Wednesday, October 13, 2010

பரிணாமம் - மொனார்ச் வண்ணத்துப்பூச்சி (பகுதி-6)


இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரு அர்த்தம் பொருந்தியவை, அதன் அமைப்பில் தனி தன்மை உள்ளதாக சிறு சிறு உடல் பாகங்கள் கூட எதோ காரணத்திற்காக தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு பாகமும் முழுமையாக வளராத வரை அது எதற்காக என்பது அந்த உயிரினத்திற்கு கூட தெரிவதில்லை, ஆனால் அந்த உயிரினத்திற்கும் தெரியாமல் அந்த பாகங்கள் சரியான முறையில் வளர்கின்றன என்கிற போது அதை வளர்க்கும் சக்தி மாபெரும் அறிவாற்றல் கொண்டதாக தான் இருக்க வேண்டும், அந்த வகையில் வண்ணத்து பூச்சிகள் கடவுளின் படைப்பில் மிகவும் அழகான படைப்பாகவே இருக்கின்றன, குறிப்பாக மொனார்ச் வண்ணத்து பூச்சிகள் (அ) அரச வண்ணத்து பூச்சிகள் (Monarch Butterfly) சிறப்பம்சம் கொண்டவை. நீண்ட நாட்கள் வாழ கூடியதாகவும் நீண்ட தூரம் பறக்க கூடியதாகவும், மற்ற வண்ணத்து பூச்சிகளை காட்டிலும் மிக அருமையான கூட்டு புழு (Pupa) நிலையை கொண்டதாகவும் இருக்கிறது.

இந்த மொனார்ச் வண்ணத்து பூச்சியை பார்க்கும் போது அதன் வடிவைப்பின் திறமைகளையும் அதை வடிவமைத்தவரின் ஆற்றலையும் அறியலாம், வண்ணத்து பூச்சியின் இறகுகள், கால்கள், உணர்கொம்பு (Antenna) என அனைத்தும் அது பறக்க எதுவாக அதன் கருவிலேயே வடிவமைக்கப்பட்டு, அவைகளின் வளர்ச்சியிலும் செயல்களிலும் எதுவும் அச்சு பிசகாமல் நடைபெற்று உலகின் மிக அழகான உயிரினமாக முழு வண்ணத்து பூச்சியாக மாறுவதை ஒரு மாபெரும் அதிசயம் என்பதையும், அது கடவுளின் மாபெரும் சக்தியை மறைமுகமாக உணர்த்துகிறது என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை. இந்த வண்ணத்து பூச்சை பற்றி அறிவதன் மூலம் கடவுளின் இருப்பு, ஆற்றலையும் மற்றும் அது இயற்கையின் தேர்வு அல்ல என்பதையும் விளங்க முடியும்.


மொனார்ச் (அ) அரச வண்ணத்துப்பூச்சிகள் தங்களின் வாழ்வில் நான்கு இடைநிலைகளை கொண்டதாக உள்ளது. முட்டை (Egg), கம்பளி புழு (caterpillar), கூட்டு புழு (Pupa or chrysalis), முழுமையான வண்ணத்து பூச்சி (Butterfly).


பெண் வண்ணத்துப்பூச்சானது பால் காட்டுசெடியில் (Milk weed) உள்ள இலையில் மிகவும் நுண்ணிய முட்டையை இடும் (படத்தை காண்க), அதிலிருந்து கம்பளி புழு உருவாக ஆரம்பிக்கிக்கும், அது அந்த இலையிலையே தன்னுடைய வாழ்கையை துவங்கும். இவைகள் மேலும் வளர வளர முழு கம்பளி புழு என்ற நிலையை அடையும்.


ஒன்பது நிறங்கள் கொண்ட வளையம் கொண்டதாகவும், மூன்று ஜோடி முன்னங்கால்கள், ஐந்து ஜோடி பின்னங்கால்களும், தலை வயிறு என அனைத்து உறுப்புகளும் கொண்டவையாகவும் இருக்கும். மூன்று வாரங்களில் அதிகமாக உணவு உட்கொண்டு 2700 மடங்கு அதன் உடல் எடையை அதிகரித்து கொள்ளும், பிறகு உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டு ஒரு கடினமான பொருளில் அதன் பின்னங்கால்களை இணைத்து J வடிவத்தில் தலை கீழ் தொங்க ஆரம்பித்து விடும். கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று.


பன்னிரெண்டு மணி நேரத்திற்கு பிறகு, கம்பளி புழுவிற்கு (Caterpillar) அடுத்த நிலையான கூட்டு புழு (Pupa) நிலைக்கு மாறும். வண்ணத்து பூச்சிக்கு தேவையான வளர்ச்சியுடன் வயிற்று பகுதிக்கு மேல் 24 தங்க நிற வண்ணம் உடைய வளையமும், 12 தங்க நிற வளையம் வயிற்று பகுதிக்கு கீழும் தெரிய ஆரம்பிக்கும். இந்த நிலையில் அவற்றுக்கு கண்கள் தெரியாது, இந்த கூட்டு புழுவின் உள்ளே முதல் பதினாரு மணி நேரத்தில் ஒரு பச்சை நிறத்திலான திரவம் உருவாகி அதன் உட் பாகங்கள் உருவாகும், அதன் வெளிப்புறத்தில் உள்ள செல் அடுக்கே கடைசியில் வண்ணத்து பூச்சியின் இறக்கையாக உருவாகும், இந்த நிலையிலும் கூட அவைகளுக்கு வண்ணத்து பூச்சு என்ற தோற்றம் கூட இருக்காது. முழுமையாக மாறுபட்ட உருவமே இருக்கும்.


இரண்டு வாரங்களுக்கு பிறகு அதன் வயிற்றில் இருக்கும் திரவத்தை இறக்கை பகுதிக்கு அழுத்த (Pump) அடுத்த பதினைந்து நிமிடங்களில் அது பறக்க தயாராகிவிடும், இரண்டு மணிநேரத்துக்குள் அதன் இறக்கைகளை உளற வைத்து முழு வண்ணத்து பூச்சியாக உருவெடுக்கும், தற்போது அதற்கு ஆறு கால்களும் நான்கு இறக்கைகளும் இருக்கும். உயர்ந்த உணர் திறன் கொண்ட அதன் இரண்டு கண்களில் 6000 கண்ணாடி வில்லைகள் (Lenses) இருக்கப்பெற்று புற ஊதா உட்பட அனைத்து வண்ணங்களையும் பார்க்க கூடியதாக இருக்கும். அதன் கண்களிலிருந்து மூளைக்கு வரும் 72000 மின்தூடிப்புகள் (Electrical pulses) கண் காணும் அந்த உருவங்களை அர்த்தம் உள்ள உருவமாக மாற்றும்.


இந்த வகை அரச வண்ணத்து பூச்சிகள் அதிக தூரம் அதாவது கண்டம் விட்டு கண்டம் பறக்க கூடிய திறன் உள்ளவை, இந்த வண்ணத்து பூச்சியின் இடமாற்ற அமைப்புகூட மிகவும் சிக்கலான அமைப்பாக உள்ளது. 3000 திற்கும் அதிகமான மைல்கள் பறந்து அவைகள் பார்த்திராத புதிய இடங்களுக்கு செல்கின்றன. அரச வண்ணத்து பூச்சியின் இடை நிலைகள், அவைகளின் திறன் மற்றும் அழகு என அனைத்தும் அதன் மரபில் எழுதப்பட்ட செய்தியையே பிரதிபலிக்கின்றன.


இந்த வண்ணத்து பூச்சிகள் வெவ்வேறு நிலைகளில் இருப்பது இயற்கையின் தேர்வால் மட்டுமே அதன் முட்டையில் உள்ள மரபணுவில் எழுதப்பட்டது என்ற வாதத்தை வைத்தால், எதற்காக அவைகள் சிக்கலான இடைநிலைகளை ஏற்படுத்தி கொண்டு பறக்க வேண்டும், இயற்கையிலேயே பறப்பவையாக பிறக்கலாமே, அவ்வாறு கடினமான ஒரு உயிரினத்தை உருவாக்கும் அறிவு பெற்ற இயற்கையின் தேர்வு மனிதனையும் பறக்க வைக்குமா? அல்லது மனிதன் தலைகீழாக மரத்தில் தொங்கினால் தான் பறக்க முடியுமா?

ஒரு உயிரினம் உருவாக சரியான அமைப்பு, காரணம், சாதாரண தன்மை, சிக்கலான உள்அமைப்பு, அழகு, அறிவு, உணர்ச்சி, முழுமை என்ற பல தன்மைகள் தேவைப்படுகின்றன. இதில் எந்த ஒரு தனியான தன்மையும் தானாக உருவானதாக நிரூபிக்க படவில்லை என்கிறபோது இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு முழுமையான அமைப்பு தானாக உருவானது என்பது எந்த அளவிற்கு பரிணாம வாதிகளை அறிவாளி என்ற நிலைக்கு இட்டுசெல்லும் என்பதனை அவர்களின் முடிவிற்கே விட்டு விடலாம்.

Post Comment

8 Comments:

Aashiq Ahamed said...

சகோதரர் கார்பன் கூட்டாளி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

வியப்பான தகவல்கள். அழகான படங்கள். தங்களுக்கு இறைவன் மென்மேலும் கல்வி ஞானத்தை தந்தருள்வானாக...ஆமின்.

//இதில் எந்த ஒரு தனியான தன்மையும் தானாக உருவானதாக நிரூபிக்க படவில்லை என்கிறபோது இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு முழுமையான அமைப்பு தானாக உருவானது என்பது எந்த அளவிற்கு பரிணாம வாதிகளை அறிவாளி என்ற நிலைக்கு இட்டுசெல்லும் என்பதனை அவர்களின் முடிவிற்கே விட்டு விடலாம்//

நிச்சயமா தற்செயலா உருவாச்சுன்னு தான் சொல்லுவாங்க. ஆதாரம்? நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்...அது நம்பிக்கை. நாத்திகத்தின் நம்பிக்கை. அவங்க நம்பிக்கைல நாம தலையிட கூடாது. நிறைய பேரு இப்படி எல்லாமே தற்செயலாத்தான் உருவாகி இருக்கும்னு நம்பினா அவங்க நம்பிக்கைக்கு மதிப்பளிச்சு அவங்க சொல்றது உண்மைதான்னு தீர்ப்பு சொல்லிட வேண்டியது தான்...

ஒரு boeing விமானம் தானா உருவாகி இருக்கும்னு சொல்லி பாருங்க...அதையும் நம்புவாங்க.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

வால்பையன் said...

புழுவை தனியா, பட்டாம்பூச்சியை தனியா படைக்காம ரெண்டையும் ஒண்னா படைச்சான்னு சொல்லும் போது தான் கடவுள் மேல் சந்தேகம் வருது!

கார்பன் கூட்டாளி said...

//ஒரு boeing விமானம் தானா உருவாகி இருக்கும்னு சொல்லி பாருங்க...அதையும் நம்புவாங்க.//

Boeing விமானத்தை காட்டிலும் இந்த வண்ணத்துபூச்சியில் அதிக தொழிற்நுட்பம் உள்ளது.

கார்பன் கூட்டாளி said...

//புழுவை தனியா, பட்டாம்பூச்சியை தனியா படைக்காம ரெண்டையும் ஒண்னா படைச்சான்னு சொல்லும் போது தான் கடவுள் மேல் சந்தேகம் வருது! //

இதில் சந்தேக பட என்ன இருக்கிறது. இதில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் நீங்கள் சொல்வதை பற்றி யோசிக்கலாம், தானாக வந்தது தானே தவறு நடக்க வாய்ப்புள்ளது என்று. ஆனால் அச்சு பிசகாமல் அப்படியே எழுதி வைத்து நடைபெறுகின்றது. எழுதி வைத்தது யார் என்பதே நமது கேள்வி.

க்ளோனிங் பற்றிய ஒரு ஆங்கில sci-fi படம் பார்த்தேன், அதில் ஆடுகள் விகாரமான அமைப்பு பெற்று அனைவரையும் கடித்து கொல்கிறது, க்ளோனிங் தவறாக சென்றால் அப்படி நடக்க வாய்ப்புள்ளது என்பதே கரு.ஆறறிவு உள்ள மனிதன் செய்யும் பிழைகளால் கூட இப்படி நடக்க வாய்ப்புள்ள போது,இது போன்ற பிழைகளே இல்லாமல் சந்ததிகள் உருவாகின்றன எப்படி என்பதை சற்று யோசித்தது உண்டா?

ஆனால் வரும் சிறு சிறு ஊனங்களை கூட அது சந்ததிக்கு வராமல் தடுக்க நமக்குள்ளயே ஒரு அமைப்பு செயல்பட்டு கொண்டிருகின்றதே அதை பற்று யோசித்தது உண்டா?

முஹம்மத் ஆஷிக் said...

ஸுபஹானல்லாஹ்...

இதுபோன்ற படைப்புகளை அவை படைக்கப்படும் விநோத நிலைகளை உற்று நோக்கி அறியும்போது இறைவனின் ஆற்றலை உணர முடிகிறது.

அட்டகாசமான படங்களுடன் அழகான பதிவு.

வாழ்த்துக்கள்.

( பின்குறிப்பு: இவ்விடுகையை தமிழ்மண சேர்க்கையளிப்பு நிலவரப் பட்டியலில் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அடியேனும் அதே வெயிட்டிங் லிஸ்டில்... pinnoottavaathi.blogspot.com)

கார்பன் கூட்டாளி said...

கருத்துக்களுக்கு நன்றி திரு ஆஷிக்.. தொடர்ந்து படியுங்கள்.

ashfa mowlana said...

Assalamu alaikum!
Very nice one. In every article of u, u have explained the facts in such a way, that any one can understand clearly about the power of god and the biology behind it, no matter they are very new to that chapter
May Allah be pleased with ur excellent work!
"our load u didnt create this aimlessly; exalted are u; then protect us from the punishment of the fire"

கார்பன் கூட்டாளி said...

wa alaikkum assalam,

sako. ashfa mowlana,

alhamthulillah, these are all to know about the power of god.hope i will keep writing these kind of article with god's grace.

thank u very much for your kind encouragement, keep reading it.

Post a Comment