன்.

எஸ்.கே said...

நான் எதிர்பார்த்த பிளாக் உங்களுடையது! மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

கார்பன் கூட்டாளி said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு எஸ்.கே, தொடர்ந்து படியுங்கள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் கார்பன் கூட்டாளி,
அல்ஹம்துலில்லாஹ். நிறைய விசயங்களை தெரிந்து கொள்வதற்கு தங்கள் தளம் உதவியாக இருக்கின்றது. சகோதரர் UFO சொன்னது போன்று பல்வேறு திரட்டிகளில் இணைத்தால் பலரும் படிக்க வசதியாக இருக்குமே. ஆனால் இதையெல்லாம் தானாக தோன்றியது என்று ஒற்றை வரியில் நாத்திகர்கள் மறுத்து விட்டு போய்விடுவார்கள் எத்தகைய அறிவியல் நிரூபணங்களை முன்வைக்காமலேயே.

கார்பன் கூட்டாளி said...

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று கூறுயவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை, நடுநிலையோடு படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

அவர்களை சார்ந்தவர்கள் அடுத்து சூப்பர் கம்ப்யூட்டர் எப்படி தானாக உருவாகும் என்பதை பற்றிய "அறிவியல்" ஆராய்ச்சியில் இறங்கி உள்ளனராம்.

//சகோதரர் UFO சொன்னது போன்று பல்வேறு திரட்டிகளில் இணைத்தால் பலரும் படிக்க வசதியாக இருக்குமே.//

இணைத்து வருகிறேன்.

பின்னோக்கி said...

நல்ல பயனுள்ள கட்டுரை. சற்றே தவறவிட்டுவிட்டேன். உங்களின் இடுகையைப் பற்றி இங்கு http://blogintamil.blogspot.com/2010/08/7_15.html எழுதியிருக்கிறேன். நன்றி.

பின்னோக்கி said...

வேர்ட் வெரிவிகேஷனை எடுத்துவிட்டால், எளிதாக பின்னூட்டமிட வசதியாக இருக்கும்.

Anonymous said...

the earth
it's not one and only to life, this truth is hided to most of the humans by your own countries. one day u all will know about us and others in milk way and outer areas.......... . Russia, German, Israel and USA knew about it.

one more- god if he made all,who made him? did he make him self? or he made from big blast?
think well, there is no limit to anything ....

கார்பன் கூட்டாளி said...

Dear Mr. பெயரில்லா.

//it's not one and only to life, this truth is hided to most of the humans by your own countries. one day u all will know about us and others in milk way and outer areas.......... . Russia, German, Israel and USA knew about it. //

You have any link or any proof, how do you know this even so many countries not aware of this issues....

//one more- god if he made all,who made him? did he make him self? or he made from big blast?
think well, there is no limit to anything ....//

anyway you should have to stop in a level. Its human mentality that we are having beginning and end.bcoz its happening everywhere. why you are applying this limitation to god.

How the nature obeying the rules. there is no way of explaining this by the nature.

God has no beginning and end. think out of circle.

Anonymous said...

yes i already out of circle you are inside a imaginary circle called GOD.

U ASKED PROOF OK, SHOW ME THE PROOF OF GOD?


DO YOU KNOW- THE GOD CAME AN IDEA OF HUMAN TO MAKE GOOD BEHAVIORS AND THE GHOST ALSO INVENTED BY SAME HUMAN.IT'S AN IMAGINATION.TO CONTROL US IN A GOOD WAY THAT'S ALL.

SEARCH AND THINK U'LL FIND ANSWER.

கார்பன் கூட்டாளி said...

//yes i already out of circle you are inside a imaginary circle called GOD.//

I am not coming to say a separate god, what athiesm telling as nature, for the same we are telling as GOD, but as per your point nature or God has no sense. but we are telling all the senses coming from the god.

i am in a circle of God, but its not an imaginary, sure you will come to know if you analyse all the religion well.

//U ASKED PROOF OK, SHOW ME THE PROOF OF GOD?//

thats why i am writing so many posts in my blog. Read it carefully and come with the questions.

//DO YOU KNOW- THE GOD CAME AN IDEA OF HUMAN TO MAKE GOOD BEHAVIORS AND THE GHOST ALSO INVENTED BY SAME HUMAN.IT'S AN IMAGINATION.TO CONTROL US IN A GOOD WAY THAT'S ALL. //

I am not agreeing your point, I think the same way i can tell to athiesm. simply telling doesnt make sense. come to prove it as i am trying to do.

//SEARCH AND THINK U'LL FIND ANSWER.//

I am still waiting for the answer of the questions raised in my post.

Anonymous said...

http://prabanjapriyan.blogspot.com/2011/07/blog-post_25.html

this is sample by author like you.but this isn't correct proof for life outer than earth.

'thats why i am writing so many posts in my blog' yes it's all yours and the links also the opinions about god there is no proof this is god or this is his/her properties.

R U AN ISLAMIC?

OK DO YOU BELIEVE GHOST(SAATHAN)
IF IT'S TRUE THERE IS EQUAL POWER LIKE GOD ALSO PRESENT AND WHO CREATE HIM?

when you find solution every thing will be simple.

கார்பன் கூட்டாளி said...

//'thats why i am writing so many posts in my blog' yes it's all yours and the links also the opinions about god there is no proof this is god or this is his/her properties. //

I am coming to your point, even these are all not the properties of god, but the properties of someone, we are saying that someone is god.

You are asking address of the God, i am telling we dont have capability to know him. By his creation only we can find him.

//R U AN ISLAMIC?//

Exactly.

//OK DO YOU BELIEVE GHOST(SAATHAN) //

I am not believe in Ghost, but i believe in saatan.

//IF IT'S TRUE THERE IS EQUAL POWER LIKE GOD ALSO PRESENT AND WHO CREATE HIM? //

where do you get this ideology, As in Islam, no one is equal to god. and satan also created by god.

Post a Comment