Thursday, July 15, 2010

பரிணாமம் தோற்றம் (பகுதி-1)

இப்பதிவு எழுதுவதன் நோக்கம் பரிணாமம் பற்றி பலரும் பல விதமான எண்ணங்களை கொண்டுள்ளனர், அவர்களின் புரிதல்கள் அப்படி இருக்க, அதில் என்னுடையா புரிதல்களையும் நிதர்சனமான உண்மைகளையும் எடுத்து வைப்பது சரி என்ற எண்ணம் கொண்டே இப்பணியில் இறங்குகின்றேன்.

முதலில் பரிணாமம் என்றால் என்ன என்ற சிறிய விளக்கதுடம் துவங்குகிறேன், இவ்வுலகில் உள்ள அணைத்து உயிர்களும் ஒரு செல் உயிரிலிருந்து (common ancestor) உருவாகி படி படியாக வளர்ந்து பலவகையான மாற்றத்திற்குள்ளாகி பல்வேறு உயிர்களாக பிரிந்து தற்போது உள்ள மனிதனில் வந்து நிற்கின்றது, இவைகள் அனைத்தும் நூறு வருடங்களோ அல்ல இருநூறு வருடங்களிளோ நிகழ்ந்தவை அல்ல, பூமி உருவாகி பல லட்சகணக்கான வருடங்களுக்கு பிறகு உருவாகியவை, இம்மனிதணும் எதிர்காலத்தில் வேறு ஒரு உயிரியாக மாறக்கூடும், இதுதான் இக்கதையின் சாராம்சம்.

முதன் முதலாக உயிர் எப்படி தோன்றியது என்பது இவர்களின் கொள்கையில் வருவது இல்லை, மாறாக பூமியில் தண்ணிர் வந்தது, வந்ததும் ஒரு உயிர் தோன்றியது பிறகு அனைத்து உயிர்களும் தோன்றின என்பதே, இவைகளை பற்றி விரிவான புத்தகம் எழுதி உலகம் முழுக்க பெயர் பெற்றவர் தான் சார்லஸ் டார்வின் என்பவர்.

இவரின் இக்கொள்கைகள் மதவாதிகளின் போதனைக்கு எதிராக அமைந்தது, அதனாலேயே முதலில் அதை எதிர்க்க தொடக்கினர். பிறகு இதில் இருக்கும் ஓட்டைகளை தேடி சென்றனர், மதவாதிகள் இக்கொள்கையை ஏற்றுகொள்ளாமலும், சிலர் தங்களுடைய கொள்கையை விட்டுகொடுக்க மனம் இல்லாமலும் சிலர் நியமான முறையிலும் விமர்சனம் செய்யலாயினர், அறிவியலாளர்கள் கூட இக்கொள்கையில் பிடிப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், தற்போது இக்கொள்கையை நாத்திக வாதிகளும் தேவைப்படும் பொது கம்முனிச வாதிகளும் கையில் எடுத்து கொள்கின்றனர்.


ஓர் உயிரின் மாற்றம் என்பது மரபணுவில் (Gene) ஏற்படும் மாற்றமே,
பரிணாமத்தில் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, ஓன்று நுண் பரிணாமம் (Micro Evolution), மற்றொன்று பாரிய கூர்ப்பு (Macro Evolution),

இதில் முதல் வகையான Micro Evolution என்றால் ஒரு உயிரினத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ஆகும். அதற்கான காரணிகளாவண: Mutation, மரபு பெருக்கத்தில் ஏற்படும் சிறு பிழைகள், மரபணு இடமற்றத்தின் பொது ஏற்படும் பிழைகள் ஆகும்.

மாறுந்தன்மை (Mutation):

இதில் மாருந்தன்மை (mutation) என்பதே அதிகமாக நிகழகூடிய ஓன்று, வேதிபொருள்களின் தாக்கம், கதிர்களின் தாக்கம் மற்றும் Virus களின் தாக்கம் போன்ற காரணங்களால் மரபில் (DNA வில்) ஏற்படும் சிறு மாற்றங்களே இந்த mutation என்பதற்கு உதாரணம். இவைகள் ஏற்றுகொள்ள பட்ட ஒன்று.

மரபணு திருத்தம் செய்தல் (DNA Repair):

இது போன்ற மாற்றங்களை சரி செய்வே உடலில் DNA repair என்ற ஒரு வளர்சிதை மாற்ற வேதிவினை (Metabolishm) நடைபெறும். இவ்வேதிவினைகள் உயிரினங்கள் வளர்வதற்கும், இனம்பெருக்குவதற்கும், தமது உடலமைப்பைப் பராமரிப்பதற்கும் உதவுகிறன. சில நேரங்களில் இந்த வேதி வினையின் திறன் குறையும் பொது தான், மனிதனிடம் இந்த Micro Evolution மாற்றங்கள் நடைபெறும்.

பரிணாமம் ஒரு கட்டுக்கதை என்பதற்கு ஒரு ஆணி தரமான ஒரு விசயமே, இந்த DNA Repair என்பது தான், ஒவ்வொரு மனிதன் உடலிலும் அது போல அணைத்து விதமான விலங்குகள் உடலிலும் இந்த DNA Repair என்ற வளர்சிதை மாற்ற வேதிவினைநடைபெறுகிறது, இதனுடைய வேலை விலங்குகளின் உடலில் ஏற்படும் மாறுதல்களை அதாவது மரபணுவில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்வதே.

இதை புரியும் படி சொல்ல வேண்டுமானால், மனிதனின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எப்படி செயல் படுகிறதோ, அதையே ஒரு உதாரணமாக சொல்லலாம். இது மனிதனை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது, அதனுடைய திறன் குறைகயில்தான் மனிதனுக்கு நோய்கள் வருகின்றன. அதே போல தான் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்வதே இந்த வகையான வேதி வினையின் வேலை. உதாரணமாக RAD54 என்ற ஒரு புரதம் இந்த வேலைகளை செய்கிறது.

இதில் இரண்டாம் வகையான Macro Evolution, அப்படியெனில் ஒரு உயிரினம் முழுவதுமாக மற்றொரு உயிரினமாக மாறுவது, இது உடனே ஏற்படுவது இல்லை, இந்த மாற்றத்திற்கு லட்ச கணக்கான வருடம் தேவை படும் என்பது அவர்களின் கருத்து, இப்படி ஒரு பரிணாமம் இதுவரையில் எங்கும் எப்போதும் நடந்தது இல்லை, அதற்கான ஆதாரங்களோ படிமங்களோ இது வரையில் இல்லை.

ஆக உயிரினத்தின் உடலில் உள்ள மாற்றங்களை சரி செய்ய உடலிலேயே ஒரு அமைப்பு இருந்து அதை ஒரு வேலையாக செய்து கொண்டுருக்கின்றது, ஒரு உயிரின் சிறு மாற்றத்திற்கே வேலை இல்லாத பொழுது, ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுகிறது என்பது மிகுந்த வேடிக்கையான ஒன்று.


நூறு வருடங்களுக்கு முன்பு உள்ள அறிவியல் வேறு தற்பொழுது உள்ள அறிவியல் வேறு, ஏனெனில் டார்வினுக்கு DNA பற்றியும், மரபியல் பற்றியும் நன்கு அறிவதற்கு வாய்ப்பு இல்லை, அன்றைய தினம் இருந்த விஞ்ஞானம் அப்படி, மரபியலின் தந்தை என்று அழைக்கப்படும் மெண்டலின் கூட தற்போது உள்ள மரபியல் வளர்ச்சியையும், உயிர்களின் அதிசயமான அமைப்பும் கண்டால் வியக்கத்தான் வேண்டும், இதில் முக்கியமாக பதிய பட வேண்டிய கருத்து எது எனில் தற்பொழுது வரை இக்கொள்கை நிரூபிக்க பட்டதா என்றால் ‘இல்லை’ என்பதே உண்மை.

டார்வின் இக்கொள்கையை உரத்த குரலில் கூற காரணம் மனிதன் மற்றும் குரங்குகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையே (இவ்வோற்றுமைகளை பற்றி பின் வரும் கட்டுரைகளில் விரிவாக பார்போம்), தற்போது இருக்கும் நாத்திக வாதிகள் இக்கொள்கையை தாங்கி பிடித்திருப்பதற்கு காரணம் அவர்களின் மனதில் ஏற்றுக்கொள்ளமுடியாத மதகோட்படுகளும், பகுத்தரறிவாளனாக இருக்கும் மனிதனிர்களுக்கு இடையே தங்களை பகுத்தறிவாளர்களா காண்பிப்பதர்க்காகவே, நாம் இக்கொள்கையை விமர்சிப்பதற்கான காரணங்களையும் இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும், அதில் முதன்மையாக நம் மனதில் நிற்பது, மனிதன் மற்ற எல்லா விலங்குகளை விட தனித்தே இருக்கும் நிலையும், அவனது தனித்துவம் மிக்க உருவ அமைப்பும். மற்றும் இந்த இப்பரிணாம கொள்கைகளின் அடிப்படை விசயங்களே ஆயிரம் கேள்விகளை கொடுக்கின்றன,

பலகேள்விகளுடன் அடுத்த பதிவில் ச(சி)ந்திப்போம்..

Post Comment

9 Comments:

வில்சன் said...

நண்பரே, நானும் உயிரியல் (விலங்கியல்) பயின்றவன்தான். பரிணாமத்தை விளக்கிய டார்வின் ஒரு மத போதகர் என்பது பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர் இவ்வாறு கூறிய பொது அவரை மதத்தை விட்டு ஒதுக்க விளைந்தனர். ஆனால் அவர் ஒரு தீவிர ஆத்திகனாகத்தான் இருந்து இறந்தார்.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

//ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுகிறது என்பது மிகுந்த வேடிக்கையான ஒன்று. //

உயிர் மாறுகிறதா உடல் தானே திரிகிறது :)

இதைப் போலவே மதம்,இறைமையை தவிர்த்து பரிணாமத்தை முழு அறிவியல் ரீதியில் சாமானியருக்கு புரியும் விதத்தில் விளக்க முயலுங்கள்

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் :))

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@வில்சன்
//நண்பரே, நானும் உயிரியல் (விலங்கியல்) பயின்றவன்தான். பரிணாமத்தை விளக்கிய டார்வின் ஒரு மத போதகர் என்பது பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர் இவ்வாறு கூறிய பொது அவரை மதத்தை விட்டு ஒதுக்க விளைந்தனர். ஆனால் அவர் ஒரு தீவிர ஆத்திகனாகத்தான் இருந்து இறந்தார். //

இக்கருத்தை சொல்லவந்ததன் காரணம் எனக்கு புரியவில்லை

பரிணாமத்தை விளக்கிய டார்வினே கடவுளை நம்புகிறார்,நீங்க ஏன் நம்பவில்லை என்கிறீர்களா ?

பதில் அளிக்கவும் ?????

கார்பன் கூட்டாளி said...

நண்பர் வில்சன்,

//பரிணாமத்தை விளக்கிய டார்வின் ஒரு மத போதகர் என்பது பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.//

அவரைப்பற்றி நான் முழுமையாக அறியவில்லை, இது எனக்கு தெரியாத விஷயம், முழுமையாக அறிய முற்படுகிறேன், நன்றி.

கார்பன் கூட்டாளி said...

//உயிர் மாறுகிறதா உடல் தானே திரிகிறது //

இல்லை நண்பரே, உடல் திரிகிறது என்பதும் சாதாரண விஷயம் அல்ல, அது உடலில் உள்ள DNA வில் ஏற்பாடும் மாற்றமே, இவர்கள் கூறுவது உடல் திரிகிறது அல்ல, ஒரு உயிரினம் மற்ற உயிரினமாக மாறுவது.உடல் திரிகிறது என்று சொல்லமுடியாது, உடல் முழுவதுமாக மாறுகிறது என்று வேண்டுமானால் சொல்லலம்.

//இதைப் போலவே மதம்,இறைமையை தவிர்த்து பரிணாமத்தை முழு அறிவியல் ரீதியில் சாமானியருக்கு புரியும் விதத்தில் விளக்க முயலுங்கள்//

இறைமையை தவிர்த்து வாழலாம், எந்த அடிப்படையில், எந்த சட்டத்தில் வாழ்கையை அமைதுகொள்வது என்பது போன்ற முழுமையான விவரங்களுடன் ஒருவன் கூறினால் செய்யலாம், அந்த சட்டம் மதவாதிகளின் சட்டத்திற்கு அதிகமான அறிவோடு இருக்க வேண்டும், அப்படி இருந்தால், அதை பற்றி யோசிக்கலாம், இதை பற்றி யோசிக்காதவர்கள் தன நாத்திக வாதிகள்.

//முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் :)) //

நன்றி.

வால்பையன் said...

நான் ஒன்பதாவது வரை மட்டுமே படித்திருப்பதால் ஆங்கில கட்டுரைகளை படித்து தெளிவுறுவது கடினம்! உங்களது கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கிறது, தொடர்ந்து எழுதவும்!

கார்பன் கூட்டாளி said...

நன்றி வால்பையன்.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

விஷயங்களை தெளிவு படுத்தியமைக்கு நன்றி

கார்பன் கூட்டாளி said...

கருத்துக்களுக்கு நன்றி ஜில்தண்ணி யோகேஷ்.

Post a Comment