Tuesday, August 31, 2010

ஒரு கடவுள் - அளவுகோல் விளங்காத நாத்திகவாதிகள்

கடவுள் பற்றிய மதங்களின் அடிப்படை மற்றும் நடுநிலை கொண்ட மனிதர்களின் நியாயமான புரிதல்கள்:

இயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயற்கை என்ற பெயர் வைத்தாலும் சரி, கடவுள் என்ற பெயர் வைத்தாலும் சரி இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருவது ஒரு மாபெரும் சக்தி என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் வைத்த பெயர் அது அவர்களுடைய நம்பிக்கை.

இந்த பிரபஞ்சம் (Universe) இயங்கிகொண்டு இருக்கிறது என்பது மட்டுமே நாம் அறிந்தவை. இது எங்கிருந்து வந்தது, எந்த சக்தியை கொண்டு இயங்குகின்றது என்பன நாம் அறியப்படாத உண்மைகள். ஆற்றல் எங்கிருந்தாவது நமக்கு கிடைத்தால் மட்டும் தானே நம்மால் இயங்க முடியும்.

பெருவெடி கொள்கை (Big Bang theory) என்பது அனைத்து அறிவியலாளர்காலும் ஏற்றுகொள்ளகூடிய ஒரு கொள்கையாக உள்ளது. அறிவியலாளர்கள் இப்பிரபஞ்சம் உருவானதை பற்றி பெரு வெடி கொள்கை அடிப்படையில் கூறும் பொழுது இப்பிரபஞ்சம் எப்பொழுதும் இருந்தது அல்ல மாறாக அதற்கு ஆரம்பம் என்பது இருக்கிறது என்றும் ஒரு அணு வெடித்து அதன் மூலமே இந்த ஆற்றலும் ஒளியும் உருவானதாக குருப்பிடுகின்றனர். எது இந்த பிரபஞ்சத்தை அதன் இயக்கத்தை ஆரம்பிக்க தூண்டியது (Stimulate) என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இல்லை.

இந்த பிரபஞ்சம் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடித்தும் வரைமுறை விதிகளுக்கு கட்டுப்பட்டும் இயங்குவது அறிவியலாலர்களிடையே ஒரு பெரிய வியப்பையே ஏற்படுத்துகிறது. ஒழுங்கு முறையை கடைபிடித்து நடக்கவேண்டிய தேவை என்ன என்பதை விளக்க தவறியவர்கலாகவே அறிவியலாளர்கள் உள்ளனர். அறிவியலாளர்களின் விளக்கங்களையும் எடுத்து கொண்டு தங்களுக்கு தேவையான மசாலாக்களையும் கலந்து ஒரு புதுமையான முறையில் விளக்கம் தருவதே நாத்திக கொள்கை. முழுமை இல்லாத அதனை கருத்தில் கொள்ளும் பொழுது பழங்காலங்களிருந்து சொல்ல பட்ட கடவுள் கொள்கைகள் எல்லாம் கற்பனை என்று சாதாரணமாக விட்டு செல்வது அறிவுடைமையாக இருக்காது. அனைத்தையும் மனதில் கொண்டு ஆராய்ந்தால் மட்டுமே கடவுள் கொள்கையில் உள்ள உண்மையை அறிய முடியும்.

ஆதிகாலம் முதல் மக்கள் கடவுளை வணங்கியே வந்திருக்கின்றனர். பழங்காலங்களில் மனிதர்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரிய சந்திரனை வணங்குபவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது பல குறிப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அதேபோல ஆதிகாலம் முதல் இன்று வரை ஒரு கடவுள் (One GOD) கொள்கை என்பது இருந்து வந்திருக்கின்றது என்பது குறுப்பிட தக்க விஷயம்.

சூரியன் சந்திரன் பாம்பு பல்லி என அனைத்தையும் கடவுளாக நினைத்த மனிதன் எல்லாவற்றிற்கும் பெரிய கடவுளாக ஒரு கடவுளை வைத்து அதற்கு உருவம் சொல்லாமலும் வணங்கி வந்துருக்கிறான், உயர்ந்த இடத்தில் மனிதன் வைத்த கடவுளுக்கு உருவம் கற்பிக்காததிலுருந்தே அவர் மனிதன் கற்பனைக்கும் நினைவுக்கும் அப்பால் உள்ள உருவத்திலயே மனிதனின் எண்ணத்தில் இருந்திருப்பார் என்று அறிய முடிகிறது.

ஒவ்வொரு மதங்களும் கடவுளை பற்றிய வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் உலகின் பெரிய மதங்களின் கடவுள் நம்பிக்கையை பார்த்தல் அவர்கள் பல்வேறு உருவங்களை கடவுளாக சித்தரித்தாலும் பெரிய கடவுளாக வைத்திருப்பது உருவம் இல்லாத ஒரு கடவுளை தான், இந்து மக்கள் பல்வேறு மாதிரி கடவுள் நம்பிக்கை வைத்திருந்தாலும் அவர்களில் அதிகார பூர்வமாகவும் பெரிய கடவுளாகவும் வந்திருப்பது சிவனை (Shiva) தான். அதே போல யூதர்கள் மோசஸ் (Moses) என்பவரை கடவுளின் மகனாகவும் கிறிஸ்தவர்கள் ஜீசஸ் (Jesus) என்பவரை கடவுளின் மகனாகவும் கூறினாலும் அதிலும் ஒரு கடவுள் கொள்கை உள்ளது. இஸ்லாமும் ஒரு கடவுள் பற்றியே குறிப்பிடுகின்றது. பழைய மதங்களில் ஒன்றான சௌராஷ்டிரா (Zoroastrian) மதத்திலும் ஒரு கடவுள் கொள்கை மையமாக இருப்பது குருப்பிடதக்கது. இவைகள் அனைத்திலும் உள்ள ஒரு ஒற்றுமையை பார்த்தல் மதகோட்பாடுகள் அடிப்படையில் எங்குமே கடவுளுக்கு உருவம் (No Image) கற்பிக்க படவில்லை. இதிலிருந்து கடவுள் என்பவர் மனிதனின் உருவம் பற்றிய சிந்தனைக்கும் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டவராகவும் மனிதர்களிடம் இருக்கின்றார்.

இவ்வுலகில் உள்ள மக்கள் வெவ்வேறு பெயர்களில் கடவுளை வணங்கினாலும் அனைவரும் தன்னையும் அறியாமல் அந்த ஒரு புத்திசாலித்தனமான அந்த சக்தியை தான் மையமாக வைத்து வணங்குகின்றனர்.

கடவுளை மனித உருவத்திலோ அல்லது மற்ற ஏதேனும் தெரிந்த உருவத்திலோ வைத்திருக்கும் நிலையே நாத்திக வாதிகளின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது, கடவுளை பூமியில் வைத்து பார்ப்பதாலயே மனிதர் உருவத்தில் கடவுள் இருந்திருப்பர் என்ற எண்ணம் வரும். பூமியை விட்டு வெளியில் போனால் மனித உருவமே இல்லை என்ற நிலையில் கடவுளை மனிதன் உருவத்தில் பார்ப்பது என்பது அறியாமையின் வெளிச்சம் மற்றும் நீளம் அகலம உயரம் போன்ற அளவுகளுக்கும் கண் காது மூக்கு போன்ற புலன்களுக்கு அப்பற்பட்டே அவர் இருக்க வேண்டும். இந்த வரைமுறையை சரியான முறையில் பொருத்தி பார்த்தல், மனிதன் உருவாக்கிய பல கடவுள்கள் இறந்து பொய் விடுவர்.

கடவுள் தான் அனைத்தையும் உருவாக்கினார் என்று கூறும்போது அந்த கடவுள் எங்கிருந்து வந்துருப்பர், கடவுளுக்கு முதலில் யார் வந்தது என்பது போன்ற கேள்விகள் நாத்திக வாதிகளால் எழுப்ப படுகின்றன.

முதல் கடைசி என்ற நிலை எப்பொழுது வரும், காலம் நேரம் என்ற சில அளவுகோல்கள் இருக்கும் போது தான் முதல் கடைசி என்ற வாதம் வரும். சற்று விசாலமான பார்வையில் பார்த்தல், மனிதர்களின் அளவு கோள்தான் காலம் நேரம் எல்லாம், இந்த அளவுகோலை தாண்டி இருப்பவர் தான் கடவுள், ஆக கடவுளுக்கு முதல் என்பதும் கிடையாது கடைசி என்பதும் கிடையாது என்பதை உணரலாம். இப்பிரபஞ்சத்தயே உருவாக்கியவர் கடவுள் எனும் போது இந்த அளவுகோளையும் உருவாக்கியவர் அவர் தான். அதை அவருக்கே பொருத்தி பார்ப்பது என்பது எப்படி சரியாகும். கடவுள் என்பவர் உருவானவர் இல்லை, எப்பொழுதும் இருப்பவர் என்பதே சரியான வாதமாக இருக்கும். ஆதி முடிவு என்ற நிலை கொண்டவர் நிச்சயம் கடவுளாக இருக்க வாய்ப்பே இல்லை.

அனைத்து அமைப்பின் கன கச்சிதமான ஒழுங்கு முறையை பார்க்கும் போது அவை ஒரு சக்திக்கு மட்டுமே கட்டுபடுகின்றன என்பதை அறிய முடிகிறது. பல கடவுள் என்ற வாதத்தை வைத்தல் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டு அமைப்பு சிதைந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் விளங்க முடியும். அதேபோல கடவுளுக்கு பெயர் இருப்பது என்பதும் முற்றிலும் ஏற்று கொள்ள முடியாத ஒரு வாதம். இந்த உலகில் நீங்கள் மட்டும் தான் இருக்குறீர் எனில் உங்களுக்கு எதற்கு பெயர். கடவுள் என்பவர் ஒருவர் எனில் அவருக்கு எதற்கு பெயர்.

கடவுள் எப்படி இருப்பார் என்று அனைவருக்கும் ஒரு கேள்வி எழும். எப்படி இருப்பார் என்பது நம்மால் புரிந்து கொள்ளமுடியவுல்லை என்றாலும் எப்படி இருக்க மாட்டார் என்று அறியமுடியும். மனித கற்பனை உருவத்தில் நிச்சயம் கடவுள் இருக்க வாய்ப்பு இல்லை. காலங்களையும் நேரத்தையும் அப்பாற்பட்டவர் எனும் போது (மனித கற்பனை இதற்குள் தான் இருக்கும்) அவரின் உருவமும் அப்பாற்பட்டதாக தான் இருக்கும்.

இப்பிரபஞ்சம் இயங்குவதற்கு ஆற்றல் எங்கிருந்து பெறுகின்றது? அதன் நீளம்? ஆரம்பம் முடிவு? அப்படி முடிவு என்று ஒன்று இருக்குமாயின் அப்படி முடிந்த பிறகு என்ன இருக்கும்? போன்றவற்றை மனிதன் அறிய வில்லை, அவற்றிற்கு மனிதனால் விளக்கமும் தர முடியவில்லை அதனால் பிரபஞ்சம் என்பதே பொய் என்று ஆகி விடுமா? பூமியை விட்டு சற்று வெளியிலிருந்து உங்கள் பார்வையை வையுங்கள் கடவுளின் இருப்பை அறியலாம்.

பழங்கால மனிதர்கள் கூட கடவுளின் இருப்பை நம்ப வில்லையெனில் அதில் தவறில்லை ஏனெனில் அவர்கள் அறிந்தது சூரியன், சந்திரன், பூமி, நட்சத்திரம் அவ்வளவுதான். ஆனால் அறிவியலில் முன்னேறிய தற்கால மனிதன் கடவுளின் முழு ஆற்றலையும் அமைப்பின் (System in physics) முழுமையையும் பார்ப்பவனாகவே உள்ளான் என்பது கடவுள் நம்பிக்கையில் ஒரு தெளிவை கொடுக்கிறது.

பெரியவர் சொல்லி கொடுத்தது போல் கடவுள் என்ற வார்த்தையை உங்கள் அகராதியில் தவறாக இட்டு வைத்திருப்பின் ஒரு மாபெரும் புத்திசாலி தனமாக சக்தி என்று மாற்றி கொள்ளுங்கள், நம் அனைவரின் எண்ணங்களும் செயல்களும் அவரின் பார்வையில் இருப்பதை உணருங்கள்.

Post Comment

61 Comments:

வால்பையன் said...

//பெரிய கடவுளாக ஒரு கடவுளை வைத்து அதற்கு உருவம் சொல்லாமலும் வணங்கி வந்துருக்கிறான், உயர்ந்த இடத்தில் மனிதன் வைத்த கடவுளுக்கு உருவம் கற்பிக்காததிலுருந்தே அவர் மனிதன் கற்பனைக்கும் நினைவுக்கும் அப்பால் உள்ள உருவத்திலயே மனிதனின் எண்ணத்தில் இருந்திருப்பார் என்று அறிய முடிகிறது. //


பழைய ஏற்பாடும் கடவுளால் அருளப்பட்ட வேதமே என்று ஆபிரஹாம மதங்கள் ஒப்பு கொள்கின்றன! அதில் தேவன் தனது சாயலில் மனிதனை படைத்தார் என்று இருக்கிறது! தனது சாயல் என்றால் கடவுளுக்கு உருவம் இருக்கு என்று தானே அர்த்தம்!?

வால்பையன் said...

வேர்டு வெரிபிகேஷன் எடுக்கலையா!, பின்னூட்டம் இட அயர்ச்சியா இருக்கு!, விவாதங்கள் தேவையில்லைனா அப்படியே இருக்கட்டும்! நானும் வேற வேலையை பாக்குறேன்!

Unknown said...

வோர்டு வெரிபிகேஷன் ஏற்கனவே முன்பே பல முறை எடுத்துவிட்டேன், இதில் என்ன குழப்பம் என்று புரியவில்லை. எத்தனை முறை அதை எடுக்க வேண்டும்.

தங்களுடைய முதல் கேள்விக்கு விரைவில் பதிலளிக்கிறேன்.

உமர் | Umar said...

//இயற்பியல் விதிப்படி(Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது //

Isolated System அப்படிங்கற வார்த்தைய விட்டுட்டீங்க. பாருங்க. அறிவியல் விதிகள் பற்றி பேசும்போது, எதையும் விட்டுரக்கூடாதுங்க.

வரட்டுங்களா? (நேரமின்மை மக்கா. தொடர்ந்து பின்னூட்டமிட இயலாது.)

Unknown said...

//Isolated System அப்படிங்கற வார்த்தைய விட்டுட்டீங்க. பாருங்க. அறிவியல் விதிகள் பற்றி பேசும்போது, எதையும் விட்டுரக்கூடாதுங்க. //

இங்கு விதியின் கரு மட்டுமே கொடுத்துள்ளேன், ஆயினும் system என்பது மட்டுமே குறுப்பிட தகுந்த வார்த்தை isolated system என்பது இல்லை.

Unknown said...

//தனது சாயல் என்றால் கடவுளுக்கு உருவம் இருக்கு என்று தானே அர்த்தம்!? //

**கடவுள் எப்படி இருப்பார் என்று அனைவருக்கும் ஒரு கேள்வி எழும். எப்படி இருப்பார் என்பது நம்மால் புரிந்து கொள்ளமுடியவுல்லை என்றாலும் எப்படி இருக்க மாட்டார் என்று அறியமுடியும். மனித கற்பனை உருவத்தில் நிச்சயம் கடவுள் இருக்க வாய்ப்பு இல்லை. **

கடவுளுக்கு உருவம் இல்லை என்று நான் கூறவே இல்லை, எப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதை மட்டுமே கூறியுள்ளேன்.

ஜில்தண்ணி said...

ஒரு சின்ன செடி வளர்ப்பதே எவ்வளவு பெரிய காரியம்,இந்த எல்லையில்லா மாபெரும் பிரபஞ்சப் புதிரை கண்டிப்பாக மிகப் புத்திசாலித்தனமான ஒரு சக்தி தான் உருவாக்கியிருக்க முடியும்

அந்த சக்திக்கு கடவுள்னு பேரு வச்சிக்கலாம் அவ்வளவுதான் :)

வால்பையன் said...

// மனித கற்பனை உருவத்தில் நிச்சயம் கடவுள் இருக்க வாய்ப்பு இல்லை. //


கற்பனை என்பது என்ன? அது எவ்வாறு யாரால் உருவாக்கப்டுகிறது,

மனிதனுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு!

மனிதனுக்கும் கற்பனைக்கும் சம்பந்தம் உண்டு!

கற்பனைக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாதா?

கடவுள் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும், ஆனா நீ என்ன கற்பனை பண்றியோ அப்படி வர மாட்டேன் என்பது தான் பெரிய ஆள் என காட்ட நினைக்கும் திமிர் தானே, ஒரு கடவுளுக்கே இம்புட்டு இருந்தா மனிதனுக்கு எவ்ளோ இருக்கும்!

உமர் | Umar said...

//ஆயினும் system என்பது மட்டுமே குறுப்பிட தகுந்த வார்த்தை isolated system என்பது இல்லை.//

ஐயா! நீங்கள் குடுத்திருக்கும் விதி Equilibrium Thermodynamics ல் உள்ளது. Equilibrium Thermodynamics ன் அடிப்படை Closed System என்பதாகும். Closed System என்பது Isolated System என்றும் கூறப்படும்.

Open System தொடர்பான Thermodynamics , Non-Equilibrium வகையைச் சார்ந்தது. பாருங்கள்

உங்கள் பதிவு முதல் பத்தியிலேயே அடிவாங்கி விட்டது. உங்களைப் போன்ற மதவாதிகளை எல்லாம் பார்க்கும்போது, எனக்குத் தோன்றுவது ஐயோ பாவம். கடவுள் உண்டுன்னு சொல்றதுக்கு எவ்வளவு பொய்யெல்லாம் சொல்லவேண்டியது இருக்கு. பாருங்க.

இதையும் பாருங்க. ஸ்டீபன் ஹாக்கிங் அடிச்சி சொல்லியிருக்காரு, உலகம் உருவாக கடவுள் தேவையில்லை என்று.

சீக்கிரம் அந்த புக்கையும் வாங்கி படிங்க. அதுலேர்ந்து நாலு வார்த்தையை மட்டும் உருவிப் போட்டு, அவரும் கடவுள் இருக்குன்னு சொல்லியிருக்காருன்னு கதை விட வசதியா இருக்கும்.

Unknown said...

//கற்பனைக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாதா?//

சம்பந்தம் இருப்பதனால் தான் மனிதன் பல கடவுளை உருவாக்கினான்.

நீங்கள் பார்த்திராத அறிந்திராத உருவம் உங்கள் நினைவில் வராது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். கடவுளின் உருவத்தை அறிந்துகொள்ள விருப்ப பட்ட மனிதன் கடவுளுக்கு மனித உருவம் கொடுத்தான்.

நீங்கள் எவ்வளவு தான் கற்பனை செய்தாலும் பார்த்த உருவம் மட்டுமே எண்ணத்தில் நிற்கும்.

Unknown said...

//ஐயா! நீங்கள் குடுத்திருக்கும் விதி Equilibrium Thermodynamics ல் உள்ளது. Equilibrium Thermodynamics ன் அடிப்படை Closed System என்பதாகும். Closed System என்பது Isolated System என்றும் கூறப்படும்.

Open System தொடர்பான Thermodynamics , Non-Equilibrium வகையைச் சார்ந்தது. //

Open System வேறு Isolated System வேறு.

Open System என்பது பொருள் மற்றும் சக்தியை பரிமாறி கொள்வது(Excange). உதாரணம்: எலக்ட்ரானிக் பொருள்கள்.

Isolated System என்பது பொருள், சக்தி என எதையும் பரிமாறி கொள்ளாது. உதாரணம்: இந்த அண்டம்.

Closed System என்பது சக்தியை மட்டும் பரிமாறி கொள்ளும், பொருளை அல்ல. உதாரணம்: பூமி.

நீங்கள் எந்த System தை எடுத்தாலும் அது பரிமாரிகொள்ளுதல் (Exchange of Heat or Matter) பற்றி பேசுகிறதே தவிர எந்த ஒரு பொருளும் உருவாக்க முடியும் என்று கூறவில்லை.

//உங்கள் பதிவு முதல் பத்தியிலேயே அடிவாங்கி விட்டது.//

என்னுடைய முதல் பத்தியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

**இயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது.**

ஒரு சக்தியை ஆக்க முடியும் என்பதற்கான ஆதாரத்தை தந்தால் மட்டுமே நீங்கள் கூறும் அடிவாங்கி விட்டது என்ற வார்த்தை சரியாகும். அர்த்தம் இல்லாத ஒரு பதிலை தந்துவிட்டு அடிவாங்கி விட்டது என்பது எந்த வகையில் சரி என்று புரியவில்லை. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

// எனக்குத் தோன்றுவது ஐயோ பாவம். கடவுள் உண்டுன்னு சொல்றதுக்கு எவ்வளவு பொய்யெல்லாம் சொல்லவேண்டியது இருக்கு.//

பொய் என்று கூறும் நீங்கள் எது பொய் என்று கூறவும் கடமை பட்டுள்ளீர்கள், எது என்று கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

// இதையும் பாருங்க. ஸ்டீபன் ஹாக்கிங் அடிச்சி சொல்லியிருக்காரு, உலகம் உருவாக கடவுள் தேவையில்லை என்று.//

உங்கள் ஸ்டீபன் ஹாக்கிங் ன் வார்த்தை:
"Because there is a law such as gravity, the Universe can and will create itself from nothing," Hawking writes.

“ஈர்ப்பு விசையின் காரணமாக, இந்த அண்டம் ஒன்றும் இல்லாத பொருளிலிருந்து தானாகவே உருவானது”

இதை யார் வேண்டுமானாலும் கூறலாம், அது எப்படி, எதற்காக வரைமுறை விதிகளை பின்பற்ற வேண்டும், உருவாக எது தூண்டியது.?

ஸ்டீபன் ஹாக்கிங் அண்டத்திற்கு சொல்லி கொடுத்தாரோ?

//சீக்கிரம் அந்த புக்கையும் வாங்கி படிங்க. அதுலேர்ந்து நாலு வார்த்தையை மட்டும் உருவிப் போட்டு, அவரும் கடவுள் இருக்குன்னு சொல்லியிருக்காருன்னு கதை விட வசதியா இருக்கும்.//

** Isaac Newton, who developed the theory of gravity, historically argued that his science could only explain so much of the universe's behavior, but not its creation.

"Gravity explains the motions of the planets, but it cannot explain who set the planets in motion," he wrote..**

பாருங்கள். ஈர்ப்பு விசையை கண்டரிந்தவரின் கூற்றை.

கடவுளை பொய்ப்பிக்க இனியாவது சரியான வாதத்தை வைப்பீர்கள், அல்ல வைத்த வாதத்திற்கு சரியான பதில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறன்.

உமர் | Umar said...

//இயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது//

இந்த விதி Closed System இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும். உலகு உருவானது Closed Systemமிலா?

இதுதான் Thermodynamics First Law.
"In any process in an isolated system, the total energy remains the same."
The first law of thermodynamics, an expression of the principle of conservation of energy, states that energy can be transformed (changed from one form to another), but cannot be created or destroyed[20].
It is usually formulated by saying that the change in the internal energy of a closed thermodynamic system is equal to the amount of heat supplied to the system, minus the amount of work done by the system on its surroundings.

----
இதுதான் Non-Equlibrium Thermodynamics
Non-equilibrium thermodynamics is a branch of thermodynamics that deals with systems that are not in thermodynamic equilibrium. Most systems found in nature are not in thermodynamic equilibrium because they are not in stationary states, and are continuously and discontinuously subject to flux of matter and energy to and from other systems.

--
மேலும் விபரங்களுக்கு

உமர் | Umar said...

//பாருங்கள். ஈர்ப்பு விசையை கண்டரிந்தவரின் கூற்றை. //

நியூட்டன் முன்வைத்த Theory of Gravity, வெள்ளி உள்ளிட்ட சில கிரகங்களில், சரியான முடிவுகளைக் கொடுக்கவில்லை என்பது தெரியுமா? பின்பு, ஐன்ஸ்டீன் Theory of Relativity மூலம் அதனை சரிசெய்தது தெரியுமா? பின்பு, Stephen Hawking ஆராய்ந்தத் துறைகளான theoretical cosmology and quantum gravity பற்றியும் தெரியுமா? அவர் கேம்ப்ரிட்ஜ் பலகலைக்கழகத்தில் நியூட்டன் வகித்த அதே பணியில் இருந்ததாவது தெரியுமா?

அவர் சார்ந்த துறையில், தனது முடிவுகளை கூறுகின்றார். நியூட்டன் தன்னிடம் இருந்த தகவல்களின் அடிப்படையில் கூறினார். அதற்கு பின்பு பல ஆராய்ச்சியாளர்கள், அதனை மேலும் ஆராய்ந்து இன்னும் பல தகவல்களை கொண்டு தங்களது முடிவுகளை அறிவிக்கின்றனர்.

உங்கள் வேத புத்தகத்திற்கு மாற்றமாக இருப்பதாலேயே, ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி ஒன்றும் அறியாவிட்டாலும் ஏதாவது சொல்லவேண்டும் என்று ரொம்பதான் ஆர்வமாய் இருக்கின்றீர்கள். ஆனால், நீங்கள் கொடுப்பது தவறான தகவலாகி விடுகின்றது.

Unknown said...

//இதுதான் Non-Equlibrium Thermodynamics
Non-equilibrium thermodynamics is a branch of thermodynamics that deals with systems that are not in thermodynamic equilibrium. Most systems found in nature are not in thermodynamic equilibrium because they are not in stationary states, and are continuously and discontinuously subject to flux of matter and energy to and from other systems. //

இதில் அண்டம் என்பது non equilibrium thermodynamics ல் அடங்கும் என்று எங்கு உள்ளது?

நீங்கள் ஏன் குழப்பி கொள்கிறீர்கள் என்று புரியவில்லை, உங்களுடைய வாதப்படி ஒரு பொருளையோ அல்லது சக்தியையோ உருவாக்க முடியும் என்கிறீர்களா அல்லது முடியாது என்கிறீர்களா???

முடியாது என்பது என்னுடைய வாதம், முடியும் என்றால் சரியான சான்று தரவும்.

உமர் | Umar said...

Most systems found in nature are not in thermodynamic equilibrium

குதிரையை தண்ணீர் வரைதான் அழைத்துச் செல்ல முடியும்; குடிக்க வைக்க முடியாது.

Unknown said...

//உங்கள் வேத புத்தகத்திற்கு மாற்றமாக இருப்பதாலேயே, ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி ஒன்றும் அறியாவிட்டாலும் ஏதாவது சொல்லவேண்டும் என்று ரொம்பதான் ஆர்வமாய் இருக்கின்றீர்கள்.//

நான் பதிவில் இட்டவைகளில் தவறேன்று ஓன்றை கூட சுட்டி காட்டவோ தகுந்த ஆதாரத்துடன் மறுக்கவோ இதுவரையில் இல்லை, ஆனால் இப்படி வீண் பழி போடுவதில் பயன் என்ன?

Unknown said...

//Most systems found in nature are not in thermodynamic equilibrium //

Most system means. is it universe or something else? How do u say this is universe?

You can frankly tell me the answer: Is it possible to create a energy or matter?

or

not possible to create energy or matter?

This is your turn.

உமர் | Umar said...

//நான் பதிவில் இட்டவைகளில் தவறேன்று ஓன்றை கூட சுட்டி காட்டவோ தகுந்த ஆதாரத்துடன் மறுக்கவோ இதுவரையில் இல்லை, ஆனால் இப்படி வீண் பழி போடுவதில் பயன் என்ன? //

நீங்கள் உங்கள் பதிவில் முதலில் ஒரு இயற்பியல் விதியினை கூறி அதன் அடிப்படையில் சில விஷயங்களை கூறியிருக்கின்றீர்கள். அந்த விதி, நீங்கள் கூறிய சூழலுக்குப் பொருந்தாது என்று விளக்கியுள்ளேன். உங்கள் பதிவின் அடிப்படையே தகர்ந்தபின்பு பிறகு எதைப் பற்றி பேசுவது?

Unknown said...

நான் பிடித்த முயலுக்கு பானியில் இருக்கிறது, நான் சொன்னதற்கு பதில் தரவில்லை,
மறுக்க வருவதை தெளிவாக கூறுங்கள்.

1) ஒரு சக்தியை உருவாக்க முடியும் என்கிறீர்களா?

அல்லது

2) முடியாது என்கிறீர்களா?

இப்படியே திசை திருப்பி கொண்டிருப்பதில் பயன் இல்லை.

உமர் | Umar said...

முயலுக்கு மூணு காலுன்னு சொல்றவங்க இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். முக்கா காலுன்னு சொல்லுற ஆள இப்பதான் பாக்குறேன்.

அந்த விதியே இங்க செல்லாது அப்படிங்குறேன். திரும்ப அந்த விதியையே பிடிச்சி தொங்கிக்கிட்டிருந்தா என்ன பண்றது?

Unknown said...

//அந்த விதியே இங்க செல்லாது அப்படிங்குறேன். திரும்ப அந்த விதியையே பிடிச்சி தொங்கிக்கிட்டிருந்தா என்ன பண்றது? //

தங்களை பற்றி திசை திருப்புபவர் என்று கேள்வி பட்டிருகின்றேன், இங்கு தான் பார்க்கிறேன், தங்களின் செத்து போன கொள்கையை வைத்துக்கொண்டு அதை நியாய படுத்த நீங்கள் படும் பாடு வர்ணிக்க முடியாதது.

தங்களை விட வெப்ப ஆற்றல் விதிகள் எனக்கு நன்றாகவே தெரியும். விளக்கம் கொடுக்காமல் 'செல்லாது' என்று கூறுவது அர்த்தமற்றது. ஒரு ஆற்றலை உருவாக முடியாது என்று நான் கூறிய கருத்துக்கள் தவறு என்று நிரூபித்தால் நான் எழுதுவதை நிறுத்தி கொள்கிறேன், இல்லையெனில் தாங்கள் நிறுத்தி கொள்ள தயாரா? முடிந்தால் நான் கேட்ட கேள்விக்கு பதில் தரவும். இல்லையெனில் தயவு செய்து விதண்டா வாதம் புரிந்து என்னுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

நீங்கள் நிரூபிக்க வேண்டியது, "ஒரு ஆற்றலை அல்லது பொருளை உருவாக்க முடியும்". என்பதாகும். அதற்கு நீங்கள் வெப்ப ஆற்றல் கொள்கையை எடுத்து கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி.

உமர் | Umar said...

//தங்களை பற்றி திசை திருப்புபவர் என்று கேள்வி பட்டிருகின்றேன்//

எப்பொழுதுமே கருத்து ரீதியாக பதில் தர இயலாதபோது, இப்படி தனிப்பட்ட முறையில் பேசுவதுதானே மதவாதிகளின் வேலை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். தனிப்பட்ட விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதில்லை.

//தங்களை விட வெப்ப ஆற்றல் விதிகள் எனக்கு நன்றாகவே தெரியும்.//

நிஜமாகவே வெப்ப ஆற்றல் விதிகள் அறிந்தவர்கள், பாடப் புத்தகம் தாண்டியும் படித்தவர்கள், வாயால் சிரிக்க மாட்டார்கள்.

diction said...

ஒரு சின்ன செடி வளர்ப்பதே எவ்வளவு பெரிய காரியம்,இந்த எல்லையில்லா மாபெரும் பிரபஞ்சப் புதிரை கண்டிப்பாக மிகப் புத்திசாலித்தனமான ஒரு சக்தி தான் உருவாக்கியிருக்க முடியும்.

அந்த சக்திக்கு கடவுள்னு பேரு வச்சிக்கலாம் அவ்வளவுதான் :)


ஒரு சின்ன செடி வளர்பது பெரிய விஷயம் (தங்களுக்கு) அந்த சின்ன செடி இயல்பாக வளர்வது பெரிய விஷயமா ?

ஒரு சக்தி உருவாக்கியிருக்க முடியும், அது ஏன் புத்திசாலிச்த்தனமான சிக்தியாக இருக்க வேண்டும், அது முட்டாளான சக்தியாக இருக்க கூடாதா ?

diction said...

Quote:
இந்து மக்கள் பல்வேறு மாதிரி கடவுள் நம்பிக்கை வைத்திருந்தாலும் அவர்களில் அதிகார பூர்வமாகவும் பெரிய கடவுளாகவும் வந்திருப்பது சிவனை (Shiva) தான்.

இதற்கான குறிப்புகளை விரிவாக்கவும். இந்து மதம் என்பது ஐரோப்பியர்களின் வருகைக்கு பின் அமைந்த கூட்டமைப்பாகும். பல இடங்களில் தாய் எனக் கொள்ளப்படும் அம்மன் தெய்வங்கள் தான் அவர்கள் வழிபடிகின்றனர், அதாவது குல தெய்வம்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே

-திருமூலர் (திருமந்திரம்>

diction said...

இந்த பிரபஞ்சம் (Universe) இயங்கிகொண்டு இருக்கிறது என்பது மட்டுமே நாம் அறிந்தவை. இது எங்கிருந்து வந்தது, எந்த சக்தியை கொண்டு இயங்குகின்றது என்பன நாம் அறியப்படாத உண்மைகள்.

ஏன் அது அறிப்படாத பொய்களாக இருக்கக் கூடாது ? "அனைத்தும் தங்கும் / தாங்கும் நிலையை பிரபஞ்சம் எனப் பொருள் கொள்கின்றோம்" The state that everything exists is perceived as Universe.

diction said...

Qoute:
ஆற்றல் எங்கிருந்தாவது நமக்கு கிடைத்தால் மட்டும் தானே நம்மால் இயங்க முடியும்.

இயக்கம் என்றால் என்ன என்பதை விரிவாக்கவும். நாம் இயங்குவதற்காக செயல்படும் ஆற்றல்கள் எவை ? அது எவ்வாறு நம் இயக்கத்தை செயல்படுத்துகின்றது ?

diction said...

ஒரு மாபெரும் புத்திசாலி தனமாக சக்தி என்று மாற்றி கொள்ளுங்கள், நம் அனைவரின் எண்ணங்களும் செயல்களும் அவரின் பார்வையில் இருப்பதை உணருங்கள்.

அந்த புத்திசாலிதனமான சக்தி (உருவமற்ற ஓர் கடவுள்) எப்பொழுது "அவராக" மாறினார் ?

Aashiq Ahamed said...

சகோதரர்கள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

-----------------------------------------------------
கும்மி சொன்னது…

எப்பொழுதுமே கருத்து ரீதியாக பதில் தர இயலாதபோது....
-----------------------------------------------------

??????????????

யார் பதில் சொல்லவில்லை? என்று அறிந்து கொள்ள,

http://ethirkkural.blogspot.com/2010/08/synthetic-cell.html
http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html
http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories.html
http://ethirkkural.blogspot.com/2010/05/evolution-stheory-harry-potter-stories_29.html
http://ethirkkural.blogspot.com/2010/04/evolution-theory.html
http://ethirkkural.blogspot.com/2010/04/evolution-theory.html

நன்றி....

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சகோதரர்கள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

-----------------------------------------------------
கும்மி சொன்னது…

எப்பொழுதுமே கருத்து ரீதியாக பதில் தர இயலாதபோது....
-----------------------------------------------------

??????????????

யார் பதில் சொல்லவில்லை? என்று அறிந்து கொள்ள,

http://ethirkkural.blogspot.com/2010/08/synthetic-cell.html
http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html
http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories.html
http://ethirkkural.blogspot.com/2010/05/evolution-stheory-harry-potter-stories_29.html
http://ethirkkural.blogspot.com/2010/04/evolution-theory.html
http://ethirkkural.blogspot.com/2010/04/evolution-theory.html

நன்றி....

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

உமர் | Umar said...

//யார் பதில் சொல்லவில்லை? என்று அறிந்து கொள்ள, //

ஆமாம் மக்களே, Stephen Jay Gould ன் வாக்குமூலத்தைப் பற்றியும், craig venter ன் ஆராய்ச்சியின் முடிவைப் பற்றியும் பதிவில் சொல்லாததைப் பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக அந்த பதிவுகளைப் பாருங்கள். ஆதாரங்களை காணாதது போல் செல்வது எப்படி என்பதையும் கடைசி லிங்கில் காணலாம்.

G u l a m said...

யாரப்பா...அங்கே கும்மி ஐயாவ., பத்தி தப்பா சொன்னது., அவரு (கேள்வி கேட்காத) அனைத்திற்கும் பதில் தெளிவாக சொல்லிட்டார்ங்க....

Unknown said...

நண்பர் திரு.diction அவர்களே,

//இயக்கம் என்றால் என்ன என்பதை விரிவாக்கவும். நாம் இயங்குவதற்காக செயல்படும் ஆற்றல்கள் எவை ? அது எவ்வாறு நம் இயக்கத்தை செயல்படுத்துகின்றது ?//

சுற்றுதல் என்பதே இயக்கம், இயக்கம் இல்லையானால் உயிரினமே இல்லை.

//அந்த புத்திசாலிதனமான சக்தி (உருவமற்ற ஓர் கடவுள்) எப்பொழுது "அவராக" மாறினார் ?//

கட்டுரையை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். முதல் இறுதி என்ற நிலையில் மட்டுமே, மாறினார் அப்படி இருந்தார் இப்படி இருந்தார் என்ற கேள்வி வரும்.

ஹைதர் அலி said...

அண்ணே கும்மி எப்பவையுமே வேட்டியாகத்தான் கும்மி அடிப்பாரு

ஹைதர் அலி said...

test

ஹைதர் அலி said...

டெச்ட்

diction said...

//சுற்றுதல் என்பதே இயக்கம்,இயக்கம் இல்லையானால் உயிரினமே இல்லை.//

சுற்றுதல் என்பதை மேலும் விரிவாக்கவும். உயிரற்றவைகளுக்கு இயக்கம் இருக்கிறதா ? இன்னும் இதைச் சார்ந்த இரு கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், நாம் இயங்குவதற்காக செயல்படும் ஆற்றல்கள் எவை ? அது எவ்வாறு நம் இயக்கத்தை செயல்படுத்துகின்றது ?

//கட்டுரையை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். முதல் இறுதி என்ற நிலையில் மட்டுமே, மாறினார் அப்படி இருந்தார் இப்படி இருந்தார் என்ற கேள்வி வரும்.//

நான் கேட்டது உருவமற்ற ஒன்றை "அவர்" எனும் மாந்தனை குறிப்பிடும் உயர்தினை பொருளாக குறிப்பிட காரணம் என்ன ? நாயை அவர் என்று குறுப்பிடுகிறீர்களா ?

diction said...

//மாறினார் அப்படி இருந்தார் இப்படி இருந்தார் என்ற கேள்வி வரும்.//

Quote:
பெருவெடி கொள்கை (Big Bang theory) என்பது அனைத்து அறிவியலாளர்காலும் ஏற்றுகொள்ளகூடிய ஒரு கொள்கையாக உள்ளது. அறிவியலாளர்கள் இப்பிரபஞ்சம் உருவானதை பற்றி பெரு வெடி கொள்கை அடிப்படையில் கூறும் பொழுது இப்பிரபஞ்சம் எப்பொழுதும் இருந்தது அல்ல மாறாக அதற்கு ஆரம்பம் என்பது இருக்கிறது என்றும் ஒரு அணு வெடித்து அதன் மூலமே இந்த ஆற்றலும் ஒளியும் உருவானதாக குருப்பிடுகின்றனர். எது இந்த பிரபஞ்சத்தை அதன் இயக்கத்தை ஆரம்பிக்க தூண்டியது (Stimulate) என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இல்லை.

இயக்கம் அப்பொழுது தான் ஆரம்பித்தது என்கிறீர்களா ? அதாவது தூண்டுதலுக்கு பிறகு ? தூண்டுதல் எதனால் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு விளக்கம் இல்லை, ஆகையால் அறியப்படாத புத்திசாலித்தனமான (உருவமற்ற ஒன்றுக்கு ஏது புத்திசாலித்தனம் !) ஒன்று பெருவெடிப்பை தூண்டியது ! அவ்வாறா ?

Unknown said...

அவசரகால விடுப்பில் சென்றுவிட்டதால் கருத்துக்களை பிரசுரிக்க முடியவில்லை, மன்னிக்கவும், பதில் விரைவில் தருகிறேன்.

Unknown said...

//இயக்கம் அப்பொழுது தான் ஆரம்பித்தது என்கிறீர்களா ?//

அப்படித்தான் இருக்க முடியும்.பெருவெடி கொள்கைபடியும் அதுவே.

//தூண்டுதல் எதனால் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு விளக்கம் இல்லை, ஆகையால் அறியப்படாத புத்திசாலித்தனமான (உருவமற்ற ஒன்றுக்கு ஏது புத்திசாலித்தனம் !) ஒன்று பெருவெடிப்பை தூண்டியது ! அவ்வாறா ?//

உருவம் உள்ளதா அல்லது உருவம் அற்றதா என்பதை எப்படி கூற முடியும்.இவ்வளவு பெரிய உலகை உருவாகியது எனும் போது அது புத்திசாலி என்பதில் என்ன சந்தேகம்.

RMD said...

//ஆதிகாலம் முதல் மக்கள் கடவுளை வணங்கியே வந்திருக்கின்றனர். பழங்காலங்களில் மனிதர்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரிய சந்திரனை வணங்குபவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது பல குறிப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அதேபோல ஆதிகாலம் முதல் இன்று வரை ஒரு கடவுள் (One GOD) கொள்கை என்பது இருந்து வந்திருக்கின்றது என்பது குறுப்பிட தக்க விஷயம்//
உங்கள் பதிவுகள் அனைத்திலுமே எந்த ஒரு ஆதாரத்தையும்(மூலங்கள்) காட்டுவதில்லை.

மனிதன் ஆதி காலம் முதல் என்றால் அவன் தோன்றிய காலம் முதல் ஒரு இறைக் கோள்கையை(யும்) கொண்டிருந்தான் என்பது என்பது உஙகள் வாதம்.

ஆபிரஹாமிய மதங்களின் படி ஆதம் ஏவாள் படைப்பைக் கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இது உண்மையாக இருக்க முடியும்.
உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு இன மக்கள் உருவாகி இருந்தால்,(அது திற்மையான படைப்போ அல்லது பரிணாமமோ) இது உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டா?.

நீங்கள் சொன்ன ஆதி காலம் முதல் ஓரிறை கொள்கை இருந்தது என்பதை எந்த ஆதாரத்துடன் கூறுகிறீர்கள்?

Unknown said...

//உங்கள் பதிவுகள் அனைத்திலுமே எந்த ஒரு ஆதாரத்தையும்(மூலங்கள்) காட்டுவதில்லை//
இனி வரும் பதிவுகளில் இணைக்க முயல்கிறேன்.

//ஆபிரஹாமிய மதங்களின் படி ஆதம் ஏவாள் படைப்பைக் கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இது உண்மையாக இருக்க முடியும்.//

மதங்களில் உள்ளது என்பதற்காக அனைத்தும் பொய் என்று ஆகி விடுமா? ஆதாம் ஏவாள் கதையை தவிர மற்ற எந்த வகையிலும் ஆண் பெண் அமைப்பு எப்படி ஏற்பட்டது என்பதை நிரூபிக்க முடியுமா?

// உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு இன மக்கள் உருவாகி இருந்தால்,(அது திற்மையான படைப்போ அல்லது பரிணாமமோ) இது உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டா?.//

நீங்கள் கூறும் கற்பனையை பரிணாமமே ஏற்று கொள்ளாது. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு குரங்குகள் மனிதனாக மாறியதாக நினைத்தால் அது ஏன் அனைத்து இடத்திலும் மனிதனாக மாற வேண்டும், வேறு வேறு உயிரினமாக அல்லவா மாறி இருக்கும்.

// நீங்கள் சொன்ன ஆதி காலம் முதல் ஓரிறை கொள்கை இருந்தது என்பதை எந்த ஆதாரத்துடன் கூறுகிறீர்கள்?//

இதற்கு பதில் என்னுடைய பதிவிலேயே உள்ளது.

|முழுமை இல்லாத அதனை கருத்தில் கொள்ளும் பொழுது பழங்காலங்களிருந்து சொல்ல பட்ட கடவுள் கொள்கைகள் எல்லாம் கற்பனை என்று சாதாரணமாக விட்டு செல்வது அறிவுடைமையாக இருக்காது.|

தற்போது நம்மிடம் உள்ள அனைத்து வேதங்களிலும் இந்த ஓரிறை கொள்கை நிரம்பி உள்ளது. பழைய வேதமான பழைய ஏற்பாட்டிலும் உள்ளது.

RMD said...

//தற்போது நம்மிடம் உள்ள அனைத்து வேதங்களிலும் இந்த ஓரிறை கொள்கை நிரம்பி உள்ளது. பழைய வேதமான பழைய ஏற்பாட்டிலும் உள்ளது//

எல்லாம் மனிதர்கள் செய்த ஏற்பாடுதான், பழையது புதியது,கடைசி எல்லாமே.

// நீங்கள் சொன்ன ஆதி காலம் முதல் ஓரிறை கொள்கை இருந்தது என்பதை எந்த ஆதாரத்துடன் கூறுகிறீர்கள்?//

//இதற்கு பதில் என்னுடைய பதிவிலேயே உள்ளது.//
மனிதர்கள் தோன்றியது எப்படி என்பது ஒரு விவாதத்துற்குறிய விஷயமே.ஆபிரஹாமிய மத்த்தினர் ஓரிறைக் கொள்கை ,மற்றும் ஒரு தாய் தந்தை என்ற கருத்தை ஏற்றுக் கொண்டு உள்ளனர்.

இந்து மற்றும் பிற மதத்தினர் பல தெய்வ வழிபாடு, பல தரப் பட்ட மனிதர்கள் மொத்தமாக படக்கப் பட்டதாக கருதுகிறார்கள்.மறு பிறப்பு என்பதையும் நம்புகிறார்கள். நான் ஓரிறைக் கொள்கை முதலாவதா அல்லது பல இறைக் கொள்கை முதலாவதா என்பதை பற்றிய எந்த மத விருப்பு வெறுப்பு இல்லாமல் அறிய விழைகிறேன்.

நீங்கள் ஓரிறைக் கொள்கையே முத்லில் அதாவது ஆதி மனிதன் தோன்றியது முதல் இருந்து வருகிறது என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லாவா?

ஓரிறைக் கொள்கையின் கால வரிசை(டைம் லைன்) பற்றி கொஞ்சம் சொல்லுஙகள்.

ஓரிறைக் கொள்கையை ஆதார பூர்வமான வரலாற்றில் முதலில் பின்பற்றியவர்கள் யார்?

RMD said...

//நீங்கள் கூறும் கற்பனையை பரிணாமமே ஏற்று கொள்ளாது. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு குரங்குகள் மனிதனாக மாறியதாக நினைத்தால் அது ஏன் அனைத்து இடத்திலும் மனிதனாக மாற வேண்டும், வேறு வேறு உயிரினமாக அல்லவா மாறி இருக்கும்.//

ஆக பரினாமம் ,கடவுள் படப்பு இரண்டுமே மனிதர்கள் ஒரே இடத்தில் உருவாகி உலகம் முழவதும் பரவி உள்ளதாக கூறுகின்றது.

http://en.wikipedia.org/wiki/Early_human_migrations

என் கருத்தை பரிணாம்ம் கொண்டு முருக்கிறீர்கள்.நீங்கள் ஏன் இன்டெலிஜேன்ட் டிசைன் கொள்கை மூலமாக மறுக்கக் கூடாது?.

ஏன் ஏக இன்டெலிஜென்ட் கடவுள் ஒரு ஜோடி ஆண் பெண்ணை மட்டும் படைத்து அவர்கள் சந்ததி மூலமாக உலகை நிரப்ப வேண்டும்?.

நிறைய இன்டெலிஜென்ட் கடவுள்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு கடவுள் ஒரு இடத்தில் ஒரு மனிதனை படக்கிறார். இன்னொரு கடவுள் ( சரி சாத்தான் என்று கூட வத்துக் கொள்ளுங்கள்)இன்னொரு இடத்தில் படைக்கலாம் அல்லவா.

அப்படி தன் இனத்தை படத்த கடவுளை ப‌டைத்த கடவுளை அவ்வின மக்கள் வணங்கி வருகிறார்கள் என்பது கொஞ்சம் அறிவுப் பூர்வமான புரிதல் இல்லையா. இன்னும் பேசுவோம்.

Unknown said...

//நிறைய இன்டெலிஜென்ட் கடவுள்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.//

இப்பிரபஞ்சத்தை ஒப்பிடும் பொழுது இந்த பூமி ஒரு அற்பத்திலும் அற்பம், அப்படி அற்ப பூமியை படைக்க இரண்டு கடவுள் எனில் இப்பிரபஞ்சத்தை படைக்க தோராயமாக நான்கு ஐந்து கோடி கடவுள்கள் தேவை பட்டிருக்கும்.

அப்படி இருந்தும் எப்படி இந்த பிரபஞ்சம் எந்த ஒரு நெருடலும் இல்லாமல், சரியான முறையில் இயங்குகிறது.?

மேலும் பல கடவுள் என்றால் அவர் எப்போது வந்தார், யார் உருவாக்கியது, யார் கட்டு படுத்துவது, ஆரம்பம் முடிவு போன்ற கேள்விகள் நிச்சயம் வரும். கடவுளை படைத்த கடவுள் என்று கூருவீர்கலானால், கடவுள் படைத்தது கடவுள் அல்ல அதற்கு பெயர் படைப்பு. மனிதனை போன்ற ஒன்று.

Unknown said...

//எல்லாம் மனிதர்கள் செய்த ஏற்பாடுதான், பழையது புதியது,கடைசி எல்லாமே.//

அது உங்கள் கருத்து, அது தான் உண்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

//ஓரிறைக் கொள்கையின் கால வரிசை(டைம் லைன்) பற்றி கொஞ்சம் சொல்லுஙகள்.//

வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.

கையேடு said...

//அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது.//

// இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருவது ஒரு மாபெரும் சக்தி என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.//



1.இவ்வளவு பெரிய ஆற்றல் என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள்?

2. ஆற்றல் மிகுந்த சக்தி என்றால் என்ன பொருள்?

3. ஆற்றல் என்ற ஒன்றை உருவாக்கி பின்னர் அதனை இயக்கும் சக்தி என்றால் என்ன?

4. சக்தி என்பது இக்கட்டுரையில் என்ன பொருளில் கையாளப்பட்டுள்ளது?

5.சக்தி ஆற்றலை இயக்குகிறது என்றால் சக்திக்கும் ஆற்றலுக்கும் இடையேயுள்ள தொடர்பு எத்தகையது?

Unknown said...

இப்பிரபஞ்சத்தை ஒரு பெட்டியாக எடுத்துகொள்ளுங்கள், அதற்கு வெளியில் இருப்பவரே கடவுள், அதுவே மாபெரும் புத்திசாலி, பெட்டிக்குள் இருப்பது தான் சூரியன், சந்திரன் பூமி என அனைத்தும், இதில் இருப்பது தான் ஆற்றல். பெட்டிக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே காலம், நேரம், ஆரம்பம், முடிவு.

கையேடு said...

கொஞ்சம் கடவுளை ஓரங்கட்டிவிட்டு அறிவியல் ரீதியாக என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.

Unknown said...

அறிவியல் ரீதியாகவும் அதுவே, ஆற்றல் என்பது இப்பிரபஞ்சத்தில் உள்ள வெப்பம், ஒளி மற்றும் பொருள்.அது எங்கிருந்து வந்தது என்பதை ஆதார பூர்வமாக யாராலும் விளக்க முடியவில்லை, அதனால் அதன் ஆற்றல் இருப்பது பொய் ஆகாது.

அந்த ஆற்றலை உருவாக்கிய ஒரு பெரிய ஆற்றலே மாபெரும் சக்தியாக இருக்க முடியும்.

கையேடு said...

அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுக்கும் போது, ஒரு வார்த்தையின் பின்னிருக்கும் வரையறையை ஒரு கராற்தன்மையோடு இறுதிவரை பயன்படுத்த வேண்டும் என்று அறிவியல் படித்த உங்களுக்கு தெரிந்திருக்கும். இங்கு தமிழ் கலைச்சொற்களில்தான் குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். சரி போகட்டும்.

இங்கு சக்தி என்பது திறனைக் (Power)குறிக்கிறீர்கள் என்று கருதுகிறேன். ஏனெனில் ஆற்றலை energyக்காக பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

இப்போது விளக்க முயற்சியுங்களேன். திறன்/சக்தி ஆற்றலை உருவாக்கி இயக்க முடியுமா?

//ஆற்றல் என்பது இப்பிரபஞ்சத்தில் உள்ள வெப்பம், ஒளி மற்றும் பொருள்//

பொருள்/பொருண்மையை எப்படி ஆற்றலாகக் கருத முடியும்? அறிவியல் ரீதியாக சாத்தியமில்லையே!!!

Anonymous said...

கடவுள் என்று ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவர் தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தாரா? எதற்க்காக வணங்க வேண்டும். காசு பணம் வேண்டுமென்றா? தன்னை வணங்குபர்வர்களுக்கு மட்டுமே நல்லது செய்வார் என்று வைத்துக் கொண்டால், கடவுளே ஒரு சுயநலவாதி என்று ஆகிவிடாதா?

Unknown said...

//இப்போது விளக்க முயற்சியுங்களேன். திறன்/சக்தி ஆற்றலை உருவாக்கி இயக்க முடியுமா?//

திறன் / சக்தி எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள், இருப்பது உண்மை தானே? அப்படியெனில் எங்கிருந்து வந்தது.?

Unknown said...

//கடவுள் என்று ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவர் தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தாரா?//

நிர்பந்திக்க கூடாது என்று ஏதேனும் விதி உள்ளதா?

//எதற்க்காக வணங்க வேண்டும். காசு பணம் வேண்டுமென்றா? //

அவர் உருவாக்கியபின் மற்றொருவரை துதி பாடினால் அவர் விடுவாரா?

//தன்னை வணங்குபர்வர்களுக்கு மட்டுமே நல்லது செய்வார் என்று வைத்துக் கொண்டால், கடவுளே ஒரு சுயநலவாதி என்று ஆகிவிடாதா? //

தன்னை வணங்குபவர்களுக்கு மட்டுமே நல்லது செய்வேன் என்று எந்த கொள்கையிலாவது எந்த வேதத்திலாவது உள்ளதா? எதை வைத்து அப்படி கூறுகின்றீர்.

கையேடு said...

//திறன் / சக்தி எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள், இருப்பது உண்மை தானே? அப்படியெனில் எங்கிருந்து வந்தது.?//

ஆழ்ந்து உரையாட உங்களுக்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை.

தொடருங்கள் உங்கள் இடுகைகளை. நன்றியும் வாழ்த்துகளும்

Unknown said...

//ஆழ்ந்து உரையாட உங்களுக்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை.//

மன்னிக்கவும், தங்களின் கேள்விகள் சற்று தெளிவாக இல்லை, இருப்பினும் அதற்கும் பதில் தரப்பட்டது.

தங்களுக்கு எது புரியவில்லையோ அதை தெளிவாக கேட்பீர்களானால் பதில் தர ஏதுவாக இருக்கும்.

RMD said...

/ஓரிறைக் கொள்கையின் கால வரிசை(டைம் லைன்) பற்றி கொஞ்சம் சொல்லுஙகள்.//

//வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.//

வரலாறு என்றாலே மத்ங்களுக்கு ஒவ்வாமை வந்து விடும்,அதிலும் உங்கள் மததில் சொல்லப்பட்ட நிறைய இறைத்தூதர்களுக்கு வரலாறே கிடையாது.இவர்தான் அவர் என்றும் இல்லை அவர்தான் இவர் என்றும் கூறுவதை கேட்டால் ஒரே குழப்பமாக இருக்கும்.

மனிதன் முதலில் ஓரிறை கொள்கைதான் கொண்டு இருந்தான் என்று நிறுவ வேண்டும்.

அந்த ஒரிறை உருவம் இலாதது என்றும் இருக்க வேண்டும்.

பிறகு அந்த ஓரிறை செய்த தவறுக்கு எல்லாம் காரணம் சொல்ல வேண்டும்.

1.அது எதற்காக ஒரு இனத்தையே ஆதரிக்க வேண்டும்?

2. ஒரு சமயத்தில் ஒரு இறை தூதர் ,அவருக்கொரு வேதம்,அதனை மனிதர்கள் திரிக்க அப்புறம் கடைசி வேதம், அதிலும் ஏகப் பட்ட குழப்பம்,அடிதடி,ஓரிறை கடவுள் புரோகிராம்மிங்கில் ரொம்ப வீக்கா?

3.எதற்காகாக‌ ஓரிறை ஒருவரின்(பாலஸ்தீனரின்) நிலத்தை எடுத்து இன்னொருவருக்கு(யூதருக்கு) கொடுக்க வேண்டும்?

4. அந்த இறைவனை வழிபடுப‌வன் செய்யும் தவறு எல்லாவற்றிற்கும் துணை நிற்குமா?

5. இறுதியான ஓரிறை மத்த்திலும் எதற்கு பல பிரிவுகள். எப்போதாவது ஒன்றாய் இணையுமா?

ஆமா ஒரு பேச்சுக்கு உங்க மதம் உண்மை என்று வத்துக் கொள்வோம்.
மற்$உமை நாள் வந்து சொர்க்கத்து போய் விடிகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
எந்த கஷ்ட நஷ்டமும் இல்லாமல்,கடவுளேன்னு இருக்கிறதா?

இதுக்குத்தான் மதமா? வழிபாடா?

இந்த சொர்க்க வாழ்க்கை நிச்சயம் அலுத்துப் போகும்.எனக்கு வேண்டாம்.சொர்க்க கனவு நீங்கள் காணுங்கள்.

இந்த வாழ்வில் நாளை நடப்பது நமக்கு தெரியாமல் இருப்பதே வாழ்வை சுவாரசியமாக ஆக்குகிறது.இந்த வாழ்வை பயனுள்ளதாக கழிக்க எண்ணுகிறேன்.

சீக்கிரம் கால வரிசை கொடுங்கள் பார்க்கலாம்./

Unknown said...

//பிறகு அந்த ஓரிறை செய்த தவறுக்கு எல்லாம் காரணம் சொல்ல வேண்டும்.//

கடவுள் எப்போதும் தவறு செய்யமாட்டார், கடவுள் என்றால் ஒரு பொம்மையாக தான் இருக்க வேண்டும், நான் நினைப்பதை தான் செய்ய வேண்டும், என்று அப்படியே வளர்ந்துள்ளீர் அதனாலயே உங்களுக்கு இந்த குழப்பங்கள்.
உங்களுக்கு ஆறு அறிவு கொடுத்தவர் உங்களை விட அறிவில் குறைந்தவராகவா இருப்பார்.?

//1.அது எதற்காக ஒரு இனத்தையே ஆதரிக்க வேண்டும்?//

சரி உங்களுடைய பார்வைக்கு வருகிறேன், நீங்கள் திமுக வில் இருக்கிறீர் அதற்கு ஆதரவாகவே பிரச்சாரம் செய்கிறீர் என்றால் உங்கள் தலைமை உங்களை ஆதரிக்குமா அல்லது அதிமுக வில் உள்ளவனை ஆதரிக்குமா? கடவுளுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு விதிக்கிறீர்கள்.

// 2. ஒரு சமயத்தில் ஒரு இறை தூதர் ,அவருக்கொரு வேதம்,அதனை மனிதர்கள் திரிக்க அப்புறம் கடைசி வேதம், அதிலும் ஏகப் பட்ட குழப்பம்,அடிதடி,ஓரிறை கடவுள் புரோகிராம்மிங்கில் ரொம்ப வீக்கா?//

வேதம் கொடுத்தது தவறு என்கிறீரா அதை மனிதன் திரித்தது தவறு என்கிறீரா? மனிதனுடைய இஷ்டத்திற்கு மனிதனை ஆட விட்டது எப்படி ப்ரோக்ராமிங் ஆகும், நீங்கள் குழப்பத்தில் இருந்தால் அது எப்படி ஓரிறை தவறாக ஆகும்.

// 3.எதற்காகாக‌ ஓரிறை ஒருவரின்(பாலஸ்தீனரின்) நிலத்தை எடுத்து இன்னொருவருக்கு(யூதருக்கு) கொடுக்க வேண்டும்?//

அது ஓரிறை கொடுத்தது அல்ல அமெரிக்கா கொடுத்தது.

// 4. அந்த இறைவனை வழிபடுப‌வன் செய்யும் தவறு எல்லாவற்றிற்கும் துணை நிற்குமா?//

ஆதாரம் இல்லாத கருத்து.

// 5. இறுதியான ஓரிறை மத்த்திலும் எதற்கு பல பிரிவுகள். எப்போதாவது ஒன்றாய் இணையுமா?//

நான் எதிர்காலத்தை அறிபவன் இல்லை.

// ஆமா ஒரு பேச்சுக்கு உங்க மதம் உண்மை என்று வத்துக் கொள்வோம்.
மற்$உமை நாள் வந்து சொர்க்கத்து போய் விடிகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
எந்த கஷ்ட நஷ்டமும் இல்லாமல்,கடவுளேன்னு இருக்கிறதா?//

அவ்வளவு சுலபமாக சொர்கத்தை அடைந்து விடலாம் என்று நினைக்கிறீரா. கஷ்ட படாமல் இல்லை, கஷ்ட பட வேண்டும். எந்த வேதத்தில் நீங்கள் கஷ்ட படாமல் சொர்க்கம் போகலாம் என்று உள்ளது. அப்படி இருக்குமானால் நீங்கள் நிச்சயம் கேக்கலாம் இது ஒரு பம்மாத்து வேளை என்று.

// இந்த சொர்க்க வாழ்க்கை நிச்சயம் அலுத்துப் போகும்.எனக்கு வேண்டாம்.சொர்க்க கனவு நீங்கள் காணுங்கள்.//

உங்களுக்கு வேண்டாம் என்றால் அது உங்கள் விருப்பம், ஆனால் அழுத்து போவதற்கு வாய்ப்பு இல்லை.இந்த உலகே இவ்வளவு இனிமை என்றால் சொர்க்கம் மட்டும் எப்படி அழுத்து போகும்.

// இந்த வாழ்வில் நாளை நடப்பது நமக்கு தெரியாமல் இருப்பதே வாழ்வை சுவாரசியமாக ஆக்குகிறது.இந்த வாழ்வை பயனுள்ளதாக கழிக்க எண்ணுகிறேன்.//

கடவுளை நம்பினால் சுவாரஸ்யம் போய்விடுமா? கடவுளை நம்பியவர்கள் எல்லாம் வாழ்கையை பயன் இல்லாமல் கழிக்கிறார் என்கிறீரா?

// வரலாறு என்றாலே மத்ங்களுக்கு ஒவ்வாமை வந்து விடும்,அதிலும் உங்கள் மததில் சொல்லப்பட்ட நிறைய இறைத்தூதர்களுக்கு வரலாறே கிடையாது.இவர்தான் அவர் என்றும் இல்லை அவர்தான் இவர் என்றும் கூறுவதை கேட்டால் ஒரே குழப்பமாக இருக்கும்.

மனிதன் முதலில் ஓரிறை கொள்கைதான் கொண்டு இருந்தான் என்று நிறுவ வேண்டும்.//

//சீக்கிரம் கால வரிசை கொடுங்கள் பார்க்கலாம்.//

இது பின்னூட்டங்களில் இடக்கூடியது அல்ல, திரும்பவும் கூறுகிறேன் பதிவாக எதிர்பாருங்கள்.

அரபுத்தமிழன் said...

அடடா, இவ்வளவு நடந்திருக்கா, மன்னிக்கணும் கூட்டாளி, தனியாளா நின்னு பதில் சொல்லியிருக்கீங்க, அல்லாஹ் உங்களுக்குக் கிருபை செய்யட்டும்.

RMD said...

//அது ஓரிறை கொடுத்தது அல்ல அமெரிக்கா கொடுத்தது.//

அன்புள்ள கூட்டாளி,

நான் என் மன‌தில் பட்டவைகளை கூறுகிறேன்.பைபிள்,குரான் ஒரு அளவிற்கு படித்ததாலும்,யூத கிறித்தவ,இஸ்லாமிய சமுகங்களை பற்றி புரிந்து கொள்ளும் ஆவல் இருப்பதாலே விவாதிக்கிறேன். எனக்கு எவ்வள்வு நாத்திகம் பேச உரிமை உண்டோ அதே அளவு உங்களுக்கும் இறை நம்மபிக்கை கொள்ள உரிமை இருக்கிறது.

கொஞ்சம் பேசுவோம்.

1.முகமதுக்கு முன் வந்த இறைத்தூதர்கள் எல்லோருமே யூதர்கள்( அல்லது அரபு யூதர்கள்). கடவுள் அவர்களை தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?

அமெரிக்க இப்ப கொடுத்தது ஆனால் கடவுள் பாருங்க அவர்களுக்கு முன்னரே கொடுத்ததாக சொல்கிறார். இந்த கதை சொல்லித்தானே இடத்தை ஆக்கிரமித்தார்கள்?. எங்க தோரா விலே கடவுள் சொன்ன நிலப் பகுதி முழிவதும் ஆக்கிரமிப்பு செவோம்னு சொல்லிகிட்டு தானெ செய்கீரார்கள்?.

2:40. இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.

2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்

7:137. எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.

குரானாவது பரவாயில்லை பைபிள் அவர்களை புகழ்வது கொஞ்ச நஞ்சம் இல்லை. இறைவன் ஒரு குறிப்பிட்ட இனத்தை (திரு முகமதுக்கு முன்) மட்டும் தேர்ந்தெடுத்தார் அவர்களை மட்டுமே கண்டித்து ,காப்பாற்றி வந்தார் என்பதும் அவர்களுக்கு சாதகாமாக அவர்களே கட்டியமைத்த கதைகள்.

முதன் முதலில் அவர்கள் திரு மூஸாவினால் பாலஸ்தீனத்திற்கு அழைத்து வரப்பட்ட போதும் அங்கிருந்த மக்களை கொன்று ஆக்கிரமித்ததாக பைபிள் கூறுகிறது.

இந்த கேள்வியை நான் என் அப்பாவிடம் பத்து வயதில் அவர் கதை சொன்ன போது கேட்டேன். அங்க இருந்த‌வங்க எல்லாம் பாவம் இல்லையா என்றேன்.அவர் பேச்சை மாற்றி விட்டார்.

இதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்? அப்போது அந்த மக்கள் ஓரிறை கொள்கை இல்லாதவர்கள் என்றா?.அந்த யகோவா(அல்லது ஜெஹோவா) என்ன அமெரிக்காகாரரா?

Unknown said...

முதற் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு அரபுத்தமிழன், தொடர்ந்து உங்களது கருத்தை பதியுங்கள்.

Unknown said...

நான் தற்போது ஆக்கிரமிப்பை குறிப்பதன் பொருட்டே அமெரிக்கா என்றேன், ஆனால் பழைய வரலாற்றை புரட்டும் போது ரோமானியர்கள் கிபி 2 ம் நூற்றாண்டில் அவர்களை நாட்டை விட்டு இரட்டி அடித்தனர், பிறகு வந்த பல ஆட்சி மாற்றங்களால் அவர்கள் ஸ்பெயின், எகிப்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்,

நிலைமை இப்படி இருக்க வெள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனில் அமெரிக்க ஆதரவுடன் அவர்கள் குடி அமர்த்த பட்டனர், அவர்களை நம்பி அனுமதித்த பாலஸ்தீனிய மக்கள் அதன் பலனை தற்போது அனுபவிக்கின்றனர்.

//1.முகமதுக்கு முன் வந்த இறைத்தூதர்கள் எல்லோருமே யூதர்கள்( அல்லது அரபு யூதர்கள்). கடவுள் அவர்களை தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?//

இல்லை, இறைதூதர்கள் எந்த ஒரு குறுப்பிட்ட இனத்தில் மட்டும் வருவதில்லை, அதற்கு ஆதாரமும் இல்லை.

மேலும் அவர்களுக்கு நிறைய அருட்கொடையை தந்ததாக கூறுவது நடந்ததை பற்றி கூறுகிறதே தவிர நடக்க போவதை அல்ல. அதை வைத்து எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமிக்க முடியாது,

//முதன் முதலில் அவர்கள் திரு மூஸாவினால் பாலஸ்தீனத்திற்கு அழைத்து வரப்பட்ட போதும் அங்கிருந்த மக்களை கொன்று ஆக்கிரமித்ததாக பைபிள் கூறுகிறது.//

இறைதூதர்கள் எதையும் அநியாயமாக ஆக்கிரமிப்பது இல்லை, வரலாற்றை பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கலாம் எனக்கும் அதை பற்றிய தெளிவு இல்லை.

எது எப்படி இருப்பினும் அவர்களை ஒன்றிணைக்க உறுதுணையாக இருந்தது இஸ்ரேல் என்ற நாட்டை முதன் முதலில் ஒரு தனி நாடாக அங்கிகாரம் செய்தது அமெரிக்கா தான், அதனாலயே நாம் அப்படி கூறினோம்.

Post a Comment