Tuesday, November 23, 2010

அர்த்தமுள்ள உறுப்புகளும் ஆதாரமில்லாத கேள்விகளும் - பரிணாமம்

மனிதர்களுக்கே தெரியாமல் மனிதர்களின் உடல்களில் ஏகப்பட்ட உறுப்புகள் உள்ளன, ஆனாலும் அவைகள் அனைத்தும் ஏதோ ஒரு பயனை தரக்கூடியதாக உள்ளது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக Vestigial organs பற்றி தருமி ஐயா அவர்கள் 14.11.2010 அன்று “455.பரிணாமம் ... 3” என்ற தலைப்பில் (http://dharumi.blogspot.com/2010/11/455-3.html) ஒரு பதிவை இட்டு இருந்தார் அதற்கான மறுமொழி பெரிதாக இருக்கவே தனி பதிவாக இங்கு இடுகிறேன். தருமி ஐயாவின் கேள்விகள் சிவப்பு நிறத்திலும் நமது பதில் நீல நிறத்திலும் நாம் எடுத்துக்கொண்ட லிங்க் கள் பச்சை நிறத்திலும் இருக்கும்.

//பல உயிரினங்களில் சில தேவையற்ற அல்லது பயனற்ற உறுப்புகள் காணப்ப்டுவதுண்டு. மனிதனில் எளிதாக எல்லோருக்கும் புரியும் அத்தகைய ஓர் உறுப்பு - குடல்வால் - appendix.//

//மனிதர்களிடம் இவ்வுறுப்பு 'உபகாரம் இல்லாமல் உபத்திரமாகத்தான் உள்ளது'. ஏனைய தாவர உண்ணிகளில் இது மிக முக்கியமான உறுப்பாகச் செயல்படுகிறது. செல்லுலோஸை செரிக்க இந்த உறுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதனாலேயே அந்த உயிரினங்களில் அவைகள் பெரியதாகவும் அமைந்திருக்கும். மனிதர்களுக்கு இவ்வுறுப்பு தேவையில்லை.//

||Although regarded as a vestigial organ but recent studies indicate that the appendix has different functions like immune function, maintaining of gut flora, etc

Read more: http://en.wikipedia.org/wiki/Vermiform_appendix ||

||These researchers at the 'Duke University Medical School' believe they have sufficient evidence to back up their theory, in that the appendix appears to help produce and protect the good bacteria in the intestines. The appendix, they say, acts like a "good bacteria factory" that "cultivates and preserves" good bacteria nutrition to help keep your body healthy. There is much more bacteria (or germs) inside your body than cells. Most of this bacteria that resides inside your body is needed to help you digest, absorb, and eliminate your food. These friendly microbes also provide your skin with a protective barrier.

Read more: http://www.disabled-world.com/artman/publish/appendix.shtml ||


நோய் கிருமி தொற்றும் போது மனிதனின் உயிரையே எடுப்பதாக இந்த appendix மாறும், தற்போதைய அறிவியலின் படி appendix ற்கு நோய் எதிர்ப்பு சக்தி, நோய்களை உருவாக்கும் கிருமிகளை எதிர்த்து போரிடுதல், சக்தியை நிலை படுத்துதல் etc… போன்ற வேறு சில வேலைகளும் உள்ளனவாம். இவைகள் எல்லாம் தருமி ஐயாவிற்கு தெரியாமல் பழைய கதைகளை கூறி கொண்டிருக்கிறார். அதற்கான சுட்டியும் கொடுக்க பட்டுள்ளது.

//இதுபோன்று ஏறத்தாழ நூறு உறுப்புகள் போல் மனிதனிடம் உள்ளதாக பட்டியல் போட்டுள்ளார்கள்.//

நூறு உறுப்புகள் இருப்பதாக கூறும் தருமி ஐயாவிற்கு அவை என்னென்ன என்று தெரியவில்லை போல அதனால் தானோ பட்டியல் போடாமல் ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்.

//அவைகளில் சில - nictitating membrane - பல முதுகெலும்பிகளின் கண்களில் இது ஒரு ஒளிபுகக்கூடிய சவ்வாகக் கண்களின் மூன்றாவது 'இமை'யாக உள்ளன.//

||the plica semilunaris in humans currently serves the important purpose of cleaning out dust and other particles from the eye, resulting in a common crusted mucus. However, evolutionary biologists claim that it evolved from the nictitating membrane found in other animals, and is thus vestigial (Thompson 1956).

Read more: http://www.newworldencyclopedia.org/entry/Vestigial_organ ||

மற்ற உயிரினங்களுக்கு கண்களில் தூசி படியாமல் கண் பாதுகாப்பிற்காகவே தரப்பட்ட அமைப்பே இந்த nictitating membrane (plica semilunaris), மனிதனுக்கும் இவைகள் முக்கியமான வேலையை செய்கின்றன. அதாவது கழிவு, தூசி போன்றவைகளிருந்து நமது கண்களை பாதுகாக்கிறது.

//காது மடலுக்குரிய தசை நார்கள் மூலம் பல உயிரினங்கள் தங்கள் காது மடல்களை ஒலியை உள்வாங்க அசைக்க, திருப்ப முடியும். மனிதர்களிடமும் இந்த தசை நார்கள் உள்ளன. ஆனால் அவைகள் முழு ஆற்றலோடு இல்லாமல் வெறுமனே உள்ளன.சிலருக்கு மட்டும் புறச்செவியை அசைக்க முடியும்.//

||Other structures that still are considered vestigial include the coccyx[20], or tailbone (a remnant of a lost tail); the plica semilunaris on the inside corner of the eye (a remnant of the nictitating membrane)[21]; and, as pictured, muscles in the ear[22] and other parts of the body. Other organic structures (such as the occipitofrontalis muscle) have lost their original functions (keep the head from falling) but are still useful for other purposes (facial expression).

Read more: http://en.wikipedia.org/wiki/Vestigial_structure ||

சிலருக்கு மட்டும் உபயோகம் என்று அவரே ஒப்புகொண்டார் ஆனாலும் இவைகள் மனிதனுக்கு தேவை இல்லை என்று கூறுகிறார் அது எப்படி? ஆனால் மேலே கொடுக்க பட்டுள்ள தளத்தில் அது முக பாவனைகளை காண்பிப்பதற்காக பயன்படுவதாக குருப்பிடுகின்றது.

//வால் மனிதனுக்கும் உண்டு; வெளியேகூட சிலருக்கு சிறிது தெரியலாம். ஆனால் எல்லா மனிதர்களின் எலும்புக்கூடுகளில் வாலுக்குரிய எலும்புகள் உள்ளன. காரணம்: - முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சி மூலமாக மனிதனிடமும் பின் தங்கிவிட்டது. //

||In humans and other tailless primates (e.g. great apes) since Nacholaphitecus (a Miocene hominoid),[3][4] the coccyx is the remnant of a vestigial tail, but still not entirely useless;[5] it is an important attachment for various muscles, tendons and ligaments — which makes it necessary for physicians and patients to pay special attention to these attachments when considering surgical removal of the coccyx.[1] Additionally, it is also part of the weight-bearing tripod structure which act as a support for a sitting person. When a person sits leaning forward, the ischial tuberosities and inferior rami of the ischium take most of the weight, but as the sitting person leans backward, more weight is transferred to the coccyx.[1 ]

Read more: http://en.wikipedia.org/wiki/Coccyx ||

மனிதனுக்கு வால் கிடையாது. ஆனால் coccyx எலும்புகள் உள்ளன, இது முக்கியமான சதைகளை இணைக்க கூடியதாக உள்ளது, உட்காரும் போது ஒரு உதவியாகவும் கீழ் விழுந்தாலோ அதிகமாக வலி ஏற்படாதவாறு மனிதனுக்கு தரப்பட்டுள்ளது. இதுவும் மனிதனுக்கு மிகவும் பயன் பட கூடிய ஒரு உறுப்பே.

//கடைசியாக நமது wisdom tooth. நமக்கு வயதான பிறகு வெளிக்கிளம்பும் இப்பற்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; சிலருக்கு இப்பற்கள் வெளிவருவதும் முழுமையாக நடப்பதில்லை. இவைகளும் 'உபகாரத்திற்குப் பதில் உபத்திரவத்திற்குத்தான்' காரணமாக உள்ளன. பரிணாம வளர்ச்சியில் மனிதனிடம் அடுத்ததாகக் காணாமல் போகக்கூடிய உறுப்பாக இது இருக்கலாம். இப்போது இருப்பதற்கான காரணம் - முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சி மூலமாக இன்னுமும் மனிதனிடமும் உள்ளன. //

அவர் குருப்பிடும் wisdom teeth, தமிழில் அறிவுப்பற்கள், இந்த பல் எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம், நான்கு முனைகளிலும் இருக்கும், ,சில நேரங்களில் மனிதனுக்கு தொல்லை தருவாதாகவும் இருக்கும், அந்த நேரத்தில் அந்த பல்லை பிடுங்க நேரிடும்.


ஆனால் இந்த பல்லின் தேவை என்ன என்பதை தற்போது ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இதில் தான் மனிதன் வளர்வதற்கு தேவையான stem cell உள்ளதாம். Stem cell (குருத்தனு) என்றால் என்ன என்பதை நமது முந்தைய பதிவில் விளக்கி உள்ளோம் (http://carbonfriend.blogspot.com/2010/07/blog-post_21.html). அப்படி மனிதனின் எல்லா விதமான நோய்க்கும் மருந்தாக பயன்படும் முக்கியமான பற்களை பரிணாம வாதிகள் தேவை இல்லா உறுப்பு என்பதாக தங்களின் போலி பிரச்சாரத்திற்கு பயன் படுத்துகின்றனர். இவைகள் விரைவில் காணாமல் போகும் என்றும் தருமி ஐயா அவர்கள் கதை விட்டிருக்கிறார், தங்களின் மேலான பார்வைக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவுப்பற்கள் (wistom teeth) பற்றிய தளத்தை பார்வை இடவும்.

http://www.dentistry.co.uk/news/3145-Wisdom-teeth-a-source-of-stem-cells

ஒவ்வொரு உயிரினமும் அதற்கென தனித்தன்மை கொண்டே உள்ளன, அதன் உறுப்புகள் அதன் தேவைக்காகவே அமைக்கப்பட்டுள்ளன. அந்த உறுப்புகள் இல்லை என்றாலும் உயிரினத்தின் உயிர் போய் விடாது, அந்த வகையை சார்ந்ததே இந்த vestigial organ. சில வகை உறுப்புகள் என்ன பயனுக்கேன்றே மனிதனுக்கு தெரியாமல் இருக்கின்றன, அதை தான் பரிணாமவாதிகள் தங்களின் ஆதரவுக்காக எடுத்து கொள்கின்றனர், appendix, wisdom teeth போன்ற உறுப்புகள் கூட முன்பு தேவை இல்லாதவைகலாகவே பரிணாமவாதிகளால் காண்பிக்க பட்டது, அதன் பயன் பாடு தற்போதைய கண்டுபிடிப்புகள் மூலமே அவை மனிதனுக்கு இறைவன் கொடுத்த அத்தியாவசிய உறுப்புகள் என்று வெளிக்கொணர பட்டது.

மேலும் மனித உடலில் 23000 புரதத்தை உருவாக்க கூடிய மரபுகள் உள்ளன, அனைத்தும் தன்னகத்தே ஒரு வேலையை கொண்டது, ஒவ்வொரு புரதமும அதற்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்யும், இவை அனைத்தும் என்ன வேதியியல் வேலைகளை கொண்டுள்ளன என்று முழுமையாக அறியப்படாத நிலையில் அதிலிருந்து உருவான சில உறுப்புகளுக்கு எந்த ஒரு பணியும் இல்லை என்று கண்மூடி தனமாக கூறுவது பரிணாமவாதிகளின் மிகைத்த அறிவிற்கு (!?) உதாரணம்.


Ref: http://www.wisegeek.com/what-is-the-auricularis.htm
       http://en.wikipedia.org/wiki/Nictitating_membrane
       http://medical-dictionary.thefreedictionary.com/auricular+muscle
       http://www.dentistry.co.uk/news/news_detail.php?id=1442

Post Comment

32 Comments:

ராஜவம்சம் said...

good job.

Unknown said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு ராஜவம்சம், தொடர்ந்து படியுங்கள்.

Aashiq Ahamed said...

சகோதரர் கார்பன் கூட்டாளி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல பதிலடி.

பரிணாமத்தை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தருமி ஐயா போன்றவர்களின் அறியாமையை நினைத்து வருந்துகின்றேன்.

----
பல உயிரினங்களில் சில தேவையற்ற அல்லது பயனற்ற உறுப்புகள் காணப்ப்டுவதுண்டு. மனிதனில் எளிதாக எல்லோருக்கும் புரியும் அத்தகைய ஓர் உறுப்பு - குடல்வால் - appendix.
மனிதர்களுக்கு இவ்வுறுப்பு தேவையில்லை. ஆனால் முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சியில் மனிதர்களிடமும் பயனேதுமின்றி - தொல்லை தரும் ஒரு உறுப்பாக - இன்னும் உள்ளது.
----

இது தருமி ஐயா அந்த பதிவில் பகன்ற அற்புதமான முத்துக்கள். நல்ல நகைச்சுவையான வார்த்தைகள் கூட.

appendix - It produces and protects good germs for your gut.

இது சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியலாளர்கள் சொன்ன கருத்து.

இது தருமி ஐயா போன்ற, ஒரு பக்கம் மட்டுமே பார்க்க தெரிந்த பரிணாம ஆதரவாளர்களுக்கு தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை. இதுமட்டுமல்லாமல் விக்கிபீடியா மேலும் பல பலன்களையும் கூறுகின்றது. இதெல்லாம் தெரியாமல், அறியாமையில் தருமி ஐயா பதிவெழுதுவது எந்த விதத்தில் அறிவுக்கு ஒத்துவருகின்றது என்று அவரே சிந்தித்து பார்க்கவேண்டும்.

டார்வின் காலத்தில் பல உறுப்புகள் vestigial என்று கருதப்பட்டது. அந்த லிஸ்ட் படிப்படியாக ஒன்றுமில்லாமல் போய் விட்டது.

தருமி ஐயாவின் இரண்டாவது பரிணாம பதிவு இன்னும் அதிர்ச்சியை அளிக்ககூடிய ஒன்று. ஏனென்றால் குதிரையையும், archeopteryx யும் பரிணாமத்திற்கு ஆதரவாக அதில் கூறியிருந்தார். இவை இரண்டும் பரிணாமத்திற்கு ஆதாரமா என்று அவரே பரிணாமத்தை நன்கு ஆராய்ந்து பார்க்கட்டும்.

இறைவன், தருமி ஐயாவிற்கு உண்மையை அறிந்து கொள்ளும் ஞானத்தை கூடிய விரைவில் வழங்குவானாக என்று பிரார்த்திக்கும்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Unknown said...

//நல்ல பதிலடி. //

அவர்களிடமிருந்து பதிலடி தேவை இல்லை ஏதாவது பதிலாவது கிடைக்குமா?

//இது தருமி ஐயா அந்த பதிவில் பகன்ற அற்புதமான முத்துக்கள். நல்ல நகைச்சுவையான வார்த்தைகள் கூட. //

நகைச்சுவைக்கு மட்டும் தான்.

//இதுமட்டுமல்லாமல் விக்கிபீடியா மேலும் பல பலன்களையும் கூறுகின்றது. //

அந்த உறுப்புகளின் உபயோகம் அதிகமாகவே உள்ளது, இது மறுமொழிக்காக தயார் செய்ததால் குறைவாக கொடுத்தேன், இன்னும் விளக்கமாக கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இதற்கே அவர்களின் பதில் இல்லை என்கிறபோது போதும் என்றே தோன்றுகிறது.

//டார்வின் காலத்தில் பல உறுப்புகள் vestigial என்று கருதப்பட்டது. அந்த லிஸ்ட் படிப்படியாக ஒன்றுமில்லாமல் போய் விட்டது//

இன்னும் டார்வினை பிடித்து கொண்டிருந்தாள் 18 ம் நூற்றாண்டிற்கே போய் விட வேண்டியதான்.

//தருமி ஐயாவின் இரண்டாவது பரிணாம பதிவு இன்னும் அதிர்ச்சியை அளிக்ககூடிய ஒன்று. ஏனென்றால் குதிரையையும், archeopteryx யும் பரிணாமத்திற்கு ஆதரவாக அதில் கூறியிருந்தார்.//

கதை விடுவது தானே வார்த்தை ஜாலத்திற்கு நன்றாக இருக்கிறதா என்று பாருங்கள் போதும்.

//இறைவன், தருமி ஐயாவிற்கு உண்மையை அறிந்து கொள்ளும் ஞானத்தை கூடிய விரைவில் வழங்குவானாக என்று பிரார்த்திக்கும்,//

கண்ணை மூடி கொண்டு கலரை தேடினால் எங்கிருந்து கிடைக்கும்.

தருமி said...

//நல்ல பதிலடி.//

!!!!!!!!! மிக்க நன்றி

//பரிணாமத்தை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தருமி ஐயா போன்றவர்களின் அறியாமையை நினைத்து வருந்துகின்றேன்.//

I just reciprocate!

தருமி said...

//குதிரையையும், archeopteryx யும் பரிணாமத்திற்கு ஆதரவாக அதில் கூறியிருந்தார்//

இவைகள் கடவுளின் நேரடிப் படைப்புக்கு மிகவும் ஒத்து வருகிறதோ ... எனக்குத் தெரியவில்லை!

தருமி said...

//கண்ணை மூடி கொண்டு கலரை தேடினால் எங்கிருந்து கிடைக்கும். //

ஒன்று செய்யுங்களேன் .. நான் கண்ணைத் திறந்து கொண்டு கலரைத் தேட எல்லாம் வல்ல அல்லாவிடம் நீங்கள் எனக்காக வழிபடுங்களேன்.

ஏதாவது வழி பிறக்காதா என்று பார்ப்போமே!

தருமி said...

//இதற்கே அவர்களின் பதில் இல்லை என்கிறபோது போதும் என்றே தோன்றுகிறது.//

நான்கூட இதுபோல் அதிக முறைகள் எழுதியிருக்க முடியும். ஏற்கெனவே ஒரு லிஸ்ட் கொடுத்தேனே ...

தருமி said...

உங்கள் இப்பதிவிற்கான பதிலை இங்கே காண்க ...

Rajasankar said...

விஸ்டம் டீத்துல ஸ்டெம் செல்லா? எங்கப்பா அந்த நோபல் பரிசு இவருக்கு கொண்டு வந்து கொடுங்கப்பா.

ஸ்டெம் செல்களை எலும்பு ஊணில் இருந்து எடுப்பது போலவே பற்களின் அடியில் இருந்தும் எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். இந்த அறிவுப்பல்லை எல்லாருமே புடுங்கிதான எறியனும் அப்போ அதில் இருந்து ஸ்டெம் செல்களை எடுப்பது எளிது என்றுதான் வாதம். எலும்பு மஜ்ஜை யில் இருந்து எடுப்பதால் அதிக செலவாகும் ஆனால் இதில் அப்படி இல்லை.

இதற்கும் அறிவுப்பற்கள் தேவை என்பதற்கும் ஏதும் சம்பந்தம் இல்லை. ஒன்றை ஒன்றுடன் இணைத்து சொல்லப்படும் பொய்யோ ஆகும்.

Rajasankar said...

பரிணாமம் இன்றும் எவ்வாறு நடக்கிறது என எழுதியுள்ளேன் படித்து பார்த்துவிட்டு பதிலளியுங்கள். http://rajasankarstamil.blogspot.com/2010/11/blog-post.html
பரிணாமம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும்.

தருமி said...

//rajasankar சொன்னது…

பரிணாமம் இன்றும் எவ்வாறு நடக்கிறது என எழுதியுள்ளேன் படித்து பார்த்துவிட்டு பதிலளியுங்கள். http://rajasankarstamil.blogspot.com/2010/11/blog-post.html
பரிணாமம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும்.//

ராஜாசங்கர்,
பாவம் நீங்கள்! ஏற்கெனவே இதையே முந்திய பதிவிலும் -http://carbonfriend.blogspot.com/2010/11/7.html - எழுதியிருப்பீர்கள் போலும்!

Atheist said...

தோழர் ராஜசங்கர் தளத்தில் நான் பதித்த கருத்து,

////////////

நண்பர் ராஜசேகர்,

தமிழ் வலைதளங்களில் இன்னும் சிலர் பரிணாம கோட்பாட்டை ஆதரிப்பதை கண்டு சிரிப்புதான் வருகின்றது என்று நாங்களும் சொல்லலாம் அல்லவா?. ஆனால், எதிர்ப்பவரோ ஆதரிப்பவரோ என்ன காரணங்களுக்காக பரிணாமத்தை எதிர்க்கிறார் அல்லது ஆதரிக்கிறார் என்று ஆராய்வதே நேரான பார்வையாக இருக்க முடியும்.

[[[[[[இதற்கும் மேலான டார்வினின் பரிணாமக்கொள்கையை எதிர்ப்பவர்கள் அதே பரிணாமகொள்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். அதை படித்துவிட்டு வந்த மருத்துவர்களிடம் போவார்கள்
.
.
.
இதே போன்ற விவசாயத்தை தாக்கும் பூச்சிகளும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்பு திறனை பெற்று விடுகின்றன. எப்படி இந்த எதிர்ப்பு திறன் வருகிறது. வேறென்ன பரிணாம மாற்றம் தான்]]]]]]]

இது பரிணாமத்திற்கு ஆதாரமா? உயிரியலில் ஏற்படும் முன்னேற்றங்களை பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்டுவார்கள் பரிணாமவாதிகள். இது காலங்காலமாக நடந்து வருவது தான். ஆனால் அவர்களுடைய வாதங்கள் என்றுமே நிலைத்ததில்லை. அதுபோலத்தான் இந்த வாதமும்..

லீ ஸ்பேட்னர் இது குறித்து அவருடைய புத்தகத்தில் (Not by Chance) தெளிவாக விவரித்திருக்கிறார். இதுவெல்லாம் பரிணாமத்திற்கு ஆதாரம் கிடையாது. கீழே உள்ள பதிவையும் பாருங்கள்,

http://www.truthinscience.org.uk/site/content/view/175/65/

மருந்துகளுக்கு எதிரான தன்மைகளை வளர்த்து கொள்ளும் கிருமிகள் ஏன் அப்படி இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தீர்களானால் இவையெல்லாம் பரிணாமத்திற்கு ஆதாரமில்லை என்று புரிந்து கொள்வீர்கள். பரிநாமவாதிகளின் சூழ்ச்சிகளையும் புரிந்து கொள்வீர்கள்.

மற்றோன்றையும் புரிந்து கொள்ளுங்கள், பரிணாமத்தை எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டவையெல்லாம் பிரச்சனையாக இருந்ததில்லை. இதிலிருந்து அது வந்தது என்பதில் தான் பிரச்சனையே.

பரிணாமத்திற்கு ஆதாரம் என்று இதுவரை ஒன்றுமில்லை. நேரான பார்வையில் ஆராய்ந்து பார்த்தீர்களானால் இந்த உண்மையை புரிந்து கொள்ளும் காலமும் நெடுந்தொலைவில் இல்லை.
/////////


நண்பர் கார்பன் கூட்டாளி, உங்களுடைய பதிவுகள் ஆழ்ந்த சிந்தனையை தருகின்றன. உங்கள் முயற்சி மென்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.

Unknown said...

புதிதாக வருகை தந்த நண்பர் திரு ராஜசங்கர் மற்றும் திரு atheist அவர்களுக்கு வருக வருக.

//நான்கூட இதுபோல் அதிக முறைகள் எழுதியிருக்க முடியும். ஏற்கெனவே ஒரு லிஸ்ட் கொடுத்தேனே ... //

ஐயா எந்த லிஸ்ட் பற்றி கூறுகிறீர்கள் என்று புரியவில்லை, லிங்க் கொடுத்தால் அறிய இலகுவாக இருக்கும்.

//விஸ்டம் டீத்துல ஸ்டெம் செல்லா?.//

ஏன் இந்த வியப்பு, இல்லை என்று மறுக்கிறீரா? தகுந்த ஆதாரம் தரவும்.

//எங்கப்பா அந்த நோபல் பரிசு இவருக்கு கொண்டு வந்து கொடுங்கப்பா//

ஒரு தமிழரின் கட்டளை படி நோபல் பரிசு தரப்படுகிறது என்று நினைக்கும் பொழுது சந்தோசமாக உள்ளது.

//இதற்கும் அறிவுப்பற்கள் தேவை என்பதற்கும் ஏதும் சம்பந்தம் இல்லை. ஒன்றை ஒன்றுடன் இணைத்து சொல்லப்படும் பொய்யோ ஆகும். //

ஸ்டெம் செல் பற்றிய அரைகுறை அறிவுள்ளவர்கள் மட்டுமே இதை ஏற்பார்கள், பதிலை எதிர் பாருங்கள்.

Unknown said...

//பரிணாமம் இன்றும் எவ்வாறு நடக்கிறது என எழுதியுள்ளேன் படித்து பார்த்துவிட்டு பதிலளியுங்கள்.//

நிச்சயமாக.

//பரிணாமம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும்.//

ஆம், பரிணாமத்தை பற்றிய என்னுடைய முதற் பதிவை பார்வை இடுமாறு பரிந்துரைக்கிறேன்.
http://carbonfriend.blogspot.com/2010/07/blog-post.html

தங்களுடைய புரிதல்கள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் பரிணாமத்தை எதிர்த்து விரைவில் பதிவு இடுவீர்கள் என எதிர் பார்க்கிறேன்.

//நண்பர் கார்பன் கூட்டாளி, உங்களுடைய பதிவுகள் ஆழ்ந்த சிந்தனையை தருகின்றன. உங்கள் முயற்சி மென்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள். //

நன்றி திரு atheist, தொடர்ந்து படியுங்கள், விமர்சியுங்கள்.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் கார்பன் கூட்டாளி,

பரிணாமத்திற்கு எதிராக செயல்படும் Dr.Cornelius G. Hunter அவர்கள் தன்னுடைய சமீபத்திய பதிவொன்றில் பின்வருமாறு கூறுகின்றார். பரிணாமவியலாளர்களை கடுமையாக கிண்டல் செய்யும் அந்த கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

----------
Being an evolutionist means there is no bad news. If new species appear abruptly in the fossil record, that just means evolution operates in spurts. If species then persist for eons with little modification, that just means evolution takes long breaks. If clever mechanisms are discovered in biology, that just means evolution is smarter than we imagined. If strikingly similar designs are found in distant species, that just means evolution repeats itself. If significant differences are found in allied species, that just means evolution sometimes introduces new designs rapidly. If no likely mechanism can be found for the large-scale change evolution requires, that just means evolution is mysterious. If adaptation responds to environmental signals, that just means evolution has more foresight than was thought. If major predictions of evolution are found to be false, that just means evolution is more complex than we thought. So today’s falsification, though it falsifies one of evolution’s most treasured predictions, will be no different.
--------

எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கருத்து...

Dr.Hunter அதிகமாக அடிக்கடி உபயோகப்படுத்தும் வாசகம் "Religion drives science and it matters"....அவர் "religion" என்று எதனை குறிப்பிடுகின்றார் என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்...ஆம் பரிணாம மதத்தை தான்...

சலாம்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சலாம்,

------
தருமி சொன்னது…
//நல்ல பதிலடி.//

!!!!!!!!! மிக்க நன்றி
-------

????????????????????????????

--------
ஒன்று செய்யுங்களேன் .. நான் கண்ணைத் திறந்து கொண்டு கலரைத் தேட எல்லாம் வல்ல அல்லாவிடம் நீங்கள் எனக்காக வழிபடுங்களேன்.

ஏதாவது வழி பிறக்காதா என்று பார்ப்போமே
--------

இன்ஷா அல்லாஹ்.

Aashiq Ahamed said...

சகோதரர் கார்பன் கூட்டாளி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

முதலில் ஒன்றை தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம். vestigial organs என்பவை ஒன்றுக்கும் உபயோகமில்லாத உறுப்புகள் என்று பெரும்பாலான பரிணாம ஆதரவாளர்கள் இன்றைய சூழ்நிலையில் கூறுவதில்லை (தருமி ஐயா போன்ற பரிணாமத்தை பற்றிய தெளிவில்லாத சிலரைத் தவிர).

அவை அனைத்தும் முக்கியமான செயலை செய்யலாம், ஆனால் அதனை இன்னும் அறிவியல் கண்டிபிடிக்க முடியாமல் இருந்திருக்கலாம் என்பதே அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கின்றது.

Non-essential என்று கருதப்பட்ட உறுப்புகள் இன்று மிகமுக்கிய செயல்களை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு spleen, இந்த உறுப்பு nonessential என்று கருதப்பட்டது. இது இல்லாமலும் உயிர் வாழலாம் என்று கூறப்படும் இந்த உறுப்பு இன்று மிக முக்கிய வேலையை செய்வதாக கண்டுபிடித்திருக்கின்றனர்.

Vestigial உறுப்புகள் பற்றிய கீழ்க்காணும் "national geographic" கட்டுரையை பாருங்கள்,

Vestigial Organs Not So Useless After All, Studies Find

Aashiq Ahamed said...

அதில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள்,

1. Appendix, tonsils, various redundant veins—they're all vestigial body parts once considered expendable, if not downright useless. But as technology has advanced, researchers have found that, more often than not, some of these "junk parts" are actually hard at work.

ஆக, இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால், சில vestigial உறுப்புகள், முக்கியமான செயல்களை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2. History is littered with body parts that were called "useless" simply because medical science had yet to understand them, Laitman said.

ஆக, எந்தவொரு உடல் பாகத்தையும் "உபயோகமற்றது" என்று சொல்லமுடியாது. அவற்றை புரிந்து கொள்ளக்கூடிய அளவு மருத்துவ அறிவியல் இன்னும் வளரவில்லை என்பதே உண்மை.

Aashiq Ahamed said...

3. A 1977 study, published in the medical journalThe Lancet, followed the health of World War II veterans over 20 years—some with spleens and some who'd lost theirs to war injuries. The spleen-less men were twice as likely to die from heart disease and pneumonia."They knew the spleen played an important role, but they didn't know how," Swirski said.

ஆக, இந்த உறுப்புகள் அகற்ற பட்டாலும் உயிர் வாழலாம். ஆனால், அந்த உறுப்புக்கள் அகற்ற பட்டவர்களுக்கும், அது உள்ளவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை, தெளிவான ஆய்வு முடிவுகள் மூலமாகவே அறிந்து கொள்ள முடியும். வெறுமனே, "இதோ பார் நான் appendix எடுத்து விட்டேன். ஆனால் நான் இன்னும் நலமாகத்தான் இருக்கிறேன்" என்பது போன்ற வாதங்களை குறுகிய பார்வையாகவே எடுத்து கொள்ள முடியும்.

4. "People say, You can remove it and still live. But you have to be careful with that logic," he said.

ஆக, "Appendix அகற்றப்பட்டவர்கள் ஒரு பிரச்சினைகளுமின்றி வாழ்கிறார்கள்" என்ற கருத்தை அறிவியலுக்கு ஒத்துவராத ஒரு மேலோட்டமான பார்வையாகவே கருத முடியும்.

"You could remove your left leg and still live. But whenever a body part is moved or changed, there's a price to pay."

எந்த ஒரு உடல் பாகத்தையும் நாம் எடுக்கும் போது அதற்கான விலையையும் கொடுத்து ஆக வேண்டுமாம். இம்ம்ம்.

Aashiq Ahamed said...

இதையெல்லாம் விட ஒரு முக்கிய விசயம், பரிணாமவாதிகளின் கருத்துப்படி, vestigial உறுப்புகள் என்பவை, பரிணாமம் நடந்ததின் விளைவாக நம்மிடையே உள்ள மிச்சங்கள்/சொச்சங்கள். ஆனால் சற்று சிந்திந்து பார்த்தோமானால் இதில் ஒரு முக்கிய குளறுபடியை காணலாம்.

அதாவது, vestigial உறுப்புகள், பரிணாமம் நடந்ததின் விளைவாக நம்மிடையே உள்ள மிச்சங்கள் என்று வாதாடினால், முதலில் பரிணாமம் நடந்ததை நிரூபிக்க வேண்டும்.

பரிணாமம் என்பதே நடக்கவில்லை என்று தான் இதுவரை நம்மிடையே உள்ள வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. பிறகு எப்படி vestigial உறுப்புகள்?

இவர்களாக பரிணாமம் நடந்தது என்று கற்பனை செய்து கொள்வார்களாம், பின்னர் அது நடந்ததால் vestigial உறுப்புகள் வந்தன என்று கூறுவார்களாம். அற்புதமான லாஜிக்.....

ஆக, முதலில், பரிணாமம் வரலாற்றில் நடந்ததை பரிணாமவியலாளர்கள் நிரூபிக்க வேண்டும். ஆனால் அது இதுவரை சாத்தியமாக வில்லை.

மொத்தத்தில், vestigial உறுப்புகள் பற்றிய பரிணாமவாதிகளின் கருத்தும் கற்பனையை தவிர வேறொன்றும் இல்லை.

இப்போது நான் முன்பு சொன்ன, Dr.Hunter அவர்களின் கமெண்டை மறுபடியும் படியுங்கள்

(evolution)RELIGION DRIVES SCIENCE AND IT MATTERS....

Your brother,
Aashiq Ahamed A

Unknown said...

//"You could remove your left leg and still live. But whenever a body part is moved or changed, there's a price to pay."

எந்த ஒரு உடல் பாகத்தையும் நாம் எடுக்கும் போது அதற்கான விலையையும் கொடுத்து ஆக வேண்டுமாம். இம்ம்ம்.//

கையை எடுத்தால் கூடத்தான் உயிர் வாழலாம்.ஒரு உறுப்பால் உபயோகம் இருக்கு என ஆதாரத்துடன் காண்பிக்கும் பொழுது இல்லை என்பதையும் ஆதாரத்துடன் காண்பிப்பதே சிறந்தது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக...

ஓர் உண்மைச்சம்பவம் ஒன்றை உரைக்கிறேன்.
கார்பன் கூட்டாளி.

//coccyx எலும்புகள் உள்ளன, இது முக்கியமான சதைகளை இணைக்க கூடியதாக உள்ளது, உட்காரும் போது ஒரு உதவியாகவும் கீழ் விழுந்தாலோ அதிகமாக வலி ஏற்படாதவாறு மனிதனுக்கு தரப்பட்டுள்ளது. இதுவும் மனிதனுக்கு மிகவும் பயன் பட கூடிய ஒரு உறுப்பே.//

என் வாழ்வில் எனக்கு அது நடந்தது...

ஒருமுறை மொட்டைமாடியில் இருந்து ரொம்ப வேகமாய் துள்ளிக்குதித்து இறங்கும்போது முதல் படி வழுக்கிவிட தடால் என முதல் படியின் விளிம்பில் பின் பகுதி பட விழுந்து உடனே அது சருக்கிவிட அடுத்த முப்பது படிகளின் முகனைகளிலும் அதே பின் பகுதியில் (பட்டக்சின் மேல்பகுதி-முதுகெலும்பின் அடிப்பகுதி) அதே இடத்தில் தட் தட் தட் என தொடர்ந்து அடிபட கடைசி படியில் நிலைகுலைந்து விழுந்தவுடன்.. உடனே மயக்கமானேன்.

அதற்குப்பிறகு நண்பர்கள் மருத்தவமனைக்கு தூக்கி சென்று பின் இடுப்பில் எக்ஸ் ரே எடுத்ததில் 'நோ பிராக்ச்சர்'. 'காக்சிஸ் உங்களை காப்பாற்றியது' என்றார் டாக்டர். அல்ஹம்துளில்லாஹ். டாக்டர் சொன்னது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அந்த காக்சிஸ் ஒரு ஷாக் அப்சற்பர் போல முப்பது முறை அமுங்கி அமுங்கி எழுந்திருத்து இருக்கிறது. இந்த வலி சரியாக நிறைய மாதம் ஆகும் என்றார்.

அப்புறம் ஒருவாரம் படுத்த படுக்கை... குப்புற மட்டும்..! உடலை மடிக்காமல் அப்படியே தூக்கி சென்று என்னை காலைக்கடன் முடிக்க வேண்டி டாய்லட்டில் முன்பக்கம் குப்புற படுக்க வைத்து 'முடிந்தது' என்றவுடன் பிரட்டி பின்பக்கம் (எலும்பை அழுத்தாமல் சரியாக பேசினில் பொருந்த) படுக்கவைத்துவிட்டு கதவைமூடி விட 'முடிந்தவுடன்' கைகள் வேலை செய்ததால் டியுப் மூலம் கழுவிக்கொள்வதில் எனக்கு எந்த உதவியும் தேவைப்படவில்லை. அப்புறம் தூக்கி வந்து விடுவர். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தேன்.

ஒருவாரம் கழித்து நடக்க முடிந்தது. நானாகவே படுக்க முடிந்தது. தூக்கி நேராக நிமித்தி விட மட்டும் பெற்றோர் உதவி வேண்டி இருந்தது.

அடுத்த வாரம் கொஞ்சம் வளைந்தேன்.

பேருந்தில் அமர்ந்து செல்ல ஆறுமாதம் ஆனது. அதுவரை சீட் காலி என்றாலும் நிற்க மட்டும்தான் செய்வேன். வகுப்பிலும் பெரும்பாலும் நிற்பேன்.

படிப்படியாக உட்கார்ந்து...மீண்டும் சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்க ஒருவருடம் ஆனது. சுத்தமாக வலி மறக்க ஒன்றரை வருடம் ஆனது.

இந்நாட்களில் என்னக்காப்பாற்றியதாக சொன்ன அந்த 'காக்ஸிஸ்' பற்றி படித்தேன். அந்த ரஷ்யன் ஆதர், 'அது ஒரு தேவை இல்லாத எலும்பு' என்று எழுதி இருந்தார். சே.. என்று வேறு சில புத்தகங்கள் பார்க்க இந்தியன் ஆதர்களும் அப்படியே எழுதி இருந்தனர்.

புத்தகத்தை எடுத்துக்கொண்டு டாக்டரை சந்தித்தேன். கேட்டேன். 'எழுதியவருக்கு அங்கே அடிபட விழுந்து அனுபமில்லை போல' என்றார். 'அது இல்லையேல் நீங்கள் கோமவில்தான் என்றென்றும் இருந்திருப்பீர்கள்' என்றார்...! ஏனென்றால் ஸ்பைனல் கார்ட், காக்சிசில் கனெக்ட் ஆகலியாம். அதற்கு மேல் உள்ள முதுகுஎலும்புத்துண்டுகளுடன் தான் கனெக்ட் ஆகி உள்ளதாம். ஒருவேளை காக்சிஸ் இல்லை என்றால் முதுகெலும்பில் அடிபட்டு மொத்த நெர்வும் டிஸ்-அர்ர்ரே ஆகி கட்டாகி காலம் முழுதும் கோமாவில்தான் பிறந்த குழந்தை போலகூட அல்லாமல்.. அழாமல், பசி, தொடு உணர்ச்சி இல்லாமல் கிடந்திருப்பேனாம்..!

காக்சிஸ் - சுபஹால்லாஹ்.

மனிதனுக்கு ஒரு இன்றியமையாத எலும்பு.

Dr.Dolittle said...

சகோதரரே உங்களின் கேள்விக்கு பதில் அளித்து உள்ளேன் , படித்து பாருங்கள் , மாற்று கருது இருந்தால் கூறுங்கள் http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_03.html

Unknown said...

dr. dolittle,

//தேவையில்லா உறுப்புகளும் , ஆதாரம் கொண்ட பதில்களும் ://

முதல் கோணல் முற்றிலும் கோணல் அதுவும் தலைப்பிலயே கோணல் என்பது போல, எதற்குமே ஆதாரம் கொடுக்க வில்லை, அதை முதலில் சரி செய்யுங்கள். உடலில் எந்த ஒரு உறுப்பும் தேவை இல்லாமல் இருக்கவில்லை.

//1 )
அதாவது மனிதனின் விந்தனுவிலும் கருமுட்டையிலும் இருப்பது தான் முதலில் stem cell,அவைகள் கரு உருவாவதற்கே பயன்படுகிறது

விந்தும் அண்டமும் சேர்ந்து உருவாகும் "கரு "தான் ஸ்டெம் செல்(embryonic stem cell ).
ஏன் ?
விந்துவும் அண்டமும் n number குரோமோசோம்களை கொண்டது, 2n இருந்தால் தான் அது ஸ்டெம் செல்லாக விளங்க முடியும்.//

பத்திரிக்கை காரன் போல அலேக்காக பாதி பகுதியை எடுத்து பதில் கூறும் நீங்கள் அடுத்த பகுதியை விட்டுவிட்டீர்களே.

இது தான் நம்முடைய வசனம்: (அதாவது மனிதனின் விந்தனுவிலும் கருமுட்டையிலும் இருப்பது தான் முதலில் stem cell, அவைகள் கரு உருவாவதற்கே பயன்படுகிறது, இரண்டும் இணைத்த பிறகு 4 அல்லது 5 தினங்களில் உருவாவது தான் embaryonic stem cells, )

இரண்டும் இணைந்த பிறகு 4 அல்லது 5 தினங்களில் உருவாவது தான் embaryonic stem cells என்று கூறும் நான் செய்வது தவறு அதையே நீங்கள் திரும்ப கூறினால் சரியா???????????????????

//2) replication என்றால் பிரதி எடுத்தல் ( அதாவது ஒரு செல்தன்னை போன்று இன்னொரு செல்லை உருவாக்குதல் ).

சகோதரர் சொன்ன வாக்கியத்தின் உண்மையான terminology - PLASTICITY என்றுகூறுவர்.//

என்ன சொல்ல வருகிறீர்கள்????????

//முதல் உண்மை , wisdom teeth இல் மட்டும் அல்ல மற்ற எல்லா பற்களிலும்ஸ்டெம்செல் இருக்கிறது , அதுவும் ஒரே பல்லில் மூன்று வெவேறு இடங்களில் இருக்கிறது(dental pulp , dental follicle and periodontal ligament ).//

எல்லா பல்லிலும் stem cell இருக்கிறது என்றால் wisdom toothஇல் stem cell இருக்கிறது என்று ஜப்பான் விஞ்ஜானிகள் ஒரு செய்தியாக வெளியிட வேண்டிய அவசியம் இல்லையே. அப்படி எனில் அதில் சிறப்பாக எதோ இருக்கிறது என்று தானே அர்த்தம்.நீங்கள் கூறும் Mesenchymal_stem_cell (MSCs) அணைத்து பற்களிலும் இருந்தாலும் wisdom teeth தான் அர்த்தமுள்ளதாக இருக்கிறதாம். நான் கூறவில்லை sciencedaily கூறுகிறது.

The presence of a supply of MSCs in wisdom teeth could have meaningful therapeutic ramifications. As noted by the researchers and others, wisdom tooth extraction is a common medical procedure in developed nations and, thus, creates a perfect opportunity to remove biological material in a sterilized setting; the teeth subsequently can be frozen and stored for many years until needed. In the meantime, that also provides time for researchers to better understand the details of iPS creation to further increase the efficiency for clinical use.

http://www.sciencedaily.com/releases/2010/09/100910130603.htm

Unknown said...

//ரெண்டாவது உண்மை , இந்த பற்களில் உள்ள ஸ்டெம் செல் வயது வரம்புக்குஉட்பட்டது , வயதுக்கு வந்த பின்னர் பல் விழுந்தால் முளைகாததர்க்கு இதுவேகாரணம் .//

இருக்கலாம், இது நமது பகுதிலயே இல்லாதது எதற்காக குறிப்பிடுகின்றீர்கள்.

//மூன்றாவது உண்மை : wisdom teeth இல்லை என்றால் பற்களே இல்லை என்றுசகோதரர் கூறி உள்ளார்.
பற்களை உருவாக்குவது wsdom teeth இல்லை , ஒவ்வொரு பற்களிலும் உள்ளஅதனுடய ஸ்டெம் செல்லே (குறிப்பிட்ட வயது வரம்புக்குள் ) அதைஉருவாக்குகிறது

அதனால் தான் அதை “தேவையில்லாத ஆணி “ என்று புடிங்கி விடுகிறார்கள்.//

ஸ்டெம் செல்கள் தான் பற்களை உருவாக்குகிறது என்று தான் நானும் கூறுகிறேன், அது wisdom teethஇல் இருப்பதால் அப்படி கூறினேன், அதை தேவை இல்லாத ஆணி என்று கூறும் நீங்கள் அதை பிறந்த உடனயோ அல்லது வளர்ந்த பின்போ எடுப்பது இல்லை, ஒரு குறிபிட்ட வயது வந்த பின்பே எடுக்கிறீர்கள், ஏன் பிறந்த சில மாதத்தில் தேவை இல்லாத ஆணி என்று பிடுங்க வேண்டியதானே, பிடுங்க முடியாது ஏனெனில் அதனால் ஏற்பட கூடிய நன்மைகள் பல, என்னுடைய பதிவில் கொடுத்துள்ளேன்.

//4) செல்களை பாதுகாப்பது அகற்றுவது ஸ்டெம் செல்லின் வேலை அல்ல , இறந்தசெல்லை நீக்கப்பட்ட பின்னர் அந்த இடத்திற்கு தேவையான புதிய செல்லைஉருவாக்குவதே அதன் வேலை .

பாதுகாப்பது இறந்த செல்களை அகற்றுவது வெள்ளை அணுக்களின் ( neutrophils and monocytes ) வேலை .//

Dr.Dolittle said...

//ஒரு குறிபிட்ட வயது வந்த பின்பே எடுக்கிறீர்கள், ஏன் பிறந்த சில மாதத்தில் தேவை இல்லாத ஆணி என்று பிடுங்க வேண்டியதானே, பிடுங்க முடியாது ஏனெனில் அதனால் ஏற்பட கூடிய நன்மைகள் பல, என்னுடைய பதிவில் கொடுத்துள்ளேன்.//

சகோதரா நீங்கள் தெரிந்து பேசுகிறீர்கள இல்லையா என்றே புரியவில்லை , wisdom teeth 17 வயதுக்கு மேல் தான் முளைக்கும் , இல்லாத ஆணியை எவ்வாறு புடுங்குவது (Wisdom teeth usually appear between the ages of 17 and 25.)

//இருக்கலாம், இது நமது பகுதிலயே இல்லாதது எதற்காக குறிப்பிடுகின்றீர்கள்.//

/Wisdom teeth usually appear between the ages of 17 and 25 / இதற்காகத்தான்

செல்களை பாதுகாப்பது அகற்றுவது ஸ்டெம் செல்லின் வேலை அல்ல , இறந்தசெல்லை நீக்கப்பட்ட பின்னர் அந்த இடத்திற்கு தேவையான புதிய செல்லைஉருவாக்குவதே அதன் வேலை .

பாதுகாப்பது இறந்த செல்களை அகற்றுவது வெள்ளை அணுக்களின் ( neutrophils and monocytes ) வேலை .//
answer ?


பின்வரும் கேள்விகளுக்கு பதில் ?


1 ) முதல் கோணல் முற்றிலும் கோணல்
ஆனா ஆவனா தெரியாமல் திருக்குறள் எழுதுவது எவ்வளவு பெரிய தவறு ?

அதாவது மனிதனின் விந்தனுவிலும் கருமுட்டையிலும் இருப்பது தான் முதலில் stem cell,அவைகள் கரு உருவாவதற்கே பயன்படுகிறது

விந்தும் அண்டமும் சேர்ந்து உருவாகும் "கரு "தான் ஸ்டெம் செல்(embryonic stem cell ).

ஏன் ?

விந்துவும் அண்டமும் n number குரோமோசோம்களை கொண்டது, 2n இருந்தால் தான் அது ஸ்டெம் செல்லாக விளங்க முடியும்.

2) , ஆனால் ஸ்டெம் செல்கள் மற்றொரு செல்களை உருவாக்க கூடியது(Replication).

replication என்றால் பிரதி எடுத்தல் ( அதாவது ஒரு செல்தன்னை போன்று இன்னொரு செல்லை உருவாக்குதல் ).

சகோதரர் சொன்ன வாக்கியத்தின் உண்மையான terminology - PLASTICITY என்றுகூறுவர்.

3) அப்படியெனில் உங்கள் பற்களை உருவாக்குவது எது? நீங்கள் தேவை இல்லை என்று கூறும்அந்த wisdom teeth இல்லையெனில் உங்களுக்கு பற்களே இல்லை என்பதே உண்மை.


இது அப்பட்டமான பொய்:

முதல் உண்மை , wisdom teeth இல் மட்டும் அல்ல மற்ற எல்லா பற்களிலும்ஸ்டெம்செல் இருக்கிறது , அதுவும் ஒரே பல்லில் மூன்று வெவேறு இடங்களில் இருக்கிறது(dental pulp , dental follicle and periodontal ligament ).

ரெண்டாவது உண்மை , இந்த பற்களில் உள்ள ஸ்டெம் செல் வயது வரம்புக்குஉட்பட்டது , வயதுக்கு வந்த பின்னர் பல் விழுந்தால் முளைகாததர்க்கு இதுவேகாரணம் .

மூன்றாவது உண்மை : wisdom teeth இல்லை என்றால் பற்களே இல்லை என்றுசகோதரர் கூறி உள்ளார்.
பற்களை உருவாக்குவது wsdom teeth இல்லை , ஒவ்வொரு பற்களிலும் உள்ளஅதனுடய ஸ்டெம் செல்லே (குறிப்பிட்ட வயது வரம்புக்குள் ) அதைஉருவாக்குகிறது

BRO Are u now accepting that u r wrong in basic itself ?

Unknown said...

Dr.Dolittle has left a new comment on your post "மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு (The Central ...":

/////நீங்கள் போக வேண்டாம் இங்கயே இருங்கள், நன்றாக பதிவை பல முறை படுத்து பாருங்கள். பிறகு எதிர்ப்பதிவு இடுங்கள்.////

நான் stem cellai பற்றி தேவையான அளவு ( விலங்குகளை stem cell கொண்டு குணப்படுத்தும் அளவுக்கு ) படித்து உள்ளேன் .
தங்களின் தவறான பதிவின் துணை எனக்கு தேவையில்லை .

///எல்லா பல்லிலும் stem cell இருக்கிறது என்றால் wisdom toothஇல் stem cell இருக்கிறது என்று ஜப்பான் விஞ்ஜானிகள் ஒரு செய்தியாக வெளியிட வேண்டிய அவசியம் இல்லையே. அப்படி எனில் அதில் சிறப்பாக எதோ இருக்கிறது என்று தானே அர்த்தம்.நீங்கள் கூறும் Mesenchymal_stem_cell (MSCs) அணைத்து பற்களிலும் இருந்தாலும் wisdom teeth தான் அர்த்தமுள்ளதாக இருக்கிறதாம். நான் கூறவில்லை sciencedaily கூறுகிறது.////

The presence of a supply of MSCs in wisdom teeth could have meaningful therapeutic ramifications. As noted by the researchers and others, wisdom tooth extraction is a common medical procedure in developed nations and, thus, creates a perfect opportunity to remove biological material in a sterilized setting; the teeth subsequently can be frozen and stored for many years until needed. In the meantime, that also provides time for researchers to better understand the details of iPS creation to further increase the efficiency for clinical use.

http://www.sciencedaily.com/releases/2010/09/100910130603.htm
இந்த பொறியில் நீங்கள் சிக்குவீர்கள் என்று எதிர் பார்த்தேன் ....
சிக்கி விட்டீர்கள் .

எல்லா பல்லிலும் stem cell இருக்கிறது - அதை உபயோகப்படுத்தலாம் ( எடுத்துக்காட்டு நாயின் dental pulp இல் இருந்து எடுத்த stem cell ஐ வைத்து mandibular bone ஐ regenerate செய்து இருக்கிறார்கள்(Oral Stem Cells Used to Regenerate Bone and Colonize Myocardial Tissue in Animals Yamada Y, Ito K, Nakamura S, Ueda M, Nagasaka T. Promising cell-based therapy for bone regeneration using stem cells from deciduous teeth, dental pulp, and bone marrow. Cell Transplantation 2011; 20, 1003-1013 ) , இது போல பல தெரபி க்கள் உண்டு , நாங்கள் கூட சமீபத்தில் spinal injury வந்து நடக்கவே இயலாது என கைவிரிக்க பட்ட boxer இனத்தை சேர்ந்த நாயை stem cell therapy கொண்டு நடக்க வைத்துள்ளோம் ).
இதனால் தங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்
1 ) எந்த பல்லிலிருந்து வேண்டுமானாலும் stem cellai எடுத்து உபயோகப்படுத்தலாம் .
( நாய்க்கு wisdom teeth கிடையாது- note the point – even then vets have successfully done a therapy using the stem cell from normal teeth )
2) ////எல்லா பல்லிலும் stem cell இருக்கிறது என்றால் wisdom toothஇல் stem cell இருக்கிறது என்று ஜப்பான் விஞ்ஜானிகள் ஒரு செய்தியாக வெளியிட வேண்டிய அவசியம் இல்லையே. அப்படி எனில் அதில் சிறப்பாக எதோ இருக்கிறது என்று தானே அர்த்தம்.////

சிறப்பாக ஒன்றும் இல்லை எல்லா பற்களிலும் இருக்கும் ஸ்டெம் செல் தான் இருக்கிறது ,
அப்ப ஏன் அவுங்க could have meaningful therapeutic ramifications. என்று கூறுகிறார்கள்
பத்திரிக்கை காரன் போல அலேக்காக பாதி பகுதியை எடுத்து பதில் கூறும் நீங்கள் அடுத்த பகுதியை விட்டுவிட்டீர்களே.
As noted by the researchers and others, wisdom tooth extraction is a common medical procedure in developed nations and, thus, creates a perfect opportunity to remove biological material in a sterilized setting; the teeth subsequently can be frozen and stored for many years until needed.

எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ( உங்களை தவிர ) common medical procedure ஆன wisdom teeth removal ளினால் , இந்த பல் நீக்குதல் ஒரு meaningful therapeutic ramifications என்கிறார்கள் .
நீங்களாகவே அந்த பல் பிடுங்குதலை meaningful therapeutic ramifications என்று ஒத்து கொண்டமைக்கு நன்றி .
எனது சந்தேகம் என்னவென்றால் ,
அந்த ஜப்பான் ஆர்டிகளில் கூறியிருந்த உங்களுக்கு தேவையான கருத்தை மட்டும் எடுத்து கொண்டு பல் பிடுங்குதல் எல்லா ஆராய்ச்சியாளர்களினால் ஒத்து கொள்ள பட்டு developed nation களில் கடைபிடிக்க படும் பல்பிடுங்கும் முறை என்று அவர்களால் கூறப்பட்ட அந்த செய்தியை மறைத்து வெளியிட்டது ஏன் ?
நிச்சயம் நீங்கள் இந்த கேள்வியை தவிர்த்து விடுவீர்கள் என்று எனக்கு தெரியும்.
//அதற்குள் வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று கேட்டால் என்ன அர்த்தம்.//
தாங்களே வெளியிட்ட ஆதாரத்திற்கு என்ன பதில் ?

Unknown said...

//சிறப்பாக ஒன்றும் இல்லை எல்லா பற்களிலும் இருக்கும் ஸ்டெம் செல் தான் இருக்கிறது ,
அப்ப ஏன் அவுங்க could have meaningful therapeutic ramifications. என்று கூறுகிறார்கள்
பத்திரிக்கை காரன் போல அலேக்காக பாதி பகுதியை எடுத்து பதில் கூறும் நீங்கள் அடுத்த பகுதியை விட்டுவிட்டீர்களே.
As noted by the researchers and others, wisdom tooth extraction is a common medical procedure in developed nations and, thus, creates a perfect opportunity to remove biological material in a sterilized setting; the teeth subsequently can be frozen and stored for many years until needed. //

செய்தியாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

எல்லா பற்களிலும் ஸ்டெம் செல் இருக்கும் போது wisdom teethலும் ஸ்டெம் செல் இருந்துதானே ஆக வேண்டும், Wisdom teeth a source of stem cells????????? என்று செய்தி இட வேண்டிய அவசியம் என்ன?

//அந்த ஜப்பான் ஆர்டிகளில் கூறியிருந்த உங்களுக்கு தேவையான கருத்தை மட்டும் எடுத்து கொண்டு பல் பிடுங்குதல் எல்லா ஆராய்ச்சியாளர்களினால் ஒத்து கொள்ள பட்டு developed nation களில் கடைபிடிக்க படும் பல்பிடுங்கும் முறை என்று அவர்களால் கூறப்பட்ட அந்த செய்தியை மறைத்து வெளியிட்டது ஏன் ?
நிச்சயம் நீங்கள் இந்த கேள்வியை தவிர்த்து விடுவீர்கள் என்று எனக்கு தெரியும்.//

தவிர்க்க தேவையே இல்லை, இது அலேக்காக எடுக்க வேண்டிய செய்தி என்பதால் தான்,

இது தான் அந்த வரிகள்..

The presence of a supply of MSCs in wisdom teeth could have meaningful therapeutic ramifications.

As noted by the researchers and others, wisdom tooth extraction is a common medical procedure and, so, creates a perfect opportunity to remove biological material in a sterilised setting; the teeth subsequently can be frozen and stored for many years until needed.

நான் எடுத்து வெளியிட்டதோ முதல் பத்தி, நீங்கள் குறிப்பிடுவதோ இரண்டாவது பத்தி, As noted by the researchers and others, இது இரண்டாவது பத்தி, இதில் அலேக்காக பாதி எடுத்தேன் என்று கூறும் குற்றசாட்டு தவறானது.

ஆக முதல் பத்தி முழுமை அடையப்பட்ட வரிகள், இரண்டாவது பத்தியில் வரிகள் முதல் பத்தியின் மருபாதியை பிரதிபலிப்பவை அல்ல. சிறு பத்தியாக இருந்தாலும் தனியாக காண்பிப்பது உங்களை போன்றவர்கள் இணைத்து விடுவீர்கள் என்பதால் தான் போல.

wisdom teeth பிரச்னை தரும் போது பிடுங்கதான் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை, எனக்கே பிரச்னை தர பிடிங்கி விட்டேன்,
அதற்கான மூலமே தேவை இல்லாதது என்று கூறுவதே இங்கு எடுத்து கொள்ள வேண்டிய விஷயம்,

இந்த வரிகளை பாருங்கள்:

An extremely rich source for adult mesenchymal stem cells is the developing tooth bud of the mandibular third molar.[28] The stem cells eventually form enamel (ectoderm), dentin, periodontal ligament, blood vessels, dental pulp, nervous tissues, and a minimum of 29 different end organs. Because of extreme ease in collection at 8–10 years of age before calcification and minimal to no morbidity, these will probably constitute a major source of cells for personal banking, research and current or future therapies. These stem cells have been shown capable of producing hepatocytes.[citation needed]

http://en.wikipedia.org/wiki/Stem_cell

இதற்கு என்ன அர்த்தம் என்பது தெரிந்திருக்கும், தவிர்த்து விடாமல் பதில் தாருங்கள்.

Dr.Dolittle said...

/////wisdom teeth பிரச்னை தரும் போது பிடுங்கதான் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை, எனக்கே பிரச்னை தர பிடிங்கி விட்டேன்,
அதற்கான மூலமே தேவை இல்லாதது என்று கூறுவதே இங்கு எடுத்து கொள்ள வேண்டிய விஷயம்,////
பின்னர் எதற்கு தேவையில்லாமல் நம்மை Circumcision செய்ய சொல்கிறார்கள் ?
/// These stem cells have been shown capable of producing hepatocytes.[citation needed]///
நான் OIE manual லிலேயே தவறுகளை கண்டுபிடித்து அதன் வழிமுறைகளை எனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதை தவிர்கின்றேன் , நீங்களோ citation இல்லாத ஒரு கருத்தை திணிக்க பார்கிறீர்கள்.
{ /ஒரு குறிபிட்ட வயது வந்த பின்பே எடுக்கிறீர்கள், ஏன் பிறந்த சில மாதத்தில் தேவை இல்லாத ஆணி என்று பிடுங்க வேண்டியதானே, பிடுங்க முடியாது ஏனெனில் அதனால் ஏற்பட கூடிய நன்மைகள் பல, என்னுடைய பதிவில் கொடுத்துள்ளேன்.//

சகோதரா நீங்கள் தெரிந்து பேசுகிறீர்கள இல்லையா என்றே புரியவில்லை , wisdom teeth 17 வயதுக்கு மேல் தான் முளைக்கும் , இல்லாத ஆணியை எவ்வாறு புடுங்குவது (Wisdom teeth usually appear between the ages of 17 and 25.)

//இருக்கலாம், இது நமது பகுதிலயே இல்லாதது எதற்காக குறிப்பிடுகின்றீர்கள்.//

/Wisdom teeth usually appear between the ages of 17 and 25 / இதற்காகத்தான்

செல்களை பாதுகாப்பது அகற்றுவது ஸ்டெம் செல்லின் வேலை அல்ல , இறந்தசெல்லை நீக்கப்பட்ட பின்னர் அந்த இடத்திற்கு தேவையான புதிய செல்லைஉருவாக்குவதே அதன் வேலை .

பாதுகாப்பது இறந்த செல்களை அகற்றுவது வெள்ளை அணுக்களின் ( neutrophils and monocytes ) வேலை .//
answer ?


பின்வரும் கேள்விகளுக்கு பதில் ? }

தெரிந்தே தவிர்த்து விட்டீர்களே ?

Unknown said...

//பின்னர் எதற்கு தேவையில்லாமல் நம்மை Circumcision செய்ய சொல்கிறார்கள் ?//

திடிரென வேறொரு விசயத்திற்கு தாவி விட்டீர், அது ஒரு உடல் நலன் அவ்வளவே, அதை செய்ய விரும்பவில்லையெனில் செய்யாமல் இருங்கள், அதை செய்ய வேண்டும் என கட்டாயமும் இல்லை.

//நான் OIE manual லிலேயே தவறுகளை கண்டுபிடித்து அதன் வழிமுறைகளை எனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதை தவிர்கின்றேன் , நீங்களோ citation இல்லாத ஒரு கருத்தை திணிக்க பார்கிறீர்கள்.//

முதலில் அப்பட்டமான பொய் என்றீர்கள் தற்போது citation இல்லாத கருத்து என்கிறீர்கள், பிறகு எதற்கு அப்பட்டமான பொய் என்று எதையோ கண்டுபிடித்து போல பீதியை ஏற்படுத்த முயன்றீர்கள்.

//சகோதரா நீங்கள் தெரிந்து பேசுகிறீர்கள இல்லையா என்றே புரியவில்லை , wisdom teeth 17 வயதுக்கு மேல் தான் முளைக்கும் , இல்லாத ஆணியை எவ்வாறு புடுங்குவது (Wisdom teeth usually appear between the ages of 17 and 25.) //

சரிதான்.

//செல்களை பாதுகாப்பது அகற்றுவது ஸ்டெம் செல்லின் வேலை அல்ல , இறந்தசெல்லை நீக்கப்பட்ட பின்னர் அந்த இடத்திற்கு தேவையான புதிய செல்லைஉருவாக்குவதே அதன் வேலை .

பாதுகாப்பது இறந்த செல்களை அகற்றுவது வெள்ளை அணுக்களின் ( neutrophils and monocytes ) வேலை //

புதிய செல்லை உருவாக்குவது பராமரிப்பது தான் stem cellஇன் வேலை அகற்றுவது அதன் வேலை இல்லைதான், இதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். பராமரிப்பது அதன் வேலை என்பதை அடித்து விடுகிறேன்.

ஸ்டெம் செல்லை மட்டும் விவாத்ததிற்கு எடுக்கும் நீங்கள் விளக்கிய மற்ற உறுப்புகளை விட்டு விட்டீர்களே, அவைகள் சரிதான் என ஒப்பு கொள்கிறீர்களா,? அவை பரிணாமத்திர்கான ஆதாரம் இல்லை என்பதை பகிரங்கமாக வெளியிட தயாரா?

Dr.Dolittle said...

பரிணாமத்தை நான் படித்த அளவில் எனக்கு உண்மை என்று பட்டது , எனக்கு தெரிந்த ஆதாரத்தை கொண்டு விளக்கினேன் .
எல்லாவற்றையும் விளக்க நான் மெத்த படித்த மேதாவி அல்ல , எனது துறை சார்த்த சில கருத்துகளை நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறாக எழுதி இருந்ததாக எனக்கு பட்டது , அவற்றை நான் விளக்கினேன் அவ்வளவு தான் , எனினும் நான் தங்களுக்கு எடுத்துரைத்த கருத்துகளுக்கு மதிப்பளித்து அவற்றை மாற்றியமைதமைக்கு நன்றி . எனக்கு தவறு என்று உறுதியாகப்பட்டால் அதை நான் எங்கும் எடுத்துரைக்க தயங்கியதில்லை , தயங்கவும் மாட்டேன் . இன்னும் பல விவாதங்கள் ( சண்டை அல்ல ) செய்ய வேண்டி உள்ளது . தொடருவோம் ....

Post a Comment